New member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 26
- Thread Author
- #1
அனைத்து வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள் 

நான் வேறு ஒரு தளத்தில் எழுத்தாளராக உள்ளேன்.
முதல் முறையாக முகநூலில் கதை எழுதுகிறேன்.
எனக்கு வாய்ப்பு தந்த
sornasandhanakumarnovels@gmail.com
அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

"காவலுக்கு சவால்"
இது கிரைம் கதை.
கதையில் ஏதேனும் தவறு இருந்தால்
படிக்கும் உறவுகள் தயங்காமல் சுட்டி காட்ட வேண்டுகிறேன்
இனி கதைக்குள்,
சென்னை -
ஐ.ஜி அலுவலகம்
காலையிலேயே மிகுந்த பரபரப்பாக இருந்தது.
அனைத்து உயர் அதிகாரிகளும்
மிகுந்த பரபரப்புடன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு விரைந்து வந்தார்கள்.
அனைத்து அதிகாரிகளையும் தங்கள்
மொபைலை சைலண்ட் மோடில் போட்டு வைக்க சொல்லி கட்டளை வந்தது.
அனைத்து அதிகாரிகளும்
தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க,
ஐ.ஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால்,
டி.ஐ.ஜி தான் இப்போது வருவார் என்று ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொன்னார்.
ஒருத்தருக்கும் என்ன பிரச்சினை என்று முழுமையாக தெரியாமல்
தெரியாது தெரியாது என்றனர்.
அவர்களாகவே ஒரு யூகம் செய்து
அந்த பிரச்சினையாக இருக்குமோ என்று அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டார்கள்.
அனைத்து உயர் அதிகாரிகளும் வந்தது அறிந்ததும்,
அந்த கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு கம்பீரமாக வேகமாக நுழைந்தார்
டி.ஐ.ஜி இராமநாதன்.
டி.ஐ.ஜி வந்ததும் அமர்ந்து இருந்த அனைத்து அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.
அனைவரையும் அமர சொல்லி விட்டு,
மொபைலில் மெசேஜ் எதுவும் வந்ததா என்று பார்த்தார்.
அனைத்து அதிகாரிகளும்
டி.ஐ.ஜி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார்.
நம் காவல்துறைக்கு ஒரு சமூக விரோத அமைப்பு சவால் விட்டிருக்கிறது.
நாளை இரவுக்குள் தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும்.
நாங்கள் அந்த இடத்தை
க்ளுவாக சொல்கிறோம்,
முடிந்தால் காவல் துறை அதை தடுத்து பாருங்கள் என்று
உளவுத்துறை மூலம் ஒரு மெசேஜ் வந்தது என்றார்.
அனைத்து அதிகாரிகளின் முகத்திலும் அதிர்ச்சி.
மீண்டும் டி.ஐ.ஜி
அந்த க்ளு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் அதான் மொபைலை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்றார்.
அப்போது அவர் மொபைலுக்கு உளவுத்துறையில் இருந்து மெசேஜ் வந்தது.
அதை அங்கே உள்ள பெரிய திரையில் தெரியும் படி செய்தார் டி.ஐ.ஜி.
1வது க்ளு
8,4,9 - 24
2 வது க்ளு
மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று
3 வது க்ளு
பி.சி.33
அதோடு முற்றுப் பெற்றிருந்தது மெசேஜ்.
அப்போது டி.ஐ.ஜிக்கு ஒரு அழைப்பு வந்தது,
அழைப்பில் உள்ள பெயரை பார்த்ததும் அமர்ந்து இருந்தவர் உடனே எழுந்தார்.
அவர் எழுந்தவுடன் அனைத்து அதிகாரிகளும் எழ முயற்சிக்க,
டி.ஐ.ஜி அனைவரையும் அமரும் படி சைகை செய்து கொண்டே பவ்யமாக பேசினார்.
எதிர் முனையில் பேசியவர் தமிழக முதல்வர்.
உங்களுக்கு என்ன அதிகாரம் தேவையோ அதை எடுத்து கொள்ளுங்கள்.
என் தமிழக பொதுமக்களுக்கு எதுவும் ஆக கூடாது என்று சொன்னார்.
மேலும் உங்களுக்கு இன்னும் கூடுதலாக காவலர்கள் வேண்டும் என்றாலும் என் அனுமதிக்கு காத்திருக்காமல் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்,
சீக்கிரம் கண்டுபிடியுங்கள் என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.
டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார்,
முதல்வர் தான் இப்போது பேசினார் என்றார்.
நமக்கு எந்த அதிகாரம் வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ள சொல்லி விட்டார்.
சந்தேகம் என்றால் என் கட்சி உறுப்பினர் என்று கூட பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
நாம் தான் நடக்க போக இருக்கும் அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என்றார்.
நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மறந்து இதை முறியடிக்க வேண்டும்.
இது உண்மையிலேயே நமக்கு விடுத்த சவால் தான்.
இதை பற்றி உங்களுடைய யோசனை எதுவாக இருந்தாலும் தயங்காமல் சீக்கிரம் தெரிவியுங்கள் என்றார்.
ஒரு அதிகாரி எழுந்து,
இதை மொத்தமாக விசாரித்தோம் என்றால் காலதாமதம் ஆகும்.
அதனால் மூன்று க்ளுவை
இங்குள்ள அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து முயற்சி செய்தால் நல்லா இருக்கும் என்றார்.
அவரின் ஆலோசனை நல்லா தான் இருக்கிறது என்று டி.ஐ.ஜி சொல்லி விட்டு, உடனே மூன்று குழுக்களாக பிரிக்க முயற்சி செய்தார்.
பிறகு ஒவ்வொரு குழுவிலும் ஒரு
தலைமை பொறுப்பு ஏற்க
ஒரு அதிகாரியை நியமித்தார் டி.ஐ.ஜி
நாம் அனைவரும் மற்ற குழுவில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ள, புதிதாக வாட்சப்பில் ஒரு குரூப் ஏற்படுத்தி தருகிறேன்.
பிறகு அனைவரிடமும் இந்த ஆபரேஷனுக்கு "காவலுக்கு சவால்"
என்று பெயர்.
இந்த சதித்திட்டம் முறியடித்த பிறகு
இந்த வாட்சப் குழு இயங்காது என்றார்.
அனைவரும் இது நமக்கும் சமூக விரோதியின் புத்தி கூர்மைக்கும் நடக்கும் சவால் என்று நினைத்து துரிதமாக செயல்படுங்கள் என்றார்.
கான்பரன்ஸ் முடிந்தது என்று சொல்லி விட்டு டி.ஐ.ஜி அவர் அறைக்கு சென்றார்.
அனைத்து அதிகாரிகளும்
தங்கள் மொபைலை சைலண்ட் மோடில் இருந்து எடுத்து விட்டு,
அவரவர் வீட்டுக்கு போன் செய்து
நான் ஒரு முக்கியமான கடமை பொறுப்பு காரணமாக உங்கள் அழைப்பை ஏற்க முடியாது,
அதி முக்கியமான தகவல் என்றால் மட்டும் வாட்சப்பில் மெசேஜ் செய்யவும் என்று அனைவரும் சொல்லி விட்டு,
மீண்டும் கடமை பொறுப்பை பார்க்க சென்றார்கள்.
முதலில் உள்ள க்ளுவை ஒரு குழு
யோசிக்க ஆரம்பித்தது.
8,4,9, - 24 என்று ஒவ்வொரு நம்பரையா யூகித்து பார்த்தார்கள்.
8 என்பது தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலில் இருந்து எட்டா? அல்லது கடைசியில் இருந்து எட்டா?என்று யோசித்து பார்த்தார்கள்.
அப்படி அவர்கள் நினைத்து ஒரு மாவட்டத்தின் பெயர் வர,
அப்போ 4 என்றால் என்னவாக இருக்கும்?
ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ள 4 வது பெரிய நகரமாக இருக்குமோ?
அப்படி என்றால்,
9 க்கு என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது குழப்பம் தான் வந்தது.
அப்படியே எல்லாம் ஓரளவு சரியாக வந்தால், கடைசியில் 24 என்று இருக்கிறதே,
அது என்னவாக இருக்கும்?
ஒருவேளை அந்த நகரத்தில் உள்ள ஒரு தெருவாக இருக்குமோ என்று யூகம் செய்தார்கள்.
ஒருவர் அந்த யூகம் சரியென்றால்
மற்றொருவர் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல பதில் சொன்னார்.
அடுத்த குழுவில் உள்ளவர்கள்
இரண்டாம் க்ளுவான
மரை+செவிலியர்+நான்கில் ஒன்று என்பதை தனித்தனியாக பிரித்து பார்த்து , கடைசியில் சேர்த்து பார்த்தால் தமிழ் நாட்டில் அப்படி ஒரு இடமே இல்லை.
மூன்றாவது குழு
மூன்றாம் க்ளுவான
பி.சி.33
என்பதை வருடத்தை கணக்கு செய்து,
அந்த வருடத்தில் ஏதாவது விசேசமான பெயரை தமிழ் நாட்டில் உள்ள இடங்களில் வைத்து யூகித்து பார்த்தார்கள்.
எதுவும் சரியாக வரவில்லை.