• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
64
🌹பகுதி 2.

நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது 93.5 FM அடுத்ததாக உங்களுக்கான பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
என்ற பாடல் ஒலித்ததும் அந்தப் பாடலைச் செவி கொடுத்து கேட்டப்படி ரோஜா பயணிக்கும் காரில், அவளின் தந்தையும், தோழியும், உயிர் நண்பனும் பயணித்தனர்.
ரோஜாவின் தந்தைக்கு விம்பி அழுது அழுது கண்களில் கண்ணீர் வற்றியது தான் மிச்சம்.
"அங்கிள் இப்போ ஏன் அழறீங்க? அப்படிப்பட்ட சுயநலவாதி கூட ரோஜா வாழறதுக்கு அவ வாழாவெட்டியா உங்க வீட்டுலேயே இருக்கலாம்' என்றான் அவளின் நண்பன்.

"ஆர் யு ஜோக்கிங்? கணவனை விவாகரத்து பண்ணிட்டா அந்த பெண்களுக்கு நீங்க தர நிக் நேம் வாழாவெட்டியா? என்ன பிற்போக்கு சிந்தனைடா உனக்கு" என்று ரோஜாவின் தோழி அவன் நண்பனை கடிந்து கொண்டாள்.
"யார் என்ன பேசினா என்ன, என்னோட வாழ்க்கையில் எல்லாமே என் அப்பாவின் ஆசை தான். படிக்கும் போதே என் படிப்பை பாதியில் நிறுத்திட்டு என் பத்தொன்பது வயதில் ஊர் உலகத்துல இல்லாத மன்மத மாப்பிளையை கட்டி வச்சாரு. அவர் என்னடானா தன் மேல இருக்குற கருப்பை மறைக்க, என்னை இத்தனை வருஷமா தாரில் குளிக்க வச்சி தேரில் ஊர்வலம் கூட்டி வந்தார். ஐயோ போதும்டா சாமி. எப்படியோ இன்று முதல் எனக்கும் விடிவு காலம் தான்" என்று தனக்குள் பேசிய ரோஜாவின் கண்கள் அவளைக் கேளாமல் கலங்கியது.
ரோஜாவின் கண்ணீரை பார்த்த அவளின் தோழி, "ஏன்டி அழற? இனி நீ அழக்கூடாது. அவன் கூட உனக்கு டிவோர்ஸ் ஆனதை பற்றியெல்லாம் எள்ளளவும் யோசிக்காத" என்று ஆறுதல் சொன்னாள்.
"எனக்கு அவர் கூட விவாகரத்து நடந்த கதையை நான் மறக்க நினைக்கல. எனக்கு கல்யாணம் நடந்தையே நான் நினைக்க மறுக்கிறேன்" என்று திட்டவட்டமாக சொன்னாள் ரோஜா.
"இனி என் மகளின் வாழ்கை என்ன ஆகுமோ? இவளைப் பார்க்கும் போதெல்லாம் நம் குடும்பத்தில் இருக்கும் சொந்த பந்தம் எல்லாம் என்ன பேசும்?" என்று வாய் விட்டு புலம்பிய தன் தந்தையை சமாதானம் செய்ய விரும்பாதவளாக ரோஜா காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள்.
கார் ரோஜவின் சொந்த வீட்டின் முன் போய் நின்றதும், காருக்கான வாடகையை கொடுத்து விட்டு, ரோஜாவையும் அவளின் தந்தையையும் காரில் இருந்து இறங்க சொன்னான் அவளின் நண்பன்.
"அங்கிள் கீ தாங்க. நான் வீட்டை திறக்குறேன்" என்று அவர்கையில் இருந்த சாவியை வாங்கிக்கொண்டாள் ரோஜாவின் தோழி.
இவர்கள் அனைவரும் வீட்டுக்குள் நுழைந்த நேரம் ரோஜாவின் கைபேசிக்கு அவளின் மாமியார்... இல்லையில்ஐ அவளின் முன்னாள் மாமியாரிடம் இருந்து அழைப்பு வர, "சொல்லுங்க அம்மா. என்ன விஷயம்?" என்று ரோஜா கேட்டாள்.
மறுமுனையில் இருந்து இவளுக்கு மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.
"உங்ககிட்ட தான் கேக்கிறேன். என்ன விஷயம்? ஏன் போன் பண்ணீங்க?" என்று மீண்டும் ரோஜா கேட்டதும்,
"நீ நம்ம வீட்டுக்கு வந்துடுமா. உன் புருஷன் பண்ணது தப்பு தான். இனிமே உனக்கு பிள்ளை இல்லன்னு யாரும் உன்னை ஏச மாட்டோம். நீ வீட்டுக்கு வந்துடுமா" என்று ஒரு தாயின் உள்ளம் பதறுவதை உணர்ந்தாள் ரோஜா.
"நீங்க உங்க மகனுக்கு அம்மாவா இருந்து என்னை உங்க வீட்டுக்கு கூப்பிடுறிங்க. இதுவே நான் உங்க வயித்துல பிறந்து, நீங்க எனக்கு அம்மாவா இருந்தா இப்படிப்பட்ட சுயநலவாதியான பையன் கூட என்னை வாழச் சொல்லிக் கேப்பிங்களா?" என்று ரோஜா கேக்கும் கேள்விக்கு எதிர் தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதை, அவர்கள்கைபேசி இணைப்பைத் துண்டித்த நொடியே தெரிந்து கொண்டாள்.
"இல்ல இல்ல இனியும் நான் இங்க இருந்தா என்னை அடிக்கடி போன் மூலமாவோ, இல்லை நேரில் வந்தோ இவங்க தொல்லை தருவாங்க. அதனால நான் வேற ஊருக்கு போக முடிவு பண்ணிட்டேன்" என்று நடுவீட்டில் தேங்காயை உடைத்ததை போல சொல்ல, அவளின் முடிவை யாராலும் மாற்ற முடியாது என்பதை ஊர்ஜிதப்படுத்தியது அக்குரலின் அழுத்தம்.
"என்னடி சொல்ற? வேற ஊருக்கா? எங்க போகப் போற? யாரை உனக்கு தெரியும்?" என்று அவளின் தோழி கேட்க,
“முதல்ல எனக்குப் புது சிம் வாங்கித் தா. அன்ட் என் பழைய காண்டாக்ட் எதுவுமே எனக்கு வேணாம். என்னோட புது நம்பர் உனக்கு, இவனுக்கு, என் அப்பாவுக்குத் தெரிந்தால் போதுமானது. நான் எங்க இருக்கேன், எப்படி இருக்கேன்னு நானே உங்களுக்கு தினமும் போன்ல இன்பார்ம் பண்றேன்" என்று புது விதமாகப் பேசும் தன் மகளின் மனதில் உள்ள வெறுமையை உணர்ந்து இருந்தார் ரோஜாவின் அப்பா.
"ஐடியா எல்லாம் சரிதான். ஆனா, நீ எங்க போகப் போற?" என்று ரோஜாவின் நண்பன் கேக்க,
"திருடன் கையில் சாவியை கொடுக்கும் பழக்கம் எனக்கில்லை" என்று சொன்ன ரோஜா குளியல் அறையை நோக்கி நகர்ந்தாள்.
அன்றைய தினம் மாலை நேரம் ரோஜா கேட்டுக் கொண்ட சிம் கார்டும், அதனுடன் சேர்ந்து அவளுக்காக சில புது ஆடைகளும் கையில் ஏந்தியவாரு, ரோஜாவை நோக்கி வந்தாள் அவளின் தோழி.
"என்ன இதெல்லாம். யாருக்கு புது துணி?" என்று ரோஜா பார்வையில் கேட்கும் கேள்வியை புரிந்து கொண்ட அவளின் தோழி, "இது எல்லாமே உனக்கு தான்டி. நம்ம மனசு எப்போதும் புத்துணர்ச்சிய்யா இருக்க நம்ம முதல் செய்ய வேண்டியது, நமக்கு புடிச்ச மாதிரி நம்மளை மாத்திகிறது தான்” என்றாள்.
"ஆமா ரோஜா. உனக்கு புக்ஸ் வாசிக்கிற பழக்கம் இருக்கு, ஆனா, உன் திருமணத்திற்கு பிறகு நீ புத்தகத்தை வாசிக்கிறதும் இல்லை. உனக்குப் பிடித்த விஷயங்களை நேசிக்கிறதும் இல்லை. அதனால தான் உனக்காக நானும் சில புக்ஸ் எல்லாம் வாங்கி வந்தேன் " என்றான் ரோஜாவின் உயிர்த் தோழன்.
"உனக்கு நான் தேடி தந்த வாழ்க்கைப் படகு, பாதியிலேயே முழிகி போனதை நினைத்து நான் என் மேலேயே கோவப்படுகிறேன்
ரோஜா" என்றார் கண்களில் கண்ணீருடன் அவளின் தந்தை.
"படகு முழுகி விட்டது என்று கவலை படுவதை விட, அதில் பயணம் செய்த உங்க மகள், அந்தப் படகு முழுகும் முன்பே கரை சேர்ந்து விட்டாள் என்று எண்ணி சந்தோஷப்படுங்க" என்று சொலலித் தன் தந்தையின் கண்ணீரை துடைத்து விட்டாள்.
"அப்பா நீங்க இங்க இருக்காதிங்க. அம்மம்மா கூட போய் நம்ம ஊருல இருங்க. நான் சீக்கிரமா வந்து உங்கள என்கூடவே கூட்டிட்டுப் போறேன். என் நண்பனும், என் தோழியும் நான் இல்லா வெற்றிடத்தை கண்டிப்பா உங்களிடத்தில் பூர்த்தி செய்வாங்க" என்று தன் பாசத்தை மறைத்து தன் தந்தைக்கு ஆறுதல் சொன்ன ரோஜாவின் கரங்கள் தன் நண்பனை கை கோர்த்து குலுக்கியது.
“பி சேப்" என்று அவளுக்கு தைரியம் சொன்ன நண்பனின் கரங்கள் என்றுமே நட்பின் அடிப்படையில் அவளுக்காக காத்து இருக்கும் என்பதை ரோஜா அந்த அழுத்தத்தில் உணர்ந்தாள்..
"நல்ல கலரா, ரிச்சு ஃபிகரா, செம்ம ஸ்மார்ட்டா ஒரு ஆளை டாவு அடிச்சு கல்யாணம் பண்ணிக்கோடி" என்று கிண்டலாகச் சொன்ன ரோஜாவின் தோழி அவளை கட்டி அணைத்து கண்கள் கலங்கினாள்.
"சரி எல்லோருக்கும் போய்ட்டு வரேன். அப்பாவை பார்த்துக்கோங்க" என்று சொன்ன ரோஜா தன் உடைமைகளை எடுத்து கொண்டு, இவள் வருகைக்காக காத்து இருக்கும் ஆட்டோவில் ஏறியவளை சுமந்து சென்ற வாகனம், ரயில்வே நிலையத்தை சென்றடைந்தது.
ஆட்டோவில் இருந்து தன் பையை எடுத்து கொண்டவள், ஓட்டுனரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, ரயில்வே நிலையத்திற்குள் நுழைந்த நேரம் ரோஜாவின் கைபேசி சத்தமிட்டது.
"ஹலோ சொல்லுடா"
"ரோஜா! நான் உனக்குத் தந்த புத்தகத்தின் நடுவில் சென்னைக்கு டிக்கெட் எடுத்து வச்சிருக்கேன். நீ அங்க போய் இறங்கியதும் என் அக்கா வந்து உன்னை பிக்கப் பண்ணிப்பாங்க. சோ நீ எதுக்கும் கவலைப்படாத. இங்க நானும் அவளும் உன் அப்பாவைப் பாத்துப்போம். நீ நிம்மதியா இரு. எல்லாத்தையும் மறந்துட்டு உனக்காக வாழ ஆரம்பி" என்றான் ரோஜாவின் தோழன்.
இதழ் ஓரத்தின் புன்னகையோடு, "உங்களை அடிச்சு கேட்டாலும் நான் சென்னைக்கு தான் போறேன்னு என் அப்பாகிட்ட சொல்லிடாதீங்க" என்று கண்டிப்பாக சொன்ன ரோஜா, அவள் கையில் இருந்த புத்தகத்தின் நடுவே மயில் இறகை போல காத்து இருந்த பயண சீட்டை எடுத்துக் கொண்டு, ரயிலில் ஏறி ஜன்னலோரத்தில் அமர்ந்தவள், கையில் உள்ள புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டாள்.
கண்கள் மூடித் தலையை ஜன்னல் கம்பியில் முட்டுக் கொடுத்தவளுக்குத் தாலாட்டு பாட முடிவு செய்து, ரயிலும் தன் பயணத்தை தண்டவாளத்தின் மீது தொடர்ந்தது.

ரோஜாவின் இந்த மாற்றம், இவள் வாழ்க்கையை மாற்றுமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top