Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
முன் ஜென்ம நினைவுகளோடு ஒருவரை ஒருவர் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்களுக்குள்ளான பந்தம் என்னவென்றும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே பெயரை மட்டுமே அறிந்து காதல் கொண்ட அதிசயத்திற்கான விடை அங்கே அவர்களுக்கு கிடைத்திருந்தது.
அதன் பலனாய் தங்கள் இருவருக்கும் இதுவரை எழுந்த உணர்வின் ஆதாரம் புரிய இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்துக் கொண்டார்கள்.
அந்த அணைப்பே அவர்களது அன்பை அழகாய் பிரதிபலித்தது சிறு துளி ஆனந்த கண்ணீரோடு...
அவர்களுக்கு முன் ஜென்மத்தில் உண்மையாய் நடந்த அதே நிகழ்வுகள் இந்த ஜென்மத்தில் நிழலாக அலையாடியது, அவர்கள் ஜென்மம் முடிந்த அதே வயதில் அவர்களது மறு ஜென்மம் தொடங்கியது என்ற நிதர்சனமும் புரிந்தது.
அவர்களுக்குள் இருந்த குழப்பம் மொத்தமும் தீர்ந்து போயிருந்தது,
மனம் தெளிவடைந்தது, அந்த தெளிவோடு அன்று மனதில் இருந்த அதே உற்சாகத்தோடு கணவன் மனைவி இருவரும் ஆற்றில் இறங்கினர்.
இருவரும் ஆற்றில் நீராடி ஆத்தாளை சுற்றி வந்து மனம் நிறைந்த மகிழ்ச்சியை நன்றியோடு அவளுக்கு காணிக்கையாக்கினார்கள் உறவுகளோடு சேர்ந்து.
பின் அங்கிருந்த அனைவருக்கும் பிரசாதம் அவர்கள் இருவரும் சேர்ந்து பரிமாறி விட்டு
அவர்களும் சேர்ந்து சாப்பிட்டனர்
" அதிசயமா இருக்கு இல்ல மாமு " நெகிழ்ந்து அவள் கேட்க,
" கடவுளால இணைக்கப்பட்ட ஆன்மா அம்மு நாம நம்ம காதலுக்கு மரணம் கூட அழிவை தர முடியாது. " அவனும் நெகழ்ச்சியோடு கூறினான்.
காதலின் நெகிழ்ச்சி அவர்களை மீண்டும் பிணைக்க,
தனக்கு மனதை முழுதாய் கொடுத்த தன் மன்னவனின் மார்பில் முழுதாய் புதைந்து தன்னை இணைத்துக் கொண்டாள் மங்கையவள் மரணமும் எங்களை ஒன்றும் செய்யவில்லை என்ற இறுமாப்புடன்.
காதல் கொண்டு மனமதை முழுதாய் கொடுத்து விட்டால் அந்த உயிரும் ஆன்மாவும் ஜென்ம ஜென்மம் ஆனாலும் அழிவில்லாது மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அப்படி மனம் கொடுத்த மன்னவன் சேர்ந்து விட்டான் தன் மனையாளுடன்....
சுபம்....
அன்புடன்,
மாரி மதி

கயத்தாறு.