Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
அத்தியாயம்- 16
மயில் வர்மனின் மரண செய்தி, அவன் சகோதரன் அருள்மொழி வர்மனை நடைப்பினமாக மாற்றியது.
தன் அண்ணன் குழந்தையைக் கையில் ஏந்தி இருந்த வர்மனுக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மாயன் தவித்து இருந்தான்.
'மயிலுக்கு என்னாச்சு மேடம்?' என்று கனமான இதயத்துடன் மாயன் கேட்டதும்,
'சாப்பாட்டு தட்டில் கழுத்தை அறுத்துக்கிட்டு தற்கொலை பண்ணி இருக்காரு' என்ற சைத்ராவின் வார்த்தை, வர்மனின் மனதை மேலும் ரணமாக்கியது.
வர்மனின் கையில் இருந்த பச்சிளம் பிள்ளை பசியில் அழுதுக்கொண்டு இருக்க,
'வர்மா...குழந்தையை அவங்க அம்மாகிட்ட கொடுதுட்டு வா, நம்ம உடனே ஜெயிலுக்கு போகலாம்'என்ற மாயன் குழந்தையைத் தூக்க முயன்றான்.
"அது முடியாது மாயன்"என்ற சைத்ரா மருத்துவ மனையில் இருந்த சிசிடிவி காட்சியைக் காட்ட, அதில் ரம்யா தன் ஆண் நண்பன் சரணுடன் மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.
"இவ பொம்பளையே இல்ல வர்மா. ஹாஸ்பிடல்ல ஒரு லேடி பிறந்த பிள்ளையை அப்படியே போட்டுட்டு, இங்க இருந்து வெளிய போயிட்டாங்கன்னு எங்களுக்குக் கம்பளைண்ட் வர,
அந்தக் கேசை விசாரிக்கும்போது தான் அந்த லேடியே ரம்யான்னு எனக்குத் தெரிய வந்துச்சு" என்று கோவமாகச் சொன்னாள் சைத்ரா.
தன் அண்ணனை இழந்த சோகம் ஒரு பக்கம். பிறந்து ஒரு நாள் கூட முடியாத நிலையில் தன் பெற்றோரை இழந்த பிள்ளையின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறதோ என்ற பயம் மறுபக்கம் என்று வர்மனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
பசியால் அழுதுக்கொண்டு இருந்த பிள்ளையை வர்மனிடமிருந்து வாங்கிய சைத்ரா, செவிலியரிடம் கொடுத்துப் பாட்டில் பாலை புகட்டச் சொன்னாள்.
தன் சகோதரனின் இழப்பைத் தன் தந்தை எங்கனம் தாங்கிக்கொள்ள போகிறார் என்று அஞ்சிய வர்மன் அப்படியே இருக்கையில் சோர்ந்துப்போய் அமர்ந்தான்.
நீண்ட நொடி யோசனைக்குப் பிறகு இனி அழுது எந்தப் பயனும் இல்லை என்ற நிதர்சனத்தை புரிந்துக்கொண்ட வர்மன்,
இப்போதைக்கு மயில் வர்மனின் மரணத்தைப் பற்றி ராஜனிடம் சொல்லப்போவதில்லை என்று முடிவெடுத்தான்.
"சைத்ரா... எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா" என்று வர்மன் கேட்க,
"கண்டிப்பா வர்மா... என்ன பண்ணனும் சொல்லுங்க"என்ற சைத்ரா அவளுடைய அதிகாரத்தை வைத்து வர்மனுக்கு உதவிசெய்ய முடிவு செய்தாள்.
"மயிலும் நானும் எங்க இருபது வயதிலேயே எங்களின் உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்க பதிவு செய்து இருக்கிறோம்.
அதனால உங்க ஃபார்முலிட்டிஸ் முடிந்த பிறகு நீங்கத் தான் எப்படியாவது என் அண்ணனோட உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க ஏற்பாடு பண்ணனும்" என்று வர்மன் தாழ்மையுடன் கேட்டான்.
"வர்மா... உங்க அண்ணன் தற்கொலை பண்ணி இறந்தது தெரிந்தும் நீங்க இந்த நேரத்துல அவரோட உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்க நினைக்கிறது பெரிய விஷயம் வர்மா" என்று சைத்ரா வர்மனை பாராட்டினாள்.
"இனி என்னதான் அழுது புரண்டாலும் போன உயிர் வரப் போறது இல்லை. ஆனால் மயிலோட மறைவுக்கு பிறகும் அவனோட சில உடல் உறுப்புக்களைக் கொண்டு நாலு பேர் சந்தோசமா வாழ்ந்தா எங்களுக்கு அதுவே போதும்"என்ற வர்மனின் கண்களில் கண்ணீரும் வற்றி போனது.
"நீங்கக் கவலை படாதீங்க வர்மா. மயில் ஆசைப்படியே அவரால நாலு பேர் நல்லா வாழ நானும் என்னால முடிந்த உதவியைச் செய்கிறேன்"என்ற சைத்ரா தன் அலைபேசி வாயிலாக மேல் அதிகாரிகளை அழைத்து, மயில்வர்மனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய என்ன விதிமுறை என்று கேட்டுக்கொண்டாள்.
தாயின் கருவில் இருந்தே தன்னோடு ஒன்றாக இருந்த தன் அண்ணனை இனி பார்க்கவே முடியாது என்று உள்ளுக்குள் அழுத வர்மனுக்கு குழந்தையின் அழு குரல் மீண்டும் கேட்க, செவிலியர் குழந்தையைத் தூக்கி வந்து மீண்டும் வர்மனிடம் கொடுத்தார்.
"வர்மா...இந்த ரம்யா மாதிரி ஆளுங்க தான்
பெண் சமுதாயத்திற்கே அசிங்கம். அந்த ரம்யாவால தான் நம்ம மயிலை இழந்து இருக்கோம். அப்படிப்பட்ட ரம்யாவிடம் உன் அண்ணன் குழந்தை வளரக் கூடாதுன்னு தான் உன் அண்ணன் உன்னை இந்தக் குழந்தையை வளர்க்க சொல்லிக் கேட்டு இருக்கான்.
அதனால மயில் ஆசைப்படி இனி நீயே இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கி விட்டுடு வர்மா. அந்த ராமயா கையில மட்டும் இந்தக் குழந்தை கிடைச்சா! பணத்துக்காக அவ இந்தக் குழந்தை கதையை முடிக்கக் கூடத் தயங்க மாட்டாள்" என்று மாயன் சொன்ன வார்த்தையைக் கேட்ட வர்மன் ஒரே முடிவாகக் குழந்தையைத் தன்னோடு மும்பைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.
ஒரு காவல் அதிகாரியாக இல்லாமல். மயில் வர்மனுக்கு தோழியாக இருந்து சைத்ராவும் நிறைய உதவிகளைச் செய்துக்கொடுத்தாள்.
மறுநாள் காலை மயில்வர்மனின் உடலைப் போலீசார் அருள் மொழிவர்மனிடம் ஒப்படைத்தார்கள்.
தன் அண்ணனின் குழந்தையைக் கையில் ஏந்தியப்படியே மயில்வர்மனுக்கு இறுதி சடங்கைச் செய்து முடித்தான் வர்மன்.
தன் அண்ணன் மீது இருந்த வருத்தம் வர்மனின் கண்களில் கண்ணீரை கூட உறைய வைத்தது.
எந்தப் பெண்ணுக்காகத் தன் அண்ணன், தன் குடும்பத்தை எதிர்த்து இத்தனை கஷ்டத்தை அனுபவித்தானோ! கடைசி வரை அந்தப் பெண்ணே மயில் வர்மனின் இறுதி சடங்கில் பங்கேற்க வில்லை என்ற ஆதங்கமும் வர்மனின் மனதில் இருந்தது.
மயில்வர்மன் வாழ்ந்த அதே ஊரில் அவரின் சடலத்தை அடக்கம் செய்த வர்மன், மறுநாளே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மும்பைக்கு பயணித்தவனுக்கு சைத்ரா தான் உதவியாக இருந்தாள்.
கைகுழந்தையுடன் வர்மனை பார்த்த அவனின் தந்தை ராஜனுக்கு புருவங்கள் கேள்வியாக உயர,
"அப்பா...இந்தக் குழந்தை நம்ம மயிலோட குழந்தை" என்ற வர்மனின் வார்த்தையில் ராஜனுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி எழுந்தது.
"என்னப்பா சொல்லுற! உன் அண்ணன் மயிலோட குழந்தையா! நம்ம வீட்டு வரிசா!?" என்ற ராஜன்,நிறைந்த மனதோடு கையில் குழந்தையை ஏந்தி பிள்ளையின் பாதத்தில் இதழ் பதித்தார்.
சில நொடிகள் ஆசை தீரக் குழந்தையைக் கொஞ்சிய ராஜன், "ஆமா மயிலும் அவன் பொஞ்சாதியும் எங்க? ஏன் உள்ள வந்தா நான் திட்டப் போறேன்னு துரை வெளியவே நிக்கிறாரா?"
என்று ராஜன் கேட்டதும், வர்மன் தன் தந்தையை கட்டிக்கொண்டு ஓ... என்று சத்தம் போட்டு அழுதான்.
தன் மகனின் கண்ணீரை பார்த்து ஒன்றும் புரியாமல் ராஜன் குழம்பி போக,
"இனி மயிலை நம்ம பார்க்க முடியாது அப்பா... அவன் நம்மள விட்டுப் போயிட்டான்" என்ற வர்மனின் வார்த்தையில், ராஜன் உயிர் இருந்தும் பிணமாக உணர்ந்தார்.
மாயன் கண்கள் கலங்கியப்படி மயில்வர்மன் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைச் சொல்லி முடிக்க, கதறி அழுத ராஜனுக்கு
ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லாமல் தவித்துப் போனான் வர்மா.
'வர்மா...ரம்யா பண்ண கேவலத்தால, உங்க அண்ணனுக்கு எப்படியும் ஜாமின் கிடைக்காதுனு அவருக்குத் தெரிஞ்சு இருக்கு. அதனால தான் அவரே அவருக்கான முடிவைத் தேடிகிட்டாரு"என்று மாயன் சொன்னதும்,
"அப்போ அந்த ரம்யா நம்ம மயிலோட குழந்தையைக் கேட்டு இங்கே வருவாளா வர்மா?"என்று கேட்டார் ராஜன்.
"அதுக்கு வாய்ப்பில்லை அப்பா,
அப்படியே ரம்யா வந்தாலும்
குழந்தை பிறந்த அன்னைக்கே இறந்து விட்டதாக தான் ஹாஸ்பிடல்ல சொல்ல சொல்லி இருக்கோம்" என்ற வர்மனுக்கு எந்தச் சூழ்நிலையிலும் குழந்தையை ரம்யாவிடம் கொடுத்து விடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
இவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி ரம்யாவிடம் மயில் வர்மனின் குழந்தை இறந்தாகப் பொய் சொல்லி இருக்க, அந்தப் பொய் உண்மையாக இருந்தால் கூட எனக்கு ஒரு இழப்பும் இல்லை என்ற ரீதியில் தான் வாழ்ந்து வந்தாள் ரம்யா.
தன் கணவன் இறந்ததை கூட நினைத்து வருத்தம் அடையாத ரம்யா, சில காலம் அவள் நண்பன் சரணுடன் சென்று வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கையை வாழ நினைத்தவள், அவ்வப்போது வர்மனிடம் பணம் கேட்டுத் தொல்லை படுத்துவதும் வாடிக்கையாக இருந்தது.
"தன் சகோதரனின் பெயரைச் சொல்லிப் பல கோடிகளைத் தன்னிடமிருந்து பிடுங்கிய ரம்யாவிற்கு, எங்கே மயில்வர்மனின் குழந்தை அருண், உயிரோடு இருப்பது தெரிய வந்தால் பணத்திற்காக அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை ரம்யா கேள்விக்குறியாக்கிடுவாள் என்று பயந்த
வர்மன்,
இதுநாள் வரை சிறுவன் அருண் உயிரோடு இருப்பதை ரம்யாவிடம் சொல்லாமல் பரம ரகசியமாகக் காப்பாற்றி வைத்திருந்தான்" என்ற கதையை இன்று மாயன் கனத்த இதயத்தோடு மகதியிடம் சொல்லி முடித்தான்.
வர்மனின் வாழ்க்கையில் இப்படியொரு சோகம் இருப்பதை அறிந்திடாத மகதிக்கு, இதுநாள் வரை வர்மனை தவறாக நினைத்து அவனைக் காயப்படுத்தியதை எண்ணி தன்னை தானே நொந்துக்கொண்டாள்.
மாயனும் மகதியும் மயில்வர்மனை பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் ராஜன் பதற்றத்துடன் மருத்துவ மனைக்குள் நுழைய, அதே தருணம்,
"அருணோட அம்மாவை டாக்டர் வரச் சொல்லுறாங்க" என்ற செவிலியரின் வார்த்தை முடியும் முன்னே மகதி மருத்துவரின் அறைக்குள் நுழைந்து இருந்தாள்.
கலகத்துடன் மருத்துவரைப் பார்த்த மகதி,
"டாக்டர்... என் குழந்தை எப்படி இருக்கான். அவனுக்குப் பயப்புடும்ப்படி ஏதும் இல்லையே" என்று பதற்றத்துடன்
அருணை பற்றி விசாரித்தாள்.
"பதட்டப்படாதீங்க! கெட்டத்தில் ஒரு நல்லது போல, விபத்தினால் தற்காலியமாகப் பார்வையை இழந்த உங்க பையனுக்கு, இப்போ அதே விபத்தின் காரணத்தால் மீண்டும் பார்வை வந்து இருக்கு" என்ற மருத்துவரின் வார்த்தையில் மாயனுக்கும் மகதிக்கும் நிம்மதி பிறந்தது.