- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
21
அரிச்சந்திரன் திருமணத்திற்குக் கேட்கவும் அதிர்ச்சியா! ஆச்சர்யமா! நடக்காது என நினைத்த ஒன்று தன்முன் நடைபெறும் மாயமா! பேச வாயெழாமல் கண்ணீர் வடித்தாள்.
அதை உணர்ந்தவனோ “சரி விடு. விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது. உன் லைஃப் மாதிரியே நானும்...”
சட்டென அவன் வாய்மூடி “நா... நான் சம்மதிக்கிறேன்” என்றாள் வேகமாக. ‘எங்கே தன்னைப்போல் திருமணமே வேண்டாமென்று இருந்துவிடுவானோ’ என்ற பயமே அவளைச் சம்மதிக்க வைத்தது.
அவளின் கைவிலக்கி, “சூழ்நிலையால சம்மதிக்கக்கூடாது நதி. முழு மனசோட என்னோட வாழ்ற முடிவோட சம்மதிக்கணும். உன்னை போர்ஸ் பண்ணல. யோசிச்சிச் சொல்லு?”
“அ...அப்ப நதீரா?”
“அப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதையே மறந்திருமா. உனக்கு என்னோட வாழ விருப்பமான்னு மட்டும் சொல்லு? நேரம் அதிகம் இல்ல நதி” என்றவன் பூவை நீட்டியபடியே இருந்தான்.
பூவையும் அவனையும் ஒருமுறை பார்த்தவள் ஆழ மூச்செடுத்து பூவை வாங்கிக்கொள்ள, “தேங்க்ஸ்” என்றுரைத்து அவளருகில் அமர்ந்தான்.
“ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்குள்ள தேங்க்ஸ் தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன்.” வெகு நிதானமாக அமைதியாக வந்தது அவளது வார்த்தைகள்.
‘என் பொண்ணு பிராக்டிகலானவள் மாப்பிள்ளை. நடக்குறதை அதன் போக்குல ஏத்துக்குவா. வெட்டி விவாதம்லாம் பண்ணமாட்டா. அவள் பிடிவாதமா நின்னது அவன் விஷயத்துல மட்டும்தான்.’ தன்னுடைய திருமணம் நட்சத்திராவுடன் என்று தெரிந்ததும் நந்தகுமாரை நேரில் பார்த்து நன்றி சொல்லச் சென்றவனிடம் அவர் சொன்னது.
“தேங்க்ஸ்” என்றான் மறுபடியும். எதற்கென்பதாய் நிமிர்ந்து திரும்பி அவன் முகம் காண, “ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்னு சொன்னியே அதுக்கு” என்று சிரித்தான்.
சில நொடிகள் அவனில் தொலைந்து, எழுந்து, “உண்மையைத்தான சொன்னேன். இதுக்கு ஏன் தேங்க்ஸ். உங்களை புரிஞ்சிக்கவே முடியலைங்க. பொண்ணு மாறினதை எல்லாருக்கும் சொல்ல வேண்டாமா?” என்றாள்.
“சொல்லி சம்மதம் வாங்கிட்டுதான் வந்தேன்.” அவளின் முறைப்பை உணர்ந்து, “உன்னை சம்மதிக்க வச்சிருவேன்ற நம்பிக்கையிலதான் நதி சொன்னேன்.”
“ஓ... அதுதான் சித்தி மருமகன் பார்த்துக்குவார்னு சொன்னாங்களா?” நினைத்ததை அவனிடமே கேட்க,
“உன்னை யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க. எதையும் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா மணமேடைக்கு வந்தா போதும்.
“ம்...” என்றாள்.
“வந்துருவல்ல நதி?”
“என்மேல் நம்பிக்கையில்லையா? நம்பிக்கையில் வந்தேன்னு சொன்னீங்க?” ஆதங்கம் அவள் குரலில் இருந்ததோ!
“சரி. சாரி. மணமேடைக்கு வரும்போது என்னை மட்டும் பார். வேற எங்கேயும் உன் கவனம் போக வேண்டாம். சரியா?”
“ம்...”
“இந்த ம்... என்ற வார்த்தையைக் கண்டுபிடிச்சவனை...” என்று வாய்க்குள் திட்ட, அவளோ கேள்வியாய் அவனை நோக்க, “இல்ல ம்... வார்த்தை நீ சொன்னா, சங்கீதமா கேட்குதுன்னு சொல்ல வந்தேன்” என்று அசடு வழிய சிரித்தான்.
“அஹான்!” கிண்டலாய் அவள் மொழிய,
“கிண்டலா செய்ற. உன்னை... வேண்டாம் எதுவாயிருந்தாலும் மேரேஜ் அப்புறம் பார்த்துக்கறேன்” என்று எழ, தானும் எழுந்து அவன் கைபிடித்து “உங்களுக்கு எதுவும் பிரச்சனையில்லையே?” என்றாள்.
அவளின் கலக்கம் உணர்ந்து, “நடைமுறைன்னு ஒண்ணு இருக்கு நதி. என்னை உன் ஹஸ்பண்டா மட்டும் பாரு. நான் தெளிவா இருக்கேன். நீயும் தெளிந்த மனசோட மணமேடைக்கு வா. நான் உனக்காகக் காத்திருக்கேன்” என்று அவளைச் சமாதானப்படுத்திக் கிளம்பினான்.
அவன் சென்ற பின்னும் யோசிக்கக்கூட இயலாதவளாய் அமர்ந்திருக்க, அங்கு வந்தாள் நட்சத்திராவின் சித்தப்பா பெண்.
“ஹேய் பாப்பு! நீயும் சித்தியோட வந்தியா? எப்படியிருக்க?” என்று நலம் விசாரிக்க,
“நான் நலம்தான். என்னை அடையாளம் தெரியுதாக்கா? சின்னப்பிள்ளையில் பார்த்தது.”
“என்னடி கேள்வி இது. என் தங்கையை எனக்குத் தெரியாதா? நல்லா வளர்ந்துட்ட.”
“ஆமாக்கா. ஒரு ஆறேழு அடி வளர்ந்துட்டேன்.” கிண்டலாகப் பதிலளிக்கவும் நட்சத்திரா அவளை முறைத்துச் சிரிக்க, “உன்னை இப்படி மணப்பெண்ணா பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள் அக்கா” என்றாள்.
“ம்... தேங்க்ஸ். அண்ணன் வரலையா? ஆமா. சித்தப்பா எங்க?”
“நீ அம்மாவை சரியா பார்க்கலையாக்கா?” என்றவள் குரல் கலங்கி வந்தது.
“பார்க்கலையான்னா? பாப்பூ...” என்றாள் அலறலாக.
“அப்பா நான் பத்து படிக்கும்போதே...” என்று தேம்பிய தங்கையை கண்ணீருடன் அணைத்துக் கொண்டவள், “என்னாச்சி? எப்படி இறந்தாங்க?”
“கேன்சர். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ஹாஸ்பிடல், வீடுன்னு அலைஞ்சும் ஒரேடியா கிளம்பிட்டாங்க.”
‘ஓ... அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்குமோ?’ தங்கையை அழவைக்க மனமில்லாது, “அண்ணனை எங்க?” என்று பேச்சை மாற்றினாள்.
“ஏர்போர்ட் வந்து டேக்ஸியில வந்துட்டிருக்காங்க.”
“நாங்க இருக்கிற இடம் எப்படித் தெரிஞ்சது?” என்றாள் புரியாது.
“அதெல்லாம் மதியம் ஃப்ரீயா இருக்கும்போது பேசிக்கலாம்” என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எட்டு மணியளவில் பட்டும் பகட்டுமாய் இரு பெண்கள் வர, அறையில் தன் குடும்பத்தினரின் புகைப்படத்தை கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தவளை, அவளறியாமல் புகைப்படம் எடுத்து, ‘இதுதான் மணப்பெண்ணா?’ என்று கேட்டு செய்தி அனுப்பினார்கள்.
எதிரில் இருந்தவன் ‘ஆம். அவள்தான் நட்சத்திரா!” என்று பதிலனுப்ப,
அதைக் கண்டதும் முகத்தில் திருப்தி எழ, “நல்லாயிருக்கியாமா?” என்றார்கள் அவளைக் கண்டு.
யாரென்று தெரியாவிட்டாலும் யாராவது உறவினராக இருக்குமென்று “நான் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“நாங்க யார்னு தெரியுதா?”
“சாரிங்க தெரியல.”
“நாங்க பையனுக்கு அத்தை முறை” என்று பேச்சுக் கொடுத்தபடி அவள் மூக்கில் கர்சீப் வைக்க, ஏதோ ஒரு மயக்கம் தன்னை இழுக்கவும், “ஏய்! யார் நீ? யாழு நீ...” வாய் குளறியது. முழுதாக மயக்கமும் இல்லாமல் இருக்க, அப்பெண்கள் தாங்கள் வைத்திருந்த பர்தாவை அவளுக்கு அணிவித்து, அவள் கைதாங்கி நடத்தி வாசல் செல்ல, எதிரில் வந்த பெண்ணைக் கண்டு ஆச்சர்யத்திலும்! அதிர்ச்சியிலும்! பயத்திலும் விழித்தார்கள்.
“யார் நீங்க? என்னாச்சி இவங்களுக்கு? எங்க கூட்டிட்டுப் போறீங்க?” என கேள்விகளை அவள் தொடுக்க,
“அ...அதுமா மாப்பிள்ளைத் தம்பியோட வேலை பார்க்கிற ஃபாத்திமாதான் இந்தப் பொண்ணு. கல்யாணத்துக்காக உடம்பு சரியில்லாததையும் பொருட்படுத்தாம வந்துட்டா போல. ரொம்ப முடியலை. அரி தம்பிதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டு அப்படியே வீட்ல விட்டுடச் சொன்னான்.” அனைத்தும் தெரியும் என்பதை தெளிவான குரலில் பேசினார்கள்.
“நல்லதுங்க. நீங்க யார்னு சொல்லலையே?”
“நாங்க அரியோட சின்ன தாத்தா பொண்ணுங்க. அவனுக்கு அத்தைங்கமா.”
“சரிங்கம்மா. பார்த்து கூட்டிட்டுப் போங்க” என்று அறைக்குள் சென்றாள்.
மண்டபத்திலிருந்து காரில் ஏற்றும்வரை எந்தவித படபடப்பும் இல்லாமல், சொன்ன பொய்யை மாறாமல் கேட்டவர்களிடம் சொல்லியிருந்தார்கள்.
“டிரைவர் காரை நான் சொன்ன ரெஜிஸ்டர் ஆஃபிஸ் விடு” என்றதும் அந்த கருப்பு நிற பொலேரோ மண்டபம் தாண்டிச் சென்றது.
அதே நேரம் கைபேசியில் பேசியபடி வெளியே வந்த அரிச்சந்திரன் யோசனையுடன் அந்தக் காரைப் பார்த்தான். திருமணத்திற்குத் தொடர்ந்து ஆள்கள் வர யாருக்கோ அழைத்துப் பேசி உள்ளே சென்றுவிட்டான்.
“அப்புறம் மின்னல் பெண்ணே! உங்க ரூட் க்ளியர் போல?” என கிண்டலடித்த விஜயை முறைத்து, அவன் பின்னால் வந்த சுஜயை வரவேற்றாள்.
“சார் வீட்ல கூட்டிட்டு வரலையா?”
“பையனுக்கு உடம்பு சரியில்லமா. அதான் நாங்க மட்டும் வந்தோம்.”
“ஓ... ஹாஸ்பிடல்ல பார்த்தாச்சா சார்?” என்றாள் அக்கறையாக.
“இப்ப கொஞ்சம் ஓகேமா” என்றான் சுஜய்.
“நீங்க உள்ள போங்க சார்” என்றதும் அவர்கள் செல்ல, தன்யா தன் கணவன் நிதின் சக்கரவர்த்தி, குழந்தை தன்சிகாவுடன் வந்தாள்.
“வெல்கம் மேம். வாங்க சார்” என புன்னகையுடன் வரவேற்று, “ஹேய் குட்டிப்பொண்ணு! ஹவ் ஆர் யூ?” எனக் கேட்டாள்.
“பைன் மின்னு பொண்ணு” என குழந்தை பதிலளிக்க,
“மேம் இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்” என்றாள் சிணுங்கலாக.
“அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது. சரியில்ல சொன்னா அவள் கேட்க ரெடியாயில்ல. அவள் பெரியப்பாவை அவங்க பாட்டி மின்னு சொல்வாங்க. நான் உன்னை மின்னல் பெண்ணே சொல்றேனா, அதை இப்படிப் பிடிச்சிக்கிட்டா போல.”
“ஒண்ணும் பண்ண வேண்டாம். வாங்க கல்யாணப் பொண்ணைப் பார்க்கலாம்.”
“எஸ் எஸ் ரொம்ப நாளா பார்க்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணு” என்ற தன்யாவிடம், “தன்யா நீ போய் பார்த்துட்டு வா. நான் ரவிச்சந்திரன் சாரைப் பார்த்துட்டு வர்றேன்” என்று நிதின் சொல்லிக் கொண்டிருக்க,
“வெல்கம் நிதின் சக்கரவர்த்தி அவர்களே!” என்ற திடீர் வரவேற்பில் “ரவி சார் வணக்கம்” என்றான் அவன்.
எப்பொழுதும் அவர்மேல் நிதினுக்கு மரியாதை உண்டு. தன் மாமா லாயர் குமரேசனின் இறப்புக்குப் பின் தன்யா அந்த இடத்தில் இருந்தாலும், அவளால் மட்டும் அதை செய்ய முடியாதென்று, மூத்த வழக்கறிஞரான ரவிச்சந்திரனை தங்கள் சேனலின் லீகல் அட்வைசர் ஆக்கினார்கள். முதலில் மறுத்தாலும் தன் மகனின் வேண்டுகோளில் சம்மதித்திருந்தார் ரவிச்சந்திரன்.
பரஸ்பர விசாரணையுடன் நிதினை விட்டு தன்யா மின்னலுடன் நட்சத்திராவைத் தேடிச்செல்ல, அங்கே பெண்ணைக் காணாமல் மண்டபமே கதிகலங்கியது.