Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
வீராவின் குடும்பம் முழுவதும் குலதெய்வ கோவிலை அடைந்து இருந்தார்கள்.
அந்த கோவில் ஆற்றின் ஓரத்தில் அமைந்திருந்தது, அந்த கோவிலை அடைந்ததிலிருந்து வீரா மற்றும் அஞ்சலி இருவருக்குள்ளும் இனம் புரியாத பரவச உணர்வு ஒன்று நிலைத்து இருந்தது, அது இன்னதென்று அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அந்த உணர்வு மன நிறைவை கொடுத்து இருந்தது.
" ம்ம்மா அஞ்சலி பொங்கல் வைக்கணும் டா, நீதான் உன் கையாள சாமிக்கு வைக்கணும் அதனால ஆத்துல போய் தண்ணி எடுக்கணும் வாடா போவோம் " என்று வீராவின் அம்மா அழைக்க அஞ்சலி வீராவிடம் சைகையில் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்,
வீராவும் அவளின் பின்னாலே நடக்க அவனை தடுத்து நிறுத்திய அவனது அம்மா,
" ஏலே வீரா "
" ஹான் அம்மா "
" அந்த பக்கம் போயி கொஞ்சம் விறகும், ஓலையும் கிடக்கும் அத எடுத்து கொண்டு வந்து கோவில் முன்னாடி வை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் பொங்கல் வைக்கணும். "
" அப்போ சேர்ந்து தான ம்மா தண்ணியும் எடுக்கணும் "
" முதல்ல அவ மட்டும் குளிச்சிட்டு வந்து பொங்கல் வைக்கணும் டா அப்புறம் மறுபடியும் ரெண்டு பேரும் சேர்ந்து குளிச்சிட்டு ஈரம் சொட்ட சொட்ட கோவில சுத்தி வந்து கும்பிடனும் டா "
" அது என்ன ம்மா கணக்கு? வழக்கமா குளிச்சிட்டு வந்து பொங்கல் வைப்போம் அப்புறம் சாமி கும்பிடுவோம், ஆனா பொங்கல் வச்ச பின்னாடியும் ஏன் ம்மா குளிக்க போகணும்? "
" புதுசா கல்யாணம் ஆன ஜோடிங்க ஈரம் சொட்ட சொட்ட ஆத்தாவை சுத்தி கும்பிட்டா குலம் தழைக்கும்ன்னு ஐதீகம் நம்ம கோவில் வழக்கமும் கூட டா "
" அப்படியா ம்மா "
" ம்ம் ஆமா டா, சரி வேகமா போய் வேலைய பாரு " என்று சொல்லிவிட்டு அவர்கள் அஞ்சலியை அழைத்து கொண்டு ஆற்றுக்கு போனார்கள்,
ஆற்றங்கரையை அடைந்ததும் அந்த சிலு சிலு காற்று அவளை மேலும் பரவசமாக்கியது, இனம் புரியாத உணர்வு ஏதோ சொல்ல துடிப்பதை போல தோன்றியது ஆனாலும் அந்த உணர்வில் தெளிவில்லை, யோசனையோடு ஆற்றில் மூழ்கி குளித்து விட்டு தண்ணீரை குடத்தில் அள்ளி கொண்டு வந்தாள்,
வீராவும் அதற்குள் வேலையை முடித்து காத்திருந்தான்,
" வீரா நீ வேகமா ஆத்துல போய் ஒரு மூணு முங்கு மட்டும் முங்கிட்டு ஓடிவா " என்று அம்மா மீண்டும் கட்டளை பிறப்பிக்க அப்படியே செய்தான் வீராவும். அவனுக்கும் அஞ்சலிக்கு ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வு தோன்றினாலும் அவளை விட ஏதோ ஒரு சில விஷயம் மட்டும் தெளிவாக தோன்றியது போன்ற உணர்வு. ஆனாலும் அதை யோசிக்க விடாமல் அம்மாவின் குரல் கேட்க வேகமாக வந்திருந்தான். அவன் வந்த அதே நேரம் ராஜாவும் மோகனும் பூஜை சாமான்களை வாங்கி கொண்டு உள்ளே நுழைந்து இருந்தார்கள்,
வீ.... என்று வாயை திறந்த ராஜாவின் வாயை மூடி,
" டேய் ஏன் டா கிரகம் " என்று சொல்லவும் வாயை அப்படியே மூடி கொண்டான்.
நிமிடங்கள் கரைய பொங்கலும் பால் பொங்கி அரிசி போடப்பட்டது,
" வீரா அஞ்சலி இரண்டு பேரும் போய் குளிச்சிட்டு வாங்க நீங்க வரவு பொங்கல இறக்கவும் சரியாத்தான் இருக்கும் "
" ம்ம்ம் சரி ம்மா " என்று சொல்லிவிட்டு இருவரும் ஆற்றிருக்கும் கிழக்கு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் ஒருவர் கையை இன்னொருவர் கோர்த்துக் கொண்டு அவர்கள் நடக்க,
இதுவரைக்கும் புரியாமல் இருந்த உணர்வுகள் மெல்ல தெளிய ஆரம்பித்தது, வீராவும் அஞ்சலியும் தனி தனியாக வந்த போது புகை போல எழுந்த நினைவுகள் அவர்கள் இருவரும் இணைந்து வர புகைப்படலம் மெதுவாக விலகி கொள்ள ஆரம்பித்தது, விளைவாக அவர்களது நினைவுகளும் பின்னால் சுழன்று நிஜம் கண்முன்னே படமாக தெரிய ஆரம்பித்தது....
அன்று.....
அஞ்சலி முன்னாள் ஓட அவளை விரட்டிக் கொண்டே பின்னால் ஓடி வந்தான் வீரா
" ஏய் அம்மு ஓடாதடி நில்லு "
" வா வா மாமா நீ தான் பெரிய வீரன் ஆச்சே பொண்டாட்டிய விரட்டி தான் பிடியேன் பாப்போம் " என்று சொல்லிக்கொண்டே ஆற்றை நோக்கி ஓடினாள்.
" அம்மு மெதுவா போடி கீழ விழுந்துற போற "
" விழுந்தா தாங்க நீதான் இருக்கியே மாமா வா வந்து தாங்கிக்கோ " என்று இன்னும் வேகமாக ஓடினாள்,
அவளை விரட்டி கொண்டே அவனும் ஆற்றை அடைந்து இருக்க,
அதற்கு மேல் ஓட இடமில்லாமல் போக அந்த தண்ணிரில் அவனிடம் மாட்டிக்கொண்டாள்,
அவளை அள்ளி அணைக்க அவனது கைகளுக்குள் சிக்கியவள் மார்பினில் புதைந்து கொண்டாள், பின் இருவரும் தண்ணிரில் நீந்தி குளித்து விட்டு அருகில் இருந்த மதகின் ஓரத்தில் சேலை தலைப்பை சரி செய்ய அஞ்சலி ஒதுங்க, அவளின் பின்னாலே வந்திருந்தான் வீரா,
" மாமா அங்குட்டு போ நா சேலையை சரி பண்ணிக்குறேன் "
" நீ பண்ணு அம்மு மாமா பாக்க மாட்டேன் " கண்களை வெட்டி சொல்ல,
" நீ திருட்டு பய மாமா உன்ன எல்லாம் நம்ப முடியாது போ அந்த பக்கம் "
" ம்ம்ஹும் இங்க தான் நல்ல ஆழம் இருக்கு நல்லா குளிக்க முடியும் அம்மு " என்று காரணம் சொல்லி அவ்விடம் விட்டு நகராமல் இருக்க, அவனிடம் போராடி வெல்ல முடியாது என்ற எண்ணத்தில் கரையில் ஏறி அமர்ந்தாள்.
தண்ணீரில் நின்று அவளின் மீது தண்ணீரை அடித்து விளையாட்டு காட்டிய கணவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்,
" என்ன அம்மு அப்படி பாக்குற? "
" அழகா இருக்க மாமு "
" உன்னை காண்பதாலே என்னில் இத்தனை அழகு அம்மு " அவன் கவிதையாக சொல்ல அஞ்சலி மலர்ந்தாள்,
" போ மாமு " அவளிடம் இன்னும் வெட்கம், அவளின் வெட்கம் கண்டு நீரை விட்டு வெளியே வந்து கரையின் முனையில் நின்றான் வீரா.
அவளின் வெட்கம் ஆற்றிற்கும் வந்தது போல ஆற்றின் வெள்ளம் கூடியது, வீராவும் அஞ்சலியும் அதை கவனிக்கவில்லை, கண்கள் சந்திக்க காதல் மொழி பேசி கொண்டிருந்தார்கள். நீரின் வேகம் கூட கரையில் மண் அரிக்க ஆரம்பித்தது, காட்டாற்று வெள்ளம் வேலையை காட்ட வீரா தடுமாறி தண்ணிரில் விழுந்தான், சுதாரித்து விழிக்கும் நொடி கூட வீராவிற்கு கிடைக்கவில்லை ஆற்று வெள்ளம் சுழட்ட மதகு ஓரத்தில் இருந்த சுழலில் சிக்கி அதனுள் மூழ்கி போனான் வீரா.
நொடிகளில் நடந்து முடிந்திட்ட நிகழ்வில் விக்கித்து நின்றாள், அவளது உலகம் கண்ணிமைக்கும் நொடியில் தலைகீழாய்ப் புரண்டு, சின்னாபின்னமானது.
சற்று முன்புவரை அவனது கரம் பற்றியிருந்த அனலான சூடும், அவனது கண்களில் மின்னிச் சிலிர்த்த காதலும், அவனது உதடுகள் உதிர்த்த " அம்மு அம்மு " என்ற மந்திர வார்த்தைகளும் மௌனமாகி இப்போது நெஞ்சைப் பிளக்கும் கொடுங்கனவாய்ச் சூழ்ந்தன.
தன் விரலைப் பிணைத்திருந்த கரங்களை வெள்ளம் கொடூரமாக இழுத்துச் சென்றபோது, அவளின் உயிரும் அவனுடன் சேர்ந்து ஆழத்தில் புதையுண்டு தான் போனது.
அவளது விழிகள் உறைந்து விரிந்தபடி, உடல் சிலையெனக் குளிர்ந்து போயிருந்தது. மூச்சுத் திணறி இதயம் துடிப்பதை மறந்திருந்தது, அவனின்றி அவளுக்கு சுவாசிக்கவும் தெரியவில்லை, கால்கள் தள்ளாடின.
அவள் வெற்றுக்கூடாக ஜீவன் இல்லாத உடலாக நின்றாள்.
அவர்களது காதல் தானே அவளை முழுமையாக்கியது. ஆனால், அந்தக் காதல் விதியின் வழி கொடூரமாகப் பறிக்கப்பட்டபோது, அவள் ஒரு உடைந்த பொம்மையாக, உயிர் வறண்ட உருவமாக மாறிப் போனாள்.
கடைசியாய் ஒரு முறை அந்தச் சூழலில் மீண்டு வீரா தெரிந்துவிட மாட்டானா??? மீண்டுவிட மாட்டானா??? என்ற நப்பாசை அவளைப் பற்றியிருக்க, அதற்கு வழியே இல்லை என்பது போல வீராவை முழுங்கிய சுழல் குபுக் என்று ஏப்பம் விட,
மாமு..... என்ற பெருங்குரல் அஞ்சலியின் அடிவயிற்றிலிருந்து கிளம்ப கதறினாள், ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அசுர வேகம் கொண்ட சுழல் சத்தம் காட்ட விடாமல் வீராவை முழுங்கி எங்கோ அனுப்பியிருந்தது, கதறி துடித்த அஞ்சலி ஆற்றில் தாவ போக அங்கு ஆடு மேயித்து கொண்டிருந்த கிழவி அவளின் கைகளை இறுக்கி பிடித்தாள்,
" ஏய் முட்டாள் என்ன காரியம் செய்யுற "
" என்னை விடுங்க என் மாமன் அந்த சுழல்ல மாட்டிகிட்டாரு அவரை காப்பாத்த நா போகணும் "
" பைத்தியம் அந்த சுழல் இருக்குற வேகத்துக்கு உன்னால அதுல இருந்து எப்படி மீள முடியும்? அது உள்ள சிக்குன உன் மாமனுக்கு என்ன ஆகிருக்கும்ன்னு நா சொல்லி உனக்கு தெரியணும்ன்னு அவசியம் இல்ல... போனவன் போய்ட்டான் இருக்குற நீயாவது உன்னை காப்பாத்திக்க பாரு "
" தேவையில்லை என் மாமனுக்கு என்ன ஆச்சோ அதுவே எனக்கும் ஆகட்டும் நா அவரோடவே போறேன், அவர் இல்லாத ஜெகத்தில எனக்கு மட்டும் ஜீவன் எதுக்கு? "
" ஏய் அறிவு கெட்டவளே நீ உயிரோட இருந்தா உன்னோட சேர்ந்து அவன் நினைவுகளாவது வாழுமே, நீயும் அழிஞ்சு போனா அந்த நினைவும் உன்னோடவே அழிஞ்சு போய்டுமே இந்த பூமியில நீயும் அவனும் வாழ்ந்த அடையாளமே இல்லாம போய்டுமே "
" நாங்க வாழ்ந்த அடையாளத்தை அந்த ஆத்தா அவளே எங்களுக்கு மறுபடியும் கொடுப்பா ஏன்னா இந்த ஆத்தாவை கும்பிட தான் நானும் என் மாமாவும் இங்க வந்தோம் வந்த இடத்தில... " அவளால் சொல்ல முடியாமல் அழுதால், பின் கண்ணீரை துடைத்து விட்டு சொன்னாள்,
" நா யாருன்னு எனக்கே அடையாளம் தெரியாத வயசுல என் அம்மாவும் அப்பாவும் எப்படியோ இறந்து போய்ட்டாங்க, அவங்க இப்படி தான் இறந்து போனாங்கன்னு சொல்ல கூட எனக்கு யாரும் இல்ல.
ஊர் கோவில்ல ஏதோ கிடைச்சத சாப்டுட்டு உயிர் வாழ்ந்துட்டு இருந்தேன்.
அப்போ தான் எனக்கு அறிமுகம் ஆனா என் மாமன், என்னை விட பெரியவன் தான் ஆனாலும் அவன் முகம் குழந்தை மாதிரி தான் இருக்கும், இந்த ஜென்மம் இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த முகம் எனக்கு மறக்காது, அந்த உருவம் என் உணர்வுல உயிரா கலந்து இருக்கு அதுக்கு அழிவே கிடையாது.
குழந்தைல இருந்து என் கூடவே இருந்து என்னோட ஒவ்வொரு சூழல்லையும் எனக்கு வழிகாட்டியா இருந்தவன் என் மாமன்
அவனோட ரொம்ப காலம் வாழ எனக்கு ஆசை ஆனா அந்த ஆசை இப்படி போகும்ன்னு தெரியாம போச்சு, எனக்கு அவன் கூட வாழனும், ரொம்ப நாளைக்கு வாழனும் அந்த ஆசையை விதையா விதைச்சி என் மாமன் புதைஞ்சு போன இடத்தில நானும் புதைஞ்சு போறேன்,
இந்த ஆத்தாவுக்கு சக்தி இருக்குறது உண்மைன்னா என் மாமன் கூட நா மறுபடியும் வாழ எனக்கு மறு ஜென்மம் கொடுக்கட்டும்,
எனக்கு வாழவே இடம் இல்லனு நினைச்சப்போ அவன் மனச எனக்கு கொடுத்தான்.
இது தான் அம்மு உன் வாழ்விடம் காலம் உள்ள காலம் வரைக்கும்ன்னு சொல்லி அவன் மனம் கொடுத்தான்.
எனக்காகவே பொறந்து வாழ்ந்து அவன் மனசுல நீங்காத இடம் கொடுத்து அந்த மனசோடவே மாண்டு போன,
என் மனம் கொடுத்த மன்னவனை தேடியே இந்த மங்கையின் பயணமும்,
"மரணமும் எங்கள் மனம் கொண்ட காதலைப் பிரித்துவிட முடியாது!" என்று மனதில் ஆழமாய் நினைத்துக் கொண்டே, ஆவேசமாய் வந்த சுழலில் குதிக்க,
வீரா விழுந்த அந்த சுழலில் அவளும் மூழ்கினாள், அவளது உயிர் அவனோடு கலப்பதற்காகவே படைக்கப்பட்டதென, மரணத்தைக் கூட ஒரு தேடலாய் ஏற்று அவனோடு மடிந்தாள்....
வீராவின் விதி அங்கு முடிந்து இருக்க அஞ்சலியின் விதி அவளால் முடித்து கொள்ளப்பட்ட காரணத்தால் மோட்சம் பெறவில்லை, மோட்சம் தேடி ஆத்தாளின் பாதம் சரணடைந்து, ஆசை கொண்ட வாழ்க்கையின் ஆயுசு அல்பாயுசு ஆனதால் மறு ஜென்ம வரம் கேட்டு தவமிருக்க,
அவளின் ஆசையும் நிறைவேறியது ஆத்தாளின் நிபந்தனையோடு,
" உங்கள் இருவருக்கும் மறுஜென்மம் என்ற ஒன்று உண்டு உணர்வில் கலந்த இருவரும் அதை பால்ய பருவம் முதலே உணருவீர்கள், ஆனால் அது ஒரு நிழல் போல தான் இருக்கும்,
இன்னதென்று புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க வைக்கும்,
நிறைய சிக்கலான சூழல்கள் வரும்,
அந்த சிக்கலால் நேசம் கொண்ட உறவுகளே உங்களை வெறுத்து ஒதுக்கலாம்,
புழுவை பார்ப்பது போல அருவெறுப்பு காட்ட விளையும்,
எது எப்படி வந்தாலும், சுயமரியாதை குறைந்தாலும் கூட உங்களது உணர்வுக்கான மதிப்பை உரிய வகையில் கொடுத்து நமக்கு நாமே என்ற எண்ணத்தில் எதையும் தங்களுக்காக இழக்க தயாராக இருந்தால் இன்னொரு ஜென்மத்தில் நீங்கள் இருவரும் நீண்ட காலம் கணவன் மனைவியாக காதலின் அடையாளமாக இருப்பீர்கள் " என்று ஆத்தா ஆசி வழங்கியதும் கண்ணில் காட்சியாக விரிந்து மறைய வீராவும் அஞ்சலியும் சுயத்திற்கு வந்தனர்.
மனம் கொடுத்த மன்னவன் வருவான்.....

Last edited: