• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
காதம்பரியும் வல்லாளனும் முதலில் மகாராணி கமலியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக தேடினார்கள். மகாராணி கமலியோ, அவரது அறைக்குள் அடைந்து கொண்டார். மகாராணி கமலிக்கு, இந்த திருமணத்திற்கு விருப்பமில்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.

வல்லாளன், "அம்மா... எல்லா மக்களும் திருமணத்தில் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாதது போல, அறைக்குள் வந்து முடங்கி கொண்டீர்களே ஏனம்மா?"

மகாராணி கமலி, "என் செல்வமே... உனது விருப்பமே, எனது விருப்பம். என்று வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை பார்த்து, இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டாயே!"

வல்லாளன், "அம்மா...."

மகாராணி கமலி, "உன் தந்தை உயிருடன் இருந்தவரை, நான் அனைத்து வைபவங்களிலும் கலந்து விட்டு சிறப்பித்தேன். போனாரோ... அன்றே இப்படிப்பட்ட வைபவங்களில் கலந்து கொள்வதில்லை. அதுவும் என் பிள்ளையாகி உன்னுடைய வைபவத்தில், நான் இந்த நிலையில் கலந்துகொண்டேன். அதால் உனக்கு ஏதாவது நேர்ந்து விடக்கூடாது என்றே... இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன்".

"அம்மா... உங்களின் இந்தக் கோலத்தால், எனக்கு என்ன ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை. முதலில் எங்கள் இருவரையும் ஆசீர்வதியுங்கள்" என்று காதம்பரியின் கையைப் பிடித்து கமலியின் கால்களில் விழ அழைத்தான்.

இருவரும் ஒன்றாக, கமலியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள்.

அதன் பிறகு, கந்தவேலர், வள்ளி தம்பதியரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்கள்.

பின்னர் இருவரும் அரசர் வருணதீரரின் பேருருவ படத்தின் முன்பு சென்று வணங்கினார்கள்.

வந்திருந்த மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும், தேசத்தின் நான்கு பகுதிகளில், பந்தி போஜனம் வழங்கப்பட்டது.

மாலையில் இருவருக்கும் முதல் இரவுக்கான ஏற்பாடுகள் செய்து வைத்த பிறகு. கந்தவேலரும் வள்ளியும் கதம்பவனத்திற்கு புறப்பட்டார்கள். காதம்பரி தாய் தந்தையை பிரிந்து செல்வதை எண்ணி துயரொற்று அழுது அரற்றினாள்.

மறுபுறம் வள்ளி, மகளை பிரிந்து செல்ல முடியாமல் அழுது கண்ணீர் வடித்தார்.

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த வல்லாளன். தன் மனைவிக்கு தாயை விட அதிக பாதுகாப்பையும். பாசத்தையும், அன்பையும், அள்ளி வழங்க வேண்டும். என்று தன் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

ஒற்றை விளக்கு சுடர் விட. ஆழ்ந்த பொன் மஞ்சள் பரவிய, அந்த அறையில், பழங்களின் நறுமணமும் ஊதுவர்த்தியின் வாசனையும். கலந்த ஒரு சுகமான நறுமணம் தவள.

வேலைப்பாடுகள் நிறைந்த மர கட்டிலில் பஞ்ச சயனத்தில் வல்லாளன் அருகில் அமர்ந்திருந்த காதம்பரிக்கு, இவை எதையும் சிந்திக்கும் மனநிலையில் இல்லாமல், தன்னுடைய தாய் தன்னை விட்டு சென்று விட்டதை எண்ணிய வருத்தத்தோடு அமர்ந்திருந்தாள்.

வல்லாளன், "இளவரசி... என்ன ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்து விட்டீர்கள்?

கவனம் கலைந்த காதம்பரி, வல்லாளனை நிமிர்ந்து பார்த்து, "மன்னித்து விடுங்கள் அரசே... நான் என்னுடைய குடும்பத்தாரை விட்டு, ஒரு நாளும் பிரிந்து இருந்ததில்லை. கன்னி மாடத்தில் இருந்தபோது கூட, என்னுடைய பாட்டி, என்னுடைய தாயார். என்று மாறி மாறி என்னோடு இருந்து கொண்டே இருப்பார்கள். இன்றுபுதியவரோடு புதிய அறையில்...."

என்று சொல்லிக் கொண்டே வந்தவள், தன்னுடைய மனதிற்கு பிடித்தவனை, புதியவர் என்று. தான் வாழ வந்த வீட்டை புதிய இடம் என்று சொல்லிவிட்டதை எண்ணி அதோடு பேச்சை நிறுத்திக் கொண்டாள் .

வல்லாளன், "சொல்லுங்கள் இளவரசி. ஏன் பேச்சை நிறுத்தி விட்டீர்கள்? நான் உங்களை பரிசீலனை ஆனவன். என்று எண்ணினேன். ஆனால். புதியவன். என்று இப்போது தான் நீங்கள் உங்கள் வாய் வார்த்தையில் சொன்னீர்கள்."

"மன்னித்து விடுங்கள் அரசே..."

"எதற்கு இந்த மன்னிப்பு? தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே?"

"நான் என்னுடைய பதியான உங்களை, புதியவர் என்று சொன்னதால்... உங்கள் மனதை காயப்படுத்தி விட்டேனே அதற்காக."

"எந்த மன்னிப்பும் அவசியம் இல்லை. நானும், தங்களோடு விளையாடுவதற்காக தான் அப்படி பேச நினைத்தேனேதவிர தவறாக எண்ணவில்லை."

இதுவரை மறந்து போன நாணம் தற்போது காதம்பரி இடம் வந்து ஒட்டிக்கொண்டது. கண்கள் இரண்டும் நிலத்தை நோக்க கைவிரல்கள் பஞ்சனையில் கோலம் இட்டுக் கொண்டிருந்தது.

வல்லாளன், கோலம் போட்டுக் கொண்டிருந்த காதம்பரியின் விரல்களை மெல்ல தீண்டி, "நான் உங்கள் விரல்களைத் தீண்டலாமா?" என்று கேட்க.

பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள் காதம்பரி.

காதம்பரியின் கையைப் பற்றிய வல்லாளன், "இந்தப் புதியவனைத் தங்களின் கணவனாக ஏற்றுக் கொள்வீர்களா?"

"இந்த புதியவரை காலையிலேயே கணவனாக ஏற்றுக் கொண்டு விட்டேனே"

"அப்படியா,"

"ஆமாம். நீங்கள் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் அரசர். நீங்கள் என்னை உங்களது துணைவியாக ஏற்றுக்கொண்டீர்களா?"

நான் உங்களை கண்ட நாள் முதலே என்னுடைய துணைவி நீங்கள் தான் என்று முடிவே செய்துவிட்டேன்.

"அரசே தாங்கள் இன்னும் என்னை இளவரசி என்றே வேற்றுமைப்படுத்தி அழைக்கிறீர்களே? உங்கள் துணைவியாக ஏற்றுக்கொண்டவரை எப்படி? அழைப்பீர்கள்? அப்படி இன்னும் என்னை அழைக்கவில்லையே?"

"நீங்களும் என்னை அரசே. அரசே என்று அடிக்கடி அழைக்கிறீர்கள். உங்கள் கணவரை இப்படியா வேறு மனிதரைப் போல அழைப்பீர்களா?"

நாக்கை கடித்துக்கொண்ட கதம்பரி மன்னித்து விடுங்கள் அன்பரே... என்று சொன்னதும்.

"ஆஹா என் காதம்பரியின் இதழ்கள், என்னை அன்பரே என்று அழைப்பது. எத்தனை இனிமையாக இருக்கிறது'. என்று அவளது முகத்தை இழுத்து தன் மார்போடு புதைத்துக் கொண்டு கொண்டு கொண்டான் வல்லாளன்.

மறுநாள் அழகாக பொழுது புலர்ந்தது. காதம்பரியும், வல்லாளனும் ஒன்றாக புறப்பட்டு அவர்கள் குடும்பம் நிர்மாணம் செய்த வருணேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்றிருந்தார்கள்.அங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டபிறகு. ஊர் எல்லையில் அமைந்துள்ள பொற்குன்றம் நீர்தேக்க அணைக்கு சென்றார்கள்.

வல்லாளன், "இந்த அணைக்கும் உனக்கும் ஒரே வயது இருக்கும்.'

ககாதம்பரி, "அது எப்படி உங்களுக்கு சரியாகத் தெரியும்?"

வல்லாளன், "எனக்கும் உனக்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம் இருக்கிறது. இந்த அணை நிர்மாணிக்கப்பட்ட போது எனக்கு 12 வயது. என் வயதில் 12 வயது கழிந்தது. உன்னுடைய வயது. அதே போல என் வயதில் 12 ஆண்டுகள் கழித்தால் இந்த அணை நிர்மானிக்கப்பட்ட ஆண்டு சரியாக இருக்கிறதே."

காதம்பரி, "அப்படியா? இந்த அணை இந்த இடத்தில், நிர்மாணிக்க வேண்டும். என்று எப்படி உங்களுக்கு யோசனை தோன்றியது?"

வல்லாளன், ''அதை சொல்ல வேண்டும் என்றால், இன்று ஒரு நாள் போதாது."

காதம்பரி, "சுருக்கமாக சொல்லுங்கள்"

வல்லாளன், "அப்படியா... சரி சொல்கிறேன் கேள். முதலில் இது ஒரு மலைக் குன்றாக இருந்தது. பிறகு ஒருநாள், என்னுடைய தந்தையார் கனவில் என்னுடையது. தாத்தனார் தோன்றி. இக்குன்றில் புதையல் இருப்பதாகவும். அதை என் மூலமாக எடுக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். அது உண்மைதானா என்று சோதனை செய்து பாருங்கள், இந்தக் குன்றுக்கு என்னை அழைத்துக் கொண்டு என் தந்தையார் வந்தார்."

காதம்பரி, "சோதனையின் முடிவு வெற்றியை தானே?" என்று ஆர்வமாக கேட்டாள்.

வல்லாளன், 'பொறுமை பொறுமை நான் சொல்வதை முழுமையாக நிதானமாக கேளு."

காதம்பரி, "சரி சொல்லுங்கள்."

வல்லாளன், "இங்கே ஒரு பாறையில், எனது கை பதியும் அளவுக்கு. ஒரு புடைப்பு ஓவியம் இருந்தது. அதில் நான் கை வைத்ததும் மலைக்குன்று வெடித்து சிதறியது. நாங்கள் அனைவரும் பயந்து. இந்த இடத்தை விட்டு ஓடி சென்றோம். பிறகு மலைக்குன்று பொன்னாக ஜொலித்தது. அந்த பொண்ணை வெட்டி எடுத்த பிறகு அந்த குழியை நீர்த்தேக்க அணையாக மாற்றினார் என்னுடைய தந்தை."

"அப்படி என்றால் இந்த புதைய இன்னும் உங்களிடம் இருக்கிறதா?"

"தற்போது எங்கே இருக்கிறது என்று எனக்கு சரிவர தெரியாது. என்னுடைய தந்தையார், அப்போது தேசத்து மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக வாக்குக் கொடுத்தார். அதன்படி என்னுடைய தாயார் பகிர்ந்து கொண்டார். எஞ்சிய பொன் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை காதம்பரி."

"இந்த கதையை நானும் செவியுற்றேன். அந்த பொன் பரிசுக்காக, எங்களுக்கு அந்த தேசத்தை உங்கள் தந்தை கொடுத்தார் என்பது எனக்கு தெரியும். வருடம் குறைவு. ஏனெனில் அப்போது நான் பிறந்திருந்தேனாம்".

"எல்லாம் தெரிந்து கொண்டு தான் தெரியாதவள் போல, என்னிடம் கதை கேட்டாயோ?"

"அன்பரே கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் சொன்ன இத்தனை விவரங்களும் எனக்கு தெரியாது. என் தந்தையார் நான் பிறந்தபோது, பொன் பொக்கிஷம் கிடைத்ததாகவும். அதற்காக அந்த கதம்பவன தேசம். எங்களுக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாகவும். இதற்கெல்லாம் காரணம் என்னுடைய வருகை என்றும். நான் அவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும். எப்போதும் வாய் வார்த்தையாக சொல்லிக் கொள்வார்கள். அதைத்தான் சொன்னேன்."

"பொன் பொக்கிஷம் எப்படி என்னுடையது ஆனதோ. இந்த பெண் பொக்கிஷமும் தற்போது என்னுடையதாய்விட்டதே"

"அப்பப்பா போதும். நீங்களும் கந்தவேலர் அவர்களைப் போல மாறிவிடாதீர்கள்."

"என் மனைவி எனக்கு பொக்கிஷம் தானே. அதை சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வது என்னுடைய பொறுப்பல்லவா?"

"அதெல்லாம் இருக்கட்டும். இத்தனை தான தர்மங்களை செய்த, தங்களின் தந்தை இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கலாம். நல்லவர்களுக்கு இப்பூமியில் இடம் இல்லாமல் போய்விட்டது."

"அதுதான் எனக்கும் வருத்தமாக இருக்கிறது காதம்பரி. தர்மம் தலைகாக்கும் என்பதெல்லாம் பொய்யா? என்று கூட சில நேரங்களில் தோன்றும். தர்மவான் என் தந்தை அவரது தலையை காக்க தவறிவிட்டது அந்த தர்ம தேவதை."

"தர்மவான்கள், தங்களின் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும். அதனால் அவர்களை அழைத்துச் சென்றுவிட்டார்கள் பரிகாசிக்காதீர்கள்."

"என்னுடைய மகாராணி சொன்ன பிறகு தெய்வம் நிந்தனை செய்வேனா?" என்ற வல்லாளன் காதம்பரியை தன்னோடு சேர்த்து அணைத்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top