• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
அம்மா... என்று ஆணவ செருக்கோடு கமலையை அழைத்தான் வல்லாளன்.

கமலி, பதறி அடித்துக் கொண்டு அவன் முன்பு வந்து நின்று, அவன் முகம், மார்பகம் எல்லாம் தெளிந்து இருக்கும் ரத்தத் துளிகளைக் கண்டு. "என்னவாயிற்று என் செல்வமே'' என்று பரிதவித்தார்.

"எனக்கு ஒன்றும் இல்லை தாயே! நம் குலத்திற்கு இழிவு சிறப்பித்த முனிவனை, இந்த உலகில் இல்லாமல் செய்து விட்டு வந்திருக்கிறேன்."

"ஒரு தவசியை கொலை செய்தது பெரும் குற்றமடா"

"யார்? அவன் ஒரு தவசீலனா? தன் மகள் வயதுடைய பெண்ணை மானபங்கம் செய்தவன் தவசீலனா? வாழத் தகுதியற்றவன்."

அந்த நேரத்தில் வைத்தியரும், வைத்தியரின் மனைவியும், அரசியின் அருகில் வந்து நின்று கொண்டார்கள்.

வைத்தியன், ''எத்தனை பெரிய ஏமாற்றுக்காரராக இருந்தாலும், அவர் வாழ்ந்த தவ வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர் செய்த குற்றத்திற்கு, ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என்று விட்டு விட்டு வந்திருக்க வேண்டும்."

வைத்தியரின் மனைவி, "ஆமாம் அரசே... அவர் சிவ துரோகம். உங்கள் மனைவியும் தான் துரோகம் செய்தார்கள். இருக்கலாமே. செய்தீர்களா?"

வவல்லாளன் தலை மேல் அமர்ந்திருக்கும் பிரம்ம யச்சினி தனது இடதுகால் பெருவிரலால் அழுத்தம் கொடுத்தார். அடுத்த நொடி, "மன்னன் முன்பு நின்று பேசுவதே தவறு. அதிலும் அறிவுரை சொல்லும் அளவுக்கு அந்தஸ்தை உங்களுக்கு யார் கொடுத்தது?" என்று கேட்டுக்கொண்டே யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் உடை வாளை எடுத்தவன், வைத்தியரின் மனைவியின் தலையை துண்டித்தான்.

கமலையும், வைத்தியரும் தலை தெறிக்க ஓடி ஒளிந்தார்.

பிரம்ம யச்சனி கோரமாக சிரித்தார். "நான் காவல் செய்த பொன்னை காவல் செய்த ஒருத்தியை அழித்துவிட்டேன். இந்த இருவர் அழிந்தால் பொன்னைப் பற்றி எவரும் சிந்தைசெய்யார்." என்று சூழ் உரைத்த யச்சனி. தற்போது வைத்தியன் தலைக்கு தாவி அமர்ந்தாள்.யச்சனியின் இடப்பெயர்ச்சியால் வல்லாளன் மயங்கி சரிந்தான்.

வவல்லாளன் தரையில் விழுந்ததைக் கண்ட வைத்தியரும், கமலியும் மறைவிடம் விட்டு வெளிவந்தார்கள்.

கமலி, விரைவாக அரண்மனையை விட்டு வெளியே ஓடினார்.

வைத்தியர் தனது மனைவியின் தலை இல்லாத முண்டத்தின் அருகில் சென்று அமர்ந்து. வல்லாளன் மயக்கத்தில் இருக்கிறான் என்ற மதப்பில், "இவன் இவனது மனைவியை கொலை செய்து திராணி அற்று போய். என் மனைவியை, கொலை செய்துவிட்டானே. இவன் நல்லா இருப்பானா பாவி." என்று பிதற்றல் செய்து கொண்டிருந்தான். வல்லாளன். காதுகளில் இவனது ஒப்பாரி, நன்றாகவே விழுந்தது.

கண் இமைக்கும் நேரத்தில், கண் திறந்த வல்லாளன் தரையில் கிடக்கும் வாளை எடுத்து. வைத்தியனின் தலையை துண்டித்தான்.

கதம்பவனத்தில்.
முனிவரை, மன்னன் கொலை செய்த செய்தி காட்டுத்தீபோல் பரவியது.

விரைந்து, அடித்து பிடித்து ஓடி வந்த வருணன், காதம்பரியின் அறை கதவை தள்ளிக் கொண்டு சென்று, "அக்கா... அக்கா. மாமா, மந்தி முக முனிவரைக் கொலை செய்து விட்டாராம்." என்று மூச்சிரைக்க சொல்லி விட்டு மூச்சு வாங்கினான்.

காதம்பரி அதிர்ந்து விழித்தாள். "என்ன முனிவரை கொன்று விட்டாரா?"

" ஆமாம் அக்கா ஊரெங்கும் இதே பேச்சு அடிபடுகிறது."

எதனால் கொலை செய்திருப்பான் என்று யோசித்தாள் காதம்பரி, அப்போது அவள் மடியில் இருந்த குழந்தை அழுததும். அந்த முகத்தை பார்த்த பிறகு ஒருவராக யூகித்துக் கொண்டாள். "இதுக்கு மேலும் தாமதிக்கக்கூடாது வருணா... நாம் இருவரும் குழந்தையோடு வகுள ஆரண்ய தேசம் புறப்படலாம்."

வருணனுக்கு சரியாகப் பிடிபடவில்லை. "அங்கு சென்று நாம் என்ன செய்யப் போகிறோம்?"

உன்னுடைய மாமாவை சந்தித்து பேசினால் தான்... என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு புரியும். இப்போது புறப்படலாம். என்று சொல்லும் போது.

வள்ளி, "குழந்தை பெற்ற மேனி அலைச்சல் ஆகாது". என்று தடுத்தார்.

காதம்பரி, "இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தால், இன்னும் எத்தனை உயிரை அவர் பலி கேட்பாரோ?".

வள்ளிக்கு, சரியாக விவரம் தெரியாததால், "யார் பலி கேட்கிறார்கள்? யாரை சந்திக்கப் போகிறீர்கள்? நீங்கள் இருவரும் சென்று புதிதாக ஏதாவது பிரச்சனையை இழுத்துக் கொள்கிறார்கள். கொள்கிறார்கள். கொள்கிறார்கள். கொள்கிறார்கள். கொள்கிறார்கள். கொள்கிறார்கள். கொள்ள வேண்டும். கொண்டு வந்து விடாதீர்கள்".

வருணன், "அம்மா உனக்கு விஷயம் தெரியாதா? நமது மாமா முனிவர் மந்தி முகரை கொலை செய்து விட்டார். அதற்காக நாங்கள் இப்போது வகுள ஆரண்யம் செல்கிறோம்."

வள்ளி, "அரசருக்கு பித்து பிடித்து விட்டதா? எதற்காக முனிவரை கொலை செய்தார்.? அவருக்கு என்ன பிரச்சனை?"

"உனக்கு இன்னும் விளங்கவில்லையா? என்று தன் கையில் வைத்திருக்கும் குழந்தையைக் காட்டி இதற்கு தகப்பன் முனிவர் என்று எண்ணிக் கொண்டார். நடந்த கொலை இது." என்று விளக்கம் கொடுத்தாள் காதம்பரி.

வள்ளி, "அட கடவுளே... தகப்பன் ஸ்தானத்தில் உள்ள ஒருவரை, இப்படி தவறாக எண்ணிவிட்டாரே. இதற்கு பொறுப்பு நாங்கள் தானே. இந்த பாவமெல்லாம் எங்களுக்கு தானே வந்து சேரும்."

காதம்பரி, "கட்டிய மனைவியை சந்தேகிப்பது ஒரு கணவனின் கடமை என்ன, அவர் செய்த கொலை புண்ணிய செயலா? புண்ணியவானான அவர் செய்த கொலை பாவம் உங்களை வந்து சேருமோ? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வீணான கற்பனையில் வாழ போகிறீர்கள்? முதலில் அவரை தடுத்து நிறுத்த வழி பாருங்கள். அதன் பிறகு பாவமன்னிப்பு பற்றி பேசிக் கொள்ளலாம்."

வள்ளி, "நீங்கள் இருவரும் சென்று, அவரை எப்படி சமாதானம் செய்வீர்கள்? அப்பா வேறு இப்போது இங்கு இல்லை. அவர் வந்த பிறகு அவரை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்."

காதம்பரி, "அதற்குள், என் கணவர் இன்னும் எத்தனை கொலை செய்வாரோ! அதற்கு முன் தடுத்து நிறுத்த வேண்டும்."

"என்ன செய்து தடுக்க போகிறோம் அக்கா." என்றான் வருணன்.

அதுதான் எனக்கும் விளங்கவில்லை. ஆனால் உன்னுடைய மாமா என்னுடைய முகத்தை பார்த்தால் சற்று அமைதி அடைவார் என்று தோன்றுகிறது. அதனால் நான் நேரில் சென்று நிதானமாக எடுத்துரைப்பேன். அப்போதும் ஏற்க மறுத்தால் தீக்குளித்து நிரூபிப்பேன்."

"அக்கா கேட்கும்போது பயமாக இருக்கிறது"

வள்ளி, "காதம்பரி... நீ பேசுவது அறிவின்மை. அதனால்தான் அப்பா வந்த பிறகு சென்று கொள் என்று சொல்கிறேன். சற்று நேரம் பொறுமையாக இரு. நான் சமையலை முடித்துவிட்டு உங்களோடு சேர்ந்து வருகிறேன். என்று சொல்லிவிட்டு சமையல் கட்டுக்குள் சென்றார்.

இன்னும் கொஞ்ச நேரத்தில், அம்மா வந்து காரியத்தை கெடுத்து விடுவார்கள். விரைந்து செல். என்று அழைத்துக் கொண்டு சென்றாள் காதம்பரி."

வருணனோடு சென்ற காதம்பரி, ரத்தத்தை இயக்கிக் கொண்டு புறப்பட்ட பிறகுதான். வள்ளி வாசலுக்கு ஓடிவந்து பார்த்து, தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

காதம்பரி, மின்னல் என ரதத்தில் வந்து இறங்கியவள் கையில் குழந்தையோடு கணவனைக் காண ஆர்வத்தோடு உள்ளே சென்றாள். இரண்டு தலை இல்லாத முண்டங்களை பார்த்ததும் அரண்டு போய் நின்று விட்டாள்.

வருணன் அவளை பின் தொடர்ந்து வந்தவன், அப்படியே அமைதியாக நின்று விட்டான்.

வல்லாளன், அரச சிம்மாசனத்தில் ராஜ தோரணையில் அமர்ந்திருந்தான்.

காதம்பரி, "ஏன் இந்த வெறியாட்டம்? எதற்காக இவர்கள் இருவரை இப்படி பிணங்களாகப் போட்டிருக்கிறீர்கள்? என்னதான் ஆயிற்று உங்களுக்கு?"

வல்லாளன், "உன் முகத்தை பார்ப்பதற்கே எனக்கு பிடிக்கவில்லை. என்னை மேலும் வெறியேத்தாமல் அங்கிருந்து கிளம்பி விடு."

"நான் என்ன தவறு செய்தேன் அரசே? எதற்காக என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை?"

"நீ ஒரு தவறும் செய்யவில்லை. நான் தான் தவறு செய்துவிட்டேன். உன்னையே மணப்பேன் என்று ஒரு காலில் நின்று, உன்னை காதலித்து மணந்துவிட்டேன். கொண்டது. நான் செய்த மிகப்பெரிய தவறு."

"அந்தத் தவற்றை இப்போது திருத்திக் கொள்ளுங்கள். என்னை இப்போதே கொன்று விடுங்கள்."

“இனியும் இங்கே விவாதித்துக் கொண்டு இருந்தால் அதுதான் நடக்கும்.

வருணன், "அக்கா வா நாம் புறப்படலாம்." என்று கையை பிடித்தான்.

காதம்பரி, "இந்த குழந்தையை வைத்துக் கொள்." என்று தம்பியிடம் கொடுத்து விட்டு.

"இந்தக் குழந்தை உங்களுடையது என்பதற்கான ஆதாரம். உங்கள் மார்பகத்தில் உள்ளதுபோல் சூரிய மச்சம். இந்தக் குழந்தை மார்பகத்திலும் இருக்கிறது. அதைப் பார்த்த பிறகு. ஆவது. நீங்கள் நம்புவீர்களா?" என்று வல்லாளனிடம் கேட்டாள்."

"நன்றாகவே பேசுகிறாய். அந்த குழந்தை முகம், எதற்காக என்னைப்போல் அமையப் பெறவில்லை?"

"குழந்தை தகப்பனை போல் மட்டுமே இருக்குமா? தாயைப் போலவும் இருக்காதா? இந்த குழந்தை என்னுடைய முகச்சாயலை வாங்கி பிறந்து இருக்கிறது."

வள்ளலான் சிரித்துக் கொண்டே, "விட்டால் மந்தி முக முனிவர் உன்னுடைய தந்தை என்பாய் போல இருக்கிறது."

"உண்மையும் அதுதான் நான் கந்தவேலரின் வளர்ப்பு மகள். என்னுடைய தாய் வள்ளி கிடையாது. என்னை குழந்தையாக இருக்கும்போது மந்தி முக முனிவர் தான் இவர்களுக்கு. தானமாக கொடுத்திருக்கிறார்."

"இதை நான் நம்ப வேண்டும்."

"கந்தவேலர் இந்த தேசத்தின் நபர்தானே. அவரைப் பற்றி இங்கு உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது தானே. தேசத்தில், உங்களுக்கு நம்பிக்கை கூறியவரிடம். கந்தவேலருக்கு எத்தனை குழந்தை பிறந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்."

"சரி கதம்பரி, உன் வாதத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த குரங்கு முகம் உள்ள குழந்தையை எப்படி இந்த தேசத்தின் அரசனாக ஆக்குவது?"

"அதற்காக பிறந்த குழந்தையை என்ன செய்வது அரசே..."

"இப்போது கொன்று விடுவோம்."

அதுவரையில் பொறுமையாக இருந்த காதம்பரி பொறுமை இழந்து,
"அரசே...." என்று கர்சனை செய்தாள்.

வல்லாளன், அரண்மனை அதிரும்படி அகங்காரமாக சிரித்தான். "உன்னை கொன்றுவிடும் எண்ணம் எனக்கு இல்லை உன் மேல் நான் காதலித்தால் உன்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டேன். இதே பொறுமையோடு பேசிக் கொண்டிருப்பேன் என்று எண்ணாதே. காதல் கணவனுக்கு துரோகம் செய்த உன்னை. கொன்றாலும் தவறில்லை. முதலில் இங்கு இருந்து புறப்படு. இல்லையென்றால் என் கையால் மடிவது உறுதி."

"அவமானத்தையும் பழியையும் ஏற்று வாழ்வதைவிட, சாவதே மேல். அதுவும் காதல் கணவன் கைகளால் மடிவது, மிகப்பெரும் பாக்கியம். அதை எனக்கு தந்தருளுங்கள்."

வருணன் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தான். வல்லாளன் எதுவும் செய்து விட மாட்டான் என்ற நம்பிக்கையோடு இருந்த காதம்பரியும் எதிர்பாராமல், வல்லாளன் வாழை எடுத்து, காதம்பரியின் மார்பகத்தில் சொருகினான்.

அடுத்த கணம் குழந்தையை தூக்கிக் கொண்டு கருடன் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தான். அவர்கள் வந்த ரதத்தில் ஏறிக்கொண்டு குதிரையை எட்டி உதைத்தான். அவன் உதைத்த வேகத்தை விட பன்மடங்கு குதிரை வேகம் அதிகரித்து சீறிப்பாய்ந்தது

காதம்பரியின் ரத்தம் வல்லாளன் முகத்தில் தெளித்தது. அவன் சிந்தையில் இருந்த ஆக்ரோஷம், ரத்தத்தோடு சேர்ந்து வழிந்து விலகியது. “ஐயோ காதம்பரி... நான் மாபாவி ஆகிவிட்டேன். காதலித்த உன்னை என் கைகளால் எப்படி கொன்றேன்? உருகி உருகி காதலித்த உன்னை கொலை செய்து விட்டேனே. என் சிந்தையை இயக்குகிறார்கள்? எதனால் என்னுடைய புத்தி இப்படி எல்லாம் பேதலித்தது? என்று கதறியவாறு காதம்பரியின் தலையை தூக்கி, தன் மடியில் கிடத்திக் கொண்டான். அவளது பேசும் கண்களையே பார்த்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார் வல்லாளன்.

அரண்மனையில் இருந்து வெளியேறி சென்ற கமலி, ராஜ குருவின் இல்லத்திற்கு சென்று, விவரத்தை எடுத்துச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு வந்தார். அங்கே இரண்டு தரையில்லாத முண்டங்களும் கிடைக்கின்றன. தரையில் அமர்ந்து காதம்பரியை, மடியில் கிடத்தி அழுது கொண்டிருக்கும் வல்லாளனை பார்த்து, "என்ன காரியம் செய்தாயடா என் செல்வமே?" என்று அவரும் அருகில் சென்று, காதம்பரியின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top