Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 87
- Thread Author
- #1
அத்தியாயம் 14.
இதழருவிக்கு இதெல்லாம் ஏதோ கனவு போல் இருந்தது.அவள் தன்னை மறந்து அவன் நீட்டிய ஒற்றை ரோஜாவை வாங்கிய மறுநிமிடம் அவ்விருவர் மேல் மீண்டும் பூ மழை பொழிய ஆரம்பித்திருந்தது.
"ஹே.. இந்த உலக்கத்திலயே இந்த நிமிஷம் சந்தோஷமா இருக்கர ஒரே ஆள் நானா தான் இருப்பேன்."என்று சந்தோஷத்தில் தலைகால் புரியாது அவன் எம்பி குதித்து சத்தமாக கூறவும்தான் இதழருவிக்கு இது கனவல்ல நிதர்சனம் என்று புரிந்தது.
தன் வலக்கையில் இருக்கும் ஒற்றை ரோஜாவையும் இதழரசனையும் மாறி மாறி பார்த்தவள் சுற்றியுள்ளவர்கள் தங்களையே பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்த்தவளுக்கு சிறிது நாணம் எட்டிப்பார்த்தது.
"ஹலோ ரோமியோ நான் கிளம்புறேன்."என்று கூறிவிட்டு அவள் மகிழுந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பிக்கவும்,
இதழரசனோ வெகு அவசரமாக காரை சுற்றி வந்து காரின் முன்பக்க கதவை திறந்து இருக்கையில் அமர்ந்து கார் கதவை அடித்து சாத்தினான்.
"இப்ப எதுக்கு காருல ஏறி உட்கார்ந்திருக்கிங்க?"புருவத்தை சுருக்கி கேட்டிருந்தாள் இதழருவி.
"அதுதான் நீ என் காதல அக்சப்ட் பண்ணிட்டியே.உன்கோட கொஞ்சம் டைம் ஸ்பென் பண்ணனும் இல்லையா? அதுனாலதான்."என்று தோள்களை குலுக்கி இயல்பாக கூறியிருந்தான் இதழரசன்.
"அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன் என் நம்பர அன்ப்ளாக் பண்ணிடு செல்லம்."என்று இதழரசன் நினைவு வந்தவனாக கூறுவதற்கும் இதழருவி மகிழுந்தை செலுத்துவதுதற்கும் சரியாக இருந்தது.
"என்ன பதிலயே காணோம்?"அவளை ரசித்தபடி கேட்டான் இதழரசன்.
"நான் உங்க காதல அக்சப்ட் பண்ணலன்னு அர்த்தம்.அதனால அமைதியா இருக்கன்னு அர்த்தம். போதுமா."என்று பொய்கோபத்துடன் பதில் கூறியவள் வாகனத்தை செலுத்துவதில் கவனமாக இருந்தாள்.
"உன் வாய் பொய் சொல்லுது.ஆனா உன் கண்ணு உண்மையை சொல்லுது.
ஏனா நான் போலிஸ்காரன்.என்கிட்ட உன் காதல மறைக்கப்பார்த்த அப்புரம் உன் காதல சிறைபிடிச்சு என் இதயக் கூண்டுல போட்டு பூட்டி வெச்சுருவேன்."என்று அவன் படு சீரியாக கூறவும் இதழருவி வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு தன்னை மறந்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
"என்னங்க நீங்க ஏற்கனவே என்னோட காதல சிறைப்பிடிச்சு உங்க இதயக் கூண்டுல அடச்சுதான் வைச்சிருக்கிங்க.
வெக்கத்து விட்டு சொல்கிறேன்.எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு.சொல்லப்போனா வீட்ட விட நான் உங்ககோட இருக்கும்போது பெட்டரா ஃபீல் பண்றேன்.
எப்படியோ உங்க இதய கூண்டுல என்ன சிறைப்பிடிச்சதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்."என்று சிரிப்பிற்கிடையே கூறிவிட்டு பின்பு தனது மகிழுந்தை செலுத்த ஆரம்பித்தாள்.
"நீங்க இவ்வளவு சீக்கிரமா என் லவ்வ ஏத்துப்பிங்கின்னு நான் நினைச்சு கூட பார்க்கல."நெஞ்சை நீவியபடி நிம்மதி பெருமூச்சுடன் கூறினான் இதழரசன்.
"நானும் நினைச்சு பார்க்கல.இவ்வளவு சீக்கிரமா உங்க லவ்வுக்கு நான் ஓகே சொல்வேன்னு.எனக்கு இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு.
பட் இதெல்லாம் நிஜம்னு நினைக்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்கு."மகிழ்ச்சியாக கூறியவள் புக்ஷாப்பின் முன்பு தனது மகிழுந்தை நிறுத்தியிருந்தாள்.
"ஆமா இங்க எதுக்கு வந்திருக்கோம்?"என்று அவன் அவளிடம் இயல்பாக கேட்டக,
"ஹான்.. ஃகாபி சாப்பிட வந்திருக்கோம்."என்று குறும்புடன் பதிலளித்தவள் ஃபுக் கடைக்குள் சென்றிருந்தாள்.
'என்ன இவள்,ப்பா..இருபது ஃபுக் வாங்கிருக்கா.நமக்கு இந்த ஃபுக் ரீட் பண்றது சுத்தமா ஆகாது சாமி.'என்று மனதில் நினைத்தவன்,
"ஹலோ மேடம் கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க.இவ்வளவு ஃபுக் வாங்குறிங்களே நைட் தூங்காம படிப்பிங்களா என்ன?"எள்ளளுடன் கேட்டான் இதழரசன்.
"எப்பவும் தூங்கரதுக்கு ஒரு மணிநேரம் ஃபுக் படிக்கரது வழக்கம்தான்.ஆனா பகல்ல டைம் போகனுமே.அதனால இவ்வளவு ஃபுக் வாங்கிருக்கேன்."ஒரு புத்தகத்தின் பெயரை தன் ஆள்காட்டி விரலால் வருடியபடி வெளியில் கவலை நிறைந்த குரலில் கூறினாள் இதழருவி.
"நீ பகல்ல ஹாஸ்பிடல்தான இருப்ப?"என்று புருவங்களை சுருக்கி சந்தேகமாக கேட்டிருந்தான் அவன்.
"எனக்கு இனிமேல் அந்த ஹாஸ்பிடல்ல வேலையில்லை.வேலைக்கு போகமா வீட்ல இருக்க என்னவோ போல இருக்கு.டைம் போகனுமே அதனால ஃபுக்ஸ வாங்குறேன்."என்றபடி ஃபில் கவுண்ட்ருக்கு அவள் செல்ல முற்பட,
அவளிடம் இருந்து ஃபுக்ஸை விடாப்பிடியாக வாங்கியவன் நேராக ஃபில் கவுண்டர்க்கு சென்று அந்த புக்கங்களுக்கான பணத்தை அவனே கொடுத்து விட்டு
அந்த புத்தகங்கள் அடங்கிய பையை அவனே வைத்தபடி அவளை மென்மையாக நோக்கியவன்
"இந்த புத்தகங்கள் எல்லாம் என்கிட்ட இருக்கட்டும்.நீ நான் சொல்ர ஹாஸ்பிடல் போய் பாரு.அங்க நிச்சயமா உனக்கு வேலை கிடைக்கும்.ஆனா ஒரு கண்டிஷன் என் பேர மட்டும் சொல்லாத."என்று அவன் கூறவும் அமைதியாக தலையாட்டினாள் இதழருவி.
"எப்ப போய் பார்க்கனும்?"என்று அவள் அப்பாவியாக அவனிடம் கேட்டிருக்க
"இப்பவே போய் பாரு.எம்.டி.ய பார்த்து பேசு.குட் லக்."என்று அவன் கூறவும்
"தேங்க்ஸ்."என்றவள் ஒரு நொடி தயங்கிவிட்டு "நீங்களும் என்கோட வரிங்களா?"என்று சிறிது தயக்கத்துடன் அவள் கேட்க,
"நான் உன்கோட வந்தா உனக்கு வேலை கிடைக்காது."நிதர்சனத்தை கூறினான் அவன்.
"ஏன்?"நெற்றியை சுருக்கி யோசித்தவளுக்கு எதுவும் புரியவில்லை.
"நீ போரது என் தம்பியோட ஹாஸ்பிடல்.கொஞ்சம் குடும்ப பிரச்சினை.அவன் என்கோட பேசறது கிடையாது.அதனாலதான் சொல்றேன் நீ மட்டும் போ.
எக்காரணத்துக்கொண்டும் உனக்கு என்ன தெரியும்னு காட்டிக்காத."என்று கூறியவன் இதழருவியை தன் தம்பியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவன்,
ஒரு ஆட்டோ பிடித்து மீண்டும் மார்க்கெட் வந்திருந்தவன் ஓரமாக நிறுத்தப்பட்ட தன் இருசக்கர வாகனத்தில் எறி அமர்ந்து சாவியை திருகி உயிர்பித்து ஆக்ஸலேட்டரை முறுக்கி இரண்டு முறை உறுமி விட்டு காவல் நிலையத்தை நோக்கி செலுத்த ஆரம்பித்தான் இதழரசன்.
கதிரவன் மலை முகடுகளில் மெது மெதுவாக மறைந்து மாலை நேரத்தை உணர்த்திக் கொண்டிருந்த நேரம் அது.