Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 64
- Thread Author
- #1




ஈருடல் ஓர் உயிராக கடந்த நிலையில், கதிரும், முல்லைபூவும் மஞ்சத்தில் தஞ்சம் கொள்ள, மறுநாள் காலை, “ஏங்க, உங்கள தான் எழுந்துடுங்க” என்று எழுப்பினாள் முல்லை.
“என்னது ஏங்கவா?”
“ஆமா” என்றாள் வெட்கத்துடன்.
“என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு.”
“நகருங்க நான் போய் குளிக்கணும்.”
“இப்ப என்ன அவசரம்? இன்னும் வேல நிறைய இருக்கே.”
“என்ன வேலை? ஆ.. விடு கதிர்.”
“ஹ்ம் ஹ்ம் மாட்டேன்.”
“ஏன் இப்படி பண்ணுற?”
“இங்க வா முல்லை” என்றதும் “என்ன?” என்று அவள் வர, “சாரி” என்றான் கதிர்.
“எதுக்கு கதிர்?”
“நேத்து நைட்டு நான் உன்கிட்ட...” என்று நிறுத்த,
“என்ன என்கிட்ட?” என்றாள் கேள்வியாய்.
“அது இப்படி உன்ன உதட்டை...” என்று இழுத்துப் பிடிக்க, “ஆ... விடு கதிர். நான் குளிக்கணும்.”
“சேர்ந்தே குளிக்கலாம் வாடி செல்லம்.”
“என்னோட தாவணி எங்க?”
“நான் இருக்கும் போது நீ அதையெல்லாம் தேடக்கூடாது. ஓடிவா” என்று முல்லைபூவை தூக்கி சென்று, குளியல் அறையில் இருவரும் இணைந்து குளித்து முடிக்க,
“ஏன் இப்படியெல்லாம் பண்ணுற?” என்று அவனைச் செல்லமாக அடித்தாள் முல்லை.
“ஏன்னா நீ என் காதலி.”
“நான் உன் பொஞ்சாதி தானே.”
“முதல்ல நீ என் காதலி. அப்புறம்தான் என் பொஞ்சாதி.”
“சரி என் துணியைத் தா.”
“நீ இங்கேயே இரு. நான் உனக்கு டிரெஸ் எடுத்துட்டு வரேன்.” கதிர் குளியல் அறையில் இருந்து வெளியே செல்ல, முல்லைப்பூ கண்ணாடியில் தன் அழகை ரசித்தவள் கண்முன் இவளும், அவனும் கலந்திருந்த இரவு நினைவுக்கு வர, தனக்குள் சிரித்தாள்.
மீண்டும் அவளை பின்னிருந்து அணைத்த கதிர், “என்ன சிரிக்கிற?” என்றான்.
“ஒன்னுமில்லையே.”
“சொல்லுடி என்னாச்சு?”
“கதிர்” என்று சிணுங்க,
“ம்...” என்றவன் குரல் உள்ளே செல்ல, “நமக்கு பாப்பா பிறக்குமா?” என்று கேட்டாள்.
“என்னடி திடீர்னு இப்படி கேக்குற?”
“சொல்லு கதிர்.”
“ம்... பிறக்கும்தான். ஏன் கேக்குற?”
“சும்மாதான்.”
கதிர் அவளை மீண்டும் தன்வசம் இறுக்க அணைத்தவன், ”எதுக்குக் கேட்டன்னு சொல்லுடி?”
“இல்ல கதிர். நீயும் நானும் நேத்து என்னமோ பண்ணோம் இல்ல.”
“என்ன? என்னமோ பண்ணோமா?”
“ஆமா.”
“அடியே அது என்னமோ இல்லடி. என்னை உன்கிட்ட முழுசா தந்த அற்புதமான செயல். அதை என்னமோன்னு சொல்லுற.”
“ஆமாமா. ரொம்ப அற்புதம்தான். சரி ஏன் அந்த மாதிரி எல்லாம் பண்ணுனோம்?
“அதெல்லாம் அப்படிதான் பண்ணனும்.”
“ப்ச்... போ கதிர்.”
“எங்க போகச் சொல்ற?”
“வெளிய போ கதிர். இன்னைக்கு வேற நீ நீதி மன்றத்துக்கு போகணும் இல்ல.”
“ஐயோ ஆமால்ல. இன்னைக்கு தான் அந்த ஜாதி பேய்ங்க ஆட்டத்தை ஒழிக்க முடியும்.”
“ஏன் இப்ப இவ்ளோ கோவமா பேசுற?”
“ம்... ஒன்னுமில்ல சரி நீ டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.” என்று கதிர் முல்லையை அழைத்து கொண்டு நீதிமன்றம் செல்ல, முல்லையின் அப்பா கணேஷனை ஜாதி வெறிக்காகக் கொன்ற குற்றத்திற்காக, கதிரின் மாமன்கள் தனசேகர் மற்றும் ராஜசேகர் பெயரில் வழக்கு நடைபெற்றது.
“என்னமா முல்ல ஏன் நடுக்கமா இருக்க?” என்று மணி கேட்க,
“அண்ணா இங்க என்ன பண்ணுவாங்க?”
“உங்க அப்பாவை கொன்னதுக்காக இந்த ரெண்டு நாதாரிங்களை கைது செய்து தூக்குல போட்டுடுவாங்க.”
“ஐயையோ என்ன சொல்றிங்க.”
“ஆமாம்மா தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிக்கனும் தானே.”
“என்ன அண்ணா சொல்றிங்க?”
“முல்லை இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை உள்ள கூப்பிடுவாங்க. நீ உள்ள வந்து கிராமத்துல என்ன நடந்துன்னு ஒன்னுவிடாம சொல்லணும்” என்று மனைவியிடம் சொன்னான்.
“கதிர்” என்று அவள் அழைத்ததும் என்னவென அவன் பார்க்க, “வேண்டாம்” என்றாள்.
“என்ன வேணாம்?”
“நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”
“ஏய் என்ன சொல்ற? அங்க பாரு உன் அப்பாவை கொலை பண்ணவங்க கூட அஜராக வந்துட்டாங்க.”
“சொல்றதக் கேளு கதிர். அப்பா இறந்துட்டாரு தான். அதுக்காக இவங்கள தண்டிச்சா அவரு திரும்ப வரவா போறாரு. அதான் எனக்கு நீ இருக்கியே. அதுபோதும் வா கதிர் நம்ம போலாம்” என்றாள்.
“என்னமா சொல்ற? இவனுங்கள எல்லாம் தப்பிக்க விடக்கூடாது” என்றான் மணி.
“இல்ல வேணாம் கதிர். எனக்காக நீ இவங்கள ஒன்னும் பண்ணக்கூடாது.”
“ஏய் என்ன பேசுற நீ? இவங்க உன் அப்பாவை சாகடிச்சிருக்காங்க இவங்களுக்கு போய் பாரபட்சம் பாக்குற.”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. இவங்கள ஒன்னும் பண்ணவேணாம் வா நம்ம வீட்டுக்கு போலாம்.”
“முல்ல நில்லு. ஏய் நில்லுடி.”
“நீ என்ன தான் என்கிட்ட கோவமா பேசினாலும் நான் கேக்கமாட்டேன். வா கதிர் போலாம். சொல்றேன் இல்ல வா.”
“பாப்பா நீ ரொம்ப தப்பு பண்ணுறமா. உங்க கிராமத்துல இவனுங்க உன்ன எவ்வளவு கஷ்டபடுத்தினாங்க. ஆனா நீ என்னடானா இவனுங்கள மன்னிக்க சொல்ற.”
“அண்ணா நம்ம இவங்கள மன்னிக்க வேணாம். ஆனா மறந்துடுவோம்.”
“எதைடி மறக்க சொல்ற?”
“எல்லாத்தையும் மறந்துடுவோம்.”
“உன் அப்பா மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேணாமா?”
"எப்ப ஒரு உயிர் அந்த உடலை விட்டு போனதோ, எப்ப அந்த உடல இவங்க நெருப்புக்கு இறையாகுனாங்களோ, அப்பவே நியாயம் எல்லாம் மடிஞ்சுடுது."
“இப்ப நீ முடிவா என்ன சொல்ற?”
“முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்.”
“பாப்பா என்னமா நீ. என் மச்சான் உனக்காக தான் அவன் அப்பாவை கூட ஊருல போய் பாக்கல.”
“சேரன் ஐயா நல்லவரு. என் அப்பாவுக்கு அவர் மேல நல்ல மரியாத இருக்கு. அவரு கண்டிப்பா இந்நேரம் கதிரோட மாமன்களை நம்ம ஊரிலேயே தண்டிச்சு இருப்பாரு. அதனால நம்ம ஏன் இத பெருசாக்கணும்?”
“இப்ப இவ்வளவு விவரமா பேசுறவ. இந்த ஒரு மாசம் ஏன்டி நான் கூப்பிடும் போதெல்லாம் கோர்ட்டுக்கு வந்த?”
“இங்க இவங்களுக்கு தண்டனை கடுமையா தருவாங்கன்னு எனக்கு தெரியாது.”
“இப்ப என்ன சொல்ல வர்ற?”
“வீட்டுக்கு போலாம் கதிர். வா போலாம்” என்றழைக்க,
“மணி இவள வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நான் வர்றேன்” என்றான் நண்பனிடம்.
“நீயும் வா கதிர்” என்று அவனை விடாது நின்றாள் முல்லை.
“இது என்ன உன் மாமனார் வீடா. போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போக” என்றான் கோவமாக.
“ஏன் இப்ப இவ்வளவு கோவமா பேசுற?”
“டேய் மணி இவள கூட்டிட்டு போடா.”
“வா பாப்பா போலாம்.” மணி முல்லைப்பூவை அழைத்து கொண்டு அவன் வீட்டிற்கு செல்ல, கதிர் தன் தாய் மாமான்கள் மேல் தொடங்கிய வழக்கை திரும்பப்பெற்றவன், கோவமாக அவன் வீட்டிற்கு வந்தான்.
“கதிர் கதிர் உன்னைத்தான் வா சாப்பிடலாம்” என்றழைத்தாள் முல்லை.
“இங்க பாரு நான் உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன். ஒழுங்கு மரியாதையா ஓடிடு சொல்லிட்டேன்.”
“சரி போ. நான் போய் தூங்குறேன்.”
“ம் போ. உனக்கு அத தவிர வேற என்ன தெரியும்?”
“இப்படி எல்லாம் என்னை திட்டினா நான் அழுவேன் சொல்லிட்டேன்.”
“உன்னை கட்டிக்கிட்டதுக்கு நான்தான் அழனும்.”
“என்ன சொன்ன.” என்று அடிக்க,
“ஆ.... வலிக்குதுடி. ஏய் அடிக்காத” என்று தடுத்தான்.
“அப்போ ஏன் அப்படி சொன்ன?”
“முல்லன்னு பெயர் வச்சி இருக்கியே.. அதுல கொஞ்சமாவது மண்டையில மூளை வச்சி இருக்கியா?”
“மூளை இருந்தா உன்னை ஏன் கல்யாணம் பண்ணப்போறேன்.”
“என்னடி வாய் நீளுது.”
“நீ சும்மா சும்மா திட்டுற. போ நான் போறேன்” என்றாள்.
“ஏய் நில்லு முல்லை.”
“உன் போன் அடிக்குது நீ எடுத்துப் பேசு. நான் போய் தூங்குறேன்.”
‘இது வேற நேரங்கெட்ட நேரத்துல போன். யாரு இது?’ என மனதில் திட்டி, “ஹலோ யார் பேசுறது?” என்றான் கடுப்புடன்.
“சின்ன ஐயா நான் கணக்கு பேசுறேன்.” என்று அவர்கள் வீட்டின் கணக்குப்பிள்ளை பேச,
“ஓ... என்ன?”
“பெரிய ஐயா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு. நான் மருத்துவமனையில இருந்து தான் ஐயா உங்ககிட்ட பேசுறேன்.”
“என்ன சொல்றிங்க? அப்பாக்கு என்னாச்சு?”
“ஐயாக்கு பின்னாடி மண்டையில பலத்த காயங்க. பக்கத்து ஊருல இருக்குற மருத்துவமனையில தாங்க சிகிச்சை தரோம்”
“ஐயோ அப்பாவ பாத்துக்கோங்க. நான் இப்போவே வறேன்.” கணவனின் பதற்றத்தில், “என்ன கதிரு என்னாச்சு?” எனக்கேட்டாள் முல்லை.
“முல்லை அப்பா அப்பாக்கு...” என்று திணற,
“அப்பாக்கு என்னாச்சு?” அவனின் பதற்றம் இவளையும் தொற்றியது.
“அப்பா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு போல. நான் உடனே கிளம்புறேன்.”
“அப்போ நானு.”
“மறுபடியும் நீ அந்த ஊருக்கு வேணாம். நீ இங்கேயே இரு. நான் மணியை வந்து இங்க உனக்கு துணைக்கு படுக்கச் சொல்றேன். நீ ரூம்ல படுத்துக்கோ” என்றான்.
“சரி கதிர். நீ சீக்கிரம் வந்துடு.”
“கண்டிப்பா சரி நீ ஜாக்கிரதை. நான் மணிக்கிட்ட சொல்லிட்டு போறேன்.” என்று சொன்ன கதிர் பதட்டமாக அவன் கிராமத்தின் பக்கத்து ஊரில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல, முல்லை கதிர் அப்பாவிற்கு என்ன ஆனது என்ற குழப்பத்தில் இருந்தாள்.
“பாப்பா நீ போய் தூங்குமா” என்றான் துணைக்கு வந்த மணி.
“இல்ல அண்ணா கதிர் உங்களுக்கு அந்த... இது...” என சொல்லத் தெரியாது தடுமாற,
“என்னதுமா?”
“அ...அதான் போனு.”
“ஓ... செல்போனா?”
“ம்... ஆமா அண்ணா. அது பண்ணட்டும். அப்புறமா நான் போய் தூங்குறேன்” என்றவள், “அண்ணா யாரோ கதவ தட்டுற மாதிரி இல்ல” எனக்கேட்டாள்.