• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
23
வீராவின் கேள்வி ராஜாவை அமைதி அடைய செய்திருக்க இருவரும் சேர்ந்து மோகனை பார்க்க கிளம்பினர்,

" டேய் அவன் எங்க டா போனான்? "

" எங்க டா போயிருப்பான் அங்க தான் போயிருப்பான். "

" அங்கையா? "

" ம்ம் ஆமா "

" இன்னுமா டா அங்க போறான்? "

" உனக்கு தெரியாததா வீரா அங்க போனா நம்ம மனசு எப்படி மாறும்ன்னு... "

" ம்ம் கரெக்ட் தான் டா, சரி வா அங்க போய் பாப்போம்... "

அது ஒரு குளத்தின் கரையில் உள்ள பெரிய ஆலமரம் அதன் விழுதுகளே தனி மரம் போல காட்சி அழிக்கும், இவர்கள் சிறு வயதில் இருந்தே அதிக பொழுதை கழித்தது அங்கு தான், பொதுவாக மனித வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் கலந்து இருப்பது தான், ஆனால் இந்த இடம் மட்டும் சற்றே விதி விலக்கானது, ஏனென்றால் இந்த இடம் அவர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்து இருக்கிறது. எத்தனை துயரம் வந்தாலும் அந்த இடத்திற்கு வரும் பொழுது அந்த இடம் அவர்களை அப்படி ஒரு அமைதி அடைய செய்யும்.

அது அந்த இடத்தின் அமைப்பு காரணமா அல்லது அந்த இடத்தில் ஏதேனும் அதிசிய சக்தி உள்ளதா என்பது அவர்கள் யாரும் இதுவரை அறிந்திடாத ஒரு ரகசியம்.

இந்த இடத்திற்கு வந்தால் மனநிலை மாறும் என்ற விஷயமே இவர்களின் நண்பன் ஒருவன் விபத்தில் உயிரிழந்த சமயத்தில் அனைவரும் மன நிம்மதி இல்லாமல் அலைந்தனர். அப்படி அலைந்த அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் அனைவரும் ஒன்று கூட அந்த எண்ணம் அவர்களை விட்டு மறைந்து மனதில் இனம் புரியாத இன்பம் ஒன்று குடி ஏற ஆரம்பித்தது, அதன் தொடர்ச்சியாக யாருக்கு என்ன சங்கடம் நேர்ந்தாலும் அவர்கள் அதையே கடைபிடிக்க அது ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு கை கொடுத்தது.

இப்போது மோகன் இருக்கும் விரக்தி மனநிலையை சமன் செய்ய அவன் அங்கு தான் சென்று இருப்பான் என்பது இவர்களது எண்ணம்.

அந்த எண்ணத்தின் படி அங்கு சென்று மோகனை தேட ஆரம்பித்தார்கள், அந்த கூட்டை மரங்களின் ஊடாக புகுந்து தேட ஆரம்பித்தார்கள், சில நிமிடங்கள் அறக்க பறக்க தேடிய பின்பு அவனை அங்கு காணாமல் போக,
முதல் முறையாக புத்துணர்ச்சி கொடுக்கும் மரம் இப்போது அதை கொடுக்க தவறியது போல, வீரா ராஜா இருவரது முகமும் கலை இழந்து போயிருந்தது, அவர்கள் சோர்ந்து குளத்தின் உள்பக்கமாக நடந்து வர அங்கு குளத்தில் தண்ணியின் ஓரத்தில் குப்புற படுத்து கிடந்தான் மோகன், உடலில் உணர்வு அற்று, உயிர் இருக்கிறதா என்று தான் அறிய முடியவில்லை, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு வீராவும், ராஜாவும் அவனை நோக்கி வேகமாக ஓடினார்கள், குப்புற கிடந்தவனை நிமிர்த்தி பார்க்க அவர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள், மோகனின் வாயில் நுரை தள்ளி ஜில்லிடும் மேனியோடு மல்லாந்தான் வீராவின் கைகளில்.....




மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top