Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
ஒருவழியாக பிரச்சனைகள் அனைத்தும் முடிந்திருக்க வீர அஞ்சலி திருமண நாளும் வந்தது
அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது அவர்கள் அனைவரது மனதிலும் ஒரு இனம் புரியாத நிறைவு இருந்தது அதற்கு காரணம் இவர்கள் மூவர் நட்பிலும் எந்த விரிசலும் இல்லாமல் மீண்டும் திருமணம் நடந்தேறுகிறது என்ற எண்ணமே.
நாம் நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு நடக்கும் விஷயத்தில் அனைவருக்கும் நிறைவான சம்மதம் வித்தியாசமான சூழல் தான் என்றாலும் அதில் யாருக்கும் வேறுபாடோ வேற்றுமையோ தெரியவில்லை வீராவும் அஞ்சலியும் மணக்கோலத்தில் மங்கலமாய் தெரிந்தார்கள்,
கதிரவன் கடமையை தொடங்கும் அதே நேரத்தில் இவர்களது கல்யாணமும் நடந்தது. அழகாய் இருக்கும் அஞ்சலிக்கு அந்த மணக்கோலம் இன்னும் அழகை அள்ளி கொடுத்தது அவளது உள்ளத்தில் இருந்த பூரிப்பின் காரணமாக...
கம்பீரமாகத் தெரியும் வீரா கலையாகத் தெரிந்தான் காதல் என்று அறியாத காதல் திருமணம் கைகூடியதில்...
மோகனும் ராஜாவும் நட்பை போற்றியதால் உயர்வாக தெரிந்தனர்.
அணைத்து அழகு உள்ளமும் கூடி வாழ்த்திட அம்சமாய் நடந்தேறியது திருமணம்.
சிறு சிறு விளையாட்டு, கேலி பேச்சு, சாப்பாட்டு பந்தி சச்சரவு, அதன் பின் வரும் சமாதானம், என்று அணைத்தும் நிரம்பி இருக்க திருமணம் முடிந்து மறுவீட்டு சடங்கும் நடந்தேறியது.
மோகனின் அம்மா தனது வீட்டிற்கு தான் மறுவீடு அழைத்து வர வேண்டும் என்று உத்தரவு போட அப்படியே நடந்தது.
மறுநாள் காலை வீராவின் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழக்கம் இருந்ததால் தம்பதிகள் இருவரும் மோகன் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர்,
காதலர்கள் என்ற போர்வையில் இருக்கும் வரை கட்டுப்பட்டு கிடக்கும் ஆசை உணர்வுகள் கணவன் மனைவி என்ற அடுத்த நிலைக்கு வரும்போது ஆசையும் எல்லை கடந்து அடக்க முடியாத நிலைக்கு வந்துவிடுகிறது, அப்படி தான் நண்பர்கள் இருவரையும் படுத்தி எடுத்து கொண்டிருந்தான் வீரா.
" ம்ம்ம் அவன் அவன் கல்யாணம் முடிச்சு புது பொண்டாட்டியோட எப்படி எப்படி எல்லாம் பேசி என்ன என்ன எல்லாம் செஞ்சுட்டு இருப்பாங்க என் கிரகம் இப்பவும் இவனுங்கள மல்லு கட்டிட்டு கிடக்க வேண்டி இருக்கு "
" டேய் ஏன்டா புலம்பி சாகுற இன்னைக்கு ஒரு நாள் தான்டா அப்புறம் நாளையிலிருந்து உன் இஷ்டம் போல இருந்துக்கோ " என்று ராஜா கூற
" என் கிரகம் உன் பேச்ச எல்லாம் கேட்க வேண்டியிருக்கு "
" டேய், ஏன் டா "
" என் கிரகம் உன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டி இருக்கு "
" மவனே ஒழுங்கா இருடா இல்லைனா கொன்னே போடுவேன் "
" என் கிரகம் இவன் எல்லாம் என்னை மிரட்டுறான் "
" அய்யோ கொலையா கொல்லுறானே "
" என் கிரகம்.... " வாயை பொத்தினான் மோகன்,
" வேணாம் டா சாமி நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், வா போய் சாப்பிடுவோம் "
" என் கிரகம் இவனுங்க கூட தான் இன்னைக்கும் சாப்பிட வேண்டியிருக்கு " என்று வீரா சொல்ல,
திரும்பத் திரும்ப பேசுற நீ என்று மயக்கம் போடும் அய்யரை போல ஆயினர் அவர்கள் இருவரும்,
" டேய் மோகனு இதுக்கு மேல இவன் கிட்ட பேசுனா நம்ம உயிர்க்கு உத்திரவாதம் கிடையாதுடா, எதுவும் பேசாத அமைதியா உட்கார்ந்திரு அவனா சாப்பிட கூப்பிட்டா நாம எந்திரிச்சு போவோம், அப்பவும் மண்டைய மட்டும் ஆட்டுவோம் வாய் திறக்க கூடாது "
மோகன் அப்போது இருந்தே அதை கடைபிடித்தான் மண்டையை ஆட்டி...
" என் கிரகம் இவனுங்க கூட பேச மாட்டேங்கிறாங்க பேசுற என் பொண்டாட்டியையும் பேசவிடாம புடிச்சு வச்சுடறாங்க இந்த கொடுமையை என்னன்னு சொல்ல " அப்போதும் நண்பர்கள் இருவரும் மௌனம் சாதிக்க,
வீரா மறுபடியும் என் கிரகம் என்று ஆரம்பிக்க அந்த இடத்தை விட்டு விழுந்து அடித்து ஓடினார்கள்....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......