Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
பகுதி 7
நாட்கள் வேகமாக உருண்டோடியது. துர்வாவின் தாத்தா சொன்னதைப் போல அவர் நூலகத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்தை வெற்றிகரமாக கடந்து இருந்தாள் ரோஜா.
இந்த ஒரு வார காலத்தில் கனகாவும் ரோஜாவும் உடன் பிறவா சகோதரிகளாக மாறி இருந்தனர்.
தினமும் துர்வாவின் தாத்தா கைபேசி வாயிலாக ரோஜாவை அழைத்து, குழந்தை திக்ஷிதாவிடம் பேச வைப்பதை முதல் கடமையாக உணர்ந்தார்.
சாமியிடம் போய் இருக்கும் தன் அம்மாவின் வருகையை ரோஜா உருவத்தில் காண வார இறுதிவரை காத்து இருந்த திக்ஷிதாவின் எதிர்பார்ப்புக்குக்கு, ஆனந்தம் தரும் வகையில் சனிக்கிழமை அன்று காலை ஏழு மணி அளவில் ரோஜா துர்வாவின் வீட்டுக்கு வருகை தந்து இருந்தாள்.
ரோஜாவை பார்த்த துர்வாவின் தாத்தாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி பெறுகியது. "வாமா வாமா ரோஜா. உள்ள வா" என்று சிரித்த முகத்துடன் தாத்தா ரோஜாவை வரவேற்க, புன்னகை மலர்ந்த முகத்துடன் வாசலில் தன் காலணியை கழட்டி விட்டப்படி உள்ளே நுழைந்தாள் ரோஜா.
"என்னமா நீ. சொல்லி இருந்தா நான் கார் அனுப்பி இருப்பேனே. ஆமா எதுல வந்த நீ?" என்று தாத்தா கேக்க,
"பஸ்ல தான் தாத்தா" என்று சொன்ன ரோஜாவின் கண்கள் குழந்தை திக்ஷிதாவை காண ஏங்கி இருந்தது..
"பாப்பா இன்னும் தூங்கிகிட்டு தான்மா இருக்காள். நீ வேணா போய் ரூம்ல அவளைப பாரு" என்று தாத்தா சொல்ல,
"நான் எப்படி தாத்தா? இல்ல வேணாம். குழந்தை எழும் வரை நான் இங்கேயே இருக்கேன்" என்று ரோஜா சொன்னாள்.
"அட ஏன்மா. ரூம்ல துர்வா இருப்பான்னு நினைக்கிரியா? அவன் ஜாக்கிங்க போய் இருக்கான். குழந்தை தனியா தான் தூங்குறாள்" என்று தாத்தா சொல்லி முடிக்கும் காட்டிலும் ரோஜாவின் கால்கள் குழந்தை திக்ஷிதாவை நோக்கி ஓடியது.
"குழந்தை மேல் இவளுக்கு இருக்குற அன்பும். இவ மேல குழந்தைக்கு இருக்குற நம்பிக்கையும் தான், இந்த வீட்டுல ரோஜா நிரந்தரமா இருக்க வழிவகுக்கப் போகிறது" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தாத்தா தோட்டத்தில் சென்று அமர்ந்தார்.
துர்வாவின் அறைக்குள் நுழைந்த ரோஜா குழந்தை திக்ஷி ஆனந்தமாக உறங்கும் அழகை ரசித்து பார்த்து கொண்டு இருந்தவள் கண்களுக்கு துர்வாவின் கல்யாண புகைப்படம் சுவற்றில் ஒரு ஆணியின் பிடிமானத்தில் தொங்கி கொண்டு இருப்பதை கவனித்து அந்த புகைப்படத்தின் அருகில் சென்று, தன் வலது கரங்களால் துர்வா மனைவியின் முகத்தை தொட்டு பார்த்தாள்.
‘அன்பான கணவன். அழகான பிள்ளை. ப்ச்... என்ன இருந்து என்ன பிரேஜோனம். உங்க கூட வாழ இவங்களுக்கு கொடுத்து வைக்கல போல’ என்று தனக்குள் வருந்தியவள் மீண்டும் திக்ஷியின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள, கண்களை மெல்ல திறந்து கனவில் தன் தாய் முகத்தை பார்த்து சிரிப்பது போல நிஜத்தில் ரோஜாவின் முகத்தை பார்த்து புன்னகையித்த திக்ஷி, சட்டென்று எழுந்து ரோஜாவின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டதும், ரோஜா குழந்தையின் கூந்தலை வருடி விட்டாள்.
பிள்ளையை அனுவனுவாக ரசித்தவள் குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்த நேரம், ஜாக்கிங்க போன துர்வா அறைக்குள் நுழைந்தவன் ரோஜாவை பார்த்தும், முன் பின் தெரியாத நபரை பார்த்தது போல, அவளைக் கண்டு கொள்ளாமல் தன் துண்டை எடுத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
’என்ன இது? ஏன் துர்கா நம்மை பார்த்து பார்க்காத மாதிரி போறாரு? ஒருவேள நம்ம அவரோட பிள்ளையை வந்து பாக்குறது அவருக்கு பிடிக்கலையா?’ என்று தனக்குள் குழம்பியவள் துர்வாவின் அறையில் இருந்து வெளியே சென்ற கனம், "அம்மா... அம்மா எங்க போறீங்க?" என்று மழலை குரலில் தன்னை அழைத்தப்படி ஓடி வந்த திக்ஷியை தன் மார்போடு அள்ளி எடுத்து கொஞ்சினாள் ரோஜா.
"என்னமா ரோஜா குழந்தை எழுந்துட்டாளா?" என்று கேட்டு கொண்டே இவர்களை நோக்கி வந்தார் துர்வாவின் தாத்தா.
"தாத்தா நான் குழந்தையை குளிப்பாட்டி அழைச்சிட்டு வரேன். பாப்பாவுக்கு வேற டிரெஸ் எங்க இருக்கு?" என்று ரோஜா கேட்டாள்.
"துர்வா துர்வா இங்க பாரு திக்ஷி எழுந்துட்டா. இங்க வா" என்று தாத்தா அழைத்ததும், தாத்தாவின் அறையில் இருந்த துர்வா கையில் செய்தி தாளுடன் இவர்களை நோக்கி வந்தான்.
“குட் மார்னிங் பாப்பு. எழுந்துட்டியா? வா வா அப்பா உன்னை குளிக்க வைக்கிறேன்" என்று சொன்ன துர்வா குழந்தையை நோக்கி கைகளை நீட்ட, "நான் அம்மாகிட்ட குளிச்சிப்பேன்" என்று மீண்டும் திக்ஷி ரோஜாவின் தோளில் தஞ்சம் புகுந்தாள்.
"பாப்பு அடம் பிடுக்கக்கூடாது. சீக்கிரம் வா குளிச்சிட்டு நம்ம ஈவினிங் கடைக்கு கிளம்பலாம்" என்று துர்வா மீண்டும் குழந்தையை நோக்கி கரங்களை நீட்டினான்.
"நான் அம்மாகூட தான் குளிப்பேன்" என்று குழந்தை அடம் பிடிக்க, துர்வாவின் முகம் கோவமாக மாறியது.
"டேய் துர்வா! என்னாச்சு உனக்கு? அதான் ரோஜா வந்து இருக்காளே விடேன்டா. அவளே பாப்பாவை குளிக்க வைக்கட்டும்" என்று தாத்தா சொன்னதும், ரோஜா குழந்தையை கட்டி அணைத்துக்கொண்டு
நின்று இருந்தாள்.
"பாப்பா நீ இன்னைக்கு உன் அப்பாக்கிட்ட சமத்தா குளிச்சிட்டு வருவியாம். அம்மா உன்னை நாளைக்கு குளிக்க வைப்பேனாம். ஓகேவா?" என்று சொன்ன ரோஜா, சிணுங்கும் குழந்தையை துர்வாவின் கைகளில் கொடுக்க, துர்வா ரோஜாவின் முகத்தை நேர்கொண்டு பாராமல் திக்ஷியை தன் வசம் வாங்கி கொண்டவன் குளியலறையை நோக்கி நாகர்ந்தான்.
"துர்வா பிள்ளையயை குளிக்க வச்சி அழைச்சிட்டு வருவான். நீ வா மா நம்ம ஹால்ல இருப்போம்" என்று தாத்தா அழைக்க, துர்வாவின் இந்த செயல் ரோஜாவின் மனதில் ஏதோ ஒரு வலியை உண்டாக்கியது.
துர்வா சில நிமிடங்களில் குழந்தை திக்ஷியுடன் வெளியே வந்தான். ரோஜாவை பார்த்த குழந்தை ஓடி வந்து அவள் மடியில் அமர்ந்து கொண்டாள்.
"பாட்டிமா திக்ஷிக்கு டிபன் கொண்டு வாங்க" என்று சொன்ன துர்வா ரோஜா அமர்ந்து இருக்கும் இருக்கையின் எதிரில் அமர்ந்தவன் மீண்டும் மேசை மேல் இருந்த செய்தி தாளை கையில் எடுத்து வாசிக்க தொடங்கினான்.
"என்ன துர்வா? ரோஜா நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்து நீ இவகிட்ட ஒரு வார்த்தை கூட பேசல? ஏன் என்ன ஆச்சு உனக்கு?" என்று தாத்தா கேக்க, துர்வாவின் விளக்கத்துக்காக காத்து இருந்தாள் ரோஜா.
தன் கையில் இருந்த நாளிதழை மீண்டும் மேசை மேல் வைத்த துர்வா, "என்ன பேச சொல்றிங்க தாத்தா? இவங்க எனக்கு யாரு? நான் இவங்ககிட்ட பேச என்ன இருக்கு?" என்று துர்வா கேட்டதும், ரோஜாவின் கண்கள் தானாக கண்ணீர் சிந்தியது.
"என்னமா ரோஜா. உங்க ரெண்டு பேருக்குள்ள எதாவது பிரெச்சனையா? ஏன் இவன் இப்படி பேசுறான்?" என்று தாத்தா ரோஜாவிடம் கேள்வி எழுப்பினார்.
"ஹ்ம்... எங்களுக்குள்ள எந்த பிரெச்சனையும் இல்ல தாத்தா" என்று சொன்ன ரோஜாவின் கண்களில் இருந்து துள்ளிக் குதித்த கண்ணீர்த் துளிகள் திக்ஷிதாவின் கைகளில் பட்டது.
"அம்மா ஏன் அழறீங்க? அழாதீங்க அம்மா" என்று தன் பிஞ்சு விரல்களால் ரோஜாவின் கண்ணீரை துடைத்தாள் திக்ஷி பாப்பா.
துர்வா நேருக்கு நேர் ரோஜாவை பார்த்தவன், அவள் அருகில் சென்று தன் குழந்தையை தன் வசம் வாங்கிக்கொள்ள, ரோஜா துர்வாவை ஒன்றும் புரியாமல் பார்த்தவள்,
"ஏன் துர்கா இப்படி பண்ணுறீங்க? நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க குழந்தைகிட்ட பழகுறது உங்களுக்கு பிடிக்கலையா?" என்று வார்த்தைகள் வாடிய நிலையில் ரோஜா கேட்கும் கேள்விக்கு துர்வாவின் பதில் மௌனமாக தான் இருந்தது.
துர்வா தன் குழந்தையை தூக்கி கொண்டு சாப்பாடு மேசைக்கு சென்றவன், வேலையாட்கள் கொண்டு வந்து வைத்த உணவை திக்ஷிக்கு ஊட்டி விட்டான்.
"என்னாச்சு இவனுக்கு? நீ இருமா ரோஜா. நான் இதோ வரேன்" என்று சொன்ன தாத்தா துர்வாவின் அருகில் சென்றார்.
"தாத்தா நீங்களும் சீக்கிரமா சாப்பிட்டு மாத்திரை போடுங்க" என்று சொன்னவன், தானும் இரண்டு தோசையை சாம்பாரில் முக்கி அழகாக சாப்பிட்டு எடுத்தான்.
"என்ன துர்வா இது? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற? நம்ம வீட்டை தேடி யார் வந்தாலும் முதல்ல அவங்கள தானே சாப்பிட சொல்லனும். நீ என்ன ரோஜாக்கிட்ட பேசாம, அவளை சாப்பிட கூட அழைக்கமால், இப்படி நடந்துக்குற?" என்று தாத்தா துர்வாவிடம் கோவமாக கேள்வி கேக்க,
"சரி தாத்தா. நீங்க சாப்பிடுங்க. எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. நான் போய்ட்டு ஈவினிங் வரேன்" என்று சொன்ன துர்வா குழந்தை திக்ஷிதாவின் நெற்றியில் முத்தமிட்டவன், தன் அறைக்குள் சென்று தன் கார் சாவியை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியவனை பார்த்து மேலும் கலக்கம் கொண்டாள் ரோஜா.