Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 64
- Thread Author
- #1




முல்லை குழப்பத்தில் இருக்க, கதிர் அவன் வீட்டில் முல்லைக்கு துணையாக மணியை இருக்க சொன்னவன் வெளியே செல்ல, கதிர் சென்ற நேரம் கதிரின் மாமன்கள் ராஜசேகரன், தனசேகரனுடன் கதிரின் அப்பா சேரன் கதிரின் வீட்டுக்குள் வந்தனர்.
முல்லையையும் மணியையும் மிரட்டி ,மணியை அடித்துப்போட்டு முல்லையை விஷம் அருந்தச் சொன்னார்கள். அவளும் பயந்து போய் அழுது கொண்டு இருந்தவள், கையில் சேரன் விஷத்தை தந்து குடிக்க சொல்ல, முல்லை வாங்கி குடிக்கப்போன சமயம் வீட்டின் வாசற்கதவு தட்டப்பட்டது.
“யாரடா இந்த நேரத்துல?” சேரன் வீட்டு கதவை திறக்கவும் கதிர் சிரித்தப்படி வீட்டிற்குள் நுழைந்தான்.
“டேய் கதிர் நீ எங்கடா இங்க?” என்று அதிர்ந்தார் சேரன்.
“அததான் நானும் கேக்குறேன். நீ எங்க இங்க? உனக்கு என்னமோ தலையில அடிபட்டு மல்லாக்க இருக்கன்னு சொன்னாங்க” என்றான் நக்கலாக.
“நீ செஞ்ச அசிங்கத்தை சரி செய்யாம நான் போக மாட்டேன்டா.”
“நீயெல்லாம் ஒரு அப்பன். சரி சரி வழியில நிக்காம கொஞ்சம் தள்ளி நில்லு” என்று அவரை நகர்த்தி கதிர் வீட்டுக்குள் வர, முல்லை அனத்தும் சத்தம் கேட்ட கதிர் அவன் அறைக்குள் சென்றான்.
அவனை பார்த்ததும் முல்லை அழுதபடி அவனை கட்டிக்கொண்டு, “கதிர் கதிர் என்னை இவங்க...” பேச முடியாது திணற,
“என்னாச்சு ஏன் அழுற?”
“உன் அப்பா என்னை விஷம் குடிக்க சொல்லுறாரு.”
“மச்சான் இங்க பாருடா இவனுங்க பண்ற அநியாயத்தை” என்று மணி சத்தம் கொடுக்க, மூவர் மேலும் கோபம் வந்த கதிர் நிதானமாக யோசிக்கலானான்.
“டேய் கதிர் நம்ம குடும்ப கௌவரத்தை குழி தோண்டி புதைச்சுட்டுட்ட இல்ல” என்று தனசேகரன் கேட்க,
“ஸ்ஸ்ஸ்... ஏன் பேசுனதையே பேசுற. வேற எதாவது பேசு கேப்போம்” என்றான் தெளிவாய்.
“டேய் தம்பி இவன்கிட்ட என்ன பேச்சு. இந்த கீழ் ஜாதி ஜென்மத்துக்கு விஷத்தை தந்து இவளை இவ அப்பன் போன இடத்துக்கே அனுப்பி வை. இந்த கதிர் பையயலை அடிச்சு காருல தூக்கி வீசு.”
“யாரு நீங்க என்னை அடிக்க போறிங்களா? செம்ம காமெடியா பேசுறீங்க” என நக்கலாகக் கேட்டான்
“என்ன மச்சான் நீ இவ்வளவு கூலா பேசுற.”
“எமன் கண் முன் நிக்கும் போது கூட உனக்கு இவ்வளவு திமிரா” ராஜசேகரன் கதிரை முறைக்க,
“முல்லை இப்ப சொல்லு இவங்கள என்ன பண்ணலாம்?” மனைவியிடம் கேட்டான்.
“வேணாம் கதிர் நம்ம இங்க இருந்து போயிடலாம் வா.”
“உங்கள கானா பிணமா ஆக்காம நாங்க போக மாட்டோம்.” என நின்றனர் மூவரும்.
“மணி நீ முல்லையை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போ .நான் இவங்ககிட்ட ஒரு டீல் பேசிட்டு வரேன்.”
“மச்சான் இங்க என்ன நடக்குது. நீ என்னடா இவனுங்ககிட்ட டீல் பேசப் போறேன் சொல்ற?”
“டூ வாட் ஐ சே மணி” என்று கத்த,
“பாப்பா நீ வாமா வீட்டுக்குப் போகலாம்” என்றான் மணி.
“இல்ல நான் வரமாட்டேன். கதிர் நீயும் வா போகலாம்.”
“செல்லக்குட்டி நீ என் மச்சான் கூட மாடிக்கு போ. உன் மச்சான் நான் கொஞ்ச நேரத்துல வரேன். ஓகேவா செல்லம்.”
“இல்ல நான் போக மாட்டேன்” என்றாள் அடமாக.
“நான் சொன்னா கேப்பியா, மாட்டியா?”
“ம்... கேப்பேன்.”
“அப்போ இவன் கூட மாடில வெயிட் பண்ணு. மச்சான் முல்லையை மாடியில விட்டுட்டு நீ கீழே வா.”
“சரிடா” என்று முல்லையை அழைத்துச் செல்ல,
“ஏய் எங்கடி போற? என்ற ராஜா முல்லை கையை பிடிக்கப்போக,
“ஐயோ கதிர்” என்று முல்லை அலற, ராஜா மூக்கில் ஒரு குத்து விட்டவன், “நான் இருக்கும் போதே என் பொண்டாட்டி மேல கை வைப்பியா. இரு உனக்கு...” என்று கையைத் திருக்க,
"ஐயோ என் கை. கை ஆஆ....” என்று அவர் அலறினார்.
“டேய் என் அண்ணனை விடுடா” என்று தனசேகரன் வர, கதிர் அவரின் வாயை பார்த்து ஒரு குத்து விட, தனசேகர் அதே இடத்தில் மண்டியிட்டார்.
“கதிர்” என்றழைத்த மனைவியிடம். “நீ மாடிக்கு போ முல்ல” என்றான்.
“டேய் கதிர் என்னடா, என்ன நினைச்சிட்டு இருக்குற? ஜாதி கெட்ட ஜென்மத்தை கல்யாணம் பண்ணிட்டு, தட்டிக்கேட்ட உன் மாமான்களை வேற அடிக்கிறியா. வேணாம்டா நீ ரொம்ப தப்பு பண்ணுற” என்றார் சேரன்.
“யோவ் தப்பு மட்டுமே பண்ணுற நீ, எனக்கு புத்தி சொல்றியா. அவனுங்கள கூட நான் மன்னிப்பேன். ஆனா, உன்னை என்னால மன்னிக்கவே முடியாது. ஊருக்கு நல்லவன் வேஷம் போட்டுக்கிட்டு, மனசுக்குள்ள எவ்வளவு நஞ்சை வளத்து வச்சி இருக்குற. ஜாதி, மதம் எல்லாம் இருக்கு தான். ஆனா ஒரு உயிரை கொன்றுதான் நீங்க எல்லாம் உங்க ஜாதிக்கு பெருமை சேப்பீங்களோ?”
“நீ ரொம்ப பேசுற கதிர். இரு உன்ன...” சேரன் கதிரை அடிக்க அருகில் இருந்த சேரை எடுக்க, கதிர் சேரன் கழுத்தை பிடித்தவன், “உங்களுக்கு எல்லாம் பெற்ற பிள்ளை என்ற பாசம் கொஞ்சம் கூட இல்ல?”
“நீ எப்போ தரம் கெட்ட ஜாதியில வாயை வச்சியோ அப்போவே நீ செத்துட்டடா.”
“டேய்...” தகப்பனைப் பார்த்து கத்த,
“அப்பனையே வாடா போடான்னு சொல்றியா?”
“நீ தானேடா எனக்கு நீ அப்பன் இல்லன்னு சொன்ன.”
“கதிர் அப்பாவ அப்படி எல்லாம் சொல்லாத. நீ வா நம்ம போலாம்.”
“டேய் வீணா போனவனே. முல்லையை மாடிக்கு கூட்டிட்டு போன்னு எத்தனை தடவை சொல்லுறது. கூட்டிட்டுப் போடா” என்றான் கதிர்.
மணி முல்லையை மாடிக்கு அழைத்துப் போய் விட்டு, சற்று நிமிடத்தில் மீண்டும் கதிரின் வீட்டிற்குள் நுழைந்தான்.
“வேணா கதிரு இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. அந்த கணேசன் மவளை எங்ககிட்ட ஒப்படைச்சிட்டு நீ ராஜா மாதிரி நம்ம கிராமத்துக்கு திரும்பி வா. நாங்க அவளை போட்டு தள்ளிட்டு இந்த வழக்கை ஒன்னும் இல்லாம ஆக்கிடுறோம்.”
“யோவ் இன்னைக்கு நீங்க வெளிய இருக்க காரணமே முல்லைதான். ஆனா நீ வழக்கை ஒண்ணுமில்லாம ஆக்க போறியா?”
“மச்சான் நீ உன் கிராமத்துக்கு தானே போன. நீ எப்படிடா இங்க வந்த?”
“நான் கிராமத்துக்கு போகவே இல்லடா. அந்த கணக்கு எனக்கு கால் பண்ணும் போதே அவன் பொய் சொல்லறான்னு எனக்கு தெரிந்துடுது. அதுவும் இல்லாம முல்லை அப்பாவை இந்த ஆளு தான் கொன்னு தூக்குல தொங்க விட்டு இருக்கான்னு எனக்கு முன்னாடியே தெரியும்டா” என்றான்.
“என்னடா சொல்ற?”
“டேய் கணேசனுக்கு படிக்க தெரியாது. ஆனா அவரு கையில ஒரு லெட்டர் இருந்துச்சு தெரியுமா? அத கணக்கு பிள்ளை தான் எழுதி இருக்கான். அது மட்டும் இல்லடா. இதோ என்னை பெத்தவன் இருக்கான் பாரு, இவன் தான் கணேஷனை துடிக்க துடிக்க கொன்னு இருக்கான்.” தன் தகப்பனைக் காட்டினான்.
“ஆமாடா நான் தான் கொன்னேன்.”
“பாத்தியா மச்சான் இப்ப எல்லாம் கொலைகாரங்க தான் டிப்டாப்பா சுத்துறானுங்க.”
“கலிகாலம்டா மணி.”
“சரி இப்ப என்ன மச்சான் பண்ண போற நான் போலீஸ்க்கு கால் பண்ணவா?”
“எதுக்கு... இந்த வெறி பிடிச்சவனுங்கள பிடிச்சி ஜெயில்ல போட்டு நல்லா மூனு வேள சொத்தை போடவா?”
“வேற என்ன மச்சான் பண்ண போற?”
“இவங்க தான் கௌவராவதுக்காக உயிரை கொடுப்பாங்க இல்ல” என்று பூடகமாகக் கேட்க, ஆமாம் என்று வேகமாக தலையசைத்தான் மணி.
“அப்போ குடுக்கட்டும்” என்று சிரித்தான்.
“டேய் கதிர் என்னடா சொல்ற?” தனசேகரன் கேட்க,
“ம் உங்க உயிரை தந்துடுங்கன்னு சொல்றேன்.”
“மச்சான் புரியற மாதிரி சொல்லுடா?”
“டேய் கதிர் வேணா. நீ பின்னாடி ரொம்ப கஷ்ட்டப்படுவ.”
“அத நாங்க பின்னாடி திரும்பும் போது பாத்துப்போம். இப்ப நீங்க மூனு பேரும் என்ன பண்றீங்க இந்தாங்க இந்த விஷத்தை ஒன் பை திரியா குடிச்சிட்டு உங்க கௌரவதுக்காக உயிர விடுங்க” என்றான்.