Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 44
- Thread Author
- #1
" வாழ்க்கையில இனி எந்த நிமிஷமும் உன் கண்ணு முன்னாடி வந்து நிக்க மாட்டேன் " என்று சொல்லி விட்டு திரும்பிய வீராவின் கையை பிடித்து இழுத்து,
" டேய்... " என அழைத்து அமைதி காத்தான் மோகன்,
ஆனால் வீரா அதை பொருட்படுத்தாது கைகளை உருவி கொண்டு நடக்க,
" டேய் வீரா நில்லு டா... "
அவனிடம் நிற்கும் உத்தேசம் இல்லை என்பதை போல நடக்க,
" டேய் ராஜா அவனை நிக்க சொல்லு டா. "
ராஜா அவனை தடுத்து,
" வீரா நில்லு டா. இவ்ளோ நேரம் முக்கி முக்கி நீ பேசுன நாங்க கேட்டோம், இப்போ அவன் பங்குக்கு அவனும் பேசணும்ல நின்னு கேட்டுட்டு போ, உன் ரம்பத்தை நாங்க கேக்கணும் பதிலுக்கு கேக்காம ஓட பாக்கியோ? ஒழுங்கா நின்னு அவன் என்ன அறுக்குறான்னு கேட்டுட்டு போ. நா மட்டும் இளிச்ச வாயனா, நீ இவ்ளோ நேரம் அறுத்த உன் அறுவையும் கேட்டுட்டு, இனி அவன் அறுக்க போற அறுவையும் கேக்க " என்று ராஜா அவர்களின் பேச்சை கிண்டல் செய்ய,
" டேய் என்ன டா? " என்று வீரா திரும்பினான்.
" பின்ன என்ன டா ஒரு நண்பர்களுக்குள்ள பஞ்சாயத்துன்னு வந்தா சரக்க போட்டு சமாதானம் ஆகணும்.
இல்ல,
சண்டை போட்டு சமாதானம் ஆகணும்.
அதுவும் இல்லையா,
ஒத்த டீயவும் அதுக்கு துணையா ஒரு தீ பந்ததையும் பொருத்தி அத இழுத்து சமாதானம் ஆகணும்.
அத விட்டுட்டு இப்படி ரம்பத்தை போட்டா டா சமாதானம் ஆவீங்க....? "
வீராவும் மோகனும் அவனையே பார்த்து கொண்டிருக்க,
" ஏன் டா ஒரு நண்பனுக்கு நண்பன் இப்படி விளக்கம் சொல்லி எத்தனை நாள் டா ஒன்னா இருக்க முடியும்?
இல்ல, அப்படி இருக்குறது தான் நட்பா? "
ராஜாவின் கேள்விக்கு இருவராலும் பதில் கூற முடியவில்லை.
" ஒருத்தன ஒருத்தன் புரிஞ்சுட்டு, ஒருத்தனுக்காக ஒருத்தன் இறங்கி வாரது தான டா நட்பு. இதை ஆரம்பத்துல இருந்து செய்யுற ரெண்டு பேரும் இந்த விசயத்துல மட்டும் மறந்துடீங்க ஏன் டா? "
" டேய் நா இறங்கி தான டா போறேன். "
" இறங்கி போறவன் ஏன் டா முறுக்கிட்டு வெளிய போற? "
" நீயும் கூட என்னை தப்பா நினைச்சு கோப பட்ட தான டா? " ராஜாவை மடக்கும் எண்ணத்தில் வீரா கேட்டு விட,
" நா கோப பட்டு பேசுனேன் தான் டா, ஆனா ஏன் கோபபட்டேன், உன்மேல இருந்த வருத்தம், அதனால வந்த கோபம் அது, அப்படி வரவும் உன் முஞ்சிக்கு நேரா நின்னு பேசுனேன், என்ன ஏதுன்னு உன்கிட்ட நேரடியா கேட்டேன், நீ விளக்கம் சொல்லும் முன்னாடியே உன்னோட ஒற்றை வார்த்தையில உன்னோட நிலைமையை புரிஞ்சிக்கிட்டேன். "
" நீ புரிஞ்சிகிட்ட மாதிரி அவன் புரிஞ்சிக்கலையே டா,... "
" அவன் புரிஞ்சிக்கலைன்னா நீ அப்படியே விட்டுட்டு போயிருவியா? "
வீராவிடம் மௌனம்.....
" அவனோட பாதிப்பு எந்த அளவுக்கு இருந்து இருக்கும்ன்னு யோசிச்சு பார்த்தியா? எந்த அளவுக்கு மனசு நொந்து போயிருந்தா இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பான்.... அந்த மாதிரி இருக்குற ஒருத்தன விட்டுட்டு போகணும்ன்னு நினைக்குறது எந்த வகை நியாயம் டா? "
" ம்ம் அப்படி கேளு டா ராஜா, சூப்பரா கேக்குறயே டா " என்று மோகன் சொல்ல,
" நீ சும்மா ஒத்து ஊதிட்டு வராத டா ம....., அவனே பாவம் அவன் தரப்பு நியாயத்தை சொல்ல எவ்ளோ போராடுறான் கொஞ்சமாவது காது கொடுத்து கேக்கியா? நம்ம நண்பன் நம்ம கிட்ட இதுவரைக்கும் என்ன பொய் சொல்லிருக்கான், எதுக்கு பொய் சொல்லுவான், இந்த மாதிரி ஒரு சூழல் வரைக்கும் நம்மள வர விடுவானான்னு எல்லாம் யோசிக்க மாட்டியா டா? "
அவனும் அமைதி ஆகி போக,
" மோகனு நீ ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தன்னு தெரியல டா, நீ கோபபட்டு வந்ததையே ஏத்துக்க முடியாத நண்பங்க உன்னோட மரணத்தை எப்படி ஏத்துப்போம்ன்னு கொஞ்சமாவது உனக்கு யோசிக்க தோணுச்சா டா? உன்னோட சாவுக்கு தான் தான் காரணம்ன்னு நினைச்சு நினைச்சு ஒருத்தன் வாழ்நாள் முழுக்க அழுவானே அந்த நரக வேதனையையும் கொடுக்கணும்ன்னு நினைச்சியா டா? "
ராஜா கேட்டு முடிக்கும் போது மோகன் கண்ணில் கண்ணீர் கசிந்தது,
" சாரி டா, இந்த மாதிரி எல்லாம்.... "
" யோசிச்சு இருந்தா ஏன் டா வாயில ஊத்த போற மூதேவி... "
" வீரா சாரி டா, நான் தான் "
" டேய் டேய் விளக்கெண்ணை கொஞ்சம் பொறு டா,
இப்போ நா பேசுன பேச்சுக்கு உனக்கு இப்படி தான் பேச தோணும் அதனால உடனே பேசாத, நீ இப்போ என்ன பேச நினைச்சியோ அத ரெகார்ட் பண்ணி வச்சுக்கோ நாளைக்கு நிதானமா அத கேளு, அப்பவும் உனக்கு இதே மாதிரி தோணுனா மன்னிப்பு கேட்கணும்ன்னு நினைச்சா கேளு, இல்ல அவன் தப்பு செஞ்சான் பதிலுக்கு நானும் தப்பு செஞ்சேன் தப்புக்கு தப்பு சரியா போச்சு, பழிக்கு பழி ரத்ததுக்கு ரத்தம்ன்னு பழி வாங்குன திருப்தியோட அமைதியா விட்டு மனச சுத்தமா வச்சிக்க பழகு " என்று ராஜா பேச நண்பர்கள் இருவரும் அசந்து போனார்கள் அவனின் பேச்சை கேட்டு.
" டேய் ராஜா இன்னைக்கு எப்படி டா இம்புட்டு அறிவாளியா பேசுற? " ஆச்சர்யமாக வீரா கேக்க,
" சமயம் வந்தா சாமானியனும் சாணக்கியன் ஆவான் டா " என்று சொல்லி சிரித்தான் ராஜா....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......