• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
15

காரியம் முடிந்து இரவு வீட்டிற்கு வந்ததும் “ஏன்மா? பொதுவா இந்தமாதிரி இடங்கள்ல பொண்ணு ராசி சரியில்லை. அதான் பையன் போயிட்டான்னு சட்டுன்னு பழி போடுவாங்க. நான் நிறைய கேஸ்ல நேரடியா பார்த்திருக்கேன். இவங்க ஒரு வார்த்தை கூட தவறா பேசலை. இவங்க பேமிலி க்ரேட்லம்மா” என தான் நினைத்தை தாயிடம் கேட்டான். அதாவது அவனது பாணியில் போட்டு வாங்கினான்.

“காரணம் அது கிடையாது அரி. கேட்டா உனக்கே கோவம் வரும்” என்றார்.

“என்னம்மா சொல்றீங்க? வேற எதுவும்...”

“ம்... அந்தப் பையனுக்கு சின்ன வயசுல ஹார்ட் ப்ராப்ளம் இருந்திருக்கு. அப்பவே ஆபரேஷன் செய்து சரி பண்ணிட்டாங்க. இனி நைன்ட்டி பர்சன்டேஜ் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அதே மாதிரி இத்தனை வருஷத்துல எந்த பிரச்சனையும் வந்ததில்லையாம். அந்த தைரியத்துலதான் நாம பொண்ணு வேண்டாம்னு சொன்னதும், யோசிக்காம அந்தப் பையனைப் பேசிட்டாங்க.”

“நிஜமாவாம்மா?” என்றவனுக்குள் ஆத்திரம் ஒருபுறம் என்றால் குற்றவுணர்ச்சி இன்னொருபுறம்.

“நான் ஏன்டா பொய் சொல்லப்போறேன். பாவம் அந்தப் பொண்ணு. நம்ம செலக்ஷன்தான் தப்பாகிருச்சி. இனி அம்மா சொல்றதைக் கேட்கலாம்னு சம்மதிச்சிட்டா. கடைசியில அதுவும் இப்படி...” என்று எழுந்து சென்றுவிட்டார்.

“ஷிட்! நான் வேண்டாம்னு சொன்னா அந்தப் பொண்ணுக்கு என்னைவிட நல்ல பையனா பார்த்திருக்கலாம்ல. அதை விட்டுட்டு...”

நடந்து கொண்டிருந்த சகுந்தலா திரும்பி, “முடிஞ்சதைப் பேசி ஆகப்போறதில்லை. போய்ப் படுடா” என்றபடி சென்றார்.

‘அதெப்படி பேசாம இருக்கிறது?’ அவனுக்குள் கோவம் சுழன்றது. ‘தாலி கட்டி முடித்ததும் அவன் இறந்திருந்தால் அவளின் நிலை? பெற்றவர்களாக இருந்தும் எப்படி இதை செய்யத் துணிந்தார்கள். இதிலும் ஒரே பெண் அவள். அவளுக்கு என்ன குறைன்னு இப்படி ஒரு அவசரத் திருமணம்?’ மனம் தீயாய் கனன்று கோவம் தலைக்கேற நந்தகுமாருக்கு அழைத்துவிட்டான்.

அரிச்சந்திரனின் எண்ணைப் பார்த்து, ‘இப்ப கொஞ்சம் முன்னாடிதான போனாப்ல. அதுக்குள்ள என்ன?’ யோசனையாய் அழைப்பை ஏற்று ஹலோ சொல்லும் முன், “ஏன் சார் இப்படிப் பண்ணுனீங்க? நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை. எப்படி சார் மனசு வந்தது? அதைக் கேட்டதிலிருந்து மனசு ஆறல சார். உங்க மேல எவ்வளவு மதிப்பு வச்சிருந்தேன். நீங்க போய் இப்படி...” தலையும் இல்லாமல் வாழும் இல்லாமல் அவன் சொல்ல,

யசோதா யாரென்று சைகையில் கணவனிடம் கேட்க, மனைவியை கையமர்த்தி ஸ்பீக்கரில் போட்டு, “என் மதிப்புல என்ன பிரச்சனை வந்திச்சி லாயர் சார்?” என்றார்.

‘லாயர்’ என்றதும் “அரிச்சந்திரனா?” என வாயசைப்பில் யசோதா கேட்க, ஆமென்று தலையசைத்து, “சொல்லுங்க லாயர் சார்? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?”

“நட்சத்திரா நீங்க பெத்த பொண்ணுதான?” என்றான் காட்டமாய்.

சற்றே கோவம் வந்தபோதும் அடக்கி, “உங்களுக்கு ஏன் லாயர் சார் இந்த சந்தேகம்? யார் வந்து நாங்க அவளைப் பெத்தவங்க இல்லை சொன்னது?”

“யார், யார் சார் சொல்லணும் உங்களுக்கு? நான் சொல்றேன்” என்றதும் நந்தகுமாருக்கு சிரிப்பு வர, “ஹ்ம்... அப்புறம்” என்றார் ஆர்வமாய்.

கணவனையே பார்த்திருந்த யசோதா முறைக்க, கண்சிமிட்டி ‘பேசுறதை மட்டும் கேள்’ என்றார் சைகையில்.

எதையும் கவனிக்கும் நிலையில் அவனில்லாமல் போக, “எப்படி சார் உங்க பொண்ணுக்கு அப்படி ஒரு பையன் பார்த்தீங்க? நான் வேண்டாம் சொன்னா என்னைவிட சிறந்தவனாதான பார்த்திருக்கணும். அதை விட்டுட்டு...”

“சஞ்சித் உ...” ‘உங்களை விட’ என்பதை முழுங்கி, “ரொம்ப நல்லவன் லாயர் சார்” என்றார்.

“ஊர் உலகத்துல அந்த நல்லவன் மட்டும் கிடையாது. நல்லா தேடினா ஏகப்பட்ட பசங்க கிடைப்பாங்க.”

“எனக்குத் தெரிந்து பக்கத்துல இருக்கிற இந்த நல்லவன் போதும்னு தோணிச்சி லாயர் சார். அதான் பேசி முடிச்சிட்டேன்.”

அவரின் பதிலில் பல்லைக்கடித்து வந்த ஆத்திரத்தை நட்சத்திராவின் அப்பா என்பதால் அடக்கியபடி, “அந்த நல்லவர் செத்தது எதனால் தெரியுமா?” என்றான்.

“ஆக்சிடெண்ட்னுதான் எல்லாருக்கும் தெரியுமே லாயர் சார்.” சொல்லும்போதே ‘வேறெதோ இருக்குதோ’ என்று தோன்றாமலும் இல்லை.

“அக்சிடெண்ட் கிடையாது சார், ஹார்ட் அட்டாக். நல்லா கேளுங்க ஹா...ர்...ட் அட்டாக். இதான் உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த லட்சணமா?” என்றான் மனம் தாங்காது.

இந்தச் செய்தி அவர்களுக்குப் புதிது. நடந்த உண்மையை நட்சத்திரா இன்னும் வீட்டில் சொல்லயிருக்கவில்லை.

“உங்க பொண்ணுக்கு என்ன குறைன்னு, இதய நோய் இருக்குன்னு தெரிஞ்சே அந்த பையனுக்கு பேசுனீங்க? இதுதான் உங்க பெத்த பாசமா?” என்றான் காட்டமாக.

“அதுக்கு வேற ஒரு காரணம் இருக்கு லாயர் சார்” என்றபடி மனைவியை அனைத்தும் உன்னால்தான் என்பதாய் முறைக்க, யசோதாவிற்குமே தன் அவசரம் புரிந்தது. தான் ஒன்று நினைக்க கடவுள் வேறு நினைத்ததை என்னவென்று சொல்வார் அவரும்.

“என்ன காரணம் இருந்தா என்ன சார். தேவதை மாதிரி பொண்ணைப் பெத்து வளர்த்து, இப்படி வாழ்க்கையைச் சீரழிக்கப் பார்த்திருக்கீங்களே? இது எந்த வகையில் சரின்னு நினைச்சீங்க?” மனதில் உள்ள கோவங்கள் அனைத்தும் வெடிக்க, யாரிடம் பேசுகிறோம் என்பதை மறந்து நட்சத்திராவின் வாழ்வை மட்டும் மனதில் கொண்டு பேசினான் அரிச்சந்திரன்.

“லாயர் சார் நீங்க ஓவரா பேசுறீங்க. எங்க பொண்ணுக்கு எது நல்லதுன்னு நாங்க பார்த்துப்போம். இதுல உங்க கருத்து தேவையில்லை” என்றார் அவரும் கோவமாக.

‘நல்லா பேத்தீங்க...’ வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி, ‘பொண்ணு வாழ்க்கை போகப்போனது தெரியலை. பார்த்துப்பாங்களாம் பார்த்து.’ மனதிற்குள் கோவத்தில் வார்த்தைகளைக் கொட்டியவன், தன் கோவத்தை அடக்கி, “சப்போஸ் கல்யாணத்துக்குப் பிறகு இது நடந்திருந்தா, அப்பப் பரவாயில்லையா உங்களுக்கு?” என்றான்.

“உங்களுக்கு ஏன் லாயர் சார் இவ்வளவு அக்கறை? வேண்டாம்னு போயிட்ட உங்களுக்கு என்ன திடீர் பரிவு அவள்மேல?” இன்னும் நிதானமாகவே கேட்டார் நந்தகுமார்.

சில நொடி மௌனம் அவனிடம். பின் குரல் இறங்க “நான் மறுத்ததாலதான அவசர அவசரமா பேசி முடிச்சிருக்கீங்க. என்னாலையோ என்ற குற்றவுணர்வுன்னு வச்சிக்கோங்க. தென் யார் வேணும்னா தவறைத் தட்டிக் கேட்கலாம். இதுக்கு மேல பேசினா உங்களை இன்னும் ஹர்ட் பண்ணிருவேன். இனிமேல் எதிலும் அவசரப்படாதீங்க. பை” என்று போனை வைத்தான்.

“ஷப்பா! மழை பெய்து ஓய்ந்த மாதிரியிருக்கு யசோ. அவர் சொல்றதும் சரிதான. தப்பு நம்மமேல வச்சிக்கிட்டு எப்படி பதில் பேச முடியும். இருந்தாலும் லாயர் சாருக்கு இவ்வளவு கோவம் ஆகாது” என்றார்.

“நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றார் யசோதா.

மெத்திருக்கையில் இருந்தபடியே உடலை முறுக்கி, இரு கைகளையும் தலைக்குப் பின் கொடுத்து நெட்டி முறித்து, “என்னென்னவோ நினைக்கிறேன்! எப்படியெப்படியோ நினைக்கிறேன்!” மந்தகாசப் புன்னகை அவரிடம்.

நந்தகுமாரிடம் பேசிவிட்டுப் படுத்தவன் தூக்கம் வராமல் தவிக்க, நட்சத்திரா அவன் முன் தோன்றி, ‘எல்லாம் உன்னால்தான். நீ போட்டோ பார்த்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? அல்லது என் பெயர்தான் இன்னொருவனுடன் சேர்ந்திருக்குமா? அவனும் இல்லாமல் போயிருப்பானா?’ என்று குற்றம் சாட்டினாள்.

தவறு செய்த பாவம் அரிச்சந்திரனிடம். நிறைய யோசனைக்குப் பிறகு அவளுக்கு, “சாரி” என்று மெசேஜ் அனுப்பினான்.

இரண்டு மூன்று முறை கேட்ட டிடிங் சத்தத்தில் என்னவென்பதாய் வரவேற்பறையில் இருந்த மகளின் கைபேசியை எடுத்துப் பார்த்த நந்தகுமார், அறைக்குள் மகளைப் பார்க்க, அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

‘இந்த டைம் யார் மெசேஜ் அனுப்பறது?’ என்று எடுத்துப் பார்க்க, சந்துரு என்ற பெயரில் தொடர்ந்து வந்திருந்த சாரி மெசேஜ்களை, யோசனையுடன் பார்த்தவர் தூக்கமில்லாமல் தவிக்கும் அரிச்சந்திரனின் நிலை உணர்ந்தாரோ!

“எதுக்கு?” என்று மகளுக்குப் பதிலாக அனுப்பினார்.

“நடந்த, நடக்கிற எல்லாத்துக்கும்” என்று பதில் அனுப்பினான்.

“ஒண்ணும் புரியலை?” என்று கேள்வியனுப்ப,

“புரியாமல் இருக்கிறது பல சமயங்களில் நன்மை பயக்கும்” என்றனுப்பினான்.

“எதையும் யோசிக்காம தூங்குங்க சந்துரு” என்றனுப்பி அவனிடமிருந்து வந்த நன்றியுடன் தான் சாட்டிங் செய்த அனைத்தையும் அழித்தவர் மேலே இருந்த மெசேஜைப் பார்த்தார். பெத்த பெண்ணாக இருந்தாலும் இது தவறென்று தெரியாதவரல்ல. இருப்பினும் தனக்குத் தெரியாத மகளின் மனம் தெரிவதற்காக படித்தார்.

படித்து முடித்தவருக்கு ஏனோ இருவரையும் நினைத்து சிரிப்புதான் வந்தது.

அடுத்த ஒரு வாரத்தில் வேளச்சேரியில் நடந்த பெண்ணின் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் தன்யா குழுவினர். பெண்ணின் முறைப்பையன் மேல் தவறில்லை. அவளின் கணவனின் சந்தேக புத்தியால் அவனும், அவனின் சித்தப்பா பையன்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்து, அவர்களே நல்லவர்கள் போல வழக்கு கொடுத்திருப்பதை நிரூபித்து, அவர்கள் மூவருக்கும் தண்டனை கொடுக்க வாதாடி, அன்றே தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
அன்று மாலை நான்கு மணியளவில் அலுவலகம் வந்த அரிச்சந்திரன், வெளியே சற்று தள்ளி நின்றிருந்த அந்த கருப்பு நிற பொலேரோவைப் பார்த்தான். சஞ்சித்தின் விபத்து நடந்த இடத்தில் பார்த்தது போலிருந்தது. காரையே சில நிமிடங்கள் ஆராய்ச்சியாய் பார்த்திருந்தவன், பக்கத்திலிருந்த கடையில் யாருடைய காரென்று விசாரிக்க, பார்க்கவில்லை என்று கைவிரித்தார் கடைக்காரர். அவனின் உள்ளுணர்வு இந்தக் கார்தான் அது என்றது.

யோசனையுடன் அலுவலகம் நுழைய, “குட் ஈவ்னிங் லாயர் சார்” என்று புன்னகையுடன் வரவேற்றான் சித்தார்த்.

“குட் ஈவ்னிங் சித்தார்த்” என்றவன் ஃபாத்திமாவிடம் திரும்பி, “மேம் எங்க?” என்றான்.

“அவங்க பொண்ணுக்கு இன்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்குன்னு, நிதின் சார் வந்து கூட்டிட்டு போயிட்டாங்க அர்ஸ். வர எப்படியும் ஐந்தாகிரும் நினைக்கிறேன். சித்தார்த் சார் வந்ததுமே மேம்கு போன் பண்ணி சொல்லிட்டேன். உங்களுக்கு கால் பண்ணதான் போன் எடுத்தேன், நீங்களே வந்துட்டீங்க.”

“மத்த ஜுனியர்ஸ் எங்க காணோம்?”

“சிலர் கேஸ் முடிஞ்ச குஷியில பார்ட்டி கேட்டாங்க. அதனால மேம், வேலையில்லாம சும்மா இருந்தா அப்படிதான் கேட்பீங்கன்னு, ஆளுக்கொரு வேலையா கொடுத்து அனுப்பிட்டாங்க. அவங்க முகத்தைப் பார்க்கணுமே அர்ஸ் நொந்தே போயிட்டாங்க தெரியுமா?” என்று சிரித்தாள்.

“ஹா...ஹா பார்ட்டி, அதுவும் மேம்கிட்ட. சரி எனக்கு என்ன வேலை சொன்னாங்க?”

“சித்தார்த் சார் கேஸ் டீடெய்ல்ஸ் உங்க கண்ட்ரோல்ல பார்த்துக்கச் சொன்னாங்க. கேஸ் சம்பந்தப்பட்ட டீடெய்ஸை மெய்ல் பண்ணிருவீங்களாம்.”

“சரி ஃபாத்தி நான் பார்த்துக்கறேன். நீங்க சொல்லுங்க சித்தார்த் நான் கேட்ட டீடெய்ல்ஸ் கொண்டு வந்துருக்கீங்களா? எந்தெந்த சொத்து வித்தாங்க. அவங்க எந்தெந்த தேதியில உங்களுக்கு கொடுத்தாங்க எல்லாமே வேணும்” என்று சித்தார்த்திடம் கேட்டான்.

“இந்த பைல்ல இருக்கு சார். ஒரு சிலது மிஸ்ஸாகியிருக்கும். அதுக்கு பெரியவங்க சாட்சியிருக்காங்க.”

“யா... அதை கலெக்ட் பண்ணிடலாம். உங்க ஒய்ஃபை கண்டுபிடிச்சாச்சா?”

“மேக்சிமம் நெருங்கிட்டேன் சார். இந்த கேஸ் முடியுறதுக்குள்ள அவளையும் சரிகட்டி கூட்டிட்டு போகணும்.”

“ஆல் தி பெஸ்ட் சித்தார்த். அப்புறம் நிறைய கேஸ் வெய்ட்டிங்ல இருக்கு. உங்களோடது ஆரம்பிக்க கொஞ்சம் டைம் எடுக்கும். ஆனா, எடுத்த ஒன் மன்த்ல ரிசல்ட் வர வச்சிடலாம். எப்படியும் ஒரு டூ ஆர் த்ரீ மன்த் ஆகும். உங்களுக்கு ஓகேவா? அதுக்கு முன்னாடி சுஜய் சார் கேஸ் பைல் பண்ணிட்டா முதல் கட்ட விசாரணைக்கு பிறகு வாய்தா வாங்கிக்கலாம்.”

சற்று நேரம் யோசித்தவன், “ரெண்டு மாசமா, சரி காத்திருக்கேன்” என்றான்.

“எதாவது பிரச்சனையா சித்தார்த்?”

“இல்ல கேஸ் முடிஞ்சதும்தான் ஊருக்கு வருவேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டு வந்தேன். சபதம்னு வச்சிக்கோங்களேன். அதுவரை இங்கே எப்படின்னுதான் யோசனை. ஓகே சாத்தூர் போனால்தான பிரச்சனை. என்னோட தொழில் மதுரையிலதான அங்கயே பார்த்துக்கறேன். நான் வர்றேன்” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

சித்தார்த் கொடுத்த கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தவன் “அடப்பாவிகளா!” என வாயில் கைவைத்தான்.

“என்ன அர்ஸ்? அமௌண்ட் அதிகமோ? ஃபாத்திமா” கேலியாகக் கேட்க,

“அதிகமாவா! இவன் அத்தையோட அப்பா பல சொத்துக்கு அதிபதி போல. அவர் போன பிறகு இவ்வளவு சொத்து ஏன் வித்தாங்க தெரியல. பிள்ளைங்க படிப்புக்கு எப்படியும் பேங்க்ல பணம் போட்டிருப்பார். சப்போஸ் இல்லைன்னாலும் ஒன்றிரெண்டு சொத்து வித்தா போதும். தொடர்ந்து எல்லாத்தையும்னா, சம்திங் எதோ இருக்கு. எனி கெஸ்ஸிங் ஃபாத்தி?”

“ஐ திங்க், சித்தார்த்தோட அப்பா ஏதோ ப்ளே பண்ணி சொத்தை விற்கிற சூழ்நிலைக்கு அவங்களைத் தள்ளியிருக்கணும். அப்பதான இவருக்கு பாதி கிடைக்கும். விற்காத இடத்தை எந்த உரிமையில் சொந்தம் கொண்டாடுறது. சோ, சொத்துல பாதி கிடைக்கும்னு காத்திருக்க அவருக்கு பொறுமை இருந்திருக்காது. அப்படியில்லன்னா தீராத நோயால பாதிக்கப்பட்டவரைக் காப்பாத்த வழியில்லாம அப்பப்ப சொத்தை வித்திருக்கலாம்.”

“எக்ஸாக்ட்லி ஃபாத்தி. அதே யோசனைதான் எனக்கும். இப்ப அவங்க சொத்தைக் கொடுக்கணும்னா இவங்கள்ல முக்கால்வாசி கொடுத்தாகணும். அவங்க சொத்து வர்றதுக்கு முன்ன, இவங்க சாதாரண மிடில் க்ளாஸ் பேமிலிதான். எல்லாத்தையும் இழக்கணும்னா மனசு வராது. சித்தார்த் அப்பாவோட நேரமோ என்னவோ, அவர் சிஸ்டரோட ஹஸ்பண்டும் சின்ன வயசுலயே இறந்திருக்கார். சோ, இவர் அவங்களைத் தன் கண்ட்ரோல்ல வச்சிட்டிருந்திருக்கார். பிள்ளைங்க வளர்ந்து வந்து கேள்வி கேட்குறாங்க. மற்றதை மேம்கிட்ட கேட்டு முடிவு பண்ணலாம்” என்றவன் சித்தார்த்தைப் பற்றிய வாதத்தில் கருப்பு நிற பொலேரோவை மறந்திருந்தான்.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வேலை முடிந்து தங்கையுடன் வீட்டிற்கு வருகையில், வரவேற்பறையில் இருந்தவரைப் பார்த்த மின்னல், “ஹை அப்பா” என்று ஓடிச்சென்று தகப்பனின் தோளில் சாய்ந்தாள்.

“என்னடா திரும்பவும் தன்யாகிட்ட போற போலிருக்கு.”

“இல்லப்பா. சுஜய் சார் கொஞ்ச நாள் அங்கயே இருக்கச் சொல்லிட்டார். எனக்கு உங்களோட இருக்கணும்னு தோணுது. நானும் டெல்லி வர்றேன்பா. உங்ககிட்டயே ஜுனியரா சேர்ந்துக்கறேன்.”

“உனக்காகத்தான்டா அப்பா காத்திருக்கேன். ஆனா, இப்போதைக்கு டெல்லி வேண்டாம்மா.”

“ஏன்பா?”

“அங்க டெரரிஸ்ட் பிரச்சனை இருக்கு. நாம இருக்கிற ஒயிட் ஹவுஸ் ஏரியாதான். பயமெல்லாம் கிடையாது.”

“இருந்தாலும் பயம் இல்லப்பா” என்றாள் மகள்.

சற்றே அசடு வழிய ஆமென்று தலையசைத்தார்.

அப்பாவும், தங்கையும் கொஞ்சுவதைச் சற்றுப் பொறாமையுடன் பார்த்திருந்தான் அரிச்சந்திரன். ‘ஏன் என்னை அவருக்கு ஜுனியரா கூப்பிடமாட்டாரா? பொண்ணுதான் கண்ணுக்கு தெரியுமா?’

அன்று சண்டைக்குப் பிறகு உண்மை தெரிந்தாலும், தகப்பன் மகனுக்குள் ஏதோ ஒரு விளங்க முடியா தடை. நிஜமாகவே அவன் வேற்று மதப் பெண்ணை காதலித்திருந்தால் என அவருக்கும், ஏன் காதலித்தால் பிள்ளையை தூக்கி எரிந்து விடுவாரா என்று மகனுக்கும் வீம்பு.

“அரி வந்தாச்சா? போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா சாப்பிடலாம். நீ ஏன்டி உட்கார்ந்துட்ட? போ போய் ட்ரஸ் மாத்திட்டு, கையைக் காலைக் கழவிட்டு வா” என்றார் சகுந்தலா.

“ம்மா... அண்ணனுக்கு மட்டும் ட்ரஸ் சேஞ்சோட விட்டீங்க. எனக்கு மட்டும் எக்ஸ்ட்ரா கை காலா?” என்று கோவப்பட.

“அவன் சொல்லாமலே செய்துட்டு வந்துருவான். உனக்குதான் செய் செய்யுன்னு ஐம்பது தடவை சொல்லணுமே. சோம்பேறி” என்று முணுமுணுத்தார்.

“எ...என்னைப் பார்த்து... அப்பா பாருங்கப்பா அம்மா என்னை சோம்பேறி சொல்றாங்க. ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கிற உங்ககிட்ட பேசினது தப்பா” என கண்ணைக் கசக்கி சிணுங்க ஆரம்பிக்க,

“அவள் அப்படித்தான்டா. பழைய பஞ்சாங்கம் மாதிரி, சேவல் எழும்புற நேரத்துக்கு எழுந்து மத்தவங்களையும் டார்ச்சர் பண்ணுவா. இதுக்குதான் அப்பா டெல்லியிலேயே செட்டிலாகிட்டேன்” என்று மகளை சமாதானப்படுத்தியபடி மனைவியை வம்பிழுத்தார்.

“ஆமாடி. உங்க அப்பா ஃப்ரீ பேர்டா கண்டிக்க ஆளில்லாம திரியுறாங்கள்ல. நீயும் அவங்களோட போய் குட்டிச்சுவராவே இரு. விடியற்காலையில எழுந்துக்கறது உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? நல்லது சொன்னா யார் கேட்கிறாங்க.”

தாயின் கோவத்தில் பிள்ளைகள் இருவரும் மெல்ல நகர, மனைவியின் புலம்பலில் புன்னகைத்த ரவிச்சந்திரன், மனைவியைத் தன் தோளோடு சேர்த்தணைத்து, “உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் சகு. பொண்டாட்டி புள்ளைங்க கூட இல்லாம தனியா இருக்கிறது எவ்வளவு கொடுமை தெரியுமா?” என்றார் வருத்தமாக.

“அதான் அடிக்கடி பார்ட்டி அது இதுன்னு என்ஜாய் பண்ணுவீங்களே. இதுக்கு இடையில எங்க ஞாபகம் வருதா என்ன?”

“ஏய் நான் ட்ரிங்க் பண்றது பிள்ளைங்களுக்குத் தெரியாது. நீயே கோர்த்து விடாதடி.”

“ஆமா பிள்ளைங்க முக்கியம். பொண்டாட்டினா இளக்காரம்தான். என்ன செய்தாலும் கூடவே இருக்கேன்ல” என்றார் அழுகைக் குரலில்.

“சகு என்னாச்சி உனக்கு?”

“எனக்கு உங்க கூடவே இருக்கணும். நீங்க ஒரு இடம். நாங்க ஒரு இடம்னு என்ன லைஃப் இது.”

“இருக்கலாம்டா. அதுக்கு எதாவது பண்றேன்.”

“இப்படிலாம் தெரிஞ்சிருந்தா எங்க வீட்ல உங்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்க மாட்டாங்க.”

“அடப்பார்றா! காலம்போன காலத்துல காமெடி பண்ணிட்டிருக்கா. தெரிஞ்சாலும் எனக்கு கட்டிக் கொடுத்திருப்பாங்க. ஏன்னா ஐயாவோட பவர் அப்படி” என்று காலர் தூக்க,

“ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க. சிக்கிரம் எங்களை அங்க கூப்பிடுற வழியைப் பாருங்க. இல்ல நீங்க இங்க வரப்பாருங்க. வயசுப் பிள்ளைங்களை ஒரு லிமிட்கு மேல கண்டிக்க முடியலை.”

“ம்... உன் பையன் என்ன சொல்றான்?”

“நம்ம பையன்” என அழுத்திச் சொல்லி “என்ன சொல்லணும்?” என்றார்.

“அந்தப் பொண்ணைப் பற்றி.”

“இதுவரை வாய் திறக்கல. ஐ திங்க் கில்டியா ஃபீல் பண்றான் நினைக்கிறேன்.”

“நல்லா சொதப்பி வச்சிருக்கான்டி அவன். எந்த வீட்ல நடக்கும் அவனுக்குப் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்றது. தன்னோட அவசர புத்தியால நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டான். இப்ப கில்டி ஃபீல் வச்சி என்ன செய்யப்போறானாம்?” என்றவருக்கு மகனின் அறியாமையில் அவ்வளவு கோவம்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top