- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
கண்டதும் காதலில்
நம்பிக்கையில்லை என்றவன்!
காதல் பற்றி
கதைப்போரை எல்லாம்,
சீண்டிக் கேலி புரிந்தவன்!
இன்றோ,
கண்டதுங் காதலிற் கிலக்கணமாய் நானிருக்க,
கவிதைகள் எழுதி கைகள் ஓய்கின்றன!
காதலியைக் காணாது
கண்கள் பூக்கின்றன!
என்னவென்றுரைப்பேன்
என் காதலின் ஆழத்தை!
புரியுமிடத்தில் அவளில்லாது போக,
புரிய வைக்க முடியாயிடத்தில் நான்!
ஓய்ந்த கைகள்
கவிக்கிறுக்கனாய் மாற்ற
கவிஞனாக்கினாளோ அவளென்னை!
நம்பிக்கையில்லை என்றவன்!
காதல் பற்றி
கதைப்போரை எல்லாம்,
சீண்டிக் கேலி புரிந்தவன்!
இன்றோ,
கண்டதுங் காதலிற் கிலக்கணமாய் நானிருக்க,
கவிதைகள் எழுதி கைகள் ஓய்கின்றன!
காதலியைக் காணாது
கண்கள் பூக்கின்றன!
என்னவென்றுரைப்பேன்
என் காதலின் ஆழத்தை!
புரியுமிடத்தில் அவளில்லாது போக,
புரிய வைக்க முடியாயிடத்தில் நான்!
ஓய்ந்த கைகள்
கவிக்கிறுக்கனாய் மாற்ற
கவிஞனாக்கினாளோ அவளென்னை!
Last edited by a moderator: