• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
காதம்பரி சந்தனை கதவைத் திறந்து வெளியில் தள்ளிவிட அரை கிரகத்தில் வாசலில் வந்து விழுந்தான்.

சந்தன் எப்போது வெளியே வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரகு, சந்தன் வாயில் கடந்து வெளியே வந்து விழுந்தவுடன், ரகு ஆர்வமாக அந்த மர வீட்டுக்குள் நுழைந்தான்.

காதம்பரி, "எத்தனை அவசரம் உங்களுக்கு, எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை என்று ஏன் எண்ணாமல் போனீர்கள்?" என்று சினுங்களோடு கேட்க.

"சந்தன் சரிந்து விழும் அளவுக்கு சாகசம் புரிந்து இருக்கிறான். பாவம் அவளுக்கும் ஓய்வு தேவைதான். அவளே வாய் விட்டு கேட்டு விட்டாளே" என்று எண்ணிய ரகு, "நான் சென்று சிறிது நேரம் ஆன பிறகு வரவா?" என்று பொறுப்பானவனாக கேள்வி கேட்டான்.

காதம்பரி, "பரவாயில்லை. இங்கேயே அமருங்கள். சிறிது நேரம், நான், என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் தாருங்கள். என்று ராகுவின் இரு கரம் கீழே பிடித்துக் கொண்டது. அமத்தினாள்.

பின்பு சந்தனுக்கு பயன்படுத்திய துணியை மடித்து தரையில் விரிப்பது போல பாவனை செய்து கொண்டு இருந்தாள்.

ரகு ஆர்வமாக எச்சிலை விழுங்கினான்.

"சிறிய விளையாட்டு விளையாடலாமா?"

"என்ன விளையாட்டு?"

"நாக்கால் மூக்கை தொட வேண்டும். முதலில் நீங்கள் தொட வேண்டும். முடிகிறதா என்று சோதித்து பார்க்கலாமா?"

ரகு, "இது பெரிய வித்தையா? நான் நாக்கால் இந்த உலகத்தையே சுற்றி வளைத்து பிடித்து விடுவேன். ஒரு அங்குல தூரம் இருக்காத, மூக்கை தொடுவதிலா கஷ்டம்? இப்போதே பார்." என்று நாக்கை நீட்டி மூக்கின் புறம் வளைத்து, தொட முயற்சித்துக் கொண்டிருந்தான்.

காதம்பரி, ஆர்வமாக பார்ப்பதைப் போல, அவன் முகத்தருகே சென்று, தலையில் ஒரு கையையும், தாடையில் ஒரு கையையும் வைத்து ஓங்கி அடித்தாள்.

நாக்கு துண்டித்து கீழே விழவில்லை. அவ்வளவுதான். மற்றபடி வாயிலிருந்து ரத்தம் பொல பொல வென ஊத்தியது. காதம்பரியை மிரட்சியாக பார்த்தான் ரகு.

உச்சந்தலை முடியை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, கதவை திறந்து வெளியே தள்ளி விட்டவள், “நீ நடந்து கொண்டதை என் தந்தையிடம் தெரிவித்தாள், உங்களை இப்போதே சம்காரம் செய்து விடுவார். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடி விடுங்கள். மறுமுறை இப்படி நடந்து கொள்ள முயற்சித்தால்... விளைவு விபரீதமாகி போகும். பெண் என்றால் அத்தனை சுலபமான பொருளா உங்களுக்கு? பெண்கள் பலகீனமானவர்கள் சுலபமாக அடைந்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தீர்களா? உங்களைப் போன்றவர்களை உயிரோடு விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் நான் பெண் என்ற கட்டுக்கோப்புக்குள் வளர்ந்தவள். அதை மதித்து, இப்போது என்னை, நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். சென்று விடுங்கள் என்று எச்சரித்தாள்.

ரகுவுக்கு வாயில் இருக்கும் வலி ஒரு புறம், காதம்பரி இளவரசி என்று மறந்து, தவறாக நடந்து கொள்ள நினைத்த நினைப்பு ஒரு புறம், இதையெல்லாம் யாரிடமும் சொல்லுங்கள் முடியாத அவமானம் ஒரு புறம், என்று நொந்து கொண்டு அமர்ந்திருந்தவனை, பின் தோள் புறம் வந்து தொட்டு அழைத்தான் சந்தன்.

சந்தன், "நான் வந்து விழும்போதே நீ சுதாரித்து இருக்க வேண்டாமா? அவள் பெண் அல்ல, பிசாசு. நாம் தான் அவளிடம் சிக்கிக் கொண்டோம். இதை உறங்கச் சிவத்திடம் சொல்லிக் கொள்ளாமல், இப்போதே சென்று விடுவது நலம்."

ரகுவால் பேச முடியவில்லை. அதனால் போக வேண்டாம் என்று தலையை அசைத்து, அவனை அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றான். சிவன் உறங்கிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பி, நடந்த விஷயத்தை சந்தன் விவரித்துச் சொல்லி முடித்தான்.

சிவன், ''அய்யய்யோ... இனி நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை போல இருக்கிறதே. உங்களை நம்பி வந்து, இப்படி பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டேனே..." என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

ரகுவால் பேச முடியவில்லை என்றாலும் வலியை பொறுத்துக் கொண்டு, மெல்ல மெல்ல சிவனின் காதுக்கு கேட்கும் அளவிற்கு சத்தம் கொடுத்து சொன்னார். "இளவரசி நமக்கு உயிர்ப்பிச்சை கொடுத்ததாக சொல்லி, விரட்டி அடித்தார். அதனால் யாருக்கும் எதுவும் நேர்ந்து விடாது. பயப்படாதே". என்று சிவனிடம் ஆறுதல் சொன்னார்கள்.

இவர்கள் பேசி முடிக்கும் நேரத்தில் ஜாமக்கோழி கூவிய சத்தம் கேட்டது. அதே நேரத்தில் பூரணம் வீட்டிற்கு சென்று இருந்தவர், திரும்பி வந்து விட்டார். பூரணத்தை பார்த்து சிவத்திற்கு மேலும் வயிறு கலங்கியது.

"இளவரசி, அவர்களது பாட்டியிடம் எதையாவது சொல்லி விடுவாரோ? என்று எனக்கு பயமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் இப்படி அமருங்கள். வருகிறேன்." என்ற சிவன், மெதுவாக அந்த வாயில் புறம் வந்து மறைவாக நின்றான்.

காதம்பரியைப் பார்த்த பூரணம், "இன்னும் நீ உறங்க வில்லையா கதம்பரி? எதற்காக இப்படி இரவில் விழித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாய்?"

காதம்பரி, எனக்கு தனிமையில் உறக்கம் பிடிக்கவில்லை பாட்டி. உங்களுக்காக வாசலில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சரி சென்ற காரியம் ஜெயம் தானே?"

பூரணம், "அதை ஏன் கேட்கிறாய்? துவைக்க சென்றேன். அந்த இடத்தில் கழட்டி வைத்து விட்டேன். நல்லவேளை உன்னுடைய தந்தை இதை பார்த்து விட்டால், இந்த நேரத்தில் என்னை உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பான். அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருக்கிறேன்."

"சரி பாட்டி வாருங்கள். உறங்கச் செல்லலாம் எனக்கு கண்கள் சொருகிக் கொண்டு வருகிறது." என்று இருவரும் பேசி கொண்டதை கேட்ட பிறகே சிவத்தின் மனம் சற்று அமைதியானது.

அன்றைய காவல் முறை கலவரமாக நடந்து முடிந்தது.

சிவன், ரகுவின் நாக்கு பிறந்து இருப்பதை சரி செய்ய, பேச்சை தெளிவுபடுத்த செய்வதற்காக, மேல் சிகிச்சை செய்ய வேண்டும். அதனால் அண்டை தேசமான, வகுள ஆரண்ய தேசத்திற்கு, அரண்மனை வைத்தியரிடம் அழைத்து வந்தான்.

தற்போது அரண்மனை வைத்தியன், அவனுக்கென்று தனியாக குடியில் இல்லை. அரசி கமலிக்கு தேவையான கைங்கரியம் செய்து கொண்டு. அரண்மனை வாசிகளோடு, அரண்மனை வாசியாகவே அரண்மனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அரண்மனையில் இருக்கும் போர் குதிரைகளுக்கு, பராமரிப்பு செய்து கொண்டு. சிகிச்சை செய்து கொண்டு இருந்த வைத்தியரை சென்று சந்தித்தான் ரகு.

"நல்லா வாயை திறந்து காட்டுப்பா". என்று கேட்ட வைத்தியரிடம்.

"திறக்க முடிஞ்சா திறக்க மாட்டேனா சாமி." என்றான் ரகு.

வைத்தியர், "எப்படி நாக்கு துண்டித்து விழும் அளவுக்கு, நீயே கடித்தாய்?"

"நான் கடிக்கவில்லை ஒரு கழுதை உதைத்து விட்டது".

"கழுதையிடம் வாயை காண்பித்தவன் நீதானப்பா" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டான். நாக்கின் அடியில் இருக்கும் நரம்புகளின் வீக்கத்தை பார்த்து அதற்கு தகுந்த சூரணத்தை கலந்து குடிக்க கொடுத்தார் வைத்தியர்..

ரகுவோடு வந்திருந்த சிவன், அரண்மனை வரை வந்த பிறகு, நண்பனை சந்திக்காமல் எப்படி செல்வது? அரசன் வல்லாளனை சந்தித்து, கன்னி மாடத்தின் காவலுக்குச் சென்றதும், அங்கே நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.

வைத்தியரை சந்தித்து விட்டு, திரும்பி வந்த ரகு, "என்னுடைய நிலைமை உங்கள் இருவருக்கும் நகைப்பாக இருக்கிறது."

வல்லாளன், "உனது நிலை நைகைப்பாக மட்டுமல்ல, திகைப்பாகவும் இருக்கிறது".

ரகு, "இதில் திகைப்பதற்கு என்ன இருக்கிறது?" என்றான்.

வல்லாளன், "ஒரு தேசத்தின் இளவரசியை, ஒத்தையாக தனிமையில் சந்திக்கச் சென்ற பெரும் வீரன் அல்லவா!" என்று சொல்லி சிரித்தான். ஆனாலும் அந்த பேரழகியை தானும் நேரில் சந்திக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டான் வல்லான்.

“சிவம்... அடுத்து உனது காவல் முறை என்று வருகிறதோ... அன்று நானும் உடன் வருகிறேனே என்று வல்லாளன் கேட்க. சிவன் அரண்டுவிட்டான்.

"நீ பயப்படும்படி எதுவும் நடந்து விடாது. நான் இத்தனை துணிச்சல் மிக்க, அந்த வீரம் செறிந்த திருமகளை, பார்க்க வேண்டும் என்று மட்டுமே வருகிறேன். என் மூச்சு கூட அவளை தீண்டாது. போதுமா. என்று உத்தரவாதம் கொடுத்தான் வல்லாளன்.

மனமே இல்லாத சிவன், "சரி வரும் பவுர்ணமி அன்று எனது முறை. அப்போது நீ என்னோடு வா... ஆனால் நீ அந்த தேசத்து அரசன், நீ வந்திருப்பது யாருக்காவது தெரிந்தால், விபரீதம் ஆகிப்போகும்."

"அதைப் பற்றி நீ வருத்தம் கொள்ளாதே. நான் மாறுவேடத்தில் உன்னை தேடி வந்து விடுவேன் என்றான் வல்லாளன்"

சிவமும், ரகுவும் வகுள ஆரண்ய தேசத்திலிருந்து புறப்பட்டு, அவர்களது கதம்பவன தேசத்திற்கு சென்று விட்டனர்.

வல்லாளன் பௌர்ணமியை எதிர்நோக்கி காத்திருந்தான். அதேபோல பெளர்ணமி தினமும் வந்து சேர்ந்தது. வல்லாளன், இளவரசி காதம்பரியை பார்க்கும் நாள் இது. ஆர்வமாக இருந்தான்.

இரவில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சீக்கிரமாக படுக்கையறைக்கு சென்று விட்டான். படுக்கை அறையில் தூங்குவதைப் போல அமைப்பை ஏற்படுத்தி விட்டு. யாருக்கும் தெரியாமல், அரண்மனையில் இருந்து வெளியேறிய வல்லாளன் தனது புறவினில், கதம்ப வன தேசம் நோக்கி சென்று விட்டான்.

வல்லாளன் நேரே சிவனின் வீட்டிற்கு சென்றான்.

சிவன், வல்லாளனை பார்த்து யார் என்று அடையாளம் தெரியாமல் விழித்தான்.

வல்லாளன், தான் மாறுவேடத்தில் வந்திருப்பதாகச் சொல்லி, "கன்னி மாடத்துக்கு, காவலுக்குப் புறப்படலாமா?" என்று கேட்டான்.

"ஏதும் விபரீதம் நடந்து விடக்கூடாது." மனதிற்குள் வேண்டிக்கொண்ட சிவன், வல்லாளனை அழைத்துக் கொண்டு வனந்தரம் நோக்கிச் சென்றான்.

அங்கே வல்லாளன், "என்ன சிவம்? நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் வருகிற மாதிரி தெரியுதே... உன்னுடைய நண்பர்கள் வரலையா?"

சிவன், "அவங்க ரெண்டு பேரும் போன முறையே ரொம்ப அதிகமாக வாங்கி கொன்றார்கள் அல்லவா. அதுவே போதும் என்று இருந்து கொண்டார்கள். இன்று நான் மட்டும்தான்."

"அப்படியா? நீ மட்டும் இல்ல. நானும் உன்னோடு சேர்ந்து வருகிறேனே... வா..." என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றான் வல்லாளன்.

இருவரும் கன்னி மாபத்திற்கு வந்து சேர்ந்ததும், வல்லாளன் அமர்வு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

சிவன், தென்னை மரங்கள் சூழ்ந்த அரண், முன்பிருக்கும் வாயிலுக்குச் சென்று, "அம்மா காவல் புரிய வந்தோம் இருவர். நான் சிவன். என்னுடையது நண்பன் வல்லாளன்." என்ற பெயரை சொல்லிவிட்டு. வல்லாள கண்டன் என்று திருத்தமாகச் சொன்னான்.

பௌர்ணமி நிலவு, பகல் போல் இல்லை என்றாலும், பாதையும், கல், முள் போன்றவை நன்றாகவே தெரியும்.

வல்லாளன், "எங்க இளவரசியாரை பார்க்கவே முடியவில்லை?" என்று சிவனிடம் கேட்க.

சிவன், "இது கன்னிமாடம். அவர்கள் வெளியே வர வாய்ப்பே இல்லை. நீ குரல் கொடுத்து அழைத்தால், அவர்களுக்கு துணையாக இருக்கும் பாட்டியம்மாதான் வருவார்."

"இளவரசியை தரிசிக்க வேண்டும் என்ற விதியில் எழுதப்பட்டிருந்தால் இன்று அது நடக்கும்."

சிவன், உங்கள் விதி நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு தான் விதியை எழுதும் போது, கண்ணை மூடி கொண்டான் போல கடவுள்."

என்று நண்பர்கள் இருவரும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது.

காதம்பரி, "யாராவது உதவிக்கு வாருங்களேன். பாட்டியை பாம்பு தீண்டி விட்டது. யாராவது இருக்கிறீர்களா?" என்று சத்தமாக அழைத்தாள்.

சிவன், இதற்கு முன்பு தன் நண்பர்களை இப்படி வலைவீசி அழைத்தாலும் அழைத்திருக்கலாம். என்று பயந்து போய் நின்று கொண்டிருக்க.

வல்லாளன், எதைப் பற்றியும் யோசிக்காமல் வேக வேகமாக வாயிலைக் கடந்து உள்ளே சென்று விட்டான்.

வல்லாளன், காதம்பரியை பார்த்து, ஒரு நிமிடம் தன்னை மறந்து நின்று போனான்

"வாருங்கள் வாருங்கள். பாட்டியின் காலில் சர்ப்பம் தீண்டி விட்டது. நான் ரத்தம் ஓட்டத்தை, துணி கொண்டு கட்டி வைத்திருக்கிறேன். அருகில் நாக கன்னி மூலிகை இருந்தால் கொஞ்சம் பறித்துக் கொண்டு வாருங்கள்."

வல்லாளன், அமைதியாக காதம்பரியை ரசித்துக் கொண்டிருப்பதை கவனித்தவள், "உதவி வந்தவர்களா? இல்லை உபத்திரம் வந்தீர்களா?" என்று கடுமையாக கேட்கவும்.

சுயநினைவுக்கு வந்தவன், மிக வேகமாக வெளியேறி, மூலிகை தேடி அலைந்து திரிந்தான். சிறிது நேரத்தில் நாக கன்னி மூலிகையை பறித்துக் கொண்டு, வாழை மட்டை வெட்டி எடுத்து கொண்டு வந்தான்.

"இளவரசி நாககன்னி மூலிகையை பிறகு கொடுங்கள். முதலில் வாழை மட்டை சாற்றை எடுத்து பருக கொடுங்கள்."
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
காதோல் ஆரம்பம் 😁😁😁
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top