• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
23
வாயில் நுரை தள்ளி குளிர்ந்த மேனியோடு மோகன் கிடக்க வீரா அவனை அள்ளி தூக்கி தோளில் போட்டு கொண்டு ஓட ஆரம்பித்தான், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை,

" டேய் ராஜா வண்டிய எடு பைக்லையே கொண்டு போயிருவோம், இன்னும் ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணோம்னா சரியா வராது டா, வேகமா ஓடு வண்டிய ஸ்டார்ட் பண்ணு டா " என்று சொல்லிக்கொண்டே வீரா ஓட அவனுக்கு முன்னால் ஓடி வண்டியை ஸ்டார்ட் செய்தான் ராஜா.

ராஜாவின் பின்னால் மோகனை வைத்து, அவனுக்கு பின்னால் அமர்ந்து வீராவின் தோளில் அவனை கிடத்தி கொண்டான்.

பைக் வேகமெடுக்க அடுத்த பதினைந்து நிமிட இடைவெளியில் அந்த தனியார் மருத்துவமனையின் உள்ளே நுழைந்து நின்றது,

மீண்டும் வீரா மோகனை தூக்கி கொண்டு ஓட அங்கிருந்தவர்கள் போலீஸ் கேஸ் என்று வியாக்கியானம் பேச, அப்போது அங்கு வந்த டாக்டருக்கு மோகனை முன்பே தெரிந்திருக்கும் போல,

" டேய் மவனே என்னடா ஆச்சு? " என்று கன்னத்தில் தட்ட, உடல்நிலை அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த அந்த டாக்டர் சரசரவென வேலையை பார்க்க ஆரம்பித்தார்,

" நர்ஸ் மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல இவனை உள்ள கொண்டு வாங்க நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு இப்போ ட்ரீட்மென்ட் பண்ணா தான் இவனை காப்பாத்த முடியும் குயிக் குயிக்... " என்று சொல்லி அவசரப்படுத்த டாக்டர் சொன்னபின் நர்சுக்கு பேச்சு என்ன வேண்டி கிடக்கு என்பதைப் போல் மல மலவென அவர்களும் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள், அரை மணி நேரம் கழித்து டாக்டர் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்,

" டாக்டர், அவன் எப்படி இருக்கான்? "

" ம்ம் இப்போ நல்லா இருக்கான் பிரச்சனை ஒன்னும் இல்ல "
என்று டாக்டர் சொல்லவும் அப்பாடா என்று இருந்தது ராஜாவுக்கும் வீராவுக்கும், இப்போதுதான் அவர்கள் இருவருக்கும் மூச்சு சீரானது,

" ஆமா அவனுக்கு என்ன ப்பா பிரச்சனை ஏன் இப்படி செஞ்சான், ஆள் வேற கல்யாண மாப்ள கணக்கா டிரஸ் போட்டுருக்கான்? "

" அவனுக்கு இன்னைக்கு கல்யாணம் டாக்டர் "

" வாட்? இன்னைக்கு கல்யாணமா? "

" ம்ம் ஆமா டாக்டர் "

" கல்யாணத்தை வச்சுக்கிட்டு அவன் இந்த மாதிரி செஞ்சுருக்கான்னா அப்போ அவனுக்கு லவ் எதாவது.... "
டாக்டர் கேட்க,

" இல்ல இல்ல டாக்டர் " என்று வீராவும்,

" ஆமா டாக்டர் " என்று ராஜாவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்,

டாக்டர் குழப்பதோடு அவர்களை பார்த்தார், வீராவும் கிட்ட தட்ட அதே தோணியில் பார்க்க,

" ஆமா தான டா? " என்றான் ராஜா வீராவை பார்த்து,

" இல்ல டா எனக்கு புரியல "

" ஏய் என்ன ப்பா ரெண்டு பேரும் குழப்புறீங்க, நீ இல்லங்குற, அவன் ஆமாங்குறான் யாராவது ஒருத்தன் உருப்படியா சொல்லுங்க ப்பா " என்று டாக்டர் இடை புக,

" நானே சொல்லுறேன் டாக்டர் " என்று ராஜா சொல்ல ஆரம்பித்தான்,

" சரி சொல்லு " என்று அவருக்கு கேட்க ஆவல் காட்ட,

" அவனுக்கு இன்னைக்கு கல்யாணம் டாக்டர், அவன் கட்டிக்க இருந்த பொண்ண தான் அவன் பொண்ணு பார்த்த நாளையில இருந்து லவ் பண்ணிட்டு இருந்தான், இன்னைக்கு காலையில கல்யாணம் பண்ண மனமேடையில வந்து உட்கார்ந்து இருந்தான், "

" ம்ம்ம் " என்ன நடந்திருக்கும் என்ற கதையை கேட்கும் ஆர்வத்தில் அவர் ம்ம்ம் கொட்ட,

" பொண்ண வர சொன்ன நேரம் அந்த பொண்ணு திடீர்னு இதோ நிக்கானே இவனை வந்து கட்டி புடிச்சுட்டு வீரா வீரான்னு அழ ஆரம்பிச்சுட்டு, இவனும் அஞ்சலி அஞ்சலின்னு ஆறுதல் படுத்த, "

" ஏய் என்ன ப்பா சொல்லுற அவன் கட்டிக்க போற பொண்ணு இவனை வந்து கட்டி புடிச்சு அழுதது, இவன் சமாதானம் செஞ்சான்னு சொல்லுற? அப்போ இவன் யாரு? "

" இவன் தான் அந்த புள்ளையோட லவ்வர் டாக்டர் "

" இவன் அவளோட லவ்வர்ன்னா அவ எதுக்கு இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னா? "

" அது தெரியல டாக்டர் "

" சரி இவன் யாரு? "

" இவன் எங்க ரெண்டு பேருக்கும் பிரண்ட் டாக்டர் "

" ஏன் ப்பா இவன் உன் பிரண்ட்ன்னா அவன் அந்த புள்ளைய லவ் பண்ணுனதும், இவனுக்கு அந்த புள்ளைய நிச்சயம் பண்ணுனதும் தெரியாமலா இருக்கும்? "

" ஆமா டாக்டர் தெரியாம தான் இருந்துருக்கோம் " என்று ராஜா சொல்ல டாக்டர் குழம்பி முழித்தார்......


மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top