• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
42
அத்தியாயம் - 17

மகதியின் செயலில்,"அப்பா...அம்மா எங்க போறாங்க?" என்று அருண் பதறியதும்,
"டேய் மாயா... ஏன் டா இப்படி அவசரப்பட்டு எல்லா உண்மையும் சொல்லித் தொலைச்ச!" என்று வர்மன் தன் நண்பனைக் கடிந்துகொண்டான்.

"நீ இரு வர்மா... நான் பாப்பாகிட்ட பேசறேன்" என்ற மாயன் தன் தங்கையைத் தேடி மருத்துவமனை கட்டிடத்தின் வலது ப்பக்கம் அமைந்துள்ள பூங்காவிற்க்கு செல்ல, அங்கே மகதி கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள்.

மகதியை பெருமூச்சுடன் கண்ட மாயன்,"பாப்பா..." என்று அழைத்ததும், தன் கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்ட மகதி கோவமாகத் திரும்பிக்கொண்டாள்.

சிறுகுழந்தை போல அவளின் செய்கையில் இதழ் மலர்ந்த மாயன், "என்னமா... அண்ணன் மேல கோவமா?" என்ற கேள்வியோடு மகதியின் அருகே சென்றான்.

"பின்ன... கோவப்படாம என்ன பண்ண சொல்றிங்க, ஏன் அண்ணா இப்படி பண்ணீங்க?"என விம்பலுடன் கேட்டாள் மகதி.

"அந்த வயசுல உனக்கு வந்தது ஏதோ ஒரு இனம் புரியாத தடுமாற்றம் என்று தான் நினைத்தேன் பாப்பா... அதனால தான் உன்னைச் சமாதானம் பண்ண வர்மன் தந்ததா பொய் சொல்லி நானே ஒரு கடிதத்தை உன்னிடம் கொடுத்தேன், நீ என்னை என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அன்னைக்கு ஒரு அண்ணனா! உனக்கு நான் பண்ணது சரிதானே பாப்பா!?' என்றான் மாயன்.

"ஒரு அண்ணனா எனக்கு நீங்கப் பண்ணது சரிதான்.ஆனா வர்மனும் என்னைக் காதலிச்சாருன்னு நினைத்தேன்.
ஆனா இப்போ நான் வர்மனை நேசித்த விஷயமே அவருக்குத் தெரியாதுன்னு நினைக்கும்போது! என்னால... அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கவே முடியல அண்ணா" என்று கதறி அழுத தன் தங்கையைப் பாவமாகப் பார்த்து இருந்தான் மாயன்.

மகதி சத்தமாக அழுது ஓய்ந்தவள், "அண்ணா... நான் வர்மனை ரொம்ப கேவலமா பேசிட்டேன். நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க.அருணை பத்திரமா பார்த்துக்கொங்க. ராஜன் மாமாவையும் பார்த்துக்கொங்க" என்ற மகதி பூங்காவிலிருந்து வெளியேறப் போனவளின் கரங்களைத் தடுத்து நிறுத்தி இருந்தான் மாயன்.

தன் அண்ணனின் முகத்தைக் காணாமல், "அண்ணா... நான் மறுபடியும் சென்னைக்கே போறேன். நான் அப்பாவைப் பார்க்கணும். எனக்கு அப்பா தோளில் சாய்ந்து அழணும்" என்ற மகதியை அங்குள்ள இருக்கையில் அமர வைத்தான் மாயன்.

"இங்க பாரு மகதி! அவசரத்துல எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இப்போ என்ன!? நீ சென்னைக்கு போகணும், அவ்வளவு தானே! சரி... இந்த வாரக் கடைசியில நானே உன்னைச் சென்னைக்கு அழைச்சிட்டு போறேன். இப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்" என்று மாயன் மகதியை அழைக்க, "நான் வரல" என்று பிடிவாதம் பிடித்தாள் மகதி.

"பாப்பா... அண்ணா சொன்னால் கேக்கணும். பாவம் டா அருண். அந்தப் பிள்ளைக்கு இப்போ தான் பார்வை திரும்பி இருக்கு. இப்போ நீ மட்டும் அவன்கூட இல்லைனா அப்புறம் அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மறுபடியும் பழைய நிலைக்குப் போனா நீ சந்தோஷ படுவியா" என்று மாயன் கேட்க, மகதியின் மனம் லேசாக இளக ஆரம்பித்தது.

சில நொடிகள் யோசித்த மகதி, "சரி...நான் ராஜன் சார் வீட்டுக்கு வரேன்.நானே வர்மனை பார்த்து என்னோட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என்ற மகதி ஒரு முடிவுடன் மருத்துவ மனைக்குள் செல்ல, அவளைப் பின் தொடர்ந்து மாயனும் சென்று இருந்தான்.

மகதியை மீண்டும் பார்த்த அருண், "அம்மா..." என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள,

"எங்க போன மகதி" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவன் முன்னே தலை குனிந்து நின்று இருந்தாள் மகதி.

மகதியின் மனநிலையை அறிந்திடாத அருணோ, "அம்மா... உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா! நீங்களும் என்னை விட்டுட்டு போகப் போறிங்களா?" எனப் பாவமாகக் கேட்டதும்,

"அருண்..." என்று கண்கள் கலங்கி சிறுவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் மகதி.

"வர்மன் மீது எந்தத் தவறும் இல்லை.
நான் தான் முட்டாளா இருந்து இருக்கேன்" என்று எண்ணிய மகதி, அருணுக்காக மட்டுமே மீண்டும் ராஜன் வீட்டிற்க்கு செல்ல முடிவு செய்தாள்.

அன்றைய இரவு முழுதும் வர்மனும், அருணும் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க, ராஜன், மாயன், மகதி என்று மூவருமே மருத்துவ மனையிலேயே தங்கி இருந்தார்கள்.

மறுநாள் காலை மருத்துவரின் அறிவுரைப்படி வர்மன் மற்றும் அருணை மருத்துவ மனையிலிருந்து ராஜன் தன் வீட்டிற்க்கு அழைத்து
செல்ல, காரில் அமர்ந்த தருணம் கூட மகதியின் விழிகள் வர்மனை காணாமல் வேறுபக்கமாகத் திரும்பி இருந்தது.

ராஜனின் பங்காளாவில் உள்ள பார்க்கிங்கில் மாயன் தன் காரை நிறுத்த, அங்கே பெண் பணியாளர்கள் இருவர் திருஷ்டி கழித்த பிறகு அருணும் வர்மனும் வீட்டுக்குள் சென்றவர்களைப் பின் தொடர்ந்து ராஜனுடன் மகதியும் மாயனும் உள்ளே சென்றார்கள்.

"வர்மா... உங்க மாத்திரை மருந்து எல்லாம் ரூம்ல எடுத்து வச்சிட்டேன். நீ நல்லா ரெஸ்ட் எடு. நான் வீடுவரைக்கும் போயிட்டு வரேன்" என்று மாயன் சொன்னதும், "அண்ணா... நானும் வரேன்" என்றாள் மகதி.

"அம்மா... நீங்க எங்க போறீங்க?" என்று அருண் பதறியதும்,

"அருண்... நான் இப்போ போயிட்டு இன்னோரு நாள் கண்டிப்பா வரேன்" என்று மகதி சொல்ல, அருண் முகம் வாடிய நிலையில் தன் தாத்தாவின் அருகே அமர்ந்து கொண்டவனின் முகத்தைப் பார்க்கவே மகதிக்கு பாவமாக இருந்தது.

இருப்பினும்,"மாமா... நான் அண்ணன் கூடக் கிளம்புறேன்" என்ற மகதி, ராஜனின் பதிலுக்காகக் காத்து இல்லாமல் தன் உடமைகளை எடுப்பதற்காக வர்மனின் அறைக்குள் சென்றாள்.

மகதியின் செய்கைக்கு எந்த வித எதிர்வினையும் காட்டிடாத வர்மனை பார்த்து,"அப்பா... அம்மாவைப் போக வேணான்னு சொல்லுங்க" என்று அருண் கெஞ்ச,

"என்ன வர்மா இது! மகதி போறேன்னு சொல்லுறாள், நீ அமைதியா இருக்க?"என்று புரியாமல் கேட்டார் ராஜன்.

வர்மனின் மௌனத்தை உன்னிப்பாக மாயன் கவனிக்க,"மச்சான்... நீ கிளம்பு. இனி உன் தங்கச்சி உன் வீட்டுக்கு வரணும்னா! அது எங்க கல்யாண விருந்துக்காகத் தான் இருக்கும்" என்ற வர்மன்,

யாரும் எதிர்பாராத வண்ணம் தன் அறைக்குள் புகுந்து கதவை அடித்துச் சாத்தியவனின் செயலில் மாயன் சிரித்துக்கொண்டே தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

மகதி இருக்கும் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த வர்மனை பார்த்து மகதி கையில் பையுடன் திகைத்துப் போய் நின்று இருக்க,
"எங்க கிளம்புற!?" என்று வினாவினான் வர்மன்.

ஒரு கையில் கட்டுடன் நின்று இருந்த வர்மனை கண்ணீர் சிந்தும் விழிகளுடன் பார்த்த மகதி,"என்னை மன்னிச்சிடுங்க வர்மா" என்றவள் தன் பையுடன் அறையின் கதவைத் திறக்கப் போக, வர்மன் தன் ஒரு கையால் சிற்றிடை தேகம் கொண்ட பெண்ணவளின் இடையில் கைகொடுத்து இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

வர்மனின் அணைப்பில் தன்னை மறந்து இருந்த மகதி,
வர்மனின் முகத்தைக் காணவே சங்கோஜப்பட்டு,"நான் கிளம்புறேன் வர்மா" என்றாள்.

"ம்... போகலாம். ஆனா நான் பேச வந்ததை கேட்டுட்டு,அதன் பிறகும் உனக்கு என்னை விட்டுப் போகத் தோணுச்சுனா, நீ போகலாம்" என்ற வர்மனின் வார்த்தையில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மகதி.

அவள் பார்வையில் உள்ள அர்த்ததை புரிந்து இருந்த வர்மனோ,
"மகதி...உன்கிட்ட என் மனசுல இருக்குற ஆசையெல்லாம் எப்படி சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல" என்று வர்மன் சொல்ல,

இதுநாள் வரை வர்மனை வார்த்தையால் வதைத்து பேசிய பேச்சுகளை எல்லாம் எண்ணி பார்த்த மகதிக்கு, வர்மனின் தயக்கம் நியாயம் என்று தான் தோன்றியது.

மகதியின் கன்னத்தை தன் ஒற்றை கையில் ஏந்தியவன்,'உனக்கு என் மேல அத்தனை காதலா! எப்படி மகதி! உன்னால மட்டும் தான் டி இப்படியெல்லாம் காதலிக்க முடியும்' என்ற வர்மனின் வார்த்தையைக் கேட்டு மேலும் கண்கள் கலங்கினாள் மகதி.

'அப்போ நான் உங்கள காதலிச்சது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா!?' என்று மகதி கேட்க,

'ரொம்ப முன்னாடி எல்லாம் இல்ல மகதி, இப்போ தான்.அதுவும் உன் அண்ணன் உன்னோட டைரியை என்கிட்ட கொடுத்து வாசிக்கச் சொல்லும்போது தான் தெரிஞ்சிகிட்டேன்' என்ற வர்மனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மகதி.

 
Joined
Feb 6, 2025
Messages
42
'எனக்கு நீங்கத் தான் அந்தக் கடிதத்தை எழுத்துனீங்கனு நினைச்சேன்' என்று மகதி சொல்ல,

'ஏன் நான் எழுதலைன்னு இப்போ கவலை படுறேன்' என்ற வர்மன்,
மகதியை பார்த்து அழகாய் கண்கள் சிமிட்டினான்.

'உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே' என்ற மகதியின் கண்ணீரை தன் விரல் க்கொண்டு துடைந்தவன்,

'கோவமா! உன் மேலையா! சத்தியமா இல்ல டி, உன் மனசுல என் மீது நீ கொண்ட காதலை எண்ணி இந்த நொடிவரை பிரமிச்சு போறேன்.
எப்படி டி உன்னால மட்டும் என்னை இந்த அளவுக்குக் காதலிக்க முடிந்தது' என்ற வர்மனின் கண்கள் ஒரு துளி கண்ணீரும் சிந்தியது.

வர்மனின் நிலையைப் பார்த்து மகதி பதறிப் போனவள்,'அழாதீங்க வர்மா' என்ற பெண்ணவள் தன் கரங்கள்க்கொண்டு அவன் கண்ணீரை துடைத்தாள்.

மகதியின் கரங்களைத் தன் இதயத்தோடு இணைத்துக்கொண்ட வர்மன்,'வாழ்க்கையில ரொம்ப அடிபட்டுட்டேன் மகதி, மயில் போனதும் வாழ்க்கையே சூனியமா மாறிப்போச்சு, இனி அப்பாவும் அருணும் தான் என் உலகமுன்னு நினைத்தேன்.
ஆனா!
இப்போ எங்க சின்ன உலகத்துல நீயும் இருக்கணும்னு ஆசை படுறேன்,
ஆனா! என் ஆசையை நான் சொல்லப் போய்! இதுல என் சுயநலம் அடங்கி இருக்குனு நீ நினைச்சிட்டா என்னால தாங்கவே முடியாது டி'
என்ற வர்மன் மேலும் கண்கள் கலங்கினான்.

'ஐயோ வர்மா... ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க, நான் ஏன் உங்கள தப்பா நினைக்கப் போறேன்?' என்ற மகதிக்கு வர்மனின் தயக்கம் புரியாமல் இல்லை.

'வர்மா... பத்து வருஷத்துக்கு முன்னாடி உங்க மேல எனக்கு இருக்குற உணர்வுக்குப் பெயர் தான் காதலுன்னு உணர்ந்து தான் உங்களுக்கு நான் கடிதம் எழுந்தினேன்,
ஆனா அந்தக் கடித்ததுக்கு பதில் கடிதம் மாயன் அண்ணன் தான் எழுதுனாருனு எனக்குத் தெரியாது வர்மா' என்ற மகதியின் கண்களில் குற்ற உணர்வு நிறைந்து இருந்தது.

'அண்ணன் எழுதிய கடிதத்தை நீங்க எழுதனதா நினைத்துதான் உங்கள கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டேன். என்னுடைய நினைப்பே உங்களுக்கு இல்லை, அருண் உங்களுக்குப் பிறந்த குழந்தைன்ன்னு ரொம்ப மடத்தனமாக நினைத்துதான் உங்ககிட்ட நான் சண்டை போட்டேன்.என்னை மன்னிச்சிடுங்க வர்மா'
என்றவளை மேலும் தன்னோடு அணைத்து கொண்டான் வர்மன்.

'பழசை எல்லாம் மறந்துடலாம் மகதி,
இனி நம்ம வாழ்க்கையை சந்தோசமா ஆரம்பிப்போம். நான் தவற விட்ட பத்து வருடத்தையும் சேர்த்து உன்கூட இன்னும் நூறு வருடம் நான் நிம்மதியா வாழனும். எனக்கு அந்த வரத்தைக் கொடுப்பியா நீ!?" என்ற வர்மனின் கேள்வி முடியும் முன்னே அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் மகதி.

இருவரும் தங்கள் அணைப்பில் சோகங்களை மறந்து மௌன மொழியில் இருவரின் காதலையும் உணர்ந்து இருந்தார்கள்.

சில நிமிடங்கள் கடந்த நிலையில் அறைக்கதவை அருண் தட்டியதும், இருவரும் சுயம் பெற்று கதவைத் திறக்க,'அம்மா... என்னை விட்டுப் போகப் போறிங்களா?' என்று பாவமாகக் கேட்டான் அருண்.

"உன்னைப் பிரிந்து மட்டும் இல்ல அருண்! இனி உன் அப்பாவை மறந்தும் என்னால இங்க இருந்து போக முடியாது" என்ற மகதி அருணை அன்பாகக் கட்டி அணைத்து அவன் முகம் முழுதும் முத்தமழை பொழிந்தாள்.

மகதியின் வார்த்தையைக் கேட்டு ராஜனின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்க,
சற்றும் தாமதிக்காமல் ராஜன் மகதியின் தந்தையை அலைபேசி வாயிலாக அழைத்து அடுத்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் திருமண நிகழ்வை நடத்தி விட முடிவு செய்தார்.

மகதி என்கிற சித்திர மகதியின் பெற்றோர்கள், வர்மனின் இல்லத்திற்கு வந்திருக்க,
அண்ணன் ஸ்தானத்தில் இருக்கும் மாயனின் தலைமையில் இரு விட்டாரின் ஆசியோடு சித்திரமகதி மற்றும் அருள்மொழிவர்மனின் திருமண வைபோகம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு திரைப்பட துறையினரும்,நட்பின் அடிப்படையில் சைத்ராவும் வருகை தந்திருக்க,
அங்கே மாயன் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக நந்தினி எண்ணியிருந்த ஷீலாவும் அவளின் ஆண் நண்பருடன் வந்திருந்தாள்.

'என்ன மிஸ்டர் மாயன். என்னைக் கழட்டி விட்டுட்டு. ஷீலாவை கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு நினைத்தேன், ஆனா ஷீலா வேற ஒரு ஆள் கூட வந்திருக்காங்களே!" என்று தன் கணவனை நந்தினி கேட்க,

"நான் எங்க உன்னைக் கழட்டிவிட்டேன். நீதானே என்னைக் கழட்டிவிட்ட, அதுவும் இல்லாம, ஷீலாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உன்கிட்ட நான் எப்ப சொன்னேன்!?" என்று கேட்டான் மாயன்.

மாயனின் பதிலில் நந்தினி குழப்பமாக அவனைப் பார்த்தவளின் கண்கள் இருள் சூழ்ந்து மயக்க நிலையில் கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்த மாயன், நந்து நந்து என்னாச்சு' என்று பதறினான்.

மாயனின் குரலைக் கேட்டு அவன் அன்னை கீதா ஓடிவந்தவர்," நந்து நந்து என்னைப் பாரு மா" என்றப்படி தன் மருமகளின் கைநாடியை பிடித்துப் பார்த்தவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

மாயன் பதறியதும் மணக் கோலத்தில் இருக்கும் வர்மணும் மகதியும் நந்தினி அருகே ஓடி வர,"மாமா மாமா அத்தைக்கு என்ன ஆச்சு!?"என்று கேட்டான் அருண்.

"மாயா... நம்ப குளம் விருத்தி ஆகிடுச்சு மாயா"என்று கீதா கண்களில் கண்ணீருடன் நந்தினியின் நெற்றியில் இதழ் பதிக்க, மாயனின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகி அவன் கரங்கள் நந்தினியை கட்டி அணைத்துக்கொண்டது.

மாயனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று நல்ல செய்தியைக் கேட்டு
"வாழ்த்துகள் மச்சான்" என்று வர்மன் மாயனின் கரங்களைப் பிடித்து வாழ்த்தியதும்,
"வாழ்த்துகள் அண்ணா" என்று மகதியும் வாழ்த்துச் சொன்னாள்.

ஏன் அனைவரும் மாயனை வாழ்த்துகிறார்கள் என்று தெரியாத அருண் "ஏன் மாமாக்கு வாழ்த்து சொல்றீங்க"
என்று கேட்டான்.

"டேய் குட்டி பையா! உன் மாமாவுக்குக் குழந்தை பிறக்கப் போது டா" என்று கீதா சொல்ல,

"சித்ரா அம்மா... அப்போ நீங்களும் எனக்கு ஒரு குட்டி தங்கச்சியை பெற்றுக் கொடுங்க" என்று சிறுவன் சொன்னதும்,வெட்கத்தில் மகதி வர்மனின் பின்னே ஒளிந்துக்கொள்ள,

"என்ன மகதி, நம்ம பையன் ஆசையை நிறைவேற்றிடலாமா?"என்று வர்மன் கேட்டதும்,வெட்கத்தில் மகதியின் வதனம் செந்தூரமாய் சிவந்தது.

தன் பிள்ளைகள் இருவரையும் திருமண கோலத்தில் பார்த்து மகாலிங்கமும் ராஜனும் மகிழ்ச்சி அடைய,

"வர்மா...குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்லுவாங்க. சீக்கிரமா அருண் ஆசையை நிறைவேற்ற நீ ஒரு அழகான பெண் குழந்தையைப் பெத்து எடுத்திடு மச்சான்" என்று மாயன் சொன்னதும்,

புன்னகை வாடா மலராகச் சிரித்துக் கொண்டிருக்கும் தன் மனைவி சித்திர மகதியின் அழகில் சொக்கி போனான் அருள்மொழி வர்மன்.

பத்து வருடங்களுக்கு முன், மகதியின் மனதில் பூத்த காதலின் மகரந்தத்தை
வர்மன் அறியாதபடி வாடி போனவள்.
இன்றோ, அதே மகரந்தத்தின் வாசனையில்
தன் மன்னவனின் மனதை வென்று விட்டாள்.

இனி அந்த மகரந்தம், தன் மன்னவனுடன் இணைந்து,
தினமும் மலர்ந்து அன்பின் வாசம் வீசப்போகிறது.

இனி மகதி வர்மனுக்கு நிலையான துணையாகவும்,
அருணுக்குத் தாயாகவும் மாறி,
அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை
முழு மனதோடு வாழப் போகிறாள்.

"மன்னவனைத் தேடும் மகரந்தம்..."
இது கதையல்ல!
பத்து வருடக் காத்திருப்புக்குப் பிறகு மலர்ந்த அன்பும் நம்பிக்கையும் நிரம்பிய,
மன்னவனை நேசிக்கும் மங்கையின்
மனதை சொல்லும் காதல் அத்தியாயம்.

முற்றும்.

 

Attachments

  • inbound1102898501788911040.jpg
    inbound1102898501788911040.jpg
    129.8 KB · Views: 3
New member
Joined
May 2, 2025
Messages
18
ஐ..... சூப்பர் அக்கா.....
என் மாயனுக்கு குழந்தை வரப்போகுது....அருணுக்கு அம்மா அப்பா கிடைச்சிட்டாங்க... மகத்தி வரம்மன் காதல் கை கூடி போச்சு.... அழகான கதை அக்கா 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
22
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 
New member
Joined
Mar 12, 2025
Messages
20
எனக்கு மிகவும் பிடித்த கதை ❣️❣️❣️நிறைவான பகுதிகள். கதைக்கு ஏற்ற தலைப்பு. தலைப்புக்கு ஏற்ற கதை ❣️❣️சூப்பர் சிஸ்டர் ❣️
 
Member
Joined
May 9, 2025
Messages
44
Good sharing and understanding conversation between Varma and Mahadhi,.nice.made Mayan and his mom happy
 
New member
Joined
Feb 8, 2025
Messages
22
A1👌👌👌 intha kathaiyila namma magathi love than super. Mayan also so super... Varman nalla soul.. Super stroy sister.
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதைSuperbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top