• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 15.

"எதுக்குங்க கூப்டிங்க?"பவ்யத்துடன் கேட்டிருந்தார் நாச்சியார்.

"இதழருவிக்கு நல்ல வரன் வந்திருக்கு.பேசி முடிச்சிடுலாம்.நாளைக்கு அவங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க.நீ அவகிட்ட சொல்லிடு."என்று பட்டும் படாமல் பேச்சை முடித்துக் கொண்டார் ராஜேந்திரன்.

"ரொம்ப சந்தோஷம்ங்கா.கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் இருந்து வந்துருவா.நான் சொல்லிடரேன்."என்று மகிழ்ச்சியாக தன் கணவனிடம் கூறிவிட்டு அதே வேகநடையுடன் சமையலறைக்கு வந்தவருக்கு சந்தோஷம் தாளவில்லை அவருக்கு.

'ச்சே.. இந்த மனுசனுக்கும் இதழருவி மேல கொஞ்சம் பாசம் இருக்கு.என்ன இருந்தாலும் அவருடைய ரத்தம்.எப்படி பாசம் இல்லாம போகும்?'என்று மனதில் நினைத்தபடி பால் பாயாசம் செய்ய ஆரம்பித்தார் நாச்சியார்.

அரைமணி நேரம் கடந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தாள் இதழருவி.

"என்னம்மா நீ பால் பாயாசம் பண்ணிங்களா?வாசனை என் ரூம் வரைக்கும் வருது."என்றபடி சமையலறைக்குள் வந்தாள்.

"உனக்குத்தான் பால் பாயாசம் செய்தேன்."என்றபடி குவளையில் பால் பாயாசத்தை நிரப்பி தன் மகளுக்கு கொடுத்தார்.

"எதாவது நல்ல விசயமா?சாதனா படிப்பு முடிச்சிட்டு ஊருக்கு வறாளா?"என்றபடி தன் வசமிருந்த பால் பாசாயத்தை சிறிது சிறிதாக அருந்த ஆரம்பித்தாள் இதழருவி.

"அவ வர்றப்ப வரட்டும்.நான் அவளுக்காக ஒன்னும் பால் பாயாசம் வைக்கல.
நான் உனக்காக வைச்சேன்."என்றவர் மேலும் தொடர்ந்தார்.

"நாளைக்கு உன்ன பொண்ணு பார்க்க வராங்க.அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் சொன்னாரு.அதனாலதான் பால் பாயாசம் வைச்சேன்."என்று தன் மகளின் கன்னத்தை வருடி சிறு புன்னகையுடன் அவர் கூறவும்

அவளின் முகத்தில் இருள் படர்ந்தது.'நான் காதலிக்கர விசயத்த அம்மாகிட்ட சொல்லிடலாமா?'என்று தன் மனதில் தனக்கு தானே கேள்வி கேட்டுவிட்டு தன் கழுத்தில் இருந்த செயினின் டாலரை எடுத்து கடித்தபடி யோசனையில் மூழ்கவும்

"இதழருவி எத்தனை தடவை சொல்றது இப்படி செயின் டாலரை கடிக்காதன்னு?"என்று நாச்சியார் செல்லமாக கடிந்து கொள்ளவும்தான் தன் யோசனையிலிருந்து வெளிவந்த வளாக

"அம்மா நான் உங்ககிட்ட .."என்று சிறு தயக்கத்துடன் சொல்லி முடிப்பதற்குள்

"நாச்சியா.."என்று சத்தமாக அழைத்திருந்தார் ராஜேந்திரன்.

"என்னங்க?"என்றபடி நடுக்கூடத்திற்கு வந்தார் நாச்சியார்.

"அவங்க நாளைக்கே பொண்ணையும் பார்த்துட்டு கையோடு நிச்சயதார்த்தம் வைச்சுக்கலாம்னு என்கிட்ட சொன்னாங்க.
நானும் சரின்னு சொல்லிட்டேன்.நான் நிச்சயதார்த்திற்கான ஏற்பாட பார்க்கிறேன்.

நீ வீட்ல செய்ய வேண்டிய வேலைகளை பார்த்துக்கோ.அத சொல்ரதுக்குதான் கூப்பிட்டேன்."என்றவர் அவ்வளவுதான் என்பதுபோல் அமைதியாக விட,

"ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க."என்று உற்சாகமாக கூறியவர் தன் வயதை மறந்து சமையலறையை நோக்கி ஓடினார்.

அவர் இப்படி ஓடுவதை பார்த்த ராஜேந்திரன் மெல்லிய புன்னகையை இதழில் படர விட்டிருந்தார்.

ராஜேந்திரனுக்கு தன் வளர்ப்பு பெரி மகளான இதழருவியை பிடிக்காமல் போனாலும் தன் மனைவி தன் மகள் சாதனா ஆகிய இருவரின் மேல் அதிகப்படியான பாசத்தை வைத்திருக்கிறார்.

நாச்சியார் தன் வயதை மறந்து சமையலறைக்குள் ஓடி வந்தவர் "இதழருவிம்மா அப்பா சொன்னதை கேட்டிருப்பியே? நாளைக்கே நிச்சயத்தையும் வைச்சுக்கலாம்னு மாப்ள வீட்ல சொல்லிட்டாங்க.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா.

சரி நீ போய் ரூம்ல நல்லா ரெஸ்ட் எடு.நாளைக்கு மாப்ள வீட்டுக்காரங்க முன்னாடி நீ அழகா இருக்கனும்.இன்னைக்கு நைட் சீக்கிரமாவே சாப்பிட்டு தூங்கு."என்று மூச்சு விடாமல் அவர் மகிழ்ச்சியாக சொல்ல இதழருவிக்கு அவரிடம் தான் காதலிக்கும் விசயத்தை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

அதே சமயம் அவரின் மகிழ்ச்சியை சீர் குலைய வைக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை.

'அதற்காக நீ நாளைக்கு வரப்போர மாப்ளைக்குகூட நிச்சயதார்த்தம் நடக்கரதுக்கு உனக்கு சம்மதமா?'அவளின் மனம் கேட்க

'நிச்சயமா இல்ல.என்னோட இதழரசன தவிர்த்து வேற யாரு கூடயும் நிச்சயதார்த்தமும் நடக்கக்கூடாது கல்யாணமும் நடக்கக்கூடாது.

நாளைக்கு அவங்க யார் முன்னாடியும் நிற்க மாட்டேன்.அதற்கு இன்னைக்கு நைட் இந்த வீட்ட விட்டு வெளிய போயிட்டு நாளைக்கு சாய்ந்தாரம் வீட்டுக்கு வரலாம்.

கேட்டா மருத்துவமனையில எமர்ஜென்சி கேஷ்க்கு ஹார்ட்ல சர்ஜரி பண்ணனும்னு போன் வந்துச்சு.அதனால போனேன்னு சொல்லிடலாம்.

காலையில வீட்டுக்கு வரலாம்னு பார்த்தா டியூட்டி டாக்டர் லீவ் போட்டதால நான் அந்த வேலையை பார்க்க வேண்டியதா போயிருச்சின்னு சொல்லிட்டு அப்படியே நம்ம காதல் விசயத்தையும் போட்டு உடைச்சடலாம்.'என்று மனதில் பல சிந்தனைகளுக்கு பிறகு ஒரு முடிவெடுத்தவளாக தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தாள் இதழருவி.

இரவும் வந்தது.இரவு உணவை அன்று சீக்கிரமாகவே முடித்துவிட்டு தன்னறைக்குள் வந்தவள் தன் கழுத்தில் அணிந்திருந்த செயினின் டாலரை கடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்து கைபேசியில் அலாரத்தை வைத்து விட்டு உறங்க ஆரம்பித்தாள்.

சரியாக பதினொன்று மணிக்கு அலாரம் அடிக்க தூக்க கலக்கத்தில் கைபேசியில் அடிக்கும் அலாரத்தை ஆப் செய்துவிட்டு உறக்கத்தை தொடர்ந்தாள்.

திடிரென்று ஏதொ ஒரு பயங்கர கனவால் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் அவள்.கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அது அதிகாலை நான்கு என்று காட்டியது.

'ச்சே..பதினொரு மணிக்கு அலாரம் வைச்சனே.தூக்கத்தல அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்கிட்டு போல.இப்பவும் ஒன்னும் பிரச்சினை இல்லை.'என்று மனதில் நினைத்தபடி குளியலறைக்கு சென்று வாஷ்பேசனில் முகத்தை அடித்து கழுவிவிட்டு கால்மணி நேரத்தில் கிளம்பி,
தன் அறையின் கதவை சத்தமில்லாமல் திறந்து வெளியே வந்தாள் இதழருவி.

நடுக்கூடத்தில் இரவு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.பெரும் நிசப்திற்கு இடையில் தந்தையின் அலுவல அறை சற்று திறந்திருந்தை பார்த்தவளுக்கு மனதில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

'சரி பயப்படாத இதழ்.அப்பா கேட்டா எமெர்ஜென்ஷி கேஷ் ன்னு சொல்லிட்டு போலாம்.'என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டவளாக அவ்வறையை கடக்கும் பொழுது தன் தந்தை கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை கேட்டவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

'இதை கண்டிப்பா இதழரசன்கிட்ட சொல்லியே ஆகனும்.'என்று மனதில் நினைத்தபடி மீண்டும் அந்த அறையை திரும்பி அவள் பார்ப்பதற்கும் அவ்வறையிலிருந்து ராஜேந்திரன் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

வெளியே வந்தவர் இதழருவி தன்னை ஒரு வித பயத்துடன் பார்த்தபோதே அவருக்கு புரிந்து விட்டது.தான் கைபேசியில் இவள் கேட்டு விட்டால் என்று.

"என்ன நீ தூங்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?"என்று தன் கணீர் குரலில் அவர் கேட்கவும் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

"அ...அது ஒரு எமர்ஜென்சி கேஷ்.இப்ப..இப்பதான் மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.நா..நான் போரேன்."என்று திக்கித் திணறி சொல்லிவிட்டு அவரின் பதிலுக்கு காத்திராமல் அவள் வீட்டை விட்டு வெளியேறி வேகநடையுடன் கேட்டை கடந்து சாலையில் ஓடியபடி கைபேசியில் இதழரசனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

அழைப்பு சென்று கட்டானதே தவிர.மறுமுனை அழைப்பு ஏற்கப்படவில்லை.நொந்துதான் போனாள் இதழருவி.

பாதி தூரம் ஓடி வந்தவள் ஒரு மரத்தடியில் நின்று மூச்சு வாங்கினாள்.எதிர்ச்சியாக அவள் திரும்பி பார்க்க தூரத்தில் காட்டு மிராண்டிகள் போல நான்கு ரவுடிகள் அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தனர்.

அவசரமாக மீண்டும் ஒருமுறை இதழரசனுக்கு அழைப்பு விடுக்க இம்முறை அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

"ஹலோ இதழ்"

"என்ன நாலு ரவுடி துரத்திட்டு வராங்க.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.நான் உங்ககிட்ட ஒரு முக்கிய மான விசயம் சொல்லனும்.நீங்க சீக்கிரமா வாங்க."என்று ஓடியபடி மூச்சிறைக்க அவள் சொல்லவும்

"இப்ப நீ எங்க ஓடிவந்திட்டிருக்கன்னு சொல்லு நான் உடனே வரேன்."

இவளும் தான் ஓடிவந்து கொண்டிருந்த லொகேஷனை சொல்லிட்டு ஒரு முறை பின்னால் திரும்பி பார்த்துவிட்டு எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடத்தொடங்கியிருந்தாள் இதழருவி.

அவ்வளவு வேகமாக ஓடி வரும் போதுதான் அவள் கால் இடரி கீழே விழுந்தவளுக்கு பின்னந்தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் மயங்குவதற்கும் இரு கரங்கள் தூக்கவதற்கு சரியாக இருந்தது.

அதன் பின்பு நடந்த நிகழ்வுகள் நீங்கள் அறிந்ததே.

நிகழ்ந்து கொண்டிருப்பது,
 
Joined
Jan 29, 2025
Messages
87
இதழரசன் இல்லம்,

'நிலைகுலையக்கூடாது.உன்னேட இதழருவிய நீதான் தேடி கண்டுபிடிக்கனும்.அது உன்னால் மட்டும்தான் முடியும்.நீ இப்ப உணர்ச்சி வசப்படாம நிதானமா யோசி.'என்று மனதும் மூளையும் ஒருசேர அவனுக்கு தைரியம் அளிக்கவும்,

ஒரு முடிவுடன் மேலே எழுந்தவன் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து உயிர்ப்பித்தவன் நோராக ராஜேந்திரன் இல்லத்தை நேராக செலுத்த ஆரம்பித்திருந்தான்.

'அன்னைக்கு இதழருவி அவங்க வீட்லிருந்துதான் ஓடிவந்திருக்கா.அப்போ அங்குதான் ஏதோ ஒரு விசயம் நடந்திருக்கனும்.அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்து அது என்ன விசயம்னு சொல்லனும்.

இல்ல அதை நாம கண்டுபிடிக்கனும்.இப்ப வந்த இதழருவிய யார் தூக்கிட்டு போனாங்கன்னு தெரியல.இதழருவிக்கு எந்த ஆபத்தும் வராம நீதான் பாத்துக்கணும் முருகா.'என்று மனதில் முருகனை மணமுறுக வேண்டியபடி இரு சக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் இதழரசன்.

அரைமணி நேரத்தில் ராஜேந்திரன் இல்லத்தை அடைந்திருந்தான் இதழரசன்.

காலிங் பெல்லை இரு முறை அழுத்திவிட்டு அமைதியாக நின்றிருந்தான்.

நாச்சியார் சமையலறையில் முன்புறமாக வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, காலிங்பெல் ஒலி அடிக்கவும்

'நாம முன்புறமா சமைக்கும் போதுதான் காலிங் பெல் அடிக்கனுமா?'என்று முனங்கலாக கூறியபடி வீட்டின் வாயல் கதவை திறந்து வெளியே நிற்கும் அந்நிய ஆடவனை கண்டு புருவங்களை நெறித்தபடி

"யாருப்பா நீ?"என்று நாச்சியார் அவனிடம் கேட்டிருக்க

"நான் இதழரசன் ஐபிஎஸ்.இதழருவிக்கு என்ன தெரியும்.அவங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்.அவங்க இருக்காங்களா?"என்று ஒன்றும் அறியாதவனாக அவரிடம் கேட்க

"நீங்க முதல்ல உள்ள வாங்க தம்பி."என்று அவனை வீட்டுக்குள் அழைத்தார் நாச்சியார்.

இதழரசனை நீள்விருக்கையில் அமரசொல்லிவிட்டு சமையலறைக்குள் வந்தவர் டீ போட்டு குவளையில் ஊற்றி எடுத்துவந்து அவனிடம் கொடுத்துவிட்டு

"அவ வீட்ட விட்டு போய் இருபது நாளுக்கு மேல் ஆச்சு.அவ எங்க போனான்னு தெரியல.நீங்க போலிஸ்னு சொல்ரிங்க.நீங்கதான் அவள கண்டுபிடிச்சு சொல்லனும் தம்பி."என்று நாச்சியார் ஒருவித தவிப்புடன் சொல்வும்

"இதழருவி காணாம போய் இருபது நாளுக்கு மேல் ஆச்சுன்னு சொல்றிங்க?ஏன் இதுவரைக்கும் காவல் நிலையத்தில புகார் கொடுக்காம இருக்கிங்க?"சந்தேகமாக அவன் அவரிடம் கேட்க

"எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரியல தம்பி.இதழருவி வீட்ட விட்டு போன அன்னைக்கு அவள பொண்ணு பார்க்க மாப்ள வீட்ல இருந்து வர்றதா இருந்தாங்க.அன்னைக்கே நிச்சயதார்த்தமும் நடக்க இருந்தது.

அவளுக்கு அதுல விருப்பம் இல்லபோலிருக்கு.வீட்ட விட்டு போயிட்டா.மாப்ள வீட்லருந்து வரதுக்கு முன்னாடி போன் பண்ணி விசயத்தை சொல்லிட்டோம்.

இதழருவி இப்படி வீட்ட விட்டு போனதால அவங்க அப்பாவுக்கு அவமேல பயங்கர கோபம்.அதனாலயே அவரு காவல் நிலையத்தில புகார் கொடுக்கல.என்னையும் புகார் கொடுக்க விடல."என்று அவர் சொல்லவும் இதழரசன் குழம்பிப் போனான்.

'என்ன இவங்க இப்படி சொல்ராங்க?ஒரு முக்கிய விசயம் பேசனும்னு சொன்னது இதுதானா? அப்புறம் எதுக்காக அன்னைக்கு ரவுடிங்க அவள துரத்திட்டு வந்தது?

இப்பகூட அவள யாரே முகம் தெரியாத நாலுபேர் தூக்கிட்டு போயிருக்காங்கன்னா ஏதோ இதுல ஒரு பெரிய விஷயம் ஒளிஞ்சிருக்கனும்.'என்று மனதில் நினைத்தவன் அவரிடம் சொல்லிவிட்டு அவ்வீட்டை விட்டு
வெளியேறி இருந்தான் இதழரசன்.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top