Member
- Joined
- Nov 8, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
"கந்த மகா பர்வதத்தில், நான் இறைச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது. ஒரு குழந்தையின் அழுகை குரல் என் செவிகளை எட்டியது. நானும் அந்த குழந்தை எங்கிருக்கிறது? எப்படி இந்த வனத்திற்குள் வந்திருக்கும்? என்று பல்வேறு யோசனைகளோடு சுற்றி அலைந்து திரிந்து தேடிப் பார்த்தேன். ஆனால் குழந்தை என் கண்களில் தட்டுப்படவில்லை. சிறிது தூரம் குரல் வந்த திசையில் சென்று பார்த்தேன். அங்கே ஒரு குரங்கு குட்டி கதறி அழுது கொண்டிருந்தது. அந்த குட்டியின் தாய் இறந்து மண்ணில் கிடந்தது. அதை என்னால் தேற்ற முடியவில்லை. அதன் புத்தியை வேறு வழி தெரியாமல். அதன் பிறப்பையே மாற்றி, மனித குழந்தையாக உருமாற்றம் செய்து. அந்த மதியை மறக்கச் செய்தேன். அந்த குழந்தையை தான் உங்களுக்கு நான் வளர்க்க கொடுத்தேன். இந்த உண்மையை, நான் அப்போது சொல்லாமல் மறைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்." என்று மந்தி மகாமுனிவர், காதம்பரியின் பிறப்பு ரகசியத்தை கந்தவேலர் மற்றும் வள்ளியிடம் தெரிவித்தார்.
வள்ளி, ''சாமி அந்த குழந்தை எங்கள் வீட்டின் மகாலட்சுமி. அவள் வந்த பிறகே எங்களுக்கு இந்த அரசு போகம். செல்வமெல்லாம் சேர்ந்தது. அப்படி ஒரு செல்பாம்பிகையை கொடுப்பதற்கு நாங்கள் தான் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை."
கந்தவேலர், "சாமி என்னுடைய மகள் காதம்பரிக்கு வரும் ஐப்பசி மாதம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது."
மந்தி மகா முனிவர், "மிக்க மகிழ்ச்சி காதம்பரியை மணந்து போகும், அதிர்ஷ்டக்காரன் யார் என்று, நான் தெரிந்து கொள்ளலாமா?"
கந்தவேலர், "நிச்சயமாக"
வள்ளி, கந்தவேலர் வாய் திறக்கும் முன்பாக, "எங்கள் தேசத்தை, எங்களுக்கு தானமாகக் கொடுத்த வள்ளல் பெருமான். வருண தீரரின் மைந்தர் வல்லாளன். என்ற நாமம் உடையவர். என்னுடைய மகள் காதம்பரியை மணந்து கொள்ளப் போகும் மணவாளர்."
முனிவர், "மிக்க மகிழ்ச்சி. நான் உங்கள் தேசத்தில், இந்த இடத்தில் சிறிது காலம் தங்கிக்கொள்ள அனுமதிப்பீர்கள் தானே?"
கந்தவேலர், "என்ன வார்த்தை கேட்டு விட்டீர்கள் சுவாமி. இந்த போகம் அனைத்திற்கும் உடைமை பட்டவர் நீங்கள்தான். நீங்கள் அன்று அந்த மகாலட்சுமியை எங்களுக்குக் கொடுத்து அருள் செய்யவில்லை என்றால்... நாங்களும் ஒரு சாதாரண பிரஜையாக வாழ்ந்திருப்போம்."
முனிவர், 'எனக்கும் உங்கள் பெண்ணை நேரில் காண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது."
வள்ளி, "இப்போதே சென்று என்னுடைய மகனையும் மகளையும் இங்கே அழைத்து வருகிறேன்."
கந்தவேலர் வள்ளியை தடுத்து பிடித்து. “முதலில் பயந்து கிடக்கும் மக்களிடம், சுவாமி சாத்வீகமானவர். நமக்குத் தெரிந்தவர் என்று சொல்ல வேண்டும். வரலாம்”. பொறுமையாக இரு. என்று சொன்னவர், முனிவரைப் பார்த்து, "சாமி தங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம். என்னுடைய மகளைப் பற்றிய பிறப்பு ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது. மூலமாக. நிச்சயம் தெரிந்து விடக்கூடாது"
முனிவர், "நீங்கள் பயம் கொள்ள வேண்டியது அவசியம் இல்லை. உங்களிடம் ஒப்படைத்த குழந்தை. அதைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்களிடம் தெரிவித்தேன்."
கந்தவேலரும், வள்ளியும், முனிவரை வணங்கி விடை பெற்று சென்றார்கள்.
அவர்கள், தேசத்தின் மக்களிடம், "மந்தி (குரங்கு) முகத்தோடு இருப்பவர் ராட்சசன் அல்ல. ஒரு மகா முனிவர் என்றும் அவர் நமது தேசத்தில் தங்க அனுமதிக்க வேண்டும். அதனால் உங்களுக்கு நல்ல பல வரங்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார்கள்."
கந்தவேலர், மற்றும் வள்ளியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டது. முனிவரை, அவர்கள் தேசத்தில் தங்க மக்கள் அனைவரும் ஒருமித்த மனதோடு சம்மதம் தெரிவித்தார்கள்.
அந்த மக்கள் அனைவரும் பயமின்றி முனிவரை அணுகி தங்களது பிரச்சனைகளை தெரிவித்து அதற்கான பரிகாரங்களை தேடிக் கொண்டிருந்தனர். முனிவரும் மக்களோடு மக்களாக நன்கு பழக தொடங்கியிருந்தார்.
காதம்பரியும், வருணனும், முனிவரையும் சந்தித்து ஆசிரமத்திற்கு தேவையான சிறு உதவிகள், வேலைகள் செய்து கொடுப்பார்கள்.
அப்படி ஒரு நாள் முனிவரது ஆசிரமத்தில் பூந்தோட்டம் அமைப்பதற்காக காதம்பரியும், வருணனும் முனிவரோடு சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அதே நேரத்தில் வல்லாளனும் காதம்பரியை பார்ப்பதற்காக ஆசிரமத்தை கடந்து சென்று கொண்டிருந்தான்.
வல்லாளனை பார்த்த வருணன், "மாமா" என்று சத்தம் கொடுத்து அவனை நிறுத்தினான். ஆசிரமத்திற்கு அழைத்தான்.
வல்லாளன் ஆசிரமத்திற்கு வந்து. முனிவரை தரிசித்து. காதம்பரியோடு சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
வல்லாளன், காதம்பரியின் திருமணம் இன்று நடைபெறவிருக்கும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், வகுள ஆரண்ய தேசத்தில், திருமண ஏற்பாடுகள் வெகு ஜோராக நடந்து கொண்டு இருந்தது. ஆனால் மகாராணி கமலியின் தலையில் அமர்ந்திருக்கும் பிரம யட்சிணி காதம்பரியை மணமகளாக கட்டி கொண்டு வர வேண்டாம். அவள் இந்த சாபத்துக்கு பரிகாரமாக ஆகிவிடுவாள். என்று தடுத்து நிறுத்த பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தாள்..
திருமாங்கல்யம் செய்து. பொற்கொல்லர் கொண்டு வந்து அரண்மனையில் கொடுத்தார்.
அதை கையில் வாங்கி பார்த்த மகாராணி என்னுடைய பொன் எப்படி வீணாய் போகிறது என்று மனதிற்குள் குமுறினாள்.
மறுநாள் அனைவரும், தேசத்திற்கு மையத்தில் உள்ள. வருணேஸ்வரர் திருக்கோவிலுக்கு, திருமாங்கல்யம் கூரை புடவை வைத்து வழிபாடு செய்தனர்.
திருமணத்திற்கு முதல் நாள் பெண் அழைப்பு வைபவம், மிக விமர்சையாக கதம்பவன தேசத்தில் இருந்து தொடங்கியது.
ஒற்றை பல்லக்கில் காதம்பரி அமர்ந்திருக்க, வீரர்கள் நால்வர் சுமந்து வர. அவர்களை பின்தொடர்ந்து சீர் வரிசை, மங்கள பொருட்கள், போன்றவற்றை சுமந்து கொண்டு பெண்கள் அணிவகுக்க. அவர்களுக்கு பின்பு ஆண்கள் அணிவகுத்துவர. பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
கதம்ப வன தேசத்து மக்கள் அனைவரும் முன்பு வகுள ஆரண்ய தேசத்தில் வாழ்ந்தவர்கள். ஏனெனில் அவரவர் சொந்த பந்தங்கள் இல்லங்களில் சென்று தங்கினார்கள். அதைப்போல கந்தவேலர், தன்னுடைய பழைய வீட்டில் குடும்பத்தோடு சென்று தங்கி கொண்டார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் தேசத்தின் மக்கள் அனைவரும் எழுந்து புறப்பட்டு வருணீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்றனர். திருமணத்திற்கான மங்களப் பொருட்கள் அனைத்தையும் இறைவன் முன்பு சமர்ப்பித்து முதல் பூஜை செய்தார்கள். அங்கே மணமகன் வல்லாளனை அலங்கரித்து, ஒற்றை குதிரை பூட்டிய ரதத்தில் அமர்த்தி அந்த ரதத்திற்கு முன்பு மேளதாளங்கள் முழங்க இசைக்கலைஞர்களும் ரகத்திற்கு பின்புறம் உள்ள மங்களப் பொருட்களை ஏந்திய சுமங்கலி பெண்களும் அவர்களை தொடர்ந்து ஆண்களும் அவர்களை தொடர்பு தேசத்தின் மக்கள் அனைவரும் மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நடத்தி வந்தார்கள். அரண்மனையின் மைய மண்டபத்தில் மணவரை பந்தல் அமைக்கப்பட்டது. அங்கே அர்ச்சகர் மந்திரங்கள் ஓதி கொண்டிருந்தார்.
திருமணத்திற்காக தரிவிக்கப்பட்ட கூரை புடவையை கையில் எடுத்த அர்ச்சகர்கள். அங்கே கூடியிருந்த சுமங்கலிகள் இடம் கொடுத்து.. மணமகளை அலங்கரித்து கொண்டு. அழைத்து வருமாறு கூறினார்.
அவர்கள் கூரை புடவையை காதம்பரிக்கு அணிவித்து. பூக்கள் சூட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தார்கள்.
காதம்பரியை மனவறையில் அமர்த்திய பிறகு. மாப்பிள்ளையை எதிநோக்கி காத்திருந்தார்கள் சுமங்கலிகள்.
வல்லாளன் அரண்மனை வாயிலை வந்தடைந்ததும் நான்கு சுமங்கலிகள் கூடி ஆரத்தி எடுத்து அழைத்து வந்தார்கள்.
வல்லாளனை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்த கந்தவேலர் மலர் மாலையை அணிவித்தார். வருணன் வல்லாளனது காலை பிடித்து, தன்னுடைய தொடை மேல் வைத்து. மெட்டி அணிவித்து விட்டான். அந்த சம்பிரதாய சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது இறுதியில் காசி யாத்திரை செல்வதாக புறப்படுவான் வல்லாளன் அவனை தடுத்து அழைத்து வந்து மனவறையில் அமர்த்தி வைப்பார் கந்தவேலர் வேத மந்திரங்கள் முழங்க. திருமாங்கல்யத்தை எடுத்து கூடியிருந்த மக்களிடம் ஆசீர்வாதம் பெற்று வருமாறு ஒரு பெண்ணிடம் கொடுத்து அனுப்பினார். மற்றொரு பெண்ணிடம் அட்சதையை தாம்பளத்தில் கொடுத்து அனுப்பி வைத்தார் அர்ச்சகர்.
திருமாங்கல்ய நாணை ஆசை பெற்று வந்த பிறகு, வாங்கிய அர்ச்சகர். அனைத்து பெரியவர்களுக்கும் தெரிய வல்லாளரது கையில் சமர்ப்பித்தார்.
காதம்பரி இருகரம் கூப்பி, தலை கவிழ்ந்து, திருமாங்கல்ய நாணை ஏற்பதற்கு தயாராக அமர்ந்திருந்தாள்.
வல்லாளன் திருமாங்கல்ய நானோடு கூடிய தாலியை. காதம்பரியின் கழுத்தில், மாலை போல் அணிவித்து விட்டான். மேல தாளங்கள் முழங்க அர்ச்சகர்கள் மந்திர கோஷம் ஒலிக்க. கூடியிருந்த மக்கள் எல்லாம் மலர் மாரி பொழிய. தம்பதிகள் இருவரும் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள்.