• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
கதம்பவன தேசம், விழா கோலம் பூண்டு. விழா கோலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வகுள ஆரண்ய தேசத்தில் இருந்து புறப்பட்டு வந்த ராஜகுரு, கடம்பவன தேசத்தில் நுழையும் போது அங்கே அன்னதான கூடத்தில் மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு களித்துக் கொண்டிருந்தார்கள்.

கதம்பவன தேசத்தில் இருக்கும் மக்களுக்கு, ராஜகுருவை நன்றாகவே தெரியும்.

அங்குள்ள மக்கள் அனைவரும், "வணக்கம் குரு தேவரே' வாருங்கள்." என்ற மரியாதை நிமித்தமாக ஏழ முயற்சித்தார்கள்.

மக்கள் அனைவரையும் ராஜகுரு, "எனக்காக எழுந்திருக்க வேண்டாம். உணவில் இருந்து எழுந்து, உணவிற்கு உண்டான மரியாதையை எல்லோரும் குறைக்க வேண்டாம். அமர்ந்து உண்ணுங்கள்."

அவ்விடத்தில் பந்தி பரிமாறிக் கொண்டிருந்த பெரியவர், "குரு தேவரே... தாங்கள் இங்கு வந்ததன் காரணம் என்னவோ?" என்று வினவ.

ராஜகுரு," நான் உங்களது தேசத்திற்கு வரக்கூடாதா?"

ஐயோ குருதேவா நாங்கள் அப்படி கேட்கவில்லை. இந்த தேசத்திற்கு நீங்கள் விஷயம் இல்லாமல் வர மாட்டீர்கள். அந்த விசேஷமான செய்தி என்னவென்று அறிந்து கொள்வதற்காகவே கேட்டோம்.."

ராஜகுரு, "அந்தச் செய்தியை விரைவில் அறிவிப்பேன். தற்போது நான், உங்களை அரசர் கந்தவேலரை சந்திக்க வந்திருக்கிறேன்."

“அரசர் கந்தவேலர், இளவரசியாரை கன்னி மாடத்தில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.இரவில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளவரசியோடு தேசத்திற்கு வருவார். "

"அப்படி என்றால் இன்று நான் உங்களை அரசரை சந்திக்க இயலாதா?"

"இன்று இரவு அரண்மனைக்கு வந்து விடுவார். ஏதேனும் அவசர செய்தி என்றால் இளவரசர் வருணர் அரண்மனையில் இருக்கிறார்கள். விவரத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்."

சரி என்று புறப்பட்ட ராஜகுரு, அரண்மனைக்குச் சென்று அங்கிருந்து இளவரசன் வருணனை சந்தித்தார்.

வருணன், ராஜகுருவை பற்றி அறிவான். ஆனால் அவரோடு பேசி பழகியது இல்லை.

வருணன்,"வாருங்கள் ராஜகுருவே! வகுள ஆரண்ய தேசத்தின் தூதுவராக தாங்கள் வந்திருப்பதன் காரணம் என்னவென்று சொல்லுங்கள்." என்று வணங்கியபடி கேட்க.

ராஜகுரு," கந்தவேலரின் மைந்தன் அவரைப் போலவே மரியாதை தெரிந்தவராக இருக்கிறீர்கள் மகிழ்ச்சி நான் தங்களிடம் இதை கூறுவது முறையல்ல தங்கள் தகப்பனாரிடம் கூறுவது சரியாக இருக்கும் அதனால் நான் அவரை சந்தித்தே விவரத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

"நல்லது. அரசர் இன்று இரவு அரண்மனை திரும்புவார்கள், அதுவரை தங்களுடைய விருந்தினர் அறையில் சற்று நேரம் ஓய்வெடுங்கள். வருணன். ''யார் அங்கே? என்று அழைக்க. இரண்டு காவலர்கள் வந்து நின்றார்கள். ''ராஜகுருவை விருந்தினர் அறையில் தங்க வைத்துவிட்டு. அவருக்கு வேண்டியதை செய்து கொடுங்கள்." என்ற உத்தரவு பிறப்பித்தது. ராஜ குருவை அவர்களோடு அனுப்பி வைத்தான் வருணன்.

வருணன், "ராஜகுரு என்ன விஷயம் பேச வந்திருப்பார்? தந்தையை பார்த்து சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் என்றால்... தேசத்தில் ஏதாவது குழப்பம் நடந்திருக்குமா? அல்லது தானமாக கொடுத்த தேசத்தை தனதுடைமை என்று கேட்டு பெற அனுப்பி இருப்பார்களா?" என்று அவனது சிந்தனை வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தது.

இரவில் கந்தவேலர், காதம்பரியை அழைத்துக் கொண்டு. தன்னுடைய மனைவி மற்றும் தாயாரோடு அரண்மனை வந்து சேர, மேளம் இசைக்க, மத்தளம் முழங்க. மங்கள சங்கு முழங்க. மக்கள் நலம் விசாரிப்பு என்று மக்கள் வெள்ளத்தைக் கடந்து வர நள்ளிரவை தொட்டுவிட்டது. அதனால் ராஜகுரு அன்று இரவு சந்திப்பை தவிர்த்து, உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும். வருணன் தனது பெற்றோர் இடத்தில்,
வகுள தேசத்தின் ராஜகுரு வந்திருக்கும் தகவலை சொன்னான்.

கந்தவேலர், "வருணா... நீ, இந்த விஷயத்தை அப்போதே சொல்லி இருக்க வேண்டாமா? ஏன் இத்தனை தாமதம்?."

"நமது தேசத்தில், நேற்றைய கொண்டாட்டங்களும், நலம் விசாரிப்புகளையும், எதிர்கொண்ட நீங்கள். அரண்மனை வந்து சேர்வதற்கே நள்ளிரவை நெருங்கிவிட்ட நிலையில்... உறங்கிக் கொண்டிருப்பவரை, எப்படி எழுப்பி பேச இயலும்? என்று சிந்தித்து. அப்போது சொல்லாமல் தவிர்த்துவிட்டேன்."

கந்தவேலர், "சரி வாருங்கள். அனைவரும் ராஜ குருவிடம் ஆசைகள் பெறலாம்." என்ற மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு விருந்தினர் அறைக்கு விரைந்து வந்தார் கந்தவேலர்.

அதே நேரத்தில் விருந்தினர் அறையில் தங்கி இருந்த ராஜ குரு, காலையில் எழுந்து தனது காலை கடன்களை முடித்து. கதிரவன் வழிபாடு செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

கந்தவேலர், அந்த அறையின் கதவை தட்டி, "குரு தேவரே" என்று அழைக்கவும். கதவை திறந்து வரவேற்றார் ராஜகுரு.

ராஜகுரு, ''கந்தவேலா.... என்று ஒருமையில் உரிமையோடு அழைத்த மறுகணம்.மன்னிக்கவும் கந்தவேலரே தாங்கள் நலம்தானே?"

"குரு தேவரே... தாங்கள், என்னை எப்போதும் போல கந்தவேலா... என்று உரிமையாய் அழைப்பதையே நான் விரும்புவேன்."

"நான் என்னுடைய மாணவனாய் இருந்த கந்தவேலனை, உரிமையாய் அழைப்பது வேறு. தற்போது ஒரு தேசத்தின் மன்னனை, பெயர் சொல்லி அழைப்பது தவறு. சரி வாருங்கள்." என்று அறைக்குள் அழைத்துச் சென்று, நால்வரையும் அமரச் சொன்னார் ராஜகுரு.

ராஜகுரு, கந்தவேலரின் மகள் காதம்பரியை கண்ணிமைக்காமல் பார்த்து மகிழ்ந்தவர், ''கந்தவேலரே நான் தங்களை சந்திக்க வந்த நோக்கம் என்னவென்று அறிவீர்களா? என்று பீடிகையுடன் பேச்சை தொடங்கினார்.

"குருதேவா... தாங்கள், என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக அது நல்ல காரியமாகத்தான் இருக்கும். தாங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்." என்றதும் காதம்பரியும், வருணனும் எழுந்து நமஸ்கரித்தபடி நின்றார்கள்.

குருதேவர் எழுந்து நிற்க. இருவரும் அவரது காலில் விழுந்து வணங்கினார்கள். "நல்லபடியாக இருப்பீர்கள் குழந்தைகளே..." என்று ஆசீர்வதித்த ராஜகுரு. அவர்கள் தலையில் கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.

"
கந்தவேலரே... நான் வந்த விஷயத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறேன்.
நான் உங்களுடைய மகளை, அரசன் வல்லாளகண்டனுக்கு பெண் கேட்டு வந்திருக்கிறேன்". என்று முகமலர்ச்சியோடு, குருதேவர், தான் வந்த காரியத்தை சொல்லி முடித்தார்.

எதிரில் இருந்த நான்கு பேரில்... வருணனைத் தவிர, மற்ற மூவரும், மூன்று விதமான முக பாவனைகளோடு அமைதியாக நின்றார்கள்.

வருணனுக்கு, காதம்பரியை, வகுள தேச அரசனுக்கு கொடுப்பதற்கு முழு சம்மதம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. "தன்னுடைய சகோதரியை, தன்னுடைய தாய் தேசத்துக்கு மணமாக கொடுத்துவிட்டால்... இனி தன்னுடைய தேசத்தை யாரும் சொந்தம் கொண்டாடி, மீண்டும் கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்பதாக இருந்தாலும் தன்னுடைய அக்காவும், அக்காவின் கணவரும் தான் கேட்க வேண்டும். அதை அக்கா எப்படியும் கேட்க விடாமல் தடுத்து விடுவாள்." என்று அவனுக்குள் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் கந்தவேலருக்கு, மகாராணியின் செயல்கள், மற்றும் மகாராஜா வருண தீரர் இறப்புக்கு, மகாராணியே காரணம் என்ற உண்மையும், உருத்தலாக இருந்தது. தன்னுடைய மக்களை தெரிந்திருந்தே... ஒரு நரகத்துக்குள் தள்ள முடியுமா? என்றும், நாம் கொடுக்க மறுத்தால்... இதன் மூலம் நாட்டில் ஏதேனும் போர் அபாயங்கள் ஏற்படுமோ! என்ற சிந்தனையும் ஒருசேர வந்தது.

வள்ளியம்மாளுக்கு, கந்தவேலர் முன்பு சொல்லியிருந்த, மகாராணியின் குணநலன்கள் பற்றிய பயம் அடிவயிரை கவ்வி பிடித்தது.

காதம்பரிக்கு, தான்.... கன்னி மாடத்தில் கண்ட, மனிதநேயமிக்க, அந்த ஒருவனை, மனதிற்கே தெரியாமல் பிடித்து போய்விட்டது. "அவனால் தான் தன்னுடைய பாட்டியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அவன் தன்னோடு ஆயுள் முழுமையும் இருந்தால்... அதைப் போல ஆறுதல் வேறு எதுவும் இல்லை முடியாது. அவன் யார் என்று அறியும் முன்பே நாம் இந்த தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்டு விடுவோமோ.." என்ற அச்சம் அவளது மனதை வாட்டியது.

ராஜகுருவுக்கு, தான் கேட்ட கேள்விக்குப் பிறகு, அந்த அறையே நிசப்தமாய் போனதை அறிந்ததும், "கந்தவேலரே... ஏன் இப்படி மௌனமாகி போனீர்கள். வேறு யாராவது. பெண் கேட்டு, நீங்கள் பெண் கொடுப்பதாக வாக்கு கொடுத்து இருக்கிறீர்களா? நான் கேட்டதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? உங்கள் மனதில் தோன்றியதை மறைக்காமல் சொல்லிவிடுங்கள்."

கந்தவேலர் வாய் திறக்கும் முன்பே.... வள்ளி,"மன்னித்து விடுங்கள் குருதேவரே. தெரிந்திருந்தும் யாராவது பாழும் கிணற்றில் தங்கள் பிள்ளையை தள்ளிவிடுங்கள். சம்மதிப்பார்களா? அதனால்தான் அவர் பேச்சற்று போய்விட்டார்."

வள்ளியின் பேச்சை கேட்ட வருணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "அப்படி என்ன பெரிய ஆபத்து இருக்கிறது? எதற்காக தாயும், தந்தையும் பதற்றப்படுகிறார்கள்? குருதேவர் என்ன சொல்ல போகிறார்?" என்ற ஆர்வத்தோடு, ராஜகுருவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

காதம்பரிக்கு, வள்ளியின் பேச்சு சற்று ஆறுதலாக இருந்தது. எப்படியும் தன் மனதில் இருக்கும் அந்த மன்னவனை கண்டுபிடித்து, அவனுக்கே மாலையிட்டு விடலாம். என்று மகிழ்ச்சி தலை தூக்கியது.

கந்தவேலருக்கு, வள்ளி அவசரப்பட்டு வேறு எதையாவது உளறி விடுவாளோ... என்று பயம் தொற்றிக் கொண்டது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top