New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 23
- Thread Author
- #1
மோகனின் ஆதங்கம் நிறைந்த பேச்சு அத்தனையும் கேட்டு விட்டு அமைதியாக நின்ற ராஜா மெல்ல பேச ஆரம்பித்தான்,
" டேய் மோகன் "
" ம்ம்ம் "
" என்னை கொஞ்சம் பாரேன் "
" என்ன டா சொல்லு "
" கொஞ்சம் பாரு டா "
" சரி சொல்லு டா " மோகனின் பார்வை ராஜாவின் மேல்,
" ஏன் மோகனு நம்ம வீரா நிஜமா இப்படி ஒரு துரோகம் பண்ணிருப்பான்னு நினைக்கியா டா? " அமைதியாக எந்த உணர்வும் காட்டாமல் வந்தது ராஜாவின் குரல்,
ராஜாவை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருந்தான் மோகன்,
" தயவு செஞ்சு நா அவனுக்கு சப்போர்ட் பண்றேன்னு மட்டும் நினைச்சுடாத டா, நா சப்போர்ட் எல்லாம் பண்ணல எனக்கு தோணுன விஷயத்தை உன்கிட்ட கேக்குறேன் அவ்ளோ தான் "
மோகனுக்கும் வீரா துரோகம் செய்ய கூடிய நண்பனாக தெரியவில்லை, ஆனால் ஒரு பெண் கல்யாண மேடை வரைக்கும் வந்து இப்படி நடந்துகிட்டா? மோகனுக்கு எப்படி யோசிப்பது என்று கூட தெரியவில்லை,
விழித்தான்...
மௌனம் நீடித்தது.....
" யோசிச்சு பாரு மோகனு, நீ நினைக்குற மாதிரி துரோகம் அதுல இல்லன்னு தான் எனக்கு தோணுது... "
" துரோகம் இல்லனா வேற என்ன டா இயலாமையா? "
" எனக்கு தெரியல மோகனு ஆனா அவன் ஒரு வார்த்தை சொன்னான் டா "
" என்னன்னு? "
" நண்பர்களுக்குள்ள பிரச்சனை வந்தா தீர்வு தான் வரணும், மேலும் பிரச்சனை வர கூடாதுன்னு. "
மோகன் யோசித்தான்
" அப்போ அவ்ளோ தான் வீரான்னு நினைச்சுடீங்க இல்ல டா ன்னு அவன் கேக்கும் போது என்னால பதில் சொல்ல முடியல மோகனு, அவனை போய் எப்படி தப்பா நினைச்சோம்ன்னு மனசு குறுகி போச்சு டா, இன்னும் உருத்திட்டு தான் இருக்கு " ராஜாவின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது....
ஆனால் அந்த வருத்தம் மோகனின் பார்வையில் வேறு மாதிரி தெரிந்தது,
சில நேரங்களில் உணர்வற்ற நிலைக்கு தான் மதிப்பு என்பதை காட்டியது மோகனின் பேச்சு,
" டேய் ராஜா, உன்ன அவன் எமோஷனல்லா பேசி மண்டைய கழுவிருக்கான் டா, அதே மாதிரி இப்போ நீயும் எமோஷனல் ஆகி என் மண்டைய கழுவ பாக்குறயா? " என்று மோகன் கேட்கவும் அவனை கடுப்பாக பார்த்தான் ராஜா.
" என்ன டா கடுப்பு ஆகிட்டியா? உன் எமோஷனல் நாடகம் எடுபடலன்னு காண்டு ஆகிட்டியா? " ஏளனமாக ஒலித்தது மோகனின் மொழி.
ராஜா பதிலேதும் சொல்லவில்லை...
" டேய் ஒரு பொட்டச்சி மேல இருக்குற ஆசை ஒரு ஆம்பளயா எப்படி வேணும்னாலும் மாற வைக்கும் டா " மோகனின் குரல் வெறுப்பை கக்க
" ஓ.... அதான் பொட்டச்சி மேல உனக்கு இருக்க ஆசையில நீ இப்படி அறிவு கெட்டு போய்டியா மோகனு.... " என்று கேட்டு கொண்டே அருகில் வந்தான் வீரா.
" அட, வாடா கனவு காதலா நீ இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தியா? நீ சொல்லி கொடுத்து தான் இவன் இப்படி எல்லாம் பேசுறானா? ஏன் டா செய்யுற தப்பு எல்லாம் செஞ்சுட்டு உன்ன நியாயப்படுத்திக்க என்ன வேணும்னாலும் பேசுவியா? " வீராவை எரிச்சலோடு பார்த்து கொண்டு பேசினான்.
" உன்கிட்ட நா நல்லவனா நடிச்சு எனக்கு என்ன டா கிடைக்க போகுது,
கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்கே உன் தப்பு புரியும். "
" அப்போ நீ தப்பு செய்யல இல்ல... "
" இல்ல " தீர்க்கமாக வந்தது வீராவின் குரல்.
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......