New member
- Joined
- Feb 19, 2026
- Messages
- 2
- Thread Author
- #1
மாமரத்தில் பூக்கள் கொட்டாமல் இருக்க
அன்புள்ள விவசாயிகளே தற்பொழுது எங்குபார்த்தாலும் மாமரத்தில் பூக்கள் பூத்தும், சில இடங்களில் பிஞ்சுகள் கூட விட்டு உள்ளது அவற்றில் எடுத்த பூக்கள் காய் அதிகபிடிக்காமலும் பிடித்த காய்கள் உதிர்ந்தும் விடுகின்றன.
அவற்றை கட்டுப்படுத்த போரான் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்
மாமரத்தில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் கொட்டாமல் இருக்க, பூக்கும் பருவத்தில்) 3 வாரங்களுக்கு ஒருமுறை மட்டும் தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். இயற்கை முறையில் பஞ்சகவ்யா அல்லது மீன் அமினோ அமிலம் தெளிப்பது பிஞ்சு உதிர்வை தடுக்கும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடுக்கும்
முக்கிய வழிமுறைகள்:
• நீர் மேலாண்மை: பூ பூக்கும் சமயத்தில் அதிக நீர் பாய்ச்சக்கூடாது, மண் காய்ந்த பிறகு மட்டும் நீர் பாய்ச்சவும்.
• இயற்கை முறை: பூ பிணைக்கும் புழுக்கள் மற்றும் பூஞ்சை காளான்களைத் தடுக்க, 3% பஞ்சகவ்யா (30 மிலி 1 லிட்டர் நீரில்) தெளிப்பது சிறந்த பலன் தரும்.
• ஊட்டச்சத்து: மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
• பூச்சி கட்டுப்பாடு: தத்துப்பூச்சி (Hopper) தாக்குதல் இருந்தால், 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்கவும்.
• காற்று தடுப்பு: காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், மாந்தோப்பைச் சுற்றி சவுக்கு போன்ற மரங்களை நட்டு, காற்று தடுப்பானாகப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: பூ நன்றாக பூத்திருக்கும் நிலையில் பூ மீது பூச்சி மருந்து தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும், இது மகரந்தச் சேர்க்கையை பாதிக்கும்.
பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடுக்கும் முக்கிய வழிமுறைகள்:
மாமரத்தில் கூட்டுபுழு தாக்குதல் இருக்கும் அவை பூக்கள் அனைத்தையும் ஒன்றாக சுருட்டிக்கொள்ளும் பிறகு அவை காய்ந்து கருகி உதிர்ந்து விடும் பிஞ்சுகள் வைக்காது
இவற்றை இயற்கைமுறையில் கட்டுப்படுத்த மெட்டாரைசியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்
அல்லது பிவேரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மாமரத்தில் வண்டுகளின் தாக்குதரை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். மாமரத்தை சுற்றி தண்ணீர் பாய்ச்சும் சமையத்தில் தண்ணீருடன் கலந்து விட கியூமிக் விட்டால் பழம் நல்ல தரமானதாக இருக்கும் சுவை கூடும் பொதுவாக அனைத்திற்கும் இயற்கை இடுபொருட்களையே பயன்படுத்துங்கள்.
படித்ததில் கிடைத்த தகவலை பகிர்ந்திருக்கிறேன்.