- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
மழை
மழை இல்லையேல்
இயற்கை இல்லை !
மழை இல்லையேல்
உயிரினங்கள் இல்லை!
மழை இல்லையேல்
மனிதர்கள் இல்லை !
இப்படி அனைத்தும்
மழையை நம்பி இருக்கையில்?
செழிப்பாக பெய்யும் மழையை
மனிதர்கள் தூற்றுவதும் ஏனோ ?
வா மழையே வா
என்றழைத்த காலம் போய்
போ மழையே போ
என்று விரட்டுவதும் ஏனோ?
மனம் கனக்கிறது
மனிதர்கள் அரிதாய் பெய்யும்
மழையை போ என்று சொல்லுகையில் !
அழகாய் பொழியும் மழையை
ரசிக்க கிடைத்த அரிய வாய்ப்பை
தவற விடுவதும் ஏனோ?
- நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்