• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
23
டேய் அப்பா உன்கிட்ட அவனுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டதுக்கு இந்த குழப்பு குழப்புறியே டா சாமி "

" டாக்டர் தெளிவா தான சொல்லிட்டு இருக்கேன்... "

" இதுவா டா தெளிவு நா எழுதி கொடுக்குற மருந்து சீட்டு மாதிரி இருக்கு டா " என்று சொல்லி அவர் முறைக்க,

" அப்படியா இருக்கு? " என்று ராஜா கேட்க அவனை மேலும் முறைத்து விட்டு,

" டேய் யப்பா நீயாவது குழப்பாம கொஞ்சம் தெளிவா சொல்லு டா அய்யா " கொஞ்சம் வயது முதிர்ந்த மருத்துவர் தான் என்பதால் அவர்களிடம் கொஞ்சம் இயல்பாகவே பேசினார் அந்த டாக்டர்,

" டாக்டர் சார் இன்னைக்கு மோகனுக்கு கல்யாணம் அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு என்னோட காதலி அந்த உண்மை தெரிஞ்சதும் அவனோட கல்யாணம் நின்னு போச்சு. அந்த கல்யாணம் நின்னு போன விரக்தியில அவன் இந்த மாதிரி செஞ்சுட்டான்... " இவ்ளோ தான் சார் விஷயம்.

" அப்படியா விஷயம், ம்ம்ம் சரி தம்பி உன் ஆள இவன் கல்யாணம் கட்டிக்க போறான்னு உனக்கு தெரியாமலா இருந்துச்சு? "

" ஆமா சார் தெரியாது "

" அது எப்படி ப்பா மூணு பேரும் நண்பர்கள், ஒருத்தன் லவ் பண்ணுன பொண்ண இன்னொருத்தன் போய் பொண்ணு பார்த்து கல்யாண மேடை வரைக்கும் வந்துருக்கான் ஆனா விஷயம் யாருக்கும் தெரியாதுன்னு சொல்லுறீங்க? எங்கையோ கதை இடிக்குதே ப்பா...? "

" இது கொஞ்சம் வித்தியாசமான கத டாக்டர் சார் உங்களுக்கு புரியாது, சொன்னாலும் குழப்பம் தான் கூடும் வேண்டாம் அதை விடுங்க, மோகன பத்தி பேசுவோம், அவனுக்கு ஒன்னும் இல்ல தான "

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல ப்பா "

" போலீஸ் கேஸ் எல்லாம் "

" அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல ப்பா பாவம் மோகன் நல்ல பையன் அவன் இப்படி செஞ்சான்னு யாருக்கும் தெரிய வேண்டாம், இன்னைக்கு ஒரு நாள் அவன் ரெஸ்ட்ல இருக்கட்டும், நாளைக்கு கூப்டுட்டு போகலாம் "

" ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் "

" ம்ம் ம்ம் அதெல்லாம் இருக்கட்டும், அந்த நர்ஸ் கிட்ட கேட்டு பில்ல கட்டு ப்பா, நானும் வேலை தான் பாக்கேன், என் சொந்த ஹாஸ்பிடல் இல்ல " என்று டாக்டர் சொல்ல

அந்த சூழலிலும் லேசாக சிரிப்பு வந்தது அவர்கள் இருவருக்கும்.

நேரம் மெதுவாக கடந்து இரவு பொழுதை எட்டி இருக்க மோகனும் கண் விழித்திருந்தான்,

" டேய் மெண்டல் புடிச்சவனே ஏண்டா இப்படி செஞ்சு தொலச்ச, ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி இருந்தா உன் அப்பா அம்மாக்கு யாருடா இருக்கா? கொஞ்சம் கூட யோசிக்காம செஞ்சிட்ட, " என்று ராஜா குமுறி கொண்டிருக்க,

மோகன் இறுக்கமான முகத்தோடு எங்கையோ பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தான்.

" டேய் மானா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் வாயை தொறந்து பேசு எரிச்சல் ஏத்தாம, "

" என்ன டா பேச, அவளை எனக்கு எவ்வளவு புடிச்சு இருந்துச்சுன்னு உனக்கே தெரியும் தான டா? " என்று கேட்கும் போதே குரல் உடைந்து விசும்பினான் மோகன்.

" அதுக்காக நீ செத்து போய்ட்டா எல்லாம் சரி ஆகிடுமா டா? "

" என்னால முடியல டா கூட இருந்த நண்பனே இப்படி செஞ்சுட்டான், அவளும் என்கூட நல்லா தான டா மச்சான் பேசுனா, பேச்சுல கூட வெறுப்போ கோபமோ இருந்தது இல்லையே டா, அப்படி இருந்தவ அவனை பாக்கவும் அடுத்த நிமிஷம் ஓடி போய்.... " அதற்கு மேல் சொல்ல முடியாமல் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு மூக்கை உறிஞ்சி கொண்டான், பின் மீண்டும் தொடர்ந்தான்,

" அது எப்படி மச்சான் முடிஞ்சது, அவ மேல எனக்கு எந்த அளவுக்கு காதல் இருந்ததுன்னு உனக்கு தெரியும் தானடா?, அவன் என் வாழ்க்கை துணையா வர போறான்னு எவ்வளவு கொண்டாட்டமா இருந்தேன் அதெல்லாம் ஒரு நிமிஷத்துல தூள் தூளா ஆன மாதிரி ஆகிடடே டா, அவ செஞ்சது ஒரு பக்கம்ன்னா, சிறுசில இருந்தே கூட இருந்த வீராவும், அதைத்தான் மச்சான் என்னால தாங்கிக்க முடியல, அவங்களுக்குள்ள அவ்வளவு காதல் இருந்துச்சுன்னா ஏன்டா இந்த மாதிரி இந்த அளவுக்கு வந்தாங்க கல்யாணம்னு பேசும்போதே அவங்களால தட்டி கழிச்சிருக்க முடிந்திருக்குமே அதை செய்யாம ஏன் டா விட்டாங்க? " ஆதங்கம் நிறைந்த குரலில் மோகன் பேச,

அவனை அமைதி படுத்தும் வழி அவன் இப்படி புலம்புவது மட்டுமே என்று எண்ணி அமைதியாக கேட்டு கொண்டிருந்தான். இப்போது மோகன் இருக்கும் நிலையில் தன்னை கண்டால் நிச்சயம் கோபம் கொள்வான் என்பதை உணர்ந்து வீரா அவனது கண்ணில் படாமல் மறைந்து நின்று அவனது பேச்சை கேட்டு கொண்டிருந்தான் வழியும் கண்ணீரோடு.....


மனம் கொடுத்த மன்னவன் வருவான்.......
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top