• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
காதம்பரியை, நீங்கள் பிறந்து வளர்ந்த தேசத்திற்கு, மருமகளாக அனுப்பப்பட்ட இத்தனை பயம் கொள்கிறீர்களே எதற்காக என்று நான் அறிந்து கொள்ளலாமா? என்றார் ராஜகுரு.

கந்தவேலர், "ஐயனே தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. அரசியார் மிகவும் நல்லவர். பொன் புதையல் கிடைக்கும் வரையில். புதையல் கைக்கு கிடைத்த பிறகு, அவரது குண நலன்கள் முற்றிலும் மாறுபட்டு விட்டது. அவரிடம் எனது பெண்ணைக் கொடுத்து அவள் சுகமாக இருப்பாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்".என்று கையெடுத்து கும்பிட்டார்.

ராஜகுரு, "எனக்கு நன்றாக புரிகிறது. அரசியார் தற்போது முற்றிலும் மாறுபட்டு தான் இருக்கிறார். அதோடு அரசர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களும் அரசியாரை கண்ட இடங்களில் கண்டபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வல்லாளன் நமது அரசரின் உயிர் அல்லவா! அவரைப் போன்று அவனும் இளகிய மனம் படைத்தவன். மக்களுக்காக எதையும் செய்யக் கூடியவன். அவன் தற்போது ராணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்... சுயம் மறந்து, தாய்ப்பாசத்தில், கண்மூடி கிடக்கின்றான். அவனை தட்டி எழுப்பும் வல்லமை உம்முடைய பெண்ணுக்கு இருக்கிறது. என்ற நம்பிக்கையில் தானே நான் இதில் தலையிட்டு, பெண் கேட்டு வந்திருக்கிறேன். உன்னுடைய மகள் நமது தேசத்தில் மருமகளாக அடுத்த அரசியாக அரியாசனத்தில் அமர்ந்து, அவனது புத்தியை நல்வழி படுத்தி, நெறி கொள்ளச் செய்ய, நீங்கள் இதற்கு சம்மதித்து ஆக வேண்டும். அது உன்னுடைய மகளால் நிச்சயம் முடியும் என்று நான் கேட்டேன்." என்று கூப்பிய கரங்கள் இரண்டை பற்றி மன்றாடினார்.

வள்ளி, "வேண்டாம் என்று மறுத்துவிடுங்கள்." என்று கண்களால் ஜாடை செய்தார்."

காதம்பரி, "அரச போக வாழ்க்கை வேண்டாம் அப்பா. நீங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று விடுங்கள்." என்று மனதால் வேண்டினாள்.

வருணன், "அப்பா... ராஜகுரு சொல்வதைப்போல, அக்காவால் எதையும் சாதிக்க முடியும். அவள் மனது வைத்தால் அரசனை அந்த மாய வலையில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தான். வந்தான். வந்தான். வந்தான். வந்தான். வந்தான். வந்தான். வந்தான். வர முடியும். அதனால் சம்மதம் என்று சொல்லுங்கள் அப்பா..."

வள்ளி விரைவாக, "நீ சிறுவன். உனது வயதுக்கு ஏற்ற பேச்சை பேசி பழகு." என்று தடுத்தார்.

ராஜகுரு, "உண்மையில் உங்கள் மகன் சிறுவன் தான். இந்த 12, 13 வயது பாலகனுக்கு தோன்றும் எண்ணம், சிறிதும் உங்களுக்கு தோன்றவில்லையே! சற்று வருத்தமாக தான் இருக்கிறது. பரவாயில்லை. நான் அரசியார் அனுப்பி இங்கு வரவில்லை. வல்லாளன் அனுப்பியே இங்கு வந்தேன். அவன் விரும்பும் பெண் கேட்டு அனுப்பி வைத்தான். அரசிக்கு இதில் துளியும் விருப்பமில்லை. வல்லாளன் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற விருப்பமுள்ள நான்... அவன் நல்லவன் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் உடைய நீங்கள் சம்மதிப்பீர்கள். என்று நம்பி வந்து ஏமாந்து போனேன். பரவாயில்லை. நான் வல்லாளனிடம், உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்று சொல்ல மாட்டேன். உங்கள் பெண்ணை வேறொருவருக்கு நிச்சயித்து விட்டீர்கள் என்று சொல்லி சமாளித்துக் கொள்ளுங்கள்." என்று கம்மிய குரலில் பேசினார்.

கந்தவேலர், "குரு தேவரே என்னை
மன்னித்து விடுங்கள். அரசர் வருண தீரர் இருந்தவரை, நான் ராஜ விசுவாசியாக வாழ்ந்தேன். எப்போது அவர் இறந்து போனாரோ... அப்போது எனது விசுவாசமும் சேர்ந்து மடிந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்.. என் மகளால் நலிவுற்றுக் கிடக்கும் என்னுடைய தேசம், நலம் பெறும் என்றால்... நான் என் மகளை பெண் கொடுக்க சம்மதிக்கிறேன்." என்று சொன்னதும். அவரது மனைவி

வள்ளி இடையிட்டு, "சுவாமி" என்று தடுக்க முற்பட்டவரை, கைகாட்டி அமர்த்தினார் கந்தவேலர்.

ராஜகுரு, "மிக்க மகிழ்ச்சி கந்தவேலரே... இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை நான் வல்லாளனிடம் சொல்லி, வரும் பவுர்ணமி அன்று பெண் பார்க்கும் முறையை அனுசரிக்கும். அந்த வகையில், தேசத்தில் இருந்து பெரியவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன்." என்று சந்தோஷம் பொங்க சொன்னார்.

வள்ளி, இயலாமையோடு அந்த அறையை விட்டு வெளியேறி சென்றார்.

"தான் பிறந்து வளர்ந்த தேசத்திற்கு, தனக்கு சார்பாக ஒருவரை ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணிய அப்பா... என்னை ஒப்படைத்து விட்டார். விட்டுவிட்டார்." என்று மனம் நொடிந்து போய், வள்ளியின் பின்னாலே காதம்பரியும் சென்று விட்டாள்.

வருணனும், கந்தவேலரும், ராஜ குருவை மரியாதையாக திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

காதம்பரிக்கு, தற்போது துளிர்விட்டு வந்த காதல், நிமிரும் முன்பே பட்டுப்போனது. அந்த சோகத்தில் அவளது அறையை விட்டு வெளியே வராமல் முடங்கி போனாள்.

வள்ளி, பூஜை அறையே கதி என்று கிடக்கிறார்கள். அவர் வணங்கும் தெய்வங்கள் அத்தனையும், ஒன்று கூடி, மகாராணியை எப்படியும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க விடாமல் செய்துவிட வேண்டும், மன்றாடி கொண்டு கிடக்கிறார்.

வருணன், பௌர்ணமியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறான். தன்னுடைய அக்காவை மணக்க போகும் மணவாளன், எப்பேர்பட்ட அழகனாக இருக்கிறானோ! எப்பேர்ப்பட்ட பலசாலியாக இருக்கிறானோ! என்ற அதீத எதிர்பார்ப்புகளோடு சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.

கந்தவேலர், மதியுக மந்திரியாக பணியாற்றிய அரசர். இப்போது மதி குழம்பி, பித்து பிடித்தவர் போல, அரச காரியங்களையும் சரியாக கவனிக்காமல் முடங்கிப் போய் இருக்கிறார்.

உற்சாகத்தோடு சென்ற ராஜகுரு, முதலில் வல்லாளனை சந்தித்து, தான் சென்று வந்த காரியம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை தெரிவித்தார். அந்த கணம் முதலே வல்லாளன் கதம்பரி, தனக்கானவள் என்று கற்பனையில் வாழ தொடங்கி விட்டான்.

அதன் பிறகு அரசி, கமலியிடம்,, சென்று வந்த காரியம் ஜெயமாக முடிவடைந்ததை சொல்லி, வரும் பவுர்ணமி அன்று அனைவரும் பெண் பார்க்க சென்று வர வேண்டும் என்று கூறினார்.

கமலி, வழியே சென்று பெண் கேட்டால், வரம் கிடைத்தது போல் அல்லவா இன்புற்று இருப்பார்கள். எப்படி வேண்டாம் என்று நிராகரிப்பார்கள்? அவர்கள் அரசை, இப்பேரரசின் குடையின் கீழ், ஒன்றிணைந்து சாம்ராஜ்யமாக மாற, நீங்கள் முதல் கட்ட பணியைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். நல்லது குரு தேவரே." என்று ஏளனமாக பேசி விட்டு சென்றாள்.

"உண்மைதான் அரசியாரே... நான் இரண்டு அரசுகளை ஒன்றிணைக்க வேண்டும். நான் வசிக்கும் தேசம் இருக்க வேண்டுமானால்... நல்லாட்சி அமைய வேண்டும். வேண்டுமானால்... நல்லவர்கள், இந்த தேசத்தில் நுழைய வேண்டும். அதைத்தான் இப்போது செய்து வைக்கிறேன்." என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினார் ராஜகுரு.

அங்கே அரசிக்கு, ஏவல், எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருக்கும் வைத்தியரின் குடும்பம்,. கந்தவேலர் தன்னுடைய மக்களை, தேசத்தின் அரசன் வல்லாளனுக்கு பெண் கொடுத்து சம்மதித்திருக்கிறார்கள்.. என்று தெரிந்து, பதற்றம் கொண்டார்கள்.

எல்லாரும் எதிர்பார்த்து காத்திருந்த பௌர்ணமியும் வந்துவிட்டது. வண்ணமயமான கனவுகளோடு வல்லாளன் காதம்பரியை காண தயாராகிக் கொண்டிருக்கிறான்.

விருப்பம் இல்லை என்றாலும், மகன் விருப்பத்திற்கு இணங்கி, உடன் சென்று வர வேண்டிய கட்டாயத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் அரசி கமலி.

வகுள ஆரண்ய அரண்மனையில், பெண் பார்ப்பதற்கு செல்வதற்காக. சீர் வரிசை பொருட்களாக, தேங்காய், பழம், பூ, வெற்றிலை பாக்கு, புத்தாடை, போன்றவற்றை சீர் பொருட்களாக எடுத்துக் கொண்டு அரண்மனை வாசிகள் அனைவரும் புறப்பட்டு நின்றார்கள்.

அரசி கமலி, தனி ரதத்திலும். அரசன் வல்லாளன், தனி ரதத்திலும். சீர்வரிசை பொருட்களோடு அரண்மனை வாசிகள் ஒரு ரதத்திலும், என்று மூன்று ரதமும். சிலர் ரதங்களின் பின்னால் நடந்தும். கதம்பவனம் நோக்கி சென்றார்கள்.

கதம்பவன அரண்மனையில், கண்டு கொள்ள நாதியில்லை. இளவரசன் வருணன் ஏவல் ஆட்களை வைத்து, அரண்மனையில் தோரணம் கட்டி, அலங்காரம் செய்து வைத்தான். வருவோர் மனம் நோக வண்ணம் இருக்க. உணவு தயாரிக்கிறது. அக்காவின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

காதம்பரிக்கு, கண்டவுடன் காதல் ஏற்படுமா? என்ற ஐயம் இருந்தது. அதை தான் உணரும்போது நிஜம் என்று மனது ஏற்றுக் கொண்டது. ஒரு முறை பார்த்த ஒருவனை எப்படி இத்தனை தூரம் நேசிக்கத் தொடங்கினோம்? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டு இருந்தவள், இனியும் அவனது சிந்தனை நமக்கு இருக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். வருபவன் நல்லவனோ, கெட்டவனோ, இனி வாழ்க்கை முழுமையும் அவனோடு தான். என்ற முடிவோடு. பெண்பார்க்கும் படலத்துக்கு தயாராக தொடங்கினாள்.

கந்தவேலர், வருண தீரர் என்னும் மாமனிதர் பெற்ற மகனுக்கு, பெண் கொடுக்கப் போகிறோம் என்று மனதை தேற்றிக்கொண்டு. இயல்பாய் இருக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் வள்ளியின் மனது மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்பியது.

வகுள ஆரண்ய தேசத்தில் இருந்து, மன்னன் வல்லாளனும், அரசி கமலையும் வருவதை அறிவிக்கும் விதமாக. மங்கள முரசும், சங்கும் ஒலிக்கத் தொடங்கியது. அங்கே மக்கள் எல்லாரும் வாழ்க கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

காதம்பரி அரண்மனையின் மாடத்தில் நின்றபடி, வந்து கொண்டிருக்கும் ரத்தங்களை கவனித்தாள்.

மூன்று ரதங்களும் அரண்மனை வாயிலை அடைந்ததும், ரத்தத்தில் இருந்த அனைவரும் முன்பு இறங்கி வந்து நின்றார்கள். மூத்த சுமங்கலிகள் இருவர் மன்னன் வல்லாளனுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் வைத்தார்கள். மன்னர் கந்தவேலர், சந்தன மாலையை மன்னன் வல்லாளனுக்கு அணிவித்து. அரண்மனைக்குள் வரவேற்றார்.

அனைவரும் அரண்மனையின் மையக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

கமலி, ''மணமகளை சபைக்கு முன்பு அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டாள்."

காதம்பரி, ஐந்தாறு சுமங்கலிகள் மூலம் அரண்மனையின் மையக்குடத்திற்கு அழைத்து வரப்பட்டாள்.

வல்லாளன் காதம்பரியை மலர்ந்த முகம் கொண்டு, எதிர் நோக்கி அமர்ந்திருந்தான்.

காதம்பரியின் முகத்தை நிமிர்த்தி, மன்னவனின் முகத்தை பார்க்க வைத்தார்கள் சுமங்கலிகள். வல்லாளனை எதிர்பாராமல் பார்த்த உடன், காதம்பரியின் கண்கள் ஆனந்தத்தில் அருவியாய் கொட்டியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top