• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
42
அத்தியாயம்- 12

இருவரின் இதழ்களும் ஒன்றாய் இணைந்து இருக்க, வர்மன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன், கைகளை ஊன்றி மேலே எழுந்து,"சாரி!" என்றப்படி வேகமாகச் சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தான்.

நொடி பொழுதில் நடந்த எதிர்பாராத நிகழ்வால் மகதிக்கு கண்களில் கண்ணீர் அலை கடலாகப் பொங்கியது.

சற்று முன் நடந்தை எண்ணி பார்த்த மகதிக்கு தன் மொத்த கோவமும் வர்மன் மீது திரும்பியது.

பெருகி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்ட மகதி, அதே ஆத்திரத்துடன் வர்மனின் அறைக்குள் செல்ல, அங்கே அவனோ கட்டிலில் அமர்ந்து இருந்தவன், தன் தலையை இருக்கரகளால் அழுத்திப் பிடித்தபடி கவலையில் முழுகி இருந்தான்.

மகதி வர்மனின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தவள்,
"உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா! இப்படி தான் ஒரு பொம்பளைக்கிட்ட கேவலமா நடந்துப்பீங்களா!
எவ்ளோ தைரியம் இருந்தா!
என் சம்மதம் இல்லாமல்,
எனக்கு முத்தம் கொடுத்து இருப்பிங்க" என்று காட்டுக்கத்தல் கத்தியவளின் கோவத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வர்மன் அமைதியாக இருந்தான்.

"ஹலோ உங்ககிட்ட தானே பேசுறேன்! நான் பேசுறது உங்க காதுல கேக்கலையா" என்று மகதி மீண்டும் சத்தமிட,

"உஷ்...கத்தாத!அது ஏதோ தெரியாம நடந்து போச்சு, அதான் நான் சாரி கேட்டேனே" என்று வர்மன் பொறுமையாகப் பதில் சொன்னான்.

"ஆமா ஆமா... பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு சாரி பூரின்னு சொன்னா! எல்லாம் சரியாகிடுமா!?" என்று மீண்டும் சண்டைக்கு வந்தாள் மகதி.

இத்தனை நேரம் வர்மன் அமைதியாக எடுத்துச் சொல்லியும் மகதி அவன் பேச்சைக் கேட்காமல் இருக்க, "ப்ச்... இப்போ என்ன தான் டி பண்ண சொல்லுற!" என்று பொறுமையாக இழந்தவனாகக் கர்ஜித்தான்.

"என்ன!? டி யா!?,
எவ்ளோ திமிர் இருந்தால் என்னை டி போட்டுப் பேசுவீங்க" என்று மகதி தன் கண் பார்வையால் வர்மனை எரிக்க,
வர்மனோ மேல் இருந்து கீழ் வரை அவன் கண்களால் மகதியை அளவேடுத்தவன், "ஏன்!? நீ டி தானே!?" என்றவனின் இதழ் ஓரத்தில் குறும்பு புன்னகை மலர்ந்தது.

வர்மனின் பார்வையும் அவனின் பேச்சும் மகதியின் கோவத்தை மேலும் தூண்டி விட,

"இங்க பாருங்க வர்மன், இனிமே என்கிட்ட இப்படியெல்லாம் அட்வாண்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்ணாதீங்க, நான் ஒரு நேரம்போல மறு நேரம் இருக்க மாட்டேன்" என்ற மகதி தன் ஆள் காட்டி விரலை வர்மனின் முகத்திற்கு முன்னே நீட்டி அவனை நேருக்கு நேர் பார்த்துத் தைரியமாக எச்சரித்தாள்.

ஆரம்பத்தில் இருந்தே வர்மன் செய்யாத தவறுக்கு மகதி அவனையே குற்றவாளியாகக் குறை சாட்டுவதை பிடிக்காத வர்மனுக்கு, இப்போது மகதி நடந்துக் கொண்ட விதம் அவனின் ஈகோவை தூண்டிவிட்டது.

வாய்க்கு வந்ததை எல்லாம் வர்மனை பற்றிப் பேசிய மகதி அந்த அறையிலிருந்து வெளியே செல்ல முயன்றவளின் கரங்களைப் பிடித்துத் தன் வசம் வர்மன் இழுக்க, மகதி அட்டை பூச்சியைப் போல வர்மனின் இதயத்தில் ஒட்டிக்கொண்டாள்.

வர்மனின் இத்தகைய செயலைச் சற்றும் எதிரிபார்க்காத மகதி, கோவமாக அவனை அடிப்பதற்காகக் கை ஓங்க! அவள் கையைப் பிடித்து லாவகமாகப் பற்றி அவளின் இடையில் தன் கைக்கொண்டு அவளை வளைத்து இழுத்து பிடித்து மீண்டும் தன் இதயத்தோடு ஒட்ட வைத்துக் கொண்டான் நடன இயக்குனரான அருள்மொழி வர்மன்.

இதுவரை பெண்களின் கண்களை மட்டுமே பார்த்துப் பேசும் வர்மனுக்குள் இப்படியொரு பரிமானம் இருக்கிறதா என்று மகதி யூகிக்கும் முன்னே வர்மன் இவர்கள் இருக்கும் அறையின் கதவை அடித்துச் சாற்றி இருந்தான்.

"என்ன பண்ணுறிங்க, கதவைத் திறங்க!" என்று மகதி வர்மனின் கைபிடியில் சிக்கிக்கொண்டு கத்த முயன்றவளின் இதழ்களில் தன் விரல் கொண்டு வருடினான் வர்மன்.

"ச்சீ கையை எடுங்க!" என்று மீண்டும் மகதி திமிறி எழுந்தவளை சட்டென்று வர்மனின் பிடியிலிருந்து விடுவித்தவன் அவளை அழுத்தமாகப் பார்த்து மெலிதாகச் சிரிக்க, "நீங்க இவ்ளோ கேவலமான ஆளா?" என்று ஆதங்கத்துடன் கத்தினாள் மகதி.

"ம்... ஆமா! நான் கேவலமான ஆள் தான், இந்தக் கேவலமான ஆளு இப்போ உன்னை என்ன பண்ண போறேன் தெரியுமா!?" என்று கேட்டுக்கொண்டே வர்மன் அடிமேல் அடி வைத்து மகதியை நெருங்கிச் செல்ல, அவளோ உண்மைக்கே வர்மனின் செயலில் பயந்து தான் போனாள்.

"ஆமா! நீ என்ன சொன்ன! உன் விருப்பம் இல்லாமல் இனிமே உனக்கு நான் முத்தம் தரக்கூடாதுன்னு தானே சொன்ன!!" என்று வர்மன் கேட்க,

"நா... நான் எப்போ அப்படி சொன்னேன்!?" என்ற மகதியின் குரலில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

"இல்ல இல்ல!! நீ அப்படி தான் சொன்ன, உனக்கு நான் முத்தம் கொடுத்தது தப்பா தெரியல, ஆனா உன் சம்மதம் இல்லாம உனக்கு நான் முத்தம் தந்தது தான் உன்னோட கோவத்துக்கு காரணம்" என்றான் வர்மன்.

"உளராதீங்க, நான் அந்த அர்த்தத்துல சொல்லல, முதல்ல நீங்க வழியை விடுங்க, நான் வெளியே போகணும்" என்றவள் மீண்டும் அந்த அறையிலிருந்து வெளியே செல்ல எத்தணித்தவளை சுவற்றில் சாய்து தன் இருப்பக்க கைகளைக்கொண்டு மகதியை அங்கும் இங்கும் நகராமல் சிறை பிடித்து இருந்தான் வர்மன்.

"வர்மா... என்ன பண்ணுறீங்க வழியை விடுங்க" என்று மகதி கெஞ்சியதும் அவளின் இதழ்களின் மேலே தன் பார்வையை பதித்ததவன்,

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா!?" என்று நேராகக் கேட்டதும், மகதி தன் முழு பலம்க்கொண்டு அவன் கையைத் தட்டி விட்டாள்.

"என்ன தைரியம் உங்களுக்கு, மாயன் அண்ணன் சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான் உங்க குழந்தை உயிரைக் காப்பாற்ற நான் இங்க உங்க பையனுக்கு அம்மாவா நடிக்க வந்து இருக்கேன்,

மற்றபடி உங்கள நான் ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிகிட்டு அருணுக்கு சித்தியா இந்த வீட்டுல உலா வர நான் ஆசைப்பட்டு இங்க வரல" என்ற மகதி அதே கோபத்துடன் வர்மனின் அறையிலிருந்து வெளியேறி இருந்தாள்.

மகதியின் கோவத்திலும் அர்த்தம் இருக்கிறது, ஒரு வேளை அருணை பற்றிய உண்மையை மகதியிடம் வர்மன் சொல்லி இருந்தால் கூட மகதியே வர்மனை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வர்மனிடம் சரண் அடைந்து இருப்பாள்.

ஆனால் வர்மனோ இந்த நொடிவரை அருண் யார் என்ற உண்மையை மறைத்து இருக்க, மகதிக்கோ தன் மகனைப் பார்த்துக்கொள்வதற்காக வர்மன் தன்னை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் கேக்கிறான் என்று எண்ணிக்கொண்டாள் மகதி.

மகதி வர்மனை மேலும் மேலும் அவமானப் படுத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வர்மன்னுக்கு மகதியை சீண்டி பார்ப்பதில் பேரானந்தம் தோன்றியது.

வர்மனின் அறையிலிருந்து கண்ணீரை துடைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்ற மகதியை பார்த்து," என்ன பாப்பா சாப்பிட்டியா!?" என்று கேட்டான் மாயன்.

"ம்... சாப்பிட்டேன் அண்ணா" என்ற மகதி சிறுவனின் அருகே சென்று அமர்ந்தவளின் கண்கள் இரண்டும் ரத்த சிவப்பாக இருந்தது.

"அம்மா... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு" என்று, தனக்கு பார்வையில்லை என்றாலும் மகதியின் குரலை வைத்தே அவளின் நிலையை அறிந்து சரியாகக் கேட்டான் அருண்.

"அது... அது ஒன்னும் இல்ல அருண்! பிரிட்ஜ்ல ஐஸ் கிரீம் இருந்துச்சு, அதைச் சாப்பிட்டு தொண்டை கட்டிக்கிச்சு" என்று மகதி சூழ்நிலையைச் சமாளித்தாள்.

"ஆமாமா!! உன் அம்மா இன்னைக்கு ஐஸ்கிரீம் தான் சாப்பிட்டு இருக்காங்க அருண்" என்று கிண்டலாகச் சொல்லிக்கொண்டே வர்மன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர, வர்மனின் பேச்சைக் கேட்டு மகதியின் முகத்தில் மேலும் கோவம் அதிகரித்தது.

"என்ன ஐஸ் கிரீமா!?" என்று மாயன் கேட்க, "ஆமா ஆமா ஐஸ் கிரீம் தான், அதுவும் ஸ்ட்ராபெரி ஃபிளேவர் மச்சான்" என்ற வர்மனின் பார்வை மகதியை விட்டு அகலாமல் இருந்தது.

"என்னது மச்சானா!? என்னடா உறவு முறை எல்லாம் வச்சி புதுசா அழைக்கிற மாதிரி இருக்கு!" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மாயன்.

"ஏன் மச்சான்!? நான் உன்னை மச்சான்னு கூப்பிடக் கூடாதா?" என்று வர்மன் கேட்க,
"தாராளமா கூப்பிடு வர்மா! என்கிட்ட உனக்கு இல்லாத உரிமையா!" என்ற மாயன் தன் நண்பனின் தோளில் நட்பாகத் தட்டிக்கொடுத்தான்.

"இப்போ எல்லாம் உரிமையை அவங்க கொடுக்கலைன்னா கூட! நம்மளே அந்த உரிமையை எடுத்துக்கணும் மச்சான்" என்ற வர்மனின் வார்த்தையில் உள்ள சூசகத்தை மாயன் அறிந்து கொண்டவன் தன் நண்பனின் நடவடிக்கையை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து தான் இருந்தான்.

வர்மன் பேசப்பேச மகதியின் முகம் இறுகிக் கொண்டே போக, மகதியின் அருகில் இருந்த சிறுவனோ மகதியை தன் அன்னையாக எண்ணி அவள் கைவிரல்களை அன்பாக வருடினான்

மகதியின் இரு கரங்களையும் பிடித்து அவள் கைகளில் தன் முகத்தைப் புதைத்த சிறுவன் மகதிக்கு முத்தம் கொடுக்க, வர்மனின் பேச்சை எல்லாம் மறந்து அருணின் பாசத்திற்கு மகதி
அடிமையாகி இருந்தாள்.

மகதியின் வருகையால் நிம்மதி அடைந்த ராஜன்,"மருமகளே! எனக்கு அசதியா இருக்கு. நான் தூங்கப்போகிறேன்" என்றப்படி அவர் அறைக்குச் செல்ல,

"அம்மா அம்மா எனக்கும் தூக்கம் வருது" என்ற சிறுவனை,"வா அருண் நான் உன்ன அழைச்சிட்டு போயி தூங்க வைக்கிறேன்" என்று வர்மன் சொல்ல,

"ஹ்ம் ஹ்ம் அம்மா தான் என் கையைப் பிடிச்சு என்னை நடக்க வச்சு ரூமுக்கு அழைச்சிட்டு போகனும்" என்றான் அருண்.

"அருண்! உங்க அம்மா இன்னும் சாப்பிடல, அவங்க சாப்பிட்ட பிறகு ரூமுக்கு வருவாங்க.நீ வா அதுக்குள்ள நான் உன்னைத் தூங்க வைக்கிறேன்" என்று வர்மன் சொல்ல,"என்ன நீ இன்னும் சாப்பிடலையா பாப்பா!? "என்று கேட்டான் மாயன்.

"எனக்குப் பசிக்கல" என்ற மகதி சிறுவனை வர்மனிடமிருந்து தன் வசம் வாங்கிகொண்டவள்,

"நீ வா அருண் நானே உன்னைத் தூங்க வைக்கிறேன்" என்றவள் சிறுவனைத் தூக்கிச் சென்று வர்மனின் கட்டிலில் அருணை படுக்க வைத்தாள்.

"அம்மா நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க!?" என்று சிறுவன் சம்பந்தமே இல்லாமல் கேள்வியை எழுப்ப,

"நான் சுடிதார் போட்டு இருக்கேன்"
என்று மகதி சொன்னதும், தத்தி தடவி மகதியின் சுடிதார் ஷாலை எடுத்துத் தன் கையில் சுற்றிக் கொண்டான் சிறுவன்.


 
Joined
Feb 6, 2025
Messages
42
சிறுவன் தன் மீது கொண்ட அன்பில் நெகிழ்ந்த வண்ணமாக மகதியும் அவன் அருகே படுத்துக் கண்கள் மூடினாள்.

இரவு எந்நேரம் கடந்தாலும் மாயன் தன் வீட்டுக்குச் செல்லும் பழக்கம் உடையவன்
அன்றைய தினம் வர்மனின் வீட்டில், அருணின் அறையில் படுத்துகொண்டான்.

தன் நண்பனுக்கு என்னவோ பிரச்சனை இருக்கிறது என்று எண்ணிய வர்மன், மாயனே விரைவில் மீண்டு வருவான் என்று நம்பியவன்,
அவன் உறங்குவதற்க்காகத் தலையணை எடுக்கத் தன் அறைக்குள் நுழைந்தான்.

போர்வையை எடுக்க வந்த வர்மனை பார்த்து மகதி அமைதியாக இருந்திருந்தால் கூட வர்மனும் நல்ல தனமாக அந்த அறையிலிருந்து வெளியே சென்று இருப்பானோ என்னவோ, ஆனால் மகதி வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல்,

"என்ன!?போர்வை எடுக்குற சாக்குல மறுபடியும் என்கிட்ட பிரச்சனை பண்ண வந்திங்களா!?" என்று கோவமாகக் கேட்டாள்.

அருண் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மகதியை அழுத்தமாகப் பார்த்த வர்மனோ, "இப்போ உன்கிட்ட நான் பிரச்சனை பண்ற எண்ணத்துல இல்லவே இல்லை, ஆனா எப்போ நீ நான் பிரச்சனை பண்ணணும்னு ஆசைப்பட்டியோ! அப்போவே நானும் பிரச்சனை பண்ணுறதா முடிவு பண்ணிட்டேன்" என்ற வர்மன் மகதியும் அருணும் படுத்து இருக்கும் அதே கட்டிலில் வாட்டமாகப் படுத்துகொண்டான்.

வர்மனின் செயலில் கோவம் கொண்ட மகதி,"ஹலோ! இங்க ஏன் படுக்குறீங்க? ஒழுங்கு மரியாதையா வெளிய போங்க" என்று சத்தம் போட, அதே சமயம் சிறுவன் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்.

தற்காலியமாகத் தன் பார்வையை இழந்த சிறுவன்,
"அம்மா... அம்மா என்னமா ஆச்சு?" என்று மகதியின் கையைப் பிடித்துக்கொண்டு பதற,
"ஒன்னும் இல்ல அருண், உன் அம்மா கனவு கண்டு பயந்துட்டாங்க" என்ற வர்மனின் இதழ்களில் கிண்டலான சிரிப்பு தோன்றியது.

"அப்பா! அப்பா நீங்களும் எங்கக்கூட தான் தூங்குறீங்களா!?"என்று சிறுவன் மகிழ்ச்சியுடன் கேட்க,
"ஏன் வேண்டாமா!?" என்று பாவமாகக் கேட்ட வர்மன் அருணை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"இல்ல இல்ல அப்பா! நீங்க எங்ககூடவே தூங்குங்க! என் பிரண்டோட அம்மா அப்பா எல்லாம் அவங்க கூடத் தான் தூங்குவாங்க, அதனால நீங்களும் எங்ககூடவே இருங்க" என்று சிறுவன் சொல்ல,

"நீ சொன்னா சரி தான் அருண்" என்ற வர்மன், சிறுவனைத் தன் அருகே படுக்க வைத்துக்கொள்ள, மகதியோ கொலை வெறியில் வர்மனை முறைத்துக்கொண்டு இருந்தாள்.

"அம்மா... நீங்களும் படுங்க"
என்ற சிறுவன் மகதியின் கையைத் தன் வசம் இழுத்தவன்,
அவனின் வலது கையில் வர்மனின் கரத்தையும்,
இடது கையில் மகதியின் கரத்தையும் பற்றிக்கொண்டு சந்தோசமாக உறங்க ஆரம்பித்தான்.

சிறுவன் உயிரைக் காப்பாற்ற வந்த மகதிக்கு அந்தச் சிறுவனின் அன்பே பிரச்சனையாக இருக்க, இப்போது வர்மனும் அவன் பங்குக்கு மகதியை சீண்டி பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தவனின் செயலில் மகதிக்கு அவன்மீது வெறுப்பு தான் அதிகரித்தது.

நீண்ட நேரம் மகதி கண்கள் மூடாமல் இருந்தவள், அவளை மீறி உறங்கியதும் வர்மன் பொறுமையாக எழுந்து அருணின் நெற்றியில் இதழ் பதித்தவன், கள்ளம் கபடமால் இல்லாத மகதியின் வதனத்தை காதலோடு ரசித்தப்படி தன் அறையிலிருந்து எழுந்து மாயன் இருக்கும் அறைக்குள் சென்று படுத்துகொண்டான்.

மறுநாள் காலைப் பொழுது அழகாக மலர்ந்தது. அருணின் அருகே படுத்து இருந்த மகதி கண் விழித்தவளின் செவிகளில் சிவனின் பாடல் ஒலித்தது.

அருண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் கரங்களிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட மகதி குளியலறை சென்று குளித்து முடித்துக் கூந்தலில் ஈர துண்டைச் சுற்றிக்கொண்டு வெளியே வர,"அம்மா..." என்று உறக்கத்திலேயே மகதியை அழைத்தான் சிறுவன்.

உறங்கும் சிறுவனின் செயலைப் பார்த்து மலர்ந்த முகத்துடனே மகதி சமையலறை செல்ல, அங்கே பணியாட்கள் வேலை செய்துக்கொண்டு இருந்தார்கள்.

"என்ன மருமகளே! நல்லா தூங்குனியா?"என்ற ராஜன் கையில் செய்தி தாளுடன் வீட்டுக்குள் நுழைய,
"குட் மார்னிங் மாமா"என்றாள் மகதி.

"குட் மார்னிங் மருமகளே" என்ற ராஜன் இயல்பாக மகதியிடம் பேசிக்கொண்டு இருக்க, மாடி படிக்கட்டிலிருந்து உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சொட்டும் வியர்வையுடன் கீழே இறங்கி வந்தான் வர்மன்.

இதுவரை புன்னகை வாடாத முகத்துடன் அமர்ந்து இருந்த மகதி, வர்மனை பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ள, "குட் மார்னிங் அப்பா" என்ற வர்மன் இந்த முறை மகதி அங்கே இருப்பதையே கண்டுகொள்ளாத ஆளாகத் தன் அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டவனை கேள்வியாகப் பார்த்து இருந்தாள் மகதி.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த நிலையில் வர்மன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவன், அவனே சிறுவன் அருணை அழகாகக் குளிப்பாட்டி அழைத்து வந்தான்.

"என்ன அருண்! உன் அம்மாகிட்ட குளிக்கலையா!,உன் அப்பனே குளிப்பாட்டிட்டானா?" என்று ராஜன் கேட்க,

"அம்மாவை ரொம்ப தொல்லை தரக்கூடாதுன்னு அப்பா தான் சொன்னாரு தாத்தா" என்றான் அருண்.

"உன்னைப் பார்த்துக்க தானே நான் இங்கே வந்து இருக்கேன், உன்னால எனக்கு என்ன தொல்லை வரப் போகுது!" என்ற மகதி வர்மனை முறைத்து பார்க்க, அவனோ இப்போதும் மகதியின் பக்கமே தன் பார்வையை திருப்பாமல் இருந்தான்.

நெற்றிலிருந்து அவனே தானாக வந்து வம்பு செய்த வர்மன், இன்று தன்னை கண்டுக்கொள்ளவே இல்லை என்ற நிலையில், மகதிக்கு மேலும் வர்மன் மீது கோவம் அதிகரித்தது.

"அம்மா... நேத்து தான் நான் நல்லா தூங்கினேன்" என்ற அருணின் நெற்றியில் மகதி இதழ் பதிக்க,
"வா அருண் அப்பா உனக்குச் சாப்பாடு ஊட்டி விடுறேன்" என்று சிறுவனை அழைத்தான் வர்மன்.

"ஒன்னும் தேவையில்லை! என் பையனுக்குச் சாப்பாடு கொடுக்க எனக்குத் தெரியும், நீங்க உங்க வேலையைப் பாருங்க"என்று மகதி தன் முகத்தைத் திருப்பிக்கொண்டவள்,
"மாமா... அண்ணா எங்கே?" என்று ராஜனிடம் கேட்டாள்.

"மாயன் வீடுவரைக்கும் போய் இருக்கான்.சரி வாங்க நம்ம சாப்பிடலாம்" என்ற ராஜனுடன் அனைவரும் காலை உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, அப்போதும் வர்மனின் பார்வை மகதியின் பக்கம் திரும்பாமல் இருந்தது.

"அப்பா...இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அநேகமா நான் வர லேட் நைட் ஆகிடும், இதுக்கு நடுவுல என்கிட்ட பேசணும்னா எனக்குப் போன் பண்ணுங்க" என்ற வர்மன் பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்ந்துகொண்டான்.

"அருண்... அடம் பிடிக்காமல் சமத்தா இருக்கனும் புரியுதா"என்ற வர்மன் தன் மகனின் கன்னத்தில் இதழ் பதித்து வேகமாக வீட்டிலிருந்து வெளியேறியவனின் செயலில் மகதிக்கு,
எதையோ இழந்தவள் போல் மனதுள் ஓர் அதிர்வு எழுந்தது.

"என்னமா மருமகளே! ஏன் ஒரு மாதிரி இருக்க?"என்று ராஜன் கேட்க,
"ஏன் மாமா! நான் இங்க தங்குறது வர்மனுக்கு பிடிக்கலையா!?" என்று கவலையாகக் கேட்டாள் மகதி.

"ஏன் அப்படி கேக்குற!?"என்று ராஜன் புரியாமல் கேட்க,
"வர்மன் வெளியே போகும்போது ஒரு முறைக்காவது என்கிட்ட சொல்லிட்டு போகலாமே!?"என்று மகதி வருத்தம் கொண்டாள்.

"அவன் வேலை விஷயமா போறதால சொல்லாம போய் இருப்பான், நீ இதுக்கெல்லாம் கவலைப்படாத" என்று ராஜன் மகதியை சமாதானம் படுத்த,
"அப்பா..." என்ற அழைப்போடு மீண்டும் வர்மன் வீட்டுக்குள் நுழைந்தான்.

"அப்பா...என்னோட செக் புக் உங்ககிட்ட இருக்கானு செக் பண்ணி பாருங்க ப்ளீஸ்" என்று அவசரமான வர்மனின் குரலில் அவன் காசோலையை தேடுவதற்க்காக ராஜன் அவர் அறைக்குள் சென்றார்.

கருப்பு அரைகை சட்டை, கருப்பு கால்சட்டையில் தன் எதிரே நின்று இருந்த வர்மனை மகதி முறைத்து பார்க்க,
சுற்றி முற்றி தன் வீட்டை நோட்டமிட்ட வர்மன்,பொறுமையாக மகதியை நெருங்கிச் சென்றான்.

"இப்படி நீ முறைச்சுகிட்டே இருந்தால்! ஒரு முறைக்குக் கூட உன்கிட்ட சொல்லிட்டு போகத் தோணாது" என்று வர்மன் சொல்ல,

மகதி பேசியதை வர்மன் எப்படி கண்டுகொண்டான் என்ற குழப்பத்தில் இருந்த மகதியின் அருகே இருந்த அருணின் கன்னத்தில் இதழ் பதித்த வர்மன்,
அதே சூட்டோடு மகதியின் கன்னத்திலும் முத்தமிட்டவன்,

"போய்ட்டு வரேன் டி நெய் தோசை" என்று அவளுக்குப் பிடித்த பலகாரத்தின் பெயரைக்கொண்டு அவளைச் செல்லமாக அழைத்தவன்,

"அப்பா... செக் புக் என் ஆபீஸ்ல தான் இருக்கு, நீங்கத் தேடாதிங்க" என்று கத்தி சொன்னவன்,

இவன் தந்த முத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மகதி மீளும் முன்னே, தன் வீட்டிலிருந்து வேறொரு காரில் அவன் அலுவலகத்தை நோக்கிச் சிட்டாகப் பறந்து இருந்தான்.



 
New member
Joined
Feb 8, 2025
Messages
24
யார் இது வர்மனா 😍😍
என்னப்பா நீ வேற மாதிரி மாதிரி!!!!!
 
New member
Joined
Feb 8, 2025
Messages
24
கதையொட்டம் அழகு 😍😍😍இனி வர்மன் ஆட்டம் ஆரம்பம் 😍😍😍😍
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
22
inbound1746185980531378732.jpg
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
22
வர்மன் ரைடு ஆரம்பம் 🥰
 
New member
Joined
May 2, 2025
Messages
19
மகதிக்கு நாக்குல சனி 😂வர்மன் இறங்கி விளையாடுறான் 😂
 
New member
Joined
May 2, 2025
Messages
18
அக்கா 😇😇சூப்பர் மகதியின் குழப்பதை ஏன் இன்னும் வர்மன் தீர்த்து வைக்கல, சீக்கிரமா இவங்க சேரனும் 💙
 
Member
Joined
May 9, 2025
Messages
44
Mahadhi why irritating him ma. He will not open his mouth and say that he loves you.kutty payana Vichy nalla vilayadurengha , oru naaaal nalla matapoerngha and ha PayPal kitta
 
New member
Joined
May 2, 2025
Messages
14
காதல் மலரும் என்று நினைத்தால் மேலும் மேலும் மோதல் அதிகரிக்கிறது,விரைவில் ஊடல் கூடலாக மாறனும் மாயனின் உதவியால் 🦋
 
New member
Joined
Mar 12, 2025
Messages
20
சூப்பர் சூப்பர்💛💛 சூப்பர் சூப்பர்💛💛 சூப்பர் சூப்பர் 💛💛சூப்பர் சூப்பர் 💛💛சூப்பர் சூப்பர் 💛💛சூப்பர் சூப்பர்💛💛 சூப்பர் சூப்பர் 💛💛சூப்பர் சூப்பர்💛💛 சூப்பர் சூப்பர்💛💛 சூப்பர் சூப்பர்💛💛 சூப்பர் சூப்பர் 💛💛சூப்பர் சூப்பர்💛💛
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top