Member
- Joined
- Nov 8, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
காதம்பரி, வல்லாளனின் வாழ்க்கை நாட்கள், நல்லபடியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது.
புதுமணத்தம்பதிகள் நித்தம் ஒரு திருத்தல யாத்திரை ஆங்காங்கே விருந்து உபசாரங்கள் என்று சந்தோஷமாக சென்றாலும் மகாராணி கமலியிடம், காதம்பரி இப்படி முகம் கொடுத்து பேசியது இல்லை. காதம்பரிக்கு தன்னுடைய மாமியாரை பார்த்தாலே பயம் காட்டிக் கொள்ளும்.
கமலி, காதம்பரி எப்போது தன்னிடம் தனிமையில் சிக்குவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.
வல்லாளன், தன்னுடைய அரசு அலுவல்களையும் கவனித்துக் கொண்டு. மனைவியோடு ஊர் சுற்றி விட்டு வாரத்தில் ஓரிரு முறையாவது அருகில் இருக்கும் மந்தி முக மாமுனிவரின் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வது என்று திட்டமிட்டு பயணித்துக் கொண்டிருந்தான்.
இந்த நாட்களில் காதம்பரிக்கு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம். போன்ற அறிகுறிகள் தென்பட்டது.
அரண்மனையின் வைத்தியர் குடும்பத்தோடு அரண்மனையிலேயே தங்கி இருப்பதால், காதம்பரிக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்னவென்று நாடி பிடித்து ஆராய்ந்து பார்த்தார்.
வைத்தியர், காதம்பரியின் கையைப் பிடித்து நாடியை சோதித்தபடியே... மலர்ந்த முகத்தோடு மகாராணி கமலியிடம், "மகாராணியாரே தாங்கள்... பாட்டியார் ஆகப் போகிறீர்கள். இரட்டை நாடி துடித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு."
காதம்பரி, இந்த சந்தோஷ செய்தியை காதில் கேட்டதும். கண்கலங்கி பூரித்துப் போனாள்.
வல்லாளன், வைத்தியரை பார்த்து கைகூப்பி வணங்கி, "நல்ல வார்த்தை சொன்னீர்கள் வைத்தியரே. என் தந்தையார், என் மகன் வடிவத்தில், என்னை மீண்டும் காண்க. இப்பூலோகம் வந்துவிட்டார். என்ற செய்தி, மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது." என்று சொல்லிவிட்டு தாயின் முகத்தைப் பார்த்தான்.
சந்தோஷம் இல்லை என்றாலும், மகனுக்காக சந்தோசப்படுவதைப் போல முகத்தை வைத்துக் கொண்ட கமலி, காதம்பரியின் அருகில் வந்து, "இந்த தேசத்தின் வாரிசை சுமக்கும் நீ... என் தெய்வம்." என்று வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.
காதம்பரி, கலங்கிய கண்களோடு கமலையின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.
கமலி, "இந்த மாதிரி நேரத்தில், குறுகி, கால்களில் விழுவது. எழுவது. என்று செய்யக்கூடாதும்மா."
காதம்பரி, "சரி அத்தை" என்று முதல்முறையாக கமலியிடம் பேசி இருக்கிறாள்.
சேதி சொல்லி இடம், காதம்பரி கருவுற்றிருக்கும் விசயத்தை. கந்தவேலருக்கு சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
கதம்பவனத்தின் அரண்மனைக் காவலன், ''அரசே தங்களை காண்பதற்காக. நமது தாய் தேசம் வகுள ஆரண்யத்தில் இருந்து, சேதி சொல்லி வந்திருக்கிறார்."
கந்தவேலர், காதம்பரிக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. மூன்று திங்களை கடந்திருக்கிறது என்றால், நல்ல செய்தியாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்தவர், "உடனடியாக வரச் சொல்லுங்கள்." என்று காவலனை அனுப்பிவிட்டு. வள்ளியையும் வருணனையும் உடன் அழைத்து அமர்த்திக் கொண்டார்.
சேதி சொல்லி, ''கதம்பவன தேசத்து அரசருக்கு, என்னுடைய வணக்கங்கள்."
கந்தவேலர், "தாங்கள், நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பீர்கள் என்று நான் கண்டேன்."
சேதி சொல்லி, ''உங்கள் நம்பிக்கையை நான் ஒருபோதும் பொய்யாக்க மாட்டேன். தங்களது மகள், எங்கள் தேசத்தின் இளவரசி, காதம்பரியார் கருவுற்றிருக்கிறார்கள். அந்த செய்தியை உங்களுக்கு தெரிவித்து விட்டு வரச் சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார்கள்."
கந்தவேலரும், வள்ளியும், சந்தோசத்தில், வாய் அடைத்து போனார்கள்.
வருணன், "தித்திப்பான செய்தியை சொல்லி இருக்கிறீர்கள். தங்களுக்கு எது கொடுத்தாலும் ஈடாகாது." என்று தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி சேதி சொல்லியின் கையில் கொடுத்து "இதை என்னுடைய அன்பு பரிசாக ஏற்றுக்கொள்."
சேதி சொல்லி, மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.
காதம்பரி கருவுற்ற செய்தியை அறிந்ததும். கந்தவேலர் தனது குடும்பத்தோடு, காதம்பரியைக் காண்பதற்காக பழக் கூடைகளை சீர்வரிசைகளாக எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
வகுள ஆரண்யதேசத்தில், வல்லாளன், மனைவி கருவுற்ற சந்தோசத்தில், அந்த தளத்தில் அமைய பெற்றிருக்கும், வருண ஈஸ்வரர் சன்னிதானத்தில், சிறப்பு ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
கோவிலில் பூஜைகள் நடைபெறும் அதே நேரத்தில், கந்தவேலரும், அவரது குடும்பமும், வருணீஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். காதம்பரியும், வல்லாளனும், கமலையும், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மகளை பார்த்த சந்தோசத்தில் வள்ளி, காதம்பரியின் அருகில் சென்று, அவள் அறியாமல் அவளை அணைத்தார்.
தாயின் ஸ்பரிசம் என்னவென்று தெரியாதவளா காதம்பரி, "அம்மா... எப்போது வந்தீர்கள்? என்று கேட்க.
வள்ளி "இப்போதான் என் செல்வமே"
வருணன், "அக்கா நீ... கருவுற்றிருக்கும் செய்தியை கேட்டதும், அப்பாவுக்கும், அம்மாவுக்கும், சித்தம் வேலை செய்யாமல் நின்று விட்டது. அப்படியே பிரமித்து போனார்கள்."
"உனக்கு ஒன்றும் ஆகவில்லையா" என்று காதம்பரி கேட்க.
"நானும் நின்று தப்பி நின்று கொண்டிருந்தாள், உனக்கான சீர்வரிசையை, யார் கொண்டு வந்து சேர்ப்பார்கள்?"
வள்ளி, "நிஜத்தில் உன் தம்பி தான் என்ன செய்கிறோம் என்று தெரியாதவனாகிப் போனான் இந்த நல்ல செய்தியை செவியுற்றதும் தன்னுடைய கணையாழியை கழற்றி செய்தி சொல்ல வந்தவரிடம் கொடுத்து விட்டான்."
"வரப்போகும் மருமகன் மீது உனக்கு இத்தனை பாசமா?" என்று காதம்பரி தம்பியிடம் கேட்க.
“எனக்கு பிறகு இன்னொரு குழந்தை, நீ பெறப்போகும் என் மருமகன்.அவனை நான் எப்படி எல்லாம் சீராட்டி வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளேன். தெரியுமா அக்கா...." என்று வருணன் கூற.
வவல்லாளன், வருணனின் அருகில்
வந்து, "உன் அக்காவின் குழந்தை அவளுக்கு மட்டும் தனிப்பட்ட உரிமையுடையது அல்ல". என்று கூற.
"தங்களுக்கும் அடுத்த முறை சீர் கொண்டுவருகிறேன் மாமா" என்று வருணன் தெரிவிக்கிறார்.
"அடேய்... உன்னை சிறுவன் என்று நினைத்தால், நீ மாமனுக்கும் காப்பு கங்கணம் அணிவித்துவிடுவாய்." என்று கமலி சொல்ல.
அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.
அனைவரும் ஒன்றாக அரண்மனைக்கு வந்து, சீர் கொடைகளை கொடுத்துவிட்டு. விருந்து உபசரத்தில் கலந்து, உண்டு முடித்து பிறகு. அவர்கள் தேசம் சென்றார்கள்.
ஐந்தாவது மாதத்தில், காதம்பரிக்கு, திஷ்டி பரிகாரம். வகுள ஆரண்யத்தில் வைத்து, கமலியின் தலைமையில் செய்து வைத்தார்கள்.
ஏழாவது மாதத்தில் அணிவிக்கப்படும் காப்பு வளையல் இடும் வைபவத்திற்கு நாள் குறித்து வந்தார்கள்.
கதம்பவன தேசத்துக்கு சொல்லி அனுப்பப்பட்டது.
கந்தவேலர், வளையல் அணிவித்து விட, வளையல் செட்டியாரோடு, சங்கு வளையல், பீங்கான் வளையல், வெள்ளி வளையல், பொன் வளையல், என்று வளையல் மூடைகளோடு. சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு வகுள ஆரண்ய தேசத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
வகுள ஆரண்யத்தில் அவர்களுக்கு இருக்கும் சொந்த வீட்டில் வள்ளி தனது சொந்த பந்தங்களோடு புளியோதரை எலுமிச்சை சாதம் தயிர் அன்னம் சர்க்கரைப் பொங்கல் வடை என்று பலகாரங்களில் சமைத்து எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள்.
கோலாகலமாக காதம்பரிக்கு வளைகாப்பு அணிவிக்கப்பட்டது வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் காதம்பரியை வள்ளாளன் எதிர்கொண்டு காணக் கூடாது என்பதற்காக வள்ளலனே அருகில் இருக்கும் வருணேஸ்வரர் கோவிலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
குதிரை வண்டியில் காதம்பரியை அழைத்துச் சென்றால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு, நோகும் என்று கருதிய கந்தவேலர். காதம்பரிக்கு, நான்கு பேர் தூக்கிச் சுமக்கும் பல்லக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த பல்லக்கில் காதம்பரி ஏரி அமர்ந்ததும்.
வள்ளியும், கந்தவேலரும், பூரணம் அம்மையாரோடு ஒற்றை குதிரை பூட்டிய ரதத்தில் ஏறி அமர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து, நான்கு ரகங்களில் கதம்ப வன தேசத்து உறவுகள் ஏறி அமர்ந்தார்கள்.
பல்லக்கு மெல்ல நகர்ந்து செல்ல அதனை தொடர்ந்து ரதங்கள் ஊர்ந்து கொண்டு சென்றது. இவர்களுக்கு பின்னால் பவுல ஆரண்ய தேசத்தின் வைத்தியரின் மனைவி காதம்பரிக்கு பிரசவம் பார்ப்பதற்காக அந்த கூட்டத்தோடு கலந்து கொண்டு பயணித்தார்.
மதியத்தில் புறப்பட்ட கூட்டம் இரவில் கதம்ப வன தேசம் சென்று அடைந்தார்கள்.
காதம்பரிக்கு ஆரத்தி எடுத்து அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.