• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 13.

அன்றிரவு அப்படியே கழிந்தது.

ராஜேந்திரன் இல்லம்,

"வீட்டு வேலையை முடிச்சிட்டு உட்காரதுக்குள்ள போதும் போதும்னு ஆயரது சாமி."என்று முனகியபடி நீள்விருக்கையில் அமர்ந்தார் நாச்சியார்.

கடிகாரத்தில் சரியாக பத்து மணி.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் 'என்ன இதழருவியோட கார் சவுண்ட் கேக்குது.இந்நேரம் மருத்துவமனையில்ல இருக்கனும்.

ஒருவேளை ஏதாவது மறந்து வெச்சுட்டு போயிருப்பாளோ?'தன் மனதில் நாச்சியார் மகளை பற்றி சிந்தனைகளை ஓட விட்டுக்கொண்டிருக்கும்பொழுதே,

எதையோ பறிகொடுத்தவள்போல சோர்ந்து போன முகத்துடன் தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் வந்தாள் இதழருவி.

"இதழருவி உன் முகம் ஏன் சோர்ந்து போய் இருக்கு? உடம்புக்கு முடியலயாமா?"அக்கறையாக கேட்டபடி தன் மகளை நெருங்கியிருந்தார் நாச்சியார்.

அவர் பேசியது காதில் விழுந்ததா? விழவில்லையா அது அவளுக்குதான் வெளிச்சம்.
அவளின் சிந்தனையெல்லாம் எங்கயோ இருந்தது.

"இதழருவி என்னம்மா ஆச்சு?"என்று அவளின் தோள்களை பற்றி உலுக்கியபடி சத்தமாக நாச்சியார் கேட்கவும்தான் தன் சிந்தனைகளிலிருந்து வெளிப்பட்டவளாக தன் தாயை பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றுப் போனவளாய் அவரின் நெஞ்சில் சாய்ந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

அதில் பதறிப்போனவர் "என்ன ஆச்சும்மா?வா இப்படி வந்து சோபாவுல உட்காரு."என்று அவளை தன் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவளை விலக்கி நீள்விருக்கையில் அமரவைத்து தானும் அமர்ந்தார் நாச்சியார்.

அவர் நீள்விருக்கையில் அமர்ந்ததும் அவரின் மடியில் தன் முகத்தை புதைத்து மீண்டும் விம்மி விம்மி அழத்தொடங்கியிருந்தாள் இதழருவி.

அவளின் தலயை மென்மையாக வருடியபடி "ஹாஸ்பிடல் எதாவது பிரச்சனையாம்மா?எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுட."என்று தன் மகளிடம் பரிவுடன் கேட்டார் நாச்சியார்.

"அம்மா.. ஹாஸ்பிடல்ல என்ன இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்கம்மா.நான் எந்த தப்புமே செய்யல."என்று அழுகையின் இடையில் சொல்லிவிட்டு தற்பொழுது வெடித்து அழ ஆரம்பித்திருந்தாள்.

"என்னம்மா சொல்ற!"சிறு அதிர்வுடன் கேட்டார் நாச்சியார்.

"ஆமாம ம்மா.. காலையில ஹாஸ்பிடல் போய் பேசண்ட்க்கு ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு இருந்தேன்.

திடிரெனு எம்.டி.கூப்ட்டதா சொன்னாங்க.நானும் போனேன்.எம்.டி.இனிமேல் இங்க வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க.

நான் ரீசன் கேட்டேன்.அதற்கு அவங்க நான் இந்த ஹாஸ்பிடலோட எம்.டி. உனக்கு ரீசன் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு மூஞ்சியல அடிச்சமாறி சொல்லிட்டாரு அம்மா."என்று குலுங்கி குலுங்கி அழுதாள் இதழருவி.

"சரி அழாதடி.சும்மா எதுக்கெடுத்தாலும் அழறத முதல்ல நிறுத்து.இப்ப என்ன உனக்கு அந்த ஹாஸ்பிடல்ல வேலையில்லின்னா உனக்கு வேற எந்த ஹாஸ்பிடல்ல வேலை கிடைக்காத என்ன?

நிச்சயமா ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல நீ படிச்ச படிப்புக்கும் உன் திறமைக்க ஏத்த வேலை கிடைக்கும்.சும்மா கண்ண கசிக்கிட்டு இருக்காம மூஞ்சிய கழுவிவிட்டு இந்த பேப்ரல நீ படிச்ச படிப்ப்புக்கு விளம்பரம் எதாவது வந்திருக்கானு பாரு.

அதைவிட்டுட்டு சின்ன குழந்தைமாறி அழுதுட்டு.என் பொண்ணு இப்படி அழறது எனக்கு சுத்தமா பிடிக்கல."என்று கறார் பேர் வழியாக அவர் கூறவும்தான் அவரின் மடியில் புதைத்திருந்த தன் முகத்தை வெளியே எடுத்து நிமிர்ந்து நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை தன் ஆள்காட்டி விரலை கொண்டு சுண்டி விட்டாள் இதழருவி.

இதழருவி இப்படிதான்.எளிதில் உணர்ச்சி வசப்படுபவள்.

"சரிம்மா.நான் போய் மூஞ்சிய கழுவிவிட்டு வரேன்."என்று தெளிவாக பேசியவள் தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தாள்.
 
Joined
Jan 29, 2025
Messages
87
ஃகாபிசாப்,

"அக்கா அவன் சொல்ரான்னு அதை நம்பி.."என்று ஆனந்தி முடிப்பதற்குள்

"ஹாய் ஆன்ட்டி."என்றபடி செந்தாமரையின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள் தாரணி.

"ஹாய்."என்று கூறிவிட்டு அமைதியானார் ஆனந்தி.

"என்ன ஃகாபி சாப்டலாம்?"என்று ஆனந்தியிடம் செந்தாமரை கேட்டிருக்க

"எனக்கு கோல்டு ஃகாபி சொல்லுங்க."என்று வெகு அவசரமாக முந்திக்கொண்டு கூறினாள் தாரணி.

அவளை ஒர் பார்வை பார்த்துவிட்டு "அக்கா நீங்க நமக்கு அரபிகா ஃகாபி ஆர்டர் பண்ணுங்க."என்று
கூறிவிட்டு அமைதியானார் ஆனந்தி.

செந்தாமரை வெயிட்டரிடம் தங்களுக்கு தேவையான ஃகாபியை ஆர்டர் செய்துவிட்டு ஆனந்தியை நோக்கி தாரணியிடம் பேச சொல்லி கண்னை காட்டினார்.

"நான் நேரடியாக விசயத்துக்கு வரேன்.நீ விரும்பியவனதா கல்யாணம் பண்ணிருக்க.அந்த காரணத்தாலதா இதழரசன் கிட்ட நீ போய் பேசியிருக்கன்னு நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?"என்று சுருக்கமாக தாரணியிடம் கேட்டார் ஆனந்தி.

"நான் யாரையும் விரும்புல.என் வீட்டுக்காரர்தான் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன ஒன் சைடா லவ் பண்ணியிருக்காரு.

அதுவே மேரேஜ்க்கு அப்புறம்தான் எனக்கு தெரியும்.உங்க பையன்தான் மேரேஜ் முன்னாடி நாள் என்கிட்ட பேசனும்னு சொன்னாரு.

அதனாலதான் அவர பார்க்க போனேன்.ஆனா உங்க பையன் உன்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல.சாரின்னு சொல்லிட்டு என் தலையில பெரிய இடியா இறக்கிட்டு வெளிய போயிட்டாரு."என்று தாரணி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் ஆர்டர் செய்த ஃகாபிகளை வெயிட்டர் மேசையின் மீது வைத்துவிட்டு சென்றார்.

"அவரு ஏதோ ப்ரான்க் பண்றாருன்னு நினைச்சுட்டு அசால்ட்டா விட்டுட்டேன்.ஆனா காலையில எனக்கு தாலி கட்டும் போது அவரு, எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லன்னு சொல்லிட்டு எந்திருச்சப்பதான் எனக்கு பக்னு இருந்தது.அதுக்கப்புறம்தான் நடந்தது உங்களுக்கு தெரியுமே."என்று கூறிவிட்டு கோல்ட் காஃபி நிறைந்துள்ள கண்ணாடி குவளையை எடுத்து சிப்பாய் அருந்த ஆரம்பித்தாள் தாரணி.

"என்கிட்ட வேற ஏதாவது கேட்கனுமா ஆன்ட்டி?"என்று தாரணிதான் ஆனந்தியிடம் கேட்டிருந்தாள்.

வேற எதுவும் இல்லை என்பதைபோல தலையை அசைத்திருந்தார் ஆனந்தி.

"ஓகே ஆன்ட்டி அப்ப நான் கிளம்புறேன்."என்றபடி காலிக்குவளையை மேசையின் மீது வைத்தவள் காஃபி சாபை விட்டு வெளியேறி இருந்தாள் தாரணி.

"அக்கா இனிமேல் அவன பத்தி என்கிட்ட பேசவராதிங்க."என்றுவிட்டு விருட்டென எழுந்தவர் காஃபிசாபை விட்டு விருவிரு நடையில் வெளியே சென்ற ஆனந்தியை வெற்றி சிரிப்புடன் பார்த்திருந்தார் செந்தாமரை.

பின்பு நினைவுவந்தவராக வேக நடையுடன் ஆனந்தியை பின்தொடர ஆரம்பித்தார் செந்தாமரை.

வானத்தில் நட்சத்திரங்கள் இல்லாத இரவாக இன்று இருந்தது.

'மழைவரும் போலிக்கிருக்கே.'என்று மனதில் நினைத்தபடி ஆவலுடன் தன் பெரியம்மாவிற்கு அழைப்பு விடுத்திருந்தான் இதழரசன்.

அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.
"ஹலோ.."

"பெரியம்மா நான் சொன்னதா அம்மாகிட்ட பேசுனிங்களா?"தவிப்புடன் கேட்டான் இதழரசன்.

"என்ன மன்னிச்சிடுப்பா.நான் நீ சொன்னத சொன்னேன்.உங்க அம்மா நம்பத்தயாரா இல்ல.உன்ன பத்தி பேச்ச இனிமேல் என்கிட்ட பேச வராதிங்கன்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா.

எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரியல.கொஞ்சநாள் போகட்டும் நான் மறுபடியும் பேசிப் பார்க்கறேன்."என்று வருத்தம் இழையோடிய குரலில் சொல்லவும்

"பெரியம்மா நான் போன வைக்கிரேன்.என்னால உங்களுக்கு அம்மாவுக்கும் சண்டை வரவேண்டாம்.நான் போன வைக்கிறேன்."என்று சுரத்தே இல்லாத குரலில் கூறிவிட்டு அழைப்பை கட்செய்துவிட்டிருந்தான் இதழரசன்.

இரண்டு நாட்கள் கழிந்திருந்தது.

ராஜேந்திரன் இல்லம்,

"அம்மா நீங்க தள்ளி நில்லுங்க.நான் சமைக்கிறேன்."என்று இதழருவி சொல்லி முடிப்பதற்குள்

"நாச்சியா நீ சமைச்சா நான் சாப்பிடுவேன்.மத்தவங்க சமைச்சா நான் சாப்பிடமாட்டான்."என்று ராஜேந்திரன் நடுக்கூடத்தில் இருந்து சத்தமாக கூறினார்.

"நீங்களே சமைங்க அம்மா."வார்த்தைகளில் உயிர்ப்பே இல்லை அவளுக்கு.

"இதழருவி நீ உன் ரூம்ல போய் இரும்மா.உங்க அப்பாவ பத்திதான் உனக்கு தெரியுமே."என்றபடி தேங்காயை துருவ ஆரம்பித்தார் நாச்சியார்.

"வேண்டாம்மா நான் அறையில போய் என்ன பண்ணப் போரேன்? இதுக்கு முன்னாடி காலையில ஹாஸ்பிடல் போனா சாய்ந்தாரம்தான் வருவேன்.

இப்ப என்ன அப்படியா? வேலையும் இல்லை.என்னால ரூம்லயே இருக்க முடியலம்மா.நான் உன்கோடயே இருக்கேன்."என்றாள் வருத்தம் இழையோடிய குரலில் இதழருவி.

அவளும் வேலைக்கு இரண்டு நாட்கள் முயற்சி செய்கிறாள்.பலன் என்னவோ பூஞ்சியம்தான்.

"சரி நீ மார்க்கெட் போய் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்கிட்டு வா.அப்படியே உனக்கு ஏதாவது தேவையன்னாலும் வாங்கிக்க."என்று நாச்சியார் அவளின் கவனத்தை திசை திருப்ப இப்படி கூறியிருந்தார்.

"ம்.. சரிம்மா.நான் மார்க்கெட் போய்ட்டு உனக்கு போன் பண்றேன்.என்னென்ன வாங்கனும்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்."என்று கூறியவள்,

சமையல் அறையிலிருந்து உற்சாகமாக நடந்தவள் நடுக்கூடத்தில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்த தன் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேக நடையுடன் தன் அறைக்குள் வந்தவள் மேசையின் மீதிருந்த தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு அதே வேகநடையுடன் போடிகோவிற்கு வந்தவள் தன் மகிழுந்தில் ஏறி அமர்ந்து செலுத்த ஆரம்பித்தாள்.

அவளின் வாகனம் மார்கெட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

மார்க்கெட்டுக்கு அரை மணி நேரத்தில் வந்திருந்தவள் தன் தாய்க்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

அப்பக்கம் "இதழ்ம்மா..அப்பாக்கு பறிமாறிட்டிருக்க.நீ காய்கறி எதுவும் வாங்க வேண்டாம்.வீட்லயே ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகள் இருக்கு.

நான் மறந்துவிட்டேன்.நீ உனக்கு ஏதாவது தேவையன்னா வாங்கிட்டு வா."என்றதோட அழைப்பை கட் செய்திருந்தார் நாச்சியார்.

'இப்ப என்ன பண்றது?'என்று மனதில் எழுந்த யோசனையுடன் காரை அவள் நெருங்கும் சமயத்தில்

"ஹலோ.. மேடம் எனக்கு ஒரு பதில சொல்லாம நீங்க என் நம்பர ப்ளாக் பண்ணிட்டா எப்படி?"என்றவனின் ஆழ்ந்த குரலில் திடுக்கிட்டு போனவளாக அவள் திரும்பி பார்க்க,

இதழரசன் தன்கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டியபடி அவளை நேர்கொண்ட பார்வை பார்த்திருந்தான்.

"உங்களுக்கு என்னதான் வேணும்?"சலித்தபடி கேட்டாள் இதழருவி.

இதழருவிக்கு அவ்வளவு எளிதாக கோபம் வராது.முடிந்தளவு பொறுமையை கடைபிடிப்பவள்.

"என்ன மேடம் எனக்கு என்ன வேனும்னு உங்ககிட்ட இரண்டு நாளைக்கு முன்னாடிதான சொன்னேன்.அதற்குள்ள மறந்துட்டா எப்படி?

சரி பரவால்ல.நான் மறுபடியும் சொல்லனும்னு நீங்க எதிர்பார்க்கிரது புரியது."என்றவன் சுற்றியும் தன் பார்வையை ஓடவிட்டான்.

எதிரில் பூக்கடை ஒன்று இருந்ததை பார்த்தவன் "மேடம் ஐந்து நிமிசம் வெயிட் பண்ணுங்க.நான் இப்ப வந்துர்ரேன்."என்று இவளிடம் வெகு அவசரமாக கூறியவன் அந்த பூக்கடையை நோக்கி ஓடினான்.

'சரியான அரமென்டல்.'என்று மனதில் நினைத்துவிட்டு அமைதியாக நின்றிருந்தாள்.

அவன் அருகில் வருவதை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்ட சமயத்தில் அவள் மேல் அனைத்து விதமான பூக்கள் ஒன்று சேர்ந்து பூ மழையாக அவள் மேல் பொழிய ஆரம்பித்தது.

தன் விழிகளை அகல விரித்து இதழில் மலர்ந்த புன்னகையுடன் ஆச்சிரியமாக தன் மேல் பொழிந்து கொண்டிருக்கும் பூ மழையை அந்த நிமிடம் ரசித்து அனுபவித்தாள்.

"ஐ லவ் யூ இதழ்.எனக்கு நீதான் வேனும்.நாம கல்யாணம் பண்ணிக்கலாம?"அந்த பூ மழையில் நினைந்தபடி அவள் முன் ஒற்றை காலை மடக்கி மற்றொரு காலை குத்திட்டு அமர்ந்தபடி ஒற்றை சிகப்பு ரோஜாவை அவள் முன் நீட்டியபடி ஆழ்ந்த குரலில் தனது காதலை மீண்டும் ஒருமுறை தெரிவித்திருந்தான் இதழரசன்.

சொல்லப்போனாள் இதழருவிக்கு இந்த முறையில் இதழரசன் காதலை தெரிவித்திருந்தது மிகவும் பிடித்துதான் இருந்தது.

அவன் அவளிடம் தன் காதலை தெரிவித்த மறுநிமிடம் பூ மழை நின்றிருந்தது.

இருவரின் தலையிலும் ஆங்காங்கே உதறிப்பூக்கள் ஆங்காங்கே சிதறி இருந்த
து.

அங்கிருந்து அனைவரும் வெகு ஆர்வத்துடன் இதழருவி கூறப்போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top