Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 499
- Thread Author
- #1
சீமக்கரை:
நைட் ஷிப்ட் முடிந்து வெளியே வந்த வளவன்,அங்கிருந்த டீ கடைக்கு போக, சிறிது நிமிடத்தில் சிவாவும் டீ கடைக்கு வந்தான்.டேய் டீ தானே என்க இல்லை மாமா எனக்கு காபி சொல்லுயென்றான்.
அண்ணா எனக்கு டீ இவனுக்கு காபி என்றவாறு அங்கிருந்த நியூஸ்பேப்பரை எடுத்து படிக்கலானான்.
தம்பி டீ எடுத்துக்குங்க என்னும் குரல் கேட்டு நிமிர்ந்தவன் கையில் டீ கிளாஸை கொடுத்து விட்டு தனது காபியை குடுத்தவன் பாக்கெட்டில் இருந்து பணத்தை கொடுத்து விட்டு வளவனிடம் வந்தான்.
அத்தை மகனின் முகத்தை பார்த்தவன் என்னடா என்க,நீ வீட்டுக்கு போ மாமா.கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேனென்றான்.தொரைக்கு அப்படி என்ன வேலை என்க...மாமா வெண்ணிலா வீடு வரைக்கும் போறேன்.இன்னைக்கு நிலாவை பொண்ணு பார்க்க ஏனாதில இருந்து வராங்கள் அதான் அப்பா வர சொன்னாங்களென்க ம்ம் சரியென்றான்.
பின்னர் வண்டியில் ஏறிய இருவரும் இரண்டு திசையிலும் பிரிந்து சென்றனர். வளவனோ சிறிது நிமிடம் வரை எதையும் யோசிக்காமல் வந்தவன் பொண்ணு பார்க்க வராங்களா வரட்டும்.
கல்யாணத்தை பண்ணி போகட்டுமே யார் வேண்டாமென்று சொன்னா என்கும் போதே வண்டியின் ஆக்ஸிலேட்டரை வேகமாக முறுக்கினான்.அப்போ இந்த மூனு வருஷமா பின்னாடியே சுத்தி சுத்தி வந்தாளே அதெல்லாம் பொய்யா?
கட்டுனா உன்னை தான் கட்டுவேனு சட்டையை புடிச்சி சண்ட போட்டாளே எல்லாம் நாடகமா?
இருக்கும் இருக்கும்..
எவனாவது பணக்காறன் வந்துருப்பான் இவளும் பல்லை காட்டிக்கிட்டு தலையாட்டியிருப்பாள். முடியாதுனு ஏன் சொல்ல போறாளென்று வெண்ணிலைவை திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டியவன் கையிலிருந்த வாட்சை பார்க்க காலை எட்டு மணி என்று காட்டியது.
இவ்வளவு நேரமெல்லாம் மாப்ளை வீட்ல இருந்து வந்துருக்க மாட்டாங்கள்.அனேகமா சிங்காரிக்கணும்னு முகத்தில் எதையாவது தடவிட்டு இருப்பாளென்று வளவன் தனக்கு தோணுவதையெல்லாம் பேசியபடி வர அவன் மனசாட்சியோ நீ பேசுடி என்றது.
மேலும் சிறிது நேரம் சென்று மணியை பார்க்க 8.30 என்று காட்டியது. நல்ல நேரம் எத்தனை மணிக்கு ஆரம்பிக்குதென்று தெரிலையே?
பொண்ணை பார்க்க எப்போ வருவாங்க?
காலையில வருவாங்களோ அதனால் தான் சிவாவை காலையிலேயே வர சொல்லியிருக்காங்களா..
இந்நேரம் என்ன பண்ணுவாள்?
ரெடியா இருப்பாளா?
ஏன் ரெடியாக மாட்டாள்.போடாணு வேற ஒருத்தவனுக்கு கழுத்தை நீட்ட தயாராகிட்டாள். அவளுக்கு என்ன வந்துச்சு நான் தானே இங்க புலம்பிகிட்டு கிடக்கேன்..
எப்படியே எவனை வேண்டுமானால் கல்யாணம் பண்ணிட்டு போகட்டும் எனக்கென்ன வந்தது என்றான்...
இதுவரை பொறுத்த மனசாட்சி இதற்கு மேல் அவன் புலம்பலை கேட்க முடியாமல் ஏய் முண்டம் என்றது.
யாரை என்றவனுக்கு,உன்னை தாண்டா வளவாயென்க,ம்ம் சொல்லு. என்ன காலையிலே இந்த பக்கம் உனக்கு விசிட்டிங்கென்க..
என்ன பண்ணி தொலைய?
இன்னும் உன் புலம்பலை கேட்டேன் நானே நாண்டுகிட்டு செத்துடுவேன். அனாவசியமா நீ கொலைகாரனா ஆக வேண்டாமென்று தான் நான் வந்தேன் என்றது.
என்னாஆ என்று முறைத்தவன் ஏய் என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கென்று கோவப்பட..உண்மைய சொன்னா நீ ஏத்துக்கமாட்டியேடா என்று சிரித்தது..
நீ ஒரு வெங்காயத்தையும் சொல்ல வேண்டாம் இருக்குற கடுப்பில் என்ன பண்ணுவேனென்று எனக்கு தெரியாது மரியாதையா ஓடிடு என்றவன் தனது கவனத்தை வெண்ணிலாவின் மேலிருந்து கலைத்து விட்டு வீட்டை நோக்கி வேகமாக சென்றான்.
கதிர் வீடு:
என்ன தாத்தா என்றவாறு அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே வேலு கேட்க, நம்ப அய்யானார் கோயில்ல ஒரு படையலை போட்டுடலாம்யா.
உன் தங்கச்சி கல்யாணம் பண்ணிய மறுநாளே வெளியில போனதால் நம்ப உறவு முறைகளுக்கு கறிசோறு போடலை.
அந்த மேலத்தெரு நரசிம்மன் வேற பாக்குற நேரமெல்லாம் என்ன மாமா பேரன் கல்யாணத்துக்கு பெரிய விருந்து வைப்பணு பார்த்தால் சப்புனு சாம்பார் சோத்தோட அனுப்பிட்டியேனு கேட்குறான் என்றார்.
இதுவரை தாத்தா சொன்னதை கேட்ட வேலு அதுக்கென்ன தாத்தா நல்லபடியா சோத்தை போட்டுட்டால் போகுது. பாவம் நரசிம்மன் சித்தப்பா கறிசோறே ரெண்டு வருஷமா திங்கலை போல நல்லா நல்லி எலும்பை அள்ளி வச்சிடலாம்.
அப்புறம் தாத்தா என் தங்கச்சி வெளியில போகலை,வெளிநாட்டுக்கு போச்சு.அதும் சிங்கப்பூருக்கு போயிருக்கென்க,பேரனின் பேச்சை கேட்டவர் பெரிய வாத்தியாரு வந்துட்டான் திருத்துறதுக்கென்று சொல்லி அவன் பின் மண்டையில் அடித்தார்.
ஆஆஆ என்றவன் வயசானாலும் உன் வீரம் குறையல பெரிசு என்றான்.
அந்நேரம் செல்வியும் மாடியிலிருந்து பள்ளிக்கூடம் போக தயாராகி கீழே வந்தாள்.
முற்றத்தில் இருக்கும் ஊஞ்சலில் தன் மனங்கவர்ந்தவன் உட்கார்ந்திருக்கிறான் என்பது தெரிந்து ஒரு முறையாவது தன்னை பார்க்கமாட்டானா என்று பார்க்க,வேலுவோ வேறு பக்கம் திரும்பி போனில் எதையோ பார்க்கலானான்.
அம்மா சாப்பாடென்று செல்வி குரல் கொடுக்க,ஏய் எத்தனை முறை சொல்றது அங்க இருந்து பிச்சைகாரி போல கத்தாதனு. இன்னொருவாட்டி இப்படி கூவுன கொல்லியை எடுத்து வாய்ல வச்சிடுவேனென்று சீதா சொன்னார்.
எதுவும் சொல்லாமல் கிச்சனுக்கு சென்றவள் அங்கு தயாராக இருந்த டிபன் பாக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டவளுக்கு தட்டில் பூரியை வைத்து ராதா நீட்ட அதை வாங்கி வேக வேகமாக சாப்பிட்டு வெளியே வந்தவள் இன்னும் அண்ணா வரலையே என்றாள்.
இவ்வளவு நேரம் சின்னப்பு வந்துருக்கணுமேயென்றார் வள்ளி அப்பாயி.
சரி நான் அல்லிய பஸ் ஸ்டாப்பிற்கு போய் விடணும் வரேனென்று வேலு கிளம்ப,வேலு சாப்டலையா என்று கிச்சனில் இருந்து ராதா குரல் கொடுக்க,வந்துடுறேனத்தை என்று அங்கிருந்து வெளியே போக வளவனும் வந்து வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி செல்வி என்று குரல் கொடுத்தான்.
என்னடா இவ்வளவு நேரமென்று வேலு கேட்க,வேலை தான் மாமா என்றான்.
ஏண்டா அது எனக்கு தெரியாதா?
நான் மட்டும் என்ன நீ மாடு மேய்க்கவா போனேனு சொன்னேனென்றவன் தனது பைக்கில் ஏறி சித்தி வீட்டை நோக்கி சென்றான்.
அம்மாச்சி நான் அம்மா வீட்டுக்கு போய் வரட்டுமாயென்று தாமரை கேட்க,ம்ம் ரெண்டுபேரும் சாப்பிட்டு போங்க என்றார்.
சரியென்று கிச்சனிற்குள் சென்றவள் ராதாவிடமிருந்து பூரிகட்டையை வாங்கி சின்ன சின்ன பூரி தேய்க்க சீதாவும் அதை பொறித்தெடுத்தார்.
ராதா மதியத்திற்கு குழம்பு வைக்க கொஞ்சம் கடலை ஊற வையு என்றவாறு பொரித்த பூரியை அகலமான பாத்திரத்தில் வைத்தவர் வளவன் வந்த பிறகு சூடா சுட்டுக்கலாம்.
மத்தவங்களுக்கு சாப்ட குடுங்களென்று மதிய சாப்பாட்டிற்கு தேவையானதை எடுத்து வைத்தவரை பார்த்தவள் அத்தை முதல்ல நீங்களும் சாப்பிட்டுக்குங்க. பிறகு நாம சேர்ந்தே வேலை பார்க்கலாமென்றவள் ஆமாங்கத்தை எங்க அத்தையம்மாவோ காணும்? இவ்வளவு நேரம் அவங்க தூங்கமாட்டாங்களே என்றாள்.
தாமரை சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன சீதா என்ன தாமரை சொல்ற வேதா நீலகிரிக்கு போனது உனக்கு தெரியாதா என்று கேட்டார்.
அத்தை நிஜமாக எனக்கு தெரியாது. அத்தை கிட்ட நான் பேசவே இல்லை என்று சொல்ல....
என்னம்மா சொல்ற ரெண்டு வருஷமா வேதாகிட்ட கூட நீ பேசலையே என்று மீண்டும் அதிர்வாய் சீதா கேட்க...
ஆமாங்கத்தை..
யாருகிட்டையுமே நான் பேசவில்லை. அது ஒருத்தவங்க கிட்ட பேசி மத்தவங்க கிட்ட பேசாம இருக்க என் மனசாட்சி எனக்கு இடம் கொடுக்கவில்லை என்று சொல்ல மருமகளின் மனதை புரிந்தவர் சரிமா என்றார்....
தனது மனைவி கிச்சனில் தனது அம்மாக்களோடு பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கு வேதாமா கிட்ட கூட இவள் பேசவில்லையா என்பது ஆச்சரியமாக இருந்தது
ஏன் மா தாமரை...
அக்காகிட்ட பேசலைனா என்ன அர்த்தம்?
எங்களை விடு அவங்கள் என்ன பண்ணுனாங்கள் மா என ராதா கேட்க,தாமரையால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
அவள் அமைதியாக இருப்பதை பார்த்த சீதா விடு ராதா என்க...
அத்தைமா இத்தனை வருஷம் எனக்காகவே வாழ்ந்துட்டாங்க. இனியாவது அவங்கள் வாழ்க்கையை வாழட்டுமென்று தான் அத்தை நான் விலகி இருந்தேன்.
ஆனால் அத்தம்மா இப்படி இங்க இருந்து நீலகிரிக்கு மீண்டும் போவாங்களென்று நான் நினைக்கலைங்கத்தை என்கும் போதே தாமரைக்கு அழுகை வந்தது.
வேதா போன சுழல் அப்படி மா.
எங்களுக்கும் மட்டும் என்ன ஆசையா வேதாவை அனுப்பி வைக்க?
நீ போய் ஆறு மாசம் வரைக்கும் வேதா இங்க தான் இருந்தாள்.இந்த குடும்பத்து மருமகளா வேதாக்கு என்ன மரியாதையோ அதை எல்லாரும் கொடுத்தோமென்று சீதா சொல்ல...
அய்யோ அத்தை...
நான் அப்படி எந்த அர்த்தத்திலும் கேட்கலை என்க..
உன்கிட்ட சொல்லுறேன் மா.
மருதுவோட வாழ்க்கையே நினைத்து மயிலா ரொம்ப கவலைப்பட்டு உடம்பு முடியாமல் போய்விட்டது. மயிலாவை கவனிக்க தான் வேதா அங்கு போனது மா.
அந்த பொண்ணு பவித்ரா இருக்காளே மருதுகிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி வேற கல்யாணம் பண்ணிட்டாள்.
மலைகிராமம் என்கிறதால் எந்த நர்ஸும் அங்கு வேலைக்கு வருவதில்லை. ஆடுங்களை கூட்டிட்டு மூக்கையன் அண்ணா வேலைக்கு போன நேரத்தில் தான் மயக்கம் போட்டு விழுந்துருக்காங்க.
நல்லவேளை பக்கத்து வீட்டில் இருக்கவங்க பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்து அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ஊசி போட்டுருக்காங்க.
இது நடந்து பத்து நாளைக்கு பிறகு நிலன் தான் போன் பண்ணி விசயத்தை சொல்லி அழுதான். வேதாக்கு மனசு கேட்கலைமா.
உன்னோட ரெண்டு மாமனாரோட நான் ராதாவும் வேதாகூட போனோம்.பார்த்தால் பாவமா இருந்துச்சி தாமரை.
அந்த அண்ணன் தான் வரகாப்பி போட்டு குடுத்தார். பிறகு கோவைக்கு கூப்பிட்டு போய் உடம்பு புல்லா செக் பண்ணினால் எந்த நோயும் இல்லைனு சொல்லிட்டாங்க.
என்ன விஷயம்னு கேட்கும் போது தான் மருது வாழ்க்கையை கெடுத்துட்டேன்கா என அழுதுச்சு.
அங்க இருக்குற சூழலை பார்த்து வேதாவும் நான் இங்கையை இருக்கேன் கா. இவங்களுக்கு இப்போது என் உதவி தேவைனு சொல்ல எங்களாலையும் மறுக்க முடியலை. அங்க இருக்கவங்களாம் வேதாவை பார்த்துட்டு சந்தோஷத்தில் அழுதாங்க தாமரை