Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 44
- Thread Author
- #1
" டேய் வீரா என்ன டா என்னமோ யோசிச்சுட்டு இருக்க? "
" என்னத்த டா யோசிக்க சொல்லுற? யோசிக்க என்ன இருக்கு ஒன்னும் இல்ல, "
" அப்போ எதுக்கு பித்து பிடிச்சவன் மாதிரி நின்னுட்டு இருந்த? "
ஏதோ யோசித்த வீரா சட்டென சொன்னான்,
" அஞ்சலி பேசிட்டு இருந்தா டா "
" என்னது??? "
" அஞ்சலி இருக்கால்ல அஞ்சலி "
" ஆமா "
" அவ தான் பேசிட்டு இருந்தா "
" என்ன டா சொல்லுற "
" இதுக்கு தான் டா நா உண்மையை சொல்லாம ஒன்னும் இல்லன்னு சொன்னேன் "
" இல்ல புரியல டா, நாங்க எல்லாம் இங்க தான டா நிக்கோம், எங்களுக்கு தெரியாம அவ எப்படி டா உன்கிட்ட பேசுனா? "
" நாங்க இப்படி தான் டா பேசுவோம்... "
" எப்படி கனவுலையா? "
" ம்ம் ஆமா டா "
ராஜா அவனை பார்த்து முழிக்க,
" என்ன டா முழிக்க? "
" பின்ன முழிக்காம? "
" டேய் நாங்க ஆரம்பித்துல இருந்தே இப்படி தான் டா பேசிட்டு இருக்கோம்... "
மோகன் இருப்பதை சட்டை செய்யாமல் பேசினான், அவன் கேட்க வேண்டும் என்பதற்காகவே இப்படி நீட்டி இழுத்து பேசினான் வீரா,
" புரியல வீரா நீ என்ன சொல்லுறன்னு " மீண்டும் ராஜா கேட்க,
" இது உனக்கு புரியாது டா, புரிய வைக்கவும் முடியாது... "
ராஜாவுக்கு என்ன கேட்பது என்று புரியவில்லை,
" இப்போ தூங்காமலே எப்படி கனவு வந்தது டா? தூங்குனா தான கனவு வரும்.....? " ஒருவாறு கண்டு பிடித்து கேட்டான் ஒரு கேள்வியை...
" ராஜா இத எப்படி உனக்கு விளக்கி சொல்லன்னு எனக்கு தெரியல டா " வீரா சொன்ன அடுத்த நொடி,.
" ஏன் இன்னும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலையோ? " ஏளனமாக வந்தது மோகன் குரல், இது போன்ற ஒரு இடைவெளியை தானே அவனும் எதிர்பார்த்து கொண்டிருந்தான்.
" இல்ல மச்சி நீ இந்த மாதிரி என்னை குத்தலா கேள்வி கேக்கணும்ல அதனால தான் அப்படி சொன்னேன்... " என்று வீரா சொல்ல மோகன் அதிர்ந்து போனான்...
" நா... நா.. நான் அப்படி எல்லாம் ஒன்னும் செய்யலையே... " நாக்கு குழறியது,
" அப்போ ஏன் டா வார்த்தை தடுமாறுது... "
" இல்லையே... நீ செஞ்சத தான டா நா சொன்னேன், இல்லாததையா சொல்லிட்டேன், நீயா ஒரு கதையை ரெடி பண்ணி வச்சுட்டு தான பேசிட்டு இருக்க, அத தான் சொன்னேன்... " சமாளித்து பேசினான்.
" ஏன் டா சமாளிக்க, "
" அப்படிலாம் ஒன்னும் இல்ல டா "
" ஏன் டா கோபத்துல நம்ம நண்பன் தானேங்குற எண்ணம் கூடவா டா மறந்து போச்சு... எப்படி டா என்னை குத்தி காட்டி பேசி நா கஷ்ட படுறத உன்னால ரசிக்க முடியுது? "
" டேய் என்ன? " மோகன் முகத்தில் பதட்டம்,
" சும்மா நிறுத்து மோகன், ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டுன்னு நம்ம பெரியவங்க சரியா தான டா சொல்லிருக்காங்க. என் மேல இருக்க கோபமும் ஆத்திரமும் உன்ன எப்படி ஆக்கி வச்சுருக்கு பாத்தியா? உங்கள விட எனக்கு பெருசா எதுவும் இல்லன்னு உங்களுக்கே தெரியுமே டா அப்படி இருந்தும் எப்படி டா உன்னால இப்படி நினைக்க முடியுது.... "
மோகன் அப்படியே உறைந்து நின்றான்,
" காதலுக்காக நட்பையும், நட்புகாக காதலையும் தரம் தாழ்த்த கூடாதுன்னு நினைக்குறேன் டா. அதனால தான் புரிஞ்சுக்கோ நண்பான்னு உன் பின்னாடியே அழையுறேன், என்னைய நல்லவன் காட்டிக்கவோ, உன்ன ஏமாத்தவோ கிடையாது, அத ஒழுங்கா புரிஞ்சுக்கோ. "
" ஆண்டவன் செயலோ, இல்ல இதுக்கு வேற காரணம் இருக்கோ தெரியாது, எங்க காதல் கனவுல தான் வந்துச்சு, அது எப்படி எப்படின்னு கேட்டா எங்களுக்கே புரியாத புதிரா தான் இருக்கு. எனக்கே புரியாத ஒரு விஷயத்தை என்னால எப்படி டா உங்க எல்லாருக்கும் புரிய வைக்க முடியும். யாரோ ஒரு பொண்ணு குழந்தைல இருந்து என்கிட்ட பேசிட்டே இருப்பா, அவ இப்போ குமரியாவும் ஆகிட்டா, இன்னும் என்கூட பேசிட்டே தான் இருப்பா, அவளுக்கு ஏதாவது ஒரு சின்ன கஷ்டம், பிரச்சனை இருந்தா கூட என் கைக்குள்ள புதைஞ்சு கிட்டு இப்பவும் குழந்தையா மாறி அவளை சமாதானம் பண்ணுவா, எனக்கு எதாவது சின்ன சோர்வா இருந்தா கூட என்னை அவ மார்புல சாச்சு எனக்கு தாயா மாறுவா. இது இன்னைக்கு நேத்து வந்த உணர்வு இல்ல பதிமூணு, பதினாலு வயசுல இருந்து இப்படி தான். நாங்க நேர்ல பாக்குற வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் இடையில இருந்தது காதல்ன்னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியாது டா. நாங்க நேர்ல பாத்துகிட்ட அந்த நொடி, அந்த நிமிஷம் எங்க ரெண்டு பேரோட உலகத்துல எங்கள தவிர்த்து வேற யாருமே கிடையாது. அதனால தான் அத்தனை பெரிய கூட்டத்துல யாரையும் நினைக்காம எத பத்தியும் யோசிக்காம எங்களுக்குள்ள நாங்களே புதைஞ்சு போனது, அந்த நொடி தான் எங்க காதல் எங்களுக்கே புரிஞ்சது. அந்த நொடி வரைக்கும் எங்களுக்கு நடுவுல இருந்த உணர்வுக்கு பேர் என்னனு எங்களுக்கு தெரியாது. இதை நம்புனா என்னை தேடி வா இல்லையா நா செத்து போய்ட்டேனு நினைச்சுக்கோ இனிமேல் வாழ்க்கையில எந்த நிமிஷமும் உன் கண்ணு முன்னாடி வந்து நிக்க மாட்டேன்... "
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......