New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 23
- Thread Author
- #1
அஞ்சலியை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றன் கிருஷ்ணன் அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசவில்லை...
அவர் பேசாமல் அவளாலும் பேச முடியவில்லை, அவர் என்ன நினைக்கிறார்? என்ன பேசுவார்? என்பதை பற்றி அவளிடம் ஒரு யோசனையும் இருக்கவில்லை, அதே நேரம் அவளால் சாதாரணமாகவும் இருக்க முடியவில்லை.
வீட்டில் இருக்க இருக்க மூச்சு முட்டி கொண்டு வந்தது, சுற்றியும் ஆட்கள் இருந்தும் அவளுக்கு அந்த உணர்வை அந்த சூழல் கொடுக்கவில்லை, மனம் சோர்ந்து அமர்ந்து இருந்தவளின் எண்ணம் வீராவை தேடியது....
" மாமு..... " கண்கள் மூடி மனதில் அவனை நிலை நிறுத்தி அழைத்தாள்....
இங்கு மோகனிடம் பேசி கொண்டிருந்த வீராவின் காதில் அவளது அழைப்பின் ஒலி கேட்க, மோகனிடம் பேசிய பேச்சை நிறுத்தினான். அவனும் கண்கள் மூடி அவளை நினைக்க, இருவரது எண்ணமும் ஒரே கோட்டில் சந்தித்தது...
" அம்மு "
" மாமு " அவள் ஓடி வந்து அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள்,
" ஏன் டி செல்லம், ஒன்னும் இல்ல மாமா தான் இருக்கேன் ல "
அவள் தேம்பி அழுதாள்,
" அடியே, என்ன குழந்தை மாதிரி, எதுக்கு இப்படி... "
" ஏன் மாமு இது முன்னாடியே தோணல "
" என்னது அம்மு "
" நம்ம நினைவுகள் போல நம்ம உருவமும் நிஜம்ன்னு... "
அப்போது தான் வீராவும் அதை யோசித்தான்,
" எத்தனை எத்தனை உணர்வுகளை கடந்து வாழ்ந்து வருகிறோம் ஆனால் இந்த எண்ணம் எப்படி தோணாமல் போனது? தெரியல அம்மு இப்படி யோசிக்கணும்ன்னு ஏன் நமக்கு தெரியாம போச்சுன்னு.... "
" அப்பா ரொம்ப உடைஞ்சு போயிருக்காரு மாமு, அவரை எப்படி பேஸ் பண்ணன்னு கூட தெரியல "
" எல்லாம் சரி ஆகிடும் அம்மு, மாமா இருக்கேன் நாம சேர்ந்து எல்லாத்தையும் சரி பண்ணலாம் "
" ம்ம்ம் மாமு "
" அழுதுட்டு இருந்தியா அம்மு? "
" ம்ம்ம் ஹும் மாமு "
" அடியே... "
" ம்ம்ம் மாமு " அவள் கண்கள் மீண்டும் நீரை இறைத்து கொட்டியது,
" மாமன் இருக்கும் போது எதுக்கு அம்மு அழுகை, நீ அழுதா அப்புறம் உன் மாமு இல்லனு அர்த்தம் ஆகிடாதா? "
" மாமு.... நா ஒன்னும் அழல நீ இப்படி எல்லாம் சொல்லாத, "
" மாமன் இருக்குற வரைக்கும் நீ அழ கூடாது அம்மு... "
" ம்ம்ம் மாமு அழ மாட்டேன். " அவளது முகத்தில் ஒரு குறுநகை பூத்திருந்தது.
" ம்ம் இப்படி சிரிச்சா எம்புட்டு அழகு டி செல்லம் " மலர்ந்தான் வீராவும்
" லவ் யூ மாமு "
" லவ் யூ அம்மு "
இன்னும் இறுக்கமாக அவனை கட்டி அவனது மார்பில் புதைந்து கொண்டாள் அஞ்சலி.
சில நிமிட மௌனம் கடந்து,
" அம்மு "
" மாமு "
" உங்க அப்பனை எங்க அம்மு "
" தெரியல மாமு, வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் இன்னும் அவர் பாக்கவே வரல, நானும் ரூம் விட்டு வெளிய போகல மாமு, வெளிய போக ஒரு மாதிரி இருக்கு. "
" ஏன் அம்மு "
" தெரியல மாமு இப்போ வெளிய போக பிடிக்கல "
" அம்மு.... "
" போறேன் மாமு கொஞ்சம் கழிச்சு. "
" ம்ம்ம் அது வீரா பொண்டாட்டிக்கு அழகு " வீரா சிரித்து கொண்டே சொன்னான்.
அவளும் சிரித்தாள் வெக்கம் கலந்து, பின் கேட்டாள்,
" ஏன் மாமு இவ்ளோ வருஷம் பொண்டாட்டி சொன்னது இல்ல, இப்போ சொல்லுற "
" தெரியல அம்மு, மாமாவும் யோசிக்கோம், நேர்ல நம்ம உருவத்தை பாக்கவும் நம்ம உணர்வே புதுசா பீல் ஆகுது டி "
" ஆமா மாமு, ஆனா நம்ம சுத்தி இருக்குற சூழல் தான் அந்த பீல முழுசா பீல் பண்ண விடமா தடுக்குது... "
" எதுவும் நம்மள தடுத்துறாது அம்மு... "
" கண்டிப்பா மாமு நம்மள எதுவும் தடுக்கல " என்று அஞ்சலி கூறும் நேரம் வீராவை உலுக்கினான் ராஜா, சிவ பூஜையில் நுழைந்த கரடியாக....
" அம்மு கரடி... "
" சரி மாமு " என்று அவள் சிரித்து கொண்டே கண்களை திறக்க,
இத்தனை நேரம் இருந்த அழுத்தம் இப்போது காணாமல் போயிருந்தது...
" எத்தனை இன்னல் என்னை சூழ்ந்தாலும், கண்ணை காக்கும் இமையாய் என்னை காக்கிறாய் மாமா, நீ என் வாழ்வில் வந்ததே நான் செய்த பூர்வ ஜென்ம தவம்... " என்று சொல்லி அவனாக நினைத்து அணைத்து கொண்டாள் அவளின் தலையணையை முத்தமிட்டு....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......