• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
42
அத்தியாயம்- 13

காலை மணி ஒன்பதை நெருங்கி இருக்கும், மாயன் அவனின் வீட்டுக்குள் நுழைந்தவன்,"உள்ள வா ஷீலா"
என்று அழைக்க, மாடர்ன் ட்ரெஸில் முப்பது வயதுடைய பெண் மாயனின் வீட்டுக்குள் வந்தார்.

"என்னடா மாயா நீ! ஏன் நைட் வீட்டிக்கு வரல?" என்ற கீதா, "யாருடா இந்தப் பொண்ணு?" என்று வினாவினார்.

"அம்மா... இவங்க ஷீலா" என்று மாயன் சொன்னதும்,"வணக்கம் அத்தை" என்று சிரித்த முகத்துடன் கீதாவை வணங்கினாள் ஷீலா.

இரவெல்லாம் வீட்டிற்க்கு வராமல், பகலில் ஒரு பெண்ணோடு வந்து இருக்கும் மாயனை தன் அறையிலிருந்து ஆராட்சியாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள் நந்தினி.

"உக்காரு ஷீலா. அம்மா டிபன் ரெடியா இருக்கா?" என்று மாயன் கேட்க,
"நந்தினி இட்லி ஊத்தி தக்காளி சட்னி வச்சி இருக்காள்" என்ற கீதாவின் பார்வை ஷீலாவிடமிருந்து நகராமல் இருந்தது.

"இட்லியா! ஆனா ஷீலாவுக்கு இட்லி பிடிக்காதே! சரி மாவு இருக்கா?" என்று மாயன் கேட்க, "ம்..." என்று தலையசைத்தார் கீதா.

"சூப்பர்! ஷீலா நீ அம்மாகிட்ட பேசிகிட்டு இரு. நான் உனக்குத் தோசை ரெடி பண்ணுறேன்" என்று புன்னகை வாடாத முகத்துடன் மாயன் சொல்ல,

"நீங்கப் பேசிகிட்டு இருங்க. நானே போய்த் தோசை ரெடி பண்ணுறேன்" என்ற கீதா, மாயனை ஒரு மார்க்கமாகப் பார்த்துக்கொண்டே சமையல் அறைக்குச் சென்றார்.

கீதா சென்றதும் மாயன் ஷீலாவின் பக்கம் அமர்ந்தவன், "ரொம்ப வெக்கையா இருக்கா? ஏசி ஆன் பண்ணவா?" என்று கேட்க,

"நீங்கக் கூட இருந்தா எனக்கு எப்பவும் வெக்கையாவே இருக்காது மாயா" என்ற ஷீலாவின் சிரிப்புச் சத்தம் நந்தினி காதில் நாராசமாக ஒலித்தது.

"அப்புறம் மாயா! இந்த வீடு ரொம்ப சின்னதா இருக்குற மாதிரி இருக்கே! இங்க உங்களுக்கு வசதியா இருக்கா?" என்று ஷீலா கேட்க,

"அடுத்த மாசம் நானும் என் அம்மாவும் இந்த வீட்டுல இருந்து வேற வீட்டுக்குப் போயிடுவோம்" என்ற மாயனின் வார்த்தையைக் கேட்டு, அறையினுள் இருந்தப்படியே புருவம் உயர்த்தினாள் நந்தினி.

"என்ன மாயா சொல்லுற! நம்ம இந்த வீட்டை விட்டுப் போகப் போறோமா!? அதுவும் நீயும் நானும் மட்டுமா!?" என்று கீதா கேட்க, "ம்..." என்று தலையசைத்தான் மாயன்.

"மாயா நீ என்ன பேசுற!? எனக்கு ஒண்ணுமே புரியல"என்று கீதா கேட்க,
"அம்மா... நான் நந்தினிக்கு டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன், இந்த வீட்டைக் கூட நந்தினியே எடுத்துக்கட்டும். நம்ம வேற எங்காவது போய்த் தங்கிக்கலாம்" என்று மாயன் சொன்னதும், கீதாவின் கண்களில் கண்ணீர் தான் வந்தது.

"மாயா! என்ன நீங்க!? நீங்க ஏன் வேற எங்காவது போகணும், கல்யாணத்துக்கு அப்புறம் ஆன்ட்டியும் நீங்களும் நம்ம வீட்டுல தங்கிக்கோங்க மாயா" என்று ஷீலா சொல்ல,"ம்... இதுவும் நல்லா ஐடியா தான்" என்றான் மாயன்.

மாயனும் ஷீலாவும் பேசப் பேச நந்தினிக்கு கோவம் அதிகரித்தது.
இருப்பினும் மாயனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணியவளுக்கு, இதையெல்லாம் நினைத்துக் கோவப்பட உரிமை இல்லை என்று நினைத்தவள் தன் அறையில் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

நந்தினி கேட்ட விவகாரத்துக்கு மாயன் சம்மதித்து இருக்கிறான் என்ற உண்மையை அறிந்து கீதாவின் மனம் ரணமாக மாறியது.

"அம்மா... டிபன் எடுத்து வையுங்க.
ஷீலா வா சாப்பிடலாம்" என்ற மாயன் வேறொரு பெண்ணோடு நெருங்கிப் பழகுவதை பார்த்து நந்தினியின் காதுகள் இரண்டும் புகையை வெளியேற்றியது.

சிரிப்பும் கும்மாளுமமாக மாயன் காலை உணவைச் சாப்பிட்டவன், "அம்மா நீங்கச் சாப்பிட்டீங்களா?"என்று விசாரிக்க, "நந்தினி காலையிலேயே எனக்கு டிபனும் மாத்திரையும் கொடுத்துட்டா மாயா" என்றார் கீதா.

"ஏன் மாயா! யாரது நந்தினி?அவங்க என்ன உங்க வீட்டுல வேலை பார்க்குற பொண்ணா?"என்று ஷீலா கேட்க,

பொறுத்து இருந்தது போதும் என்று எண்ணிய நந்தினி,அதித கோபத்துடன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், மாயனின் முன்னே காளி தேவியை போல உக்கரமாக வந்து நின்றாள்.

திடிரென்று தன் முன் வந்து நின்ற நந்தினியை பார்த்த ஷீலா, "மாயா யார் இவங்க?" என்று கேட்க, "இவ தான் என் மருமகள் நந்தினி" என்றார் கீதா.

"மருமகளா! அப்படினா மாயா உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுதா!?" என்று ஷீலா கேட்க,"ம்... ஒரு முறை" என்று அலுப்பாகச் சொன்னான் மாயன்.

வீட்டுக்குள் வந்ததிலிருந்து நந்தினி பக்கமே திரும்பாமல் இருந்த மாயனை கடுப்பாக நந்தினி முறைக்க, "என்ன ஒரு முறையா!? ஏன் மாயா, அப்போ நாங்க மட்டும் என்ன பத்து முறையா கல்யாணம் பண்ணிப்போம்?" என்று கிண்டலாகக் கேட்டாள் ஷீலா.

"மாயா! என்ன இதெல்லாம்!? யாரு இவங்க?" என்று நந்தினி கேட்க,
"யாரா இருந்தால் உங்களுக்கு என்ன மேடம், நீங்க எந்த உரிமையில என்கிட்ட இந்தக் கேள்வியெல்லாம் கேக்குறீங்க?" என்று அவளைச் சீறினான் மாயன்.

"என்ன கேள்வி இது? இந்த நொடிவரை உங்ககிட்ட எனக்குத் தான் எல்லா உரிமையும் இருக்கு"என்று நந்தினி சொல்ல,

"அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை, நேத்து நைட் நீங்கக் கேட்ட டிவோர்ஸ் பேப்பர்ல நான் கையெழுத்து போட்டுக் கொடுத்ததோடு நமக்குள்ள இருந்த எல்லா உரிமையும் முடிஞ்சு போச்சு" என்றான் மாயன்.

"ஓ! அதனாலதான் நான் கொடுத்த டிவோர்ஸ் பேப்பர்ல என்ன ஏதுன்னு
கேள்வி கேட்காமல் கையெழுத்து போட்டுக் கொடுத்தீங்களாக்கும்?" என்று நந்தினி தன் மனதில் இருந்த குமரலை வெளிப்படையாகக் கேட்டாள்.

"உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் நந்தினி. அதனால் தான் நீ கேட்டதும் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்" என்று மாயன் அலட்சியமாகப் பதில் அளிப்பதை நந்தினி
எதிர்பார்க்கவில்லை.

"ஏன் அத்த! ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்ட டிவோர்ஸ் கேட்டா ஏன் எதுக்குன்னு காரணத்தைக் கூட உங்க புள்ள கேட்கமாட்டாரா?" என்று நந்தினி கேட்க, நந்தினி கண் முன்னே தன் விரலைச் சுண்டி அவளை தன் பக்கம் அழைத்தான் மாயன்.

"அங்க என்ன கேள்வி? என் அம்மா கிட்ட உனக்கு எந்தப் பேச்சும் இனி இருக்கக் கூடாது. என் அம்மாவைக் கேட்டா நீ எனக்கு டிவோர்ஸ் பேப்பர் அனுப்புன. இல்ல! வக்கிலை போய்ப் பாக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொன்னியா?" என்று மாயன் கேட்க,

"சரி...உங்க யார்கிட்டயும் நான் சொல்லல தான், ஆனா எதுக்காக உங்ககிட்ட விவாகரத்து கேட்டேன்னு நீங்க யோசிக்க மாட்டீங்களா?" என்று கேட்டாள் நந்தினி.

"உன் மேல எனக்கு எவ்வளவு காதல் இருக்குன்னு, சாரி! எவ்வளவு காதல் இருந்துச்சுன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஏன்! என் அம்மாவும் உன்ன பெத்த பொண்ணு மாதிரி தான் பார்த்துக்கிட்டு இருக்காங்கன்னும் உனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கும்போது உனக்கு என்ன பிரச்சனைன்னு நீயே எங்க கிட்ட சொல்லாதபோது! நாங்க ஏன் அதைத் தெரிஞ்சுக்க ஆசை படனும்" என்று கேட்டான் மாயன்.

"இங்க பாருங்க! நான் உங்ககிட்ட விவாகரத்து கேட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு" என்று நந்தினி சொல்ல்,
"அப்படி என்ன தான் காரணம்" என்று கவலையுடன் கேட்டார் கீதா.

"அம்மா... காரணம் என்பது அவங்களுக்கேத்த மாதிரி அவங்களே உருவாக்கிப்பாங்க, அதையெல்லாம் கேட்டு நம்ம நேரத்தை வீணாக்கிக்க வேண்டாம்.
இங்க பாருங்க நந்தினி, உங்களுக்கு நீங்கக் கேட்ட விவாகரத்தை நான் கொடுத்துட்டேன்.

இதுக்கு மேல உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இந்த வீட்டில் இருங்க. ஜீவனாம்சமா நீங்க என்ன கேக்குறீங்களோ நான் அதைக் கொடுக்குறேன்.

எவ்வளவு சீக்கிரம் நாங்க இந்த வீட்ல இருந்து கிளம்ப முடியுமோ நாங்க கிளம்புறோம். இனியாவது என் மனச புரிஞ்சுகிட்டு எனக்காகக் கவலைப்படுற ஒரு பொண்ணு கூட வாழ நான் ஆசைப்படுறேன்" என்று மாயன் சொன்னதும்,

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நந்தினி சட்டென்று மாயனின் சட்டைக்காலரை கோவமாகப் பற்றிக்கொண்டவள்,

"என்ன!? உங்களுக்காகக் கவலைப்படற பொண்ண பாக்கறீங்களா!?, டேய் மடையா, நீ நல்லா இருக்கணும்னு, உன்ன நெனச்சு கவலைப்பட்டு தாண்டா நான் உன்கிட்ட விவாகரத்து கேட்டேன்" என்று உண்மையைக் கூறினாள் நந்தினி.

"இது என்ன புது கதை!? நான் நல்லா இருக்கிறதுக்காக நீ விவாகரத்து கேட்டியா? ஏன் இப்ப நான் நல்லா இல்லாம என்ன நாரிக்கிட்டா இருக்கேன்?" என்று மாயன் கடுப்பாகக் கேட்டான்.

"நமக்குக் கல்யாணம் முடிந்து பத்து வருஷம் ஆச்சு! இந்தப் பத்து வருஷத்துல நமக்கு ஒரு குழந்தை இல்லன்னு நம்ம போகாத ஹாஸ்பிடல் இல்ல, ஆனா போன இடத்துல எல்லாமே எனக்குத் தான் குறை இருக்குன்னு தெள்ள தெளிவா சொல்லிட்டாங்க.அப்படி இருக்கும்போது ஏன் என்னால உங்க வாழ்க்கை வீணாகணும்னு தான் நான் உங்கக்கிட்ட விவாகரத்து கேட்டேன்" என்று கண்களில் கண்ணீருடன் சொன்னாள் நந்தினி.

"ஓ! நீ விவாகரத்து கேட்டதுக்கு பின்னாடி உன்னுடைய நல்ல எண்ணம் தான் இருக்கா!? பாத்தியா! அத நான் புரிஞ்சிக்கவே இல்லையே. சரி சரி... எப்படியோ நீயே எனக்கு நல்லது பண்ணனும்னு ஆசைப்படுட்ட.
நீ நெனச்ச மாதிரியே இனி எல்லாமே எனக்கு நல்லதாகவே நடக்கட்டும்.

அம்மா...டிவோர்ஸ் கிடைத்ததும், நந்தினி கிட்ட அவங்க இங்கேயே இருக்க போறாங்களா! இல்ல இங்க இருந்து கிளம்ப போறாங்களான்னு கேட்டுச் சொல்லுங்க. நான் போய் என் டார்லிங் ஷீலாவை டிராப் பண்ணிட்டு வரேன்" என்ற மாயன், அவன் அழைத்து வந்த பெண்ணை அவனுடனேயே அழைத்துச் செல்ல, செய்வதறியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து இருந்தாள்.
 
Last edited:
Joined
Feb 6, 2025
Messages
42
இதே தருணம் வர்மனின் வீட்டில் சிறுவன் அருண் தன் தாயாக நினைத்து மகதியுடம் அன்பாகப் பழகினான்.

அருணின் கண்களுக்கு மருந்தைப் போட்டு அவனுக்குப் பாடமும் சொல்லிக்கொண்டு இருந்தாள் மகதி.

என்னதான் சிறுவனுக்குப் பார்வை இல்லையென்றாலும் மகதி அவனுக்குப் பாடத்தைப் படித்துச் சொல்ல, அருணும் கவனமாகப் பாடத்தைக் கேட்டுக்கொண்டான்.

மதிய நேரம் வந்ததும்,"அருண் சாப்பிடலாமா?"என்று மகதி கேட்க,
"அம்மா... எனக்கு ஐஸ் கிரீம் தரீங்களா" என்று கேட்டான் அருண்.

"ஐஸ் கிரீமா!? இப்போ நான் அதுக்கு எங்க போவேன்?"என்று மகதி யோசிக்க,

"நேத்து நீங்க ஐஸ் கிரீம் சாப்பிட்டீங்கன்னு அப்பா சொன்ன்னாரே, ஓ! எல்லாத்தையும் நீங்களே சாப்பிட்டீங்களா!?" என்று அருண் கேட்டதும், நேற்றைய தினம் நடந்ததை நினைத்து மகதி முகம் சிவந்தாள்.

ஒரு நொடி தான், ஒரே நொடி தான் வர்மன் மீது அவள் கொண்ட காதலுக்கு அடிமையாகி அவனின் இதழ் முத்தத்தைத் தனக்குள் ரசித்தவள்,
அடுத்த நொடியே வர்மனின் வாழ்வில் வேறொரு பெண் இருப்பதாக எண்ணி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"என்ன அம்மா ஐஸ் கிரீம் இருக்கா!? இல்லையா!?" என்று அருண் கேட்க,
"அம்மா உனக்கு ஈவினிங் ஐஸ் கிரீம் வாங்கி தரேன்"என்றாள் மகதி.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில்,"அருண்..." என்று அழைத்துக்கொண்டே மாயன் வீட்டுக்குள் நுழைந்தான்.

"ஐ மாமா..." என்று மாயனின் குரலை வைத்துச் சரியாகக் கண்டுகொண்டான் அருண்.

மாயன், மகதி, அருண் என்று மூவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில்,
"அம்மா... நீங்கப் பார்க்க எப்படி இருப்பிங்க?" என்று அருண் கேள்வியாகக் கேட்டான்.

மகதி சிறுவனின் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னே,"உன் அம்மா பார்க்கத் தேவதை மாதிரி இருப்பாங்க" என்று சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் வர்மன்.

வர்மனின் பதிலில் மகதி அவனை முறைத்து பார்க்க, "என்ன ஒன்னு அடிக்கடி அவ முறைக்காமல் இருந்தால்! உன் அம்மா தான் உலக அழகி" என்று வர்மன் சொல்ல,
அதற்கும் மகதியின் பதில் முறைப்பாகத் தான் இருந்தது.

"வர்மா... வந்துட்டியா!? என்னப்பா போன காரியம் நல்ல விதமா முடிஞ்சிடுதா!?" என்று கேட்டுக்கொண்டே தன் அறையிலிருந்து ராஜன் வெளியே வர,

"எல்லாம் ஓகே தான் அப்பா" என்ற வர்மன் சிறுவனைத் தன் மடியில் தூக்கி அமர்த்திகொண்டான்.

"தாத்தா... அப்பா உங்கள மாதிரி இருக்காரு, நான் அப்பா மாதிரி இருக்கேன், அப்போ அம்மா யாரை மாதிரி இருக்காங்க?"என்று சிறுவன் ராஜனிடம் கேட்க,
"என் மருமகள் மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாள்" என்றார் ராஜன்.

ராஜனின் புகழாரத்தில் மகதி சிரித்துக்கொள்ள, அவள் மனதிலோ 'நான் உங்கள் சொந்த மருமகள் இல்லையே!' என்ற உணர்வு தான் இருந்தது.

"அப்பா... எனக்குச் சீக்கிரம் பார்வை வந்து நான் என் அம்மா எப்படி இருப்பாங்கன்னு பார்க்கணும்" என்று அருண் சொல்ல, சட்டென்று மகதியின் முகம் வாடியது.

அருணுடன் மகதி பழகியது ஒரு வாரக் காலமாகக் கூட இல்லாமல் இருக்க, மகதிக்கு சிறுவன்மீது அதித அன்பு மலர்ந்து இருந்தது.

எங்கே அருணுக்கு பார்வை வந்தபிறகு, அவனைப் பெற்ற தாய் மகதி இல்லை என்ற உண்மையைச் சிறுவன் அறிந்துகொள்வானோ என்ற அச்சம் மகதியின் மனதோரத்தில் இருக்க தான் செய்தது.

மகதியின் வாடிய முகத்தைப் பார்த்தே அவளின் எண்ண ஓட்டத்தை அறிந்துக்கொண்ட வர்மனோ,
"சரி வாங்க எல்லோரும் சாப்பிடலாம்" என்றவன், சிறுவனுக்கு அவனே மதிய உணவை ஊட்டியும் இருந்தான்.

எப்போதும் போலவே உணவருந்திய பிறகு வர்மனின் அறையில் மகதியுடன் சிறுவன் உறங்கிக்கொண்டு இருக்க,
"உள்ளே வரலாமா!?"என்ற அனுமதியுடன் வர்மன் உள்ளே நுழைந்தான்.

"ஏது!?அனுமதி எல்லாம் கேட்டுட்டு உள்ளே வரீங்க?"என்று கிண்டலான தோரணையில் மகதி கேள்வி எழுப்ப,

"இனி நீ அனுமதி கொடுத்தா தானே உள்ளே வர முடியும்"என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னான் வர்மன்.

"உங்களுக்கு அனுமதி கொடுக்க நான் யாருங்க!?" என்று மகதி சலிப்பாகக் கேட்க,
"ம்...நீங்கத் தான் என்னோட வருங்கால மனைவி" என்ற வர்மன் தன் அறையினுள் உள்ள அலமாரியை திறந்து அவனின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டான்.

வர்மனின் உரிமையான வார்த்தையில் மகதி அவனைக் கேள்வியாகப் பார்க்க,
"நீ நினைக்கிற மாதிரி நீ என்னோட ரெண்டாவது மனைவி எல்லாம் இல்ல,
நீ தான் என்னோட முதல் மனைவி" என்ற வர்மன் இப்போதும் வெளிப்படையாக எதையும் பேசாமல், மகதியை பார்த்துக் கண்கள் சிமிட்டினான்.

"என்ன உளறுறீங்க! உங்களுக்குக் கல்யாணம் ஆகாமல் தான் அருணுக்கு நீங்க அப்பாவாக இருக்கீங்களா!?" என்று மகதி அழுத்தம் திருத்தமாகக் கேட்க,
உறக்கத்தில் இருந்த அருண் வேறு பக்கமாகத் திரும்பிப் படுத்தவனை பார்த்துக்கொண்டே மகதியை பொறுமையாகப் பேசும்ப்படி சைகை செய்தான் வர்மன்.

உறங்கும் சிறுவனைப் பார்த்து மகதி பெருமூச்சை எடுத்தவள்,
"நான் உங்ககிட்ட பேசவே இல்லை.நீங்கக் கிளம்புங்க"என்று மகதியும் சைகையிலேயே பதில் கொடுத்தாள்.

"நான் பாரிஸ் போறேன், வர ஒரு வாரம் ஆகும், அருணை பார்த்துக்கோ.
நான் டெய்லி நைட் போன் பண்ணுறேன், நான் திரும்ப வந்ததும், உன்கிட்ட நிறைய உண்மைகளைச் சொல்லணும்,

அதுல ரொம்ப முக்கியமான உண்மை,
எனக்கு இன்னும் கல்யாணம்
ஆகல டி நெய் தோசை" என்ற வர்மன் ஒரு கணம் அருணை பார்த்தவன், சட்டென்று தன் பார்வையை மகதி பக்கம் திருப்பினான்.

"என் வாழ்நாளில் நேத்து தான் நான் ஒரு பொண்ணுக்கு முத்தம் கொடுத்தேன்,
அதுவும் அவள் மட்டும் தான் என்னோட பொண்டாட்டியா வரணும்னு ஆசைப்பட்டு நான் கொடுத்த முதல் முத்தம் அது" என்ற வர்மனின் வார்த்தையைக் கேட்டு மகதிக்கு தலை வலியே வந்தது.

மகதியின் முக மாற்றத்தை வைத்தே அவளின் குழப்பத்தை அறிந்துகொண்ட வர்மன்,"மகதி...அருண் வேற யாரும் இல்லை, அவன் என்னோட" என்று வர்மன் மேற்கொண்டு உண்மையைச் சொல்லும் முன்னே, வர்மனின் கைபேசி சிணுங்கியது.

"ஓ மைக்காட்! எனக்குப் பிலைட்க்கு டைம் ஆச்சு, மூணு மணி நேரத்துக்கு முன்னாடி நான் ஏர்போர்ட்ல இருக்கனும். நான் ஊருக்குப் போனதும் உனக்குப் போன் பண்ணுறேன், அருணை பார்த்துக்கோ" என்றவன் வேகமாக அறையிலிருந்து வெளியேறியவன்,

அதே வேகத்துடன் திரும்பி வந்து உறங்கும் சிறுவனின் கன்னத்தில் இதழ் பதித்து, அதே அன்போடு குழப்பத்தில் நின்று இருக்கும் மகதியின் கன்னத்திலும் இதழ் பதித்தான்.

"மீதியை திரும்ப வந்து கொடுக்குறேன்" என்று சிரித்த முகத்துடன் தன் வீட்டிலிருந்து வெளியேறிய வர்மனின் செயலில் மேலும் குழம்பி போனாள் மகதி.

வர்மன் சென்ற நொடியிலிருந்து அவன் பேசிய வார்த்தைகளை மனதிற்குள் அசைப்போட்டுக்கொண்டு இருந்த மகதிக்கு ஒன்றுமே புரியாமல் போனது.

சில நிமிடங்கள் கடந்து அருண் கண் விழித்ததும் அவனுடன் மகதி ஹாலில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்க,
இவர்கள் இருவரின் பாசபிணைப்பை கண்டு ராஜன் மனதிற்குள் நெகிழிந்து போனார்.

இவர்கள் மூவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து இருக்க,"ஐயா நம்ம வீட்டுக்குப் போலீஸ் வராங்க" என்று வாட்ச் மேன் சொல்ல, வெளிநாட்டிலிருந்து முப்பது வயதுடைய பெண் ஒருவள் காவலரின் துணையுடன் ராஜனின் முன்னே வந்து நின்றாள்.

"யார் மா நீ!?" என்று அந்தப் பெண்ணை ராஜன் கேள்வி கேட்க,
அந்தப் பெண்ணோ மகதியின் அருகே கண்களில் கட்டுடன் நின்று இருக்கும் அருணை பார்த்து, "சார்...இதோ! இவன் தான் என்னோட குழந்தை" என்றாள்.

அந்தப் பெண்ணின் வார்த்தையைக் கேட்டு ராஜன் சட்டென்று தன் பேரணை தன் வசம் அணைத்துக்கொள்ள,"நீ... நீ தான் ரம்யாவா?" என்று கேட்டார் ராஜன்.

"ஆமா அங்கிள், நான் தான் உங்க மருமகள் ரம்யா, அருணின் அம்மா. உங்க பையனோட மனைவி" என்று அந்தப் பெண் சொன்னதும், மகதியின் இதயத்தில் எரிமலையே வெடித்தது.

"நீ... நீ ஏன் இங்க வந்த!?" என்று ராஜன் கேட்க,
"என் மகனை என்கூட அழைச்சிட்டு போகத் தான் நான் வந்து இருக்கேன்" என்ற ரம்யா...ராஜனின் அருகே இருந்த அருணை தன் வசம் இழுத்தாள்.

"ஆ...அம்மா கை வலிக்குது" என்று அருண் வலியால் கத்த,
"ஏங்க பாவம் குழந்தை" என்று மகதி அருணின் கையைப் பிடிக்கப் போனவளின் கரங்களைத் தட்டிவிட்டாள் ரம்யா.

"ஏய்... என் பேரனை என்கிட்ட கொடு" என்று ராஜன் அருணை அழைக்க,
"இவன் என்னோட பையன். உங்க மகனுக்கும் எனக்கும் பிறந்த ஒரே குழந்தை. இனி இவனை நான் உங்ககிட்ட விட்டு வைக்கமாட்டேன்" என்ற ரம்யா தன் அருகே இருந்த காவலரிடம் கண் ஜாடை காட்ட, அந்த நபரோ அருணை தன் தோளில் தூக்கிகொண்டான்.

"விடுங்க, என்னை விடுங்க, அம்மா என்னைவிடச் சொல்லுங்க"என்று சிறுவன் மகதியை அழைக்க,
"நான் தான் உன்னோட அம்மா" என்ற ரம்யாவோ, மகதியை கோவமாக முறைத்தாள்.

"ஏய்...அருண் உன் குழந்தை இல்லை, உன் குழந்தை இறந்து போயிட்டான்" என்று ராஜன் பொய் சொல்ல,

"நானும் இத்தனை வருடம் அப்படி தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ தானே எனக்கு உண்மை தெரியுது. உங்க பையன் வர்மன் என்கிட்டயே என் பிள்ளை இறந்ததா பொய் சொல்லி இருக்கான்" என்றாள் ரம்யா.

ரம்யா பேசுவதை கேட்டு மகதிக்கு குழப்பம் ஏற்பட, அதே சமயம்,"அம்மா அம்மா..." என்று அழுதுக்கொண்டே இருந்தான் அருண்.

"ஏங்க... உங்க பிரச்சனையில அருணை அழ வைக்காதிங்க, அவன் அழுதா அவனுக்கு மூளை பகுதில பிளட் லீக் ஆகும்" என்று மகதி சொல்ல,

"என் பையனைப் பற்றிய கவலை உனக்கு வேண்டாம்" என்ற ரம்யா, அருணை தூக்கிக்கொண்டு வர்மனின் வீட்டிலிருந்து வெளியே சென்றாள்.

"ஐயோ அருண்... அருண்..." என்று ராஜன் கதறியதும், ரம்யா சிறுவனுடன் காரில் ஏறும் தருணம், அவளின் தோளிலிருந்து சிறுவன் கீழே இறங்க முயற்சி செய்ய, ரம்யாவின் கைப்பை கீழே விழுந்தது.

கீழே விழுந்த பையில் இருந்து சில வருடங்களுக்கு முன்னே வெளிநாட்டில் ரம்யாவும், வர்மணும் அனுனியமாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட நிறைய புகைப்படங்கள் சிதறி விழ, அந்த புகைப்படங்களை பார்த்த மகதியின் கண்கள் இமைக்க மறந்து கண்ணீரும் வர மறுத்தது.
 
New member
Joined
Mar 12, 2025
Messages
20
Mayan vanathale marana mass than 😍😍ramya yarunu rajanku theriyathaa varmanuku kalyanan aagalaiaya romba kulapamaa iruku sikrama next ud poadunga
 
New member
Joined
May 2, 2025
Messages
19
arun pavam ramyakitta ennamo thappu iurku. Varman love super. Mayan 😂acting super sakthi
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை ஆனால் இந்த புது குழப்பம் பயமாயிருக்கு
 
New member
Joined
May 2, 2025
Messages
18
சூப்பர் அக்கா இப்போ தான் எல்லா உண்மையும் தெரிய போகுது 😇😇மாயன் எப்பவும் வேற மாதிரி 🤡
 
Member
Joined
May 9, 2025
Messages
44
Yaru ma andha Nandhini, Maya, Enna Vella panura Maghadhi pavem.Ramya do not do any dirty things
 
New member
Joined
Feb 8, 2025
Messages
22
மாயன் செட் up ட்ராமா 😂 சூப்பர்
வர்மன் love high ஸ்பீட் la போகும்போது speed breaker வரும் னு நினைச்சேன்..
ரம்யா வந்துருச்சி
மகதி சோகம் தான்
 
New member
Joined
Feb 8, 2025
Messages
24
சஸ்பென்ஸ் தாங்கல சீஸ் மாயன் எப்பவும் அழகு 🥰🥰
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top