• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 16.

கடல் அன்னையின் மடியில் மெது மெதுவாக தன் ஒளியை குறைத்து மேற்கில் சாயச ஆரம்பித்திருந்தான் கதிரவன்.

விக்ரமனின் தனி கெஸ்ட் ஹவுஸ் அது,

ஒரு அறையின் மெத்தையில் மயக்கத்தில் படுத்திருந்தாள் இதழருவி.
அவளையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

'நீ எனக்கானவ.அதனாலதான் உனக்கு உன்னோட பழைய நினைவுகள் போயிருக்கு."என்று மனதில் நினைத்தபடி அவ்வறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான் விக்ரம்.

அவனின் கைபேசி அவனின் கவனத்தை தன் பக்கம் இழுத்தது.

"சொல்லுங்க அப்பா?"என்றான்.

அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ "அவன் நல்லா தேடி அலையட்டும்.அதுதான் எனக்கு வேனும்.அவன் கண்ணுமுன்னாடியே எனக்கும் இதழருவிக்கும் கல்யாணம் நடக்கனும்.

அதைப்பார்த்து அவன் துடிச்சு போகனும்.இரண்டு வருசமா அவன தோற்கடிக்க காத்திருந்தேன்.அதுக்கு சரியான நேரம் இப்பதான் கூடி வந்திருக்குப்பா."என்று வன்மமாக கூறிவிட்டு அழைப்பை கட்செய்துவிட்டு கைபேசியை தன் கால்சட்டையில் திணித்தவன் மெத்தையில் மயக்கத்தில் இருந்த இதழருவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவ்வறையிலிருந்து வெளியேறி கதவை சாற்றி லாக் செய்துவிட்டு அந்த கெஸ்ட் ஹவுஸ்லிருந்து வெளியேறி இருந்தான் விக்ரம்.

ராஜேந்திரன் இல்லம்,

"அம்மா இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்மா.கொஞ்ச நாள் போகட்டும்."என்று சாதனா தன் அன்னையிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில்

"எதுக்கு நீயும் எவனயோ இழுத்துவிட்டு ஓடவா?"தன் தந்தையின் கணீர் குரலில் திடுக்கிட்டு போனவளாக சத்தம் வந்த திசையில் அவள் திரும்பி பார்க்க,மாடிப் படிகளிலிருந்து மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

சாதனாவும் அவளின் அன்னையும் மரியாதை நிமித்தமாக தாங்கள் அமர்ந்திருந்த நீள்விருக்கையில் இருந்து மேலே எழுந்து நின்றார்கள்.

"அப்பா.. நான் ஒன்னும் அந்த இதழருவி மாறி கிடையாது.அது உங்களுக்கு நல்லா தெரியும்."என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் தந்தையிடம் தன்மையாகவே பேசினாள்.

சாதானவிற்கு தன் தந்தை மேல் எப்பொழுதும் ஒரு மரியாதை உண்டு. அது நிச்சயமாக பயத்தினால் வந்த மரியாதை அல்ல பாசத்தினாள் வந்த மரியாதை.

"என்மேல நீ பாசம் வைச்சது உண்மைன்னா உனக்கு என்மேல் மரியாதை இருக்கரது உண்மைன்னா நான் பார்த்த மாப்பிள்ளைய நீ கல்யாணம் பண்ணிக்கனும்."அவர் கூறிய மறுநொடி

"நீங்க பார்த்திருக்கர மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்ணிக்கரேன் அப்பா."என்று வெடுக்கென்று மகிழ்ச்சியே இல்லாத குரலில் கூறினாள் சாதனா.

ராஜேந்திரன் வெளியே செல்ல எத்தனிக்கும் தருணத்தில்,"என்னங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."என்ற தன் மனைவி நாச்சியார் குரலில் நின்றவர்,

"என்கிட்ட என்ன பேசனும்?"எரிச்சலாக வெளிவந்தது அவரின் வார்த்தைகள்.

"இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போலிஷ் அதிகாரி இதழருவிகிட்ட முக்கியமான விசயம் பேசனும்னு வீட்டுக்கு வந்தாரு.

நான் இதழருவி காணோம போன விசயத்தை சொல்லி அவள கண்டுபிடிக்க சொன்னேன்.
அவரும் பர்சனலா தேடிக் கண்டுபிடிக்கரேன்னு சொல்லிருக்காரு."என்று தயக்கத்துடன் அவர் கூறிமுடித்ததுதான் தாமதம்

டீபாயின் மீது அலங்காரத்துக்கு வைத்திருந்த சிறு பூஞ்சாடியை கோபத்துடன் தூக்கி சுவற்றில் விட்டெறிந்தார் ராஜேந்திரன்.

அது பெரிய சத்தத்துடன் சிறு சிறு துகள்களாக தரையில் சிதறியிருந்தது.

இவரின் செயலைக் கண்ட நாச்சியார்க்கு பயத்தில் அவரிடம் பேச நா எழவில்லை.
தன் தந்தையின் சினத்தால் சாதனாவும் சற்று திடுக்கிட்டுதான் போனாள்.

"நீ அந்த ஓடிபோனவள பத்தி பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்.நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அந்த ஓடிபோனவ நமக்கு பிறக்கல.நமக்கு ஒரே பொண்ணு சாதனா மட்டும்தானு.

இனிமேல் அவள பத்தின பேச்ச நீ எடுத்தா.. என்னோட இன்னொரு முகத்த நீ பார்ப்ப.ஆனா அதுக்கப்புறம் நீ உயிரோட இருப்பியான்னு எனக்கு தெரியாது."என்று அழுத்தமாக தன் ஆள்காட்டி விரலை தன் மனைவியின் நெஞ்சில் அழுத்தி அவர் கூறியதை பார்த்த சாதனாவுக்கு தன் தந்தையை பார்க்க சற்று பயமாகதான் இருந்தது.

அவரின் அந்த அழுத்தமான எச்சரிக்கையில் நாச்சியார் ஒருநிமிடம் நடுங்கித்தான் போனார்.

"பார்த்து நடந்துக்கோ."என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு வேக நடையில் வீட்டின் வாயிலை கடந்தபின்புதான் நாச்சியார்க்கு மூச்சே வந்தது.

தளர்ந்து போனவராக நீள்விருக்கையில் தொப் என்று அமர்ந்தார் நாச்சியார்.அவரின் விழிகளில் கண்ணீர் தேங்கி இப்பவோ அப்பவோ கன்னத்தில் வழிய தயாராக இருந்தது.

"அம்மா தயவுசெய்து அப்பாகிட்ட இனிமேல் அவளபத்தி பேசாதிங்க.அவரோடு கோபத்தி பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்.இதுக்குமேல எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரியல."என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் சாதனா.

வானில் தன் அதிகாரத்தை நிலை நாட்டியிருந்தான் சந்திரன்.
 
Joined
Jan 29, 2025
Messages
87
இதழரசன் இல்லம்,

தலையை பிடித்து பிடி நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான் இதழரசன்.

"சார் கவலப்படாதிங்க.சீக்கரமாவே இதழருவிய கண்டுபிடிச்சடலாம்.
எனக்கு அவ கூடப்பிறக்காத தங்கச்சி சார்.

இந்த இரண்டு வருசமா அண்ணா அண்ணான்னு கலகலன்னு பேசிட்டு வந்திட்டு இப்ப திடிரென்று பேசாம இருக்கரது என்ன யாரோமாறி பார்த்தது என்னாலயே தாங்க முடியல.

நீங்க இதழருவிய காதலிச்சிருக்கிங்க.எனக்கு உங்களோட வலி புரியது சார்."என்று ஆதரவாக கார்த்திகேயன் பேசவும்

"எனக்கு என்னோட இதழருவிய பாக்கிர வரைக்கும் நிம்மதி இருக்காது கார்த்தி."என்று ஆழ்ந்த குரலில் கூறியபடி தலையை கோதிவிட்டு நீள்விருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தான் இதழரசன்.

ஆனந்தி இல்லம்,

நடுக் கூட்டத்தில் பழங்கள் இனிப்பு பலகாரங்கள் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பூர்ணாவுக்கு சமையலறையிலிருந்து எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு வாசம் மூக்கை துளைத்தது.

"என்னங்க உங்களுக்கு பசிக்குதா?"நீள்விருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியில் கவனத்தை பதித்திருந்த தன் கணவனிடம் கேட்டாள் பூர்ணா.

"எனக்கு பசிக்கல."தொலைக்காட்சியில் இருந்து பார்வை எடுக்காதுபடி பதிலளித்தான் சந்தோஷ்.

"என்னங்க எனக்கு பசிக்குது.வாங்க சாப்டலாம்."தன் கணவனின் கையை பற்ற

"எப்பப்பாரு உனக்கு சாப்பாடு சாப்பாடுதான்.ஏன் அதை தவிர்த்து நீ வேற எதுவும் யோசிக்க மாட்டியா?"என்று அவன் கத்தவும் அதில் நடுங்கத்தித்தான் போனாள் பூர்ணா.

அவன் போட்ட சத்தத்தில் அனைவரும் நடுக்கூடத்திற்கு வந்து விட்டிருந்தனர்.

விழிகளில் தேங்கிய கண்ணீருடன் அனைவரும் ஒரு பார்வை பார்த்தவள் பின்பு தன் கணவனை வலி மிகுந்த ஒரு பார்வை பார்த்துவிட்டு வேக நடையுடன் தன் அறைக்கு சென்று கதவை சாற்றியிருந்தாள் பூர்ணா.

"சாரி ஏதொ டென்ஷன்ல.."என்று சிறு தயக்கத்துடன் கூறி முடிப்பதற்குள்

"மாப்ள நீங்க பேசவேண்டியது எங்ககிட்ட இல்ல.பூர்ணாகிட்ட."என்று ஆனந்தி கூறியவர் தன் அக்காவை கையோட அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றுவிட

சாகித்தியனும் அவனின் அறைக்கு செல்ல மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்திருந்தான்.

சமையலறையில்,

"என்ன விடு ஆனந்தி.மாப்ளகிட்ட நான் என்ன ஏதுன்னு பேசனும்?என் பொண்ணு கண்கலங்கரத பார்த்தபின்னாடி இனியும் என்னால அமைதியா இருக்க முடியாது."என்று குதிக்காத குதியாக கூறினார் செந்தாமரை.

"அக்கா என்ன பேசரிங்க? கணவன் மனைவி பிரச்சனையில நாம நடுவுல போகக்கூடாது.அவங்களே பேசி சரி பண்ணட்டும்.

நீங்க போய் பேசி இதை பெரிய பிரச்சினையா பண்ணாதிங்க.அப்புறம் மாப்ள பூர்ணாவ கூட்டிட்டு தனியா போயிடுவாரு பார்த்துக்கோங்க.நான் சொல்ர சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம்.

சந்தோஷ்க்கு ஏற்கனவே இங்க இருக்க விருப்பம் இல்ல போல.ஏதோ நம்ம பொண்ணு சந்தோஷ்த்துக்காக இங்க இருந்துட்டு இருக்காரு."என்று நிதர்சனத்தை கூறியவர்,

இதுக்குமேல சொல்ரதுக்கு எதுவும் இல்லை என்பதுபோல் சமையல் வேலையில் மூழ்கிப்போனார் ஆனந்தி.

அதற்குப்பிறகு செந்தாமரை எதுவும் பேசாது சமையலறையிலிருந்து வெளியேறி நடுக்கூடத்தில் போடப்பட்ட நீள்விருக்கையில் அமைதியாக அமர்ந்து விட்டார்.

அரைமணி நேரம் கடந்த நிலையில் அவர்களின் அறையிலிருந்து சந்தோஷ் பூர்ணா மகிழ்ச்சியாக வரவும்தான் செந்தாமரைக்கு மனதில் நிம்மதி பிறந்தது.

"சீக்கிரமா சாப்பிட்டு போய் படுங்க.நாளைக்கு நல்ல நேரத்துல பொண்ணு பார்க்க போகனும்."என்றபடி அனைவருக்கும் உணவை பரிமாறினார் ஆனந்தி.

"சாகித்தியன் நீங்க பொண்ணு போட்டோ பார்த்துட்டிங்களா?"என்று உணவை சாப்பிட்டபடி சந்தோஷ் கேட்கவும்

"அதுதான் நாளைக்கு நேரல பார்க்கரனே மாமா."என்றான் தோள்களை குலக்கியபடி.

"அப்போ நீ இப்பவரைக்கும் பொண்ணு போட்டோ பார்க்கலயா?"என்று அதிர்ச்சி அகலாத குரலில் சந்தோஷ் கேட்க

"இல்ல மாமா."என்றான் படுகூலாக.

"என்ன இருந்தாலும் மூத்தவனுக்கு கல்யாணம் முடிக்காம இளையவனுக்கு கல்யாணம் பண்றது எனக்கு சரியா படுல ஆனந்தி."என்று செந்தாமரை சொல்லிவிட்டு உணவில் கவனம் செலுத்தியிருக்க

அங்கு பெரும் நிசப்தம் நிலவியது.சாகித்தியனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

தன் அண்ணனுக்கு முதலில் திருமணம் நடக்காமல் தனக்கு முதலில் திருமணம் ஆவது அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

தன் அன்னையின் பிடிவாதத்தை பற்றி அறிந்தவனுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாத சூழ்நிலையில் இருக்கிரான் அவன்.

அன்று நடந்த நிகழ்வுக்குபின்பு தற்பொழுது வரை தன் அண்ணனிடம் அவன் பேசவே இல்லை.ஏன் அவன் எண்னையே தன் கைபேசியில் ப்ளாக் செய்துவிட்டிருந்தான்.

அத்தி பூ பூத்ததுபோல எப்பொழுதாதவது நேரில் சந்திக்க நேர்ந்தாலும் பார்ப்பதையோ அல்லது அவனிடம் பேசுவதையே தவிர்த்து வந்துகொண்டிருக்கிரான் சாகித்தியன்.

தன் அண்ணனின் பற்றி நினைவு வரவும் சரியாக அவனால் சாப்பிட முடியவில்லை.பாதி சாப்பிட்டிலே அவன் எழுந்து கொள்ளவும்

"ஏண்டா பாதி சாப்பாட்ல எந்திரிச்சிட்ட?சாப்பாடு நல்லா இல்லையா?"என்று கவலையாக தன் மகனிடம் கேட்டார் ஆனந்தி.

" சின்ன அத்த சாப்பாடு ரொம்ப அருமையா இருக்கு.என் மனைவிய பாருங்க கத்திரிக்காய் புளிக்குழம்போட எப்படி வெளுத்து கட்டுரான்னு.

சாகித்தியனுக்கு நாளைக்கும் ஹாஸ்பிடல் போகனும்.நீங்க வேற நாளைக்கு போகக்கூடாது சொல்லிட்டிங்க.அதனால அவனுக்கு சாப்பாடு இறங்கல போல."என்று தனது யூகத்தை வெளிப்படையாக கூறியிருந்தான் சந்தோஷ்.

"ஏண்டா.. மாப்ள சொல்ரமாறி இதுதான் உனக்கு கவலையா?"சந்தேகமாக தன் மகனை பார்த்து ஆனந்தி கேட்கவும்

"ஆமா அம்மா.அதுனாலதான் என்னால ஒழுங்கா சாப்பிட முடியல."என்று தன் மாமன் கூறிய யூகத்தையே பொய்யாக கூறினான் சாகித்தியன்.

"ஏண்டா நீ இப்படி இருக்க?வெளியபோய் பாரு பசங்க எப்படி இருக்காங்கன்னு? உனக்கு எப்ப பார்த்தாலும் ஹாஸ்பிடலே கதின்னு இருந்தா எப்படிடா?

அதுதான் வேலை செய்ய ஆளுங்க இருக்காங்கள்ள.அப்புரம் என்னதான் பிரச்சினை உனக்கு?ஆனா ஒன்னுடா கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மட்டும் இருக்காத.

உன்ன நம்பி ஒரு பொண்ணு வர்ரா.அதனால சூழ்நிலையை புரிந்து நடந்துக்கோ.ஒரு அம்மாவ என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்."என்றபடி தனுக்கு தட்டில் உணவை பரிமாறி சாப்பிட ஆரம்பித்தார் ஆனந்தி.

அனைவரும் இரவு உணவை முடித்து தத்தமது அறைக்கு சென்று நித்ரா தேவியிடம் சரணடைந்தனர்.

அன்றிறவு அப்படியே கழிந்தது.

மறுநாள் காலையில்,

"அக்கா பூர்ணா சந்தோஷ் ஒரு காருல வரட்டும்.நீங்க நான் சாகித்தியன் நம்ம ஒரு காருல போலாம்."என்றபடி பழங்கள் பூ அடங்கிய கட்டப்பையை கையில் எடுத்தார் ஆனந்தி.

"ஏன் ஆனந்தி இன்னைக்கு சாகித்தியனுக்கு பொண்ணு பார்க்கப் போறோம் ஆனா இப்ப கூட உன் வீட்டுக்காரர் வரலையா?"என்று செந்தாமரை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே சூட்கேசை தள்ளியபடி வீட்டிற்குள் வந்தார் ஆனந்தியின் கணவர் சாந்தகுமார்.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top