• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
குறை ஒன்றும் இல்லை..

பகுதி 9

இரவு பத்து மணி அளவில் ரோஜா தன் மடியில் படுத்து இருக்கும் திக்ஷி பாப்பாவின் அழகை ரசித்தப்படி அமர்ந்து இருந்தாள்.
"இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ இந்த குழந்தையை பார்த்துகிட்டு இருப்ப. உனக்கு தூக்கம் வரலையா?" என்று தன் கண்களை கசக்கி கொண்டே கேட்டாள் கனகா.
"அதெல்லாம் வரல. இந்தக் குழந்தை எவ்வளவு சமத்து பாத்திங்களா. அடம் பிடிக்காம இந்த வயசுலேயே பெரியவங்கக்கிட்ட எல்லாம் மரியாதையா பேசி பழகுறாள்" என்று திக்ஷியின் செயல்களை நினைத்து ரோஜா மகிழ்ந்து கொண்டு இருந்தாள்.
"ரோஜா திக்ஷியின் அம்மா வளர்ப்பு அப்படி. குழந்தையை அவ நல்லா பாத்துக்கிட்டாள். அன்று துர்வாவின் அண்ணனும், அண்ணியும் கோவிலுக்கு கிளம்பும் போது அவங்க தான் துர்வாவின் மனைவியையும் அவங்க கூட அழைச்சிட்டு போயிருக்காங்க. ஆனா ஏதோ நல்ல நேரம் குழந்தை துர்வா தாத்தாகிட்ட இருந்துகிட்டாள். பாவம் அவங்க. போன வண்டி தான் ஆக்சிடென்ட் ஆகி இப்போ மூன்று உசுரு அநியாயமா போயிடுது" என்று கனகா கவலையாக சொன்னாள்.
"மரணம் நம்ம பக்கத்துல தான் கனகா இருக்கு. முதல்ல நம்ம அதை தொடுவோமா. இல்ல மரணம் நம்மை தொடுமா என்பது தான் வாழ்க்கையின் ரகசியம்" என்று ரோஜா விரக்தியாக சொல்லிக்கொண்டு இருந்தாள்.
துர்வா வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டு கனகா கதவை திறந்தவள், "ஏன்டா மணி என்னாகுது? இவ்வளவு நேரமா நீ அப்பாய்ன்ட்மென்ட் முடிக்க" என்று கனகா துர்வாவை கடிந்து கொண்டாள்.
“கனகா போன இடத்துல லேட் ஆகிடுதுங்க. என்னால உங்க தூக்கம் வேற கெட்டு போச்சு போல. சரி சரி நான் குழந்தையை தூக்கிகிட்டு கண் இமைக்கும் நேரத்துல பறந்து போயிடுறேன். நீங்க கதவைப் பூட்டிட்டுத் தூங்குங்க." என்று சொல்லிக்கொண்டே துர்வா குழந்தை அருகில் வந்தான்.
"பாப்பா நல்லா தூங்கிகிட்டு இருக்காள் துர்கா. அவ இன்னைக்கு இங்கேயே தூங்கட்டுமே. நான் காலையில உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து விடுறேனே" என்று ரோஜா பாவமாக கேட்டாள்.
"ஐயோ! குழந்தை இல்லாம என்னால நைட்டு தனியா தூங்க முடியாது ரோஸ். சாரி நான் திக்ஷியை தூக்கிகிட்டு கிளம்புறேன்" என்று துர்வா குழந்தையை தூக்க போனவன் ரோஜாவின் முகம் வாடுவதைப் பார்த்தான்.
"சரி. இப்போ என்ன திக்ஷி உன் கூட இன்னைக்கு இங்க தூங்கணும் அவ்வளவு தானே?" என்று துர்வா கேட்டதும், மலர்ந்த முகத்துடன் "ம்...” என்று தலையை ஆட்டினாள் ரோஜா.
"என் குழந்தை இன்னைக்கு உன்கூட இங்க தூங்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு" என்று தன் குரலை உயர்த்தி சொன்னான் துர்வா.
"என்னடா உன்னையும் இலவச இணைப்பா இங்க தூங்க சொல்லனுமா" என்று கேட்டுக்கொண்டே துர்வா அருகில் வந்தாள் கனகா.
"ஐயோ அதெல்லாம் இல்ல. திக்ஷி இன்னைக்கு நைட்டு இங்க இருந்தா, நீங்க ஊருக்கு போற ஒரு வாரம் ரோஸ் நம்ம வீட்டுல வந்து தங்கணும். இந்த டீல்க்கு ஓகேனா, நான் திக்ஷியை இங்கேயே விட்டுட்டு போறேன்" என்று தன் புருவத்தை உயர்த்தியப்படி சொன்னான் துர்வா.
"கேடிடா நீ. பட் இந்த டீல் நல்லா தான் இருக்கு. என்ன ரோஜா உனக்கு டீலா, நோ டீலா?" என்று கனகா கிண்டலாக கேக்க,
ரோஜா குழந்தையை தூக்கி தன் மார்போடு அணைத்து கொண்டு, "நான் நாளைக்கு ஒரு வாரத்துக்கு தேவையான திங்க்ஸ் கூட பாப்பாவை அழைச்சிட்டு உங்க வீட்டுக்கு வரேன். நீங்க இப்போ சாப்பிட்டுட்டு கிளம்புங்க" என்றாள் சிரித்த முகத்துடன் ரோஜா.
"நீ வரேன் சொன்னதே எனக்கு ஹாப்பி தான். தாத்தா எங்களுக்காக சாப்பிடாம வெயிட் பண்ணுவாரு. குழந்தையை பாத்துக்கோ. நாளைக்கு காலையில பத்து மணிக்கு நானே வந்து உங்கள அழைச்சிட்டு போறேன்" என்றான் துர்வா.
"எப்படியோ ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வந்துட்டீங்க இல்ல... அப்பா எனக்கு இப்போ தான் நிம்மதி. இல்லைனா இவள இங்க தனியா விட்டுட்டு நான் ஊருல வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்து இருப்பேன்" என்று சொல்லிக்கொண்டே கனகா கையில் சாவியை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கிச் சென்றாள்.
"ரோஸ் ரொம்ப தேங்க்ஸ்” என்று சொன்ன துர்வா குழந்தை தலையை தடவிக் கொடுத்தான்.
"எதுக்காம் இந்த தேங்க்ஸ்?” என்று கேட்ட ரோஜா, துர்வாவின் பதிலுக்காக காத்திருந்தாள்.
"பச்ச மிளகாய் விஷயம் தெரிந்தும் நீ நம்ம வீட்டுக்கு வர சம்மதிச்ச பாரு. அதுக்கு தான் இந்த தேங்க்ஸ்” என்றான் துர்வா.
"ஆனா துர்கா..." என்று தன் வார்த்தையை நீட்டினாள் ரோஜா.
"வெயிட் வெயிட். கண்டிப்பா இனி பச்ச மிளகாய் சம்மந்தமா நான் உன்கிட்ட எதையும் பேச மாட்டேன். நீ தைரியமா என்னை நம்பி நம்ம வீட்டுக்கு வரலாம்" என்று துர்வா சொன்னதும் வாய்விட்டுச் சிரித்தாள் ரோஜா.
"நீ சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்க ரோஸ். குட் நைட். பாப்பாவை பாத்துக்கோ. காலையில மீட் பண்ணலாம்" என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி சென்றவனின் முகம் மறையும் வரை கண் சிமிட்டாமல் குழந்தையைத் தன் மார்போடு அணைத்தபடி பார்த்துக் கொண்டு இருந்தாள் ரோஜா.
துர்வா வீட்டுக்குக் கிளம்பியதும், கனகா வாசல் கதவைத் தாழிட்டு விளக்குகளை அணைத்தைப்படி ரோஜாவிடம் வந்தாள்.
"நீ வேணும்னா இன்னைக்கு நைட்டு என் ரூம்ல, என் கூட குழந்தையை வச்சிக்கிட்டு தூங்கலாமே" என்று கனகா கேட்க
"ஐயோ வேணாம் வேணாம். உங்களுக்கும், மோகன் அண்ணாவுக்கும் நடுவில் நானும், என் மகளும் இடைஞ்சலா வரமாட்டோம்." என்று சிரித்துக் கொண்டே சொன்ன ரோஜா, திக்ஷியை தூக்கி கொண்டு மாடியில் இருக்கும் தன் அறைக்குள் நுழைந்தாள்.
"என்ன இவ குழந்தையா? அடேய் மோகனா, இங்க என்னடா நடக்குது? ஒண்ணுமே புரியல உலகத்துல" என்று பாடிக்கொண்டே தன் அறைக்குள் புகுந்து மோகனின் நினைவுகளைப் போர்வையாக பாவித்து, தலையணையைக் கட்டிக்கொண்டு கண்களை மூடினாள் கனகா.
ரோஜா குழந்தையை மாடியில் உள்ள தன் அறைக்கு தூக்கி சென்றவள், குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துத் துணைக்கு தலையணையை வைத்து தடுப்பு கொடுத்த பின் நைட்டியை மாற்றிக்கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வர, மேசை மேல் இருந்த புத்தகத்தை புரட்டி பார்த்தப்படி குழந்தை திக்ஷி நின்று இருந்தாள்.

"ஐ குட்டி பாப்பா. நீங்க தூங்காம அங்க என்ன பண்றீங்க?" என்று கேட்டுக்கொண்டே குழந்தையை அள்ளி அணைத்தாள் ரோஜா.
"நான் பாக்கும் போது அப்பா காணோம். அதான் எந்திரிச்சேன்" என்று குழந்தை மழலை குரலில் பேசியதும், திக்ஷியை கட்டிலின் மீது கிடத்திய ரோஜா, தானும் பிள்ளையின் அருகில் படுத்துக் கொண்டு குழந்தையின் வலது கரங்களைப் பிடித்து பிஞ்சு விரலில் உள்ள ஓவிய ரேகையை ரசித்தாள்.
"திக்ஷி குட்டிக்கு அம்மா பிடிக்குமா? இல்ல அப்பா பிடிக்குமா?" என்று பலரும் கேட்கும் கேள்வியை குழந்தையிடம் ரோஜாவும் கேட்டாள்.
குழந்தை தன் இடது கையில் உள்ள ஐந்து விரல்களையும் மூடி மூடி திறந்தப்படி, "எனக்கு அப்பாவும் பிடிக்கும். உங்களையும் பிடிக்கும்" என்று விளையாடிக் கொண்டே சொன்னதும், ரோஜா கண்களில் கண்ணீருடன் குழந்தையை தன் வசம் இறுக்கமாக கட்டிக்கொண்டு, பிள்ளையின் முகம் முழுவதும் முத்த மழை பொழியத் தொடங்கினாள்.
ரோஜாவும் குழந்தையும் நீண்ட நேர பேச்சு வார்த்தைகள் நடத்திய கலைப்பில், இருவருமே ஒரு சேர உறங்க ஆரம்பித்தவர்களின் தூக்கத்தைக் கெடுத்தது ரோஜாவின் கைபேசியில் உள்ள அலாரம்.
அலாரம் சத்தத்தைக் கேட்டுட்டு சிணுங்கிய குழந்தையைத் தட்டி கொடுத்து மேலும் உறங்க வைத்த ரோஜா, குழந்தை தூங்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சட்டென்று காக்கா குளியலை முடித்தவள், ஒரு சுடிதாரை அணிந்தப்படி தன் கூந்தலைப் பின்னிக் கொண்டு இருந்தாள்.
அச்சமயம் குழந்தை தூக்கதில் இருந்து எழுந்து கண்களை கசக்கிக்கொண்டு, "அம்மா சுச்சு வருது" என்று சொன்னதும் பின்னிய கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டு வேகமாக ஓடி வந்த ரோஜா, குழந்தையைக் குளியல் அறைக்குத் தூக்கிக் சென்றவள், பிள்ளைக்கு காலை கடன்களை முடிக்க வைத்து, முகம் அலம்பிய பின் திக்ஷியை தூக்கிக்கொண்டு தன் கைபேசியுடன் கீழே இறங்கினாள்.
"என்ன அம்மாவும் பொண்ணும் நல்ல தூக்கம் போல?" என்று கேட்டுக்கொண்டே கனகா மேசை அருகில் அமர்ந்து காபியை ருசித்தவள், "இன்னும் ஒரு காபி அன்ட் ஒரு ஹார்லிக்ஸ் பாஸ்" என்று சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்த கனகாவின் கட்டளைக்கு அடிபணிந்து, மூன்று கோப்பைகளுடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான் துர்வா.
"குட் மார்னிங்" என்று சொல்லிக்கொண்டே சிரித்த முகத்துடன் வெளியே வந்த துர்வா மேசை மேல் தட்டை வைக்க, "அப்பா" என்று அழைத்தப்படி ரோஜாவின் தோளில் இருந்து திக்ஷி, துர்வாவின் தோளுக்குத் தாவினாள்.
"பத்து மணிக்கு வரேன் சொல்லிட்டு இவ்ளோ சீக்கிரமா வந்துட்டீங்க?" என்று துர்வாவை கேள்வி கேட்டுக்கொண்டே ஹார்லிக்ஸ் நிறைந்து இருந்த கப்பை எடுத்து திக்ஷியிடம் நீட்டினாள் ரோஜா.
"பாப்பாவைப் பிரிந்து நேத்து நைட்டு எனக்கும் தாத்தாவுக்கும் தூக்கமே வரல. அதான் விடியும் காட்டிலும் இங்க வந்துட்டேன்" என்று சொன்ன துர்வாவின் இதழ்கள் திக்ஷியின் கன்னத்தில் பதிந்தது.
"சரி நான் காலையில டிபன் ரெடி பண்றேன். நீ போய் உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ ரோஜா" என்று சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்த கனகாவை தடுத்தான் துர்வா.
"வேணாங்க கனகா. வீட்ல டிபன் ரெடியா இருக்கு. நாங்க தாத்தா கூட போய் சேர்ந்து சாப்பிடுறோம். ரோஸ் நீ சீக்கிரமா உனக்கு தேவையான திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கிட்டு வா. குழந்தையை நான் பாத்துக்குறேன்"
என்று துர்வா சொன்னதும், துர்வா தயார் செய்த காபியை பதற்றப்படாமல் குடித்தவள், காபி கப்புடன் சமையல் அறைக்குள் நுழைய, பின் தொடர்ந்து சென்றாள் கனகா.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top