• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 26, 2024
Messages
30
அத்தியாயம் 8

சரியாக தேவ் கீழே சரியும் சமயம் அவனது கைகளை பிடித்து மேலே இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் கண்மணி. அவளை அங்கு சற்றும் எதிர்பாராதவன் பார்த்தபடியே இருக்க,

“அப்பறமா சைட் அடிப்பீங்களாம் முதல்ல உங்க ஒரு கையால, பக்கத்துல இருக்க செடி வேரை பிடிச்சு மேல வர முயற்சி பண்ணுங்க.”

அருகில் இருந்த செடிகளையும் அவள் கைகளையும் பிடித்தபடி மேலே வந்தவன், ஆச்சரியமாக அவளை பார்க்க,

“உங்க பாட்டி சொன்ன அந்த பாயிண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு விஷயம் நல்லதுன்னு தெரிஞ்சா, அதை நம்ம வாழ்க்கையிலும் இம்ப்ளிமெண்ட் பண்றது அவசியம் தானே, சோ அதை இனி நானும் பாலோ பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அதனால நீங்க என்னை விட்டுட்டு போகனும்னு நினைச்சாலும், நான் உங்களை தனியா போக விட மாட்டேன்.

அதுவும் உங்க உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்ச பிறகும் உங்களை தனியா வெளியே விட, எப்படி என்னால முடியும்?”

சற்று தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டவன் தேங்க்ஸ் என்று அவளிடம் கூற,

“பரவால்ல பரவால்ல உங்களுக்கு பாடிகார்ட்டா இருப்பேன்னு அப்பவே சொல்லி இருந்தேனே, அப்போ உங்களை பாதுகாக்க வேண்டியதும் என்னோட வேலை தானே? சரி வாங்க இருட்டறதுக்குள்ள, தங்கறதுக்கும் திங்கிறதுக்கும் வேற ஏதாவது இடம் கிடைக்குதான்னு பார்ப்போம்.

நல்லவேளை மழை ஈரத்துல உங்க காலடி தடம் இருந்ததால அதை பின்பற்றி இங்க வந்து சேர்ந்தேன், கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும், வீடு போய் சேர்ந்ததும் பிள்ளையாருக்கு மறக்காம நூற்றியெட்டு தேங்காய் உடைச்சிடுங்க. வீட்டுக்கு போனதும் சந்தோஷத்துல அவரை மட்டும் மறந்தடாதீங்க, அப்பறம் மறுபடியும் உங்களை தொலைய வெச்சிடுவார்.”

அவள் அலட்டிக் கொள்ளாமல் சொல்லி விட்டுச் செல்ல, அவளை விழிகளால் பருகியபடியே இணைந்து நடந்தான் தேவ்.

வெகுதூரம் நடந்து அவர்கள் காட்டின் மறுபக்க எல்லையையே நெருங்கி விட்டனர். ஆனால் அவர்கள் தேடிய பாதை தான் இன்னும் கண்களுக்கு புலப்படவில்லை.

அப்போது திடீரென்று ஒரு பெண் கத்தியை கைகளில் பிடித்த படி, அலறிக் கொண்டே காட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள். வந்தவள் கத்தியால் தனது கைகளை வெட்டிக் கொள்ளத் தொடங்க, அதைக் கண்டு ஓடிச் சென்று கத்தியை அவளிடம் இருந்து பறித்த தேவ், அவளை தடுக்க முயற்சித்தான்.

அவனை தள்ளி விட்டவளோ அருகில் இருந்த மரத்தில் தனது தலையை முட்டிக் கொள்ளத் தொடங்கினாள். இவ்வளவு நேரமும் தள்ளி நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்த கண்மணி,

“அச்சோ பாவம் இந்த பொண்ணுக்கு மனநிலை சரியில்ல போலயே? கைல ரத்தம் வேற வருதே என்ன பண்றது.”

அந்த பெண்ணை தடுக்கப் போராடிக் கொண்டிருந்த தேவ்,

“ அம்மா தாயே உன் ஆராய்ச்சியை எல்லாம் அப்பறம் வச்சுக்கோ, முதல்ல இந்த பொண்ணை கண்ட்ரோல் பண்ண, வந்து எனக்கு கொஞ்சம் உதவி செய்.”

அவளும் தன் பங்குக்கு அந்த பெண்ணிடம் போராடிக் கொண்டிருக்க, கூட்டமாக ஓடி வந்த சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டனர். அந்த பெண்ணின் கைகளில் ரத்தத்தையும் தேவ்வின் கைகளில் கத்தியையும் கண்டவர்கள் தவறாக புரிந்து கொண்டு அவனை தாக்க முனைய, அதற்குள் அந்த புதியவளோ கண்மணியின் கைகளை தட்டிவிட்டு விட்டு அங்கிருந்து ஓடத் தொடங்கி இருந்தாள்.

கண்மணி அவள் பின்னே செல்ல, தேவ் அங்கிருந்தவர்களிடம் அந்த சூழ்நிலையை பற்றி விரிவாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான்.

அதற்குள் அந்த புதியவள் கல் தடுக்கி ஒரு பாறையின் மீது மோதி, தலையில் ரத்தம் வர மயங்கி விழுந்திருந்தாள்.

“ஐயோ தேவ் சார், சீக்கிரம் இங்க வாங்க, இந்த பொண்ணு தலைல ரத்தம் வருது.”

அந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்த, பகட்டான உடை அணிந்த ஒரு பெண்மணி கண்மணியை பார்த்து,

“நீங்க இரண்டு பேரும் தமிழா?”

என்று கேட்க,

கண்மணியின் கண்களில் ஆயிரம் நட்சத்திரம் மின்னியது போல டாலடித்தது. கூட்டத்தில் நான்கு பேர் அந்த பெண்மணியின் கண்ணசைவில் புதியவளை தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, அவளை நோக்கி வந்த கண்மணி,

“இன்னும் ரெண்டு வார்த்தை தமிழ்ல பேசுங்களேன். காது குளிர கேட்டுக்கறேன்.”

அவளோடு இணைந்து நடந்தவனோ,

“அப்போ இவ்வளவு நேரமா நான் உன்கிட்ட ஏலியன் பாஷையா பேசிகிட்டு இருந்தேன்?”

“ஓஓஓ… உங்களுக்கு அப்ப அதுவும் தெரியுமா? பரவாயில்ல நீங்க அடுத்த கிரகத்துக்கே போனாலும் தப்பிச்சுப்பீங்க போலயே, என்னை பாருங்க பக்கத்து ஸ்டேட் பாஷை கூட தெரியாத அப்பாவியா இருக்கேன்.”

“ஆஹான்… ஆமா ஆமா நீ அடி பாவியே தான் ம்மா.”

இருவரது சம்பாஷனயையும் கேட்டு கொண்டே உடன் வந்த பெண்மணி, தன்னை கங்கம்மா என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரிடம் தங்களது முழு கதையையும் ஒன்று விடாமல் கூறி முடித்தால் கண்மணி. பேசிக் கொண்டே அனைவரும் கிராமத்திற்கு வந்து விட்டனர்.

தேவ்வுக்கு ஏனோ கங்கம்மாவின் பேச்சும், சுற்றி உள்ள ஆட்களிடம் கண்ணசைவிலேயே வேலை வாங்கி கொண்டிருந்த அவரது நடவடிக்கைகளும், சிறிது சந்தேகத்தை தோற்று வித்தது.

வேலையாட்களிடம் பேசும் போது அவர் முகத்தில் வந்து போகும் அலட்சியமும், ஒரு மிதப்பான பார்வையும், தங்களிடம் பேசும்போது அரிதாரம் பூசிக் கொள்வது போலத் தான் அவனுக்கு தோன்றியது. ஆனால் கண்மணியோ தான் பேசுவதை கேட்க, ஆள் கிடைத்து விட்ட சந்தோஷத்தில், அவ்வப்போது மாறும் அவரது முக பாவனைகளை கவனிக்கத் தவறினாள்.

கிராமத்தில் திருவிழா நடப்பதாக கூறியவர் தனது ஆட்களிடம் தேவ் தங்கப் போகும் அறைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்.

“அதெல்லாம் வேண்டாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படி போகனும்னு வழியை மட்டும் சொல்லுங்க போதும். இப்பவே கிளம்பினா தான் நைட்குள்ள எங்க இருப்பிடத்துக்கு போக முடியும்.”

கண்மணியும் அவனது பேச்சை ஒத்தபடியே அவரிடம் பேச,

“அட என்னப்பா நீங்க இவ்வளவு அவசரம் எதுக்கு? பக்கத்துல தான் ஸ்டேஷன் இருக்கு, அரைமணி நேரத்துல அங்க போயிடலாம். எங்க ஊர் பொண்ணை காப்பாத்தி எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க, உங்களுக்கு ஒரு வாய் தண்ணி கூட தராம எப்படி அனுப்பி வைப்போம்.”

பின்னால் திரும்பி தனது வேலையாட்களிடம் குசுகுசுவென்று பேசியவர், அவர்கள் கொண்டு வந்த பானத்தை தன் கைகளாலேயே எடுத்து இவர்களுக்கு அருந்த கொடுத்தார்.

அதை கைகளில் வாங்கிய கண்மணி குடிக்க தொடங்கி விட, தேவ் சிறிது யோசித்தான்.

“தம்பி என்ன யோசனை இது பழச்சாறு தான், தைரியமா குடிங்க.”

என்ற படி கங்கம்மா கையில் உள்ள பானத்தை தனது தொண்டையில் சரிக்க, தேவ்வும் சிறிது சிறிதாக அதை அருந்தத் தொடங்கினான்.

சற்று நேரத்தில் கண்மணி அப்படியே மயங்கி சரிய,

“ஹேய் பட்டர் ஸ்காட்ச்…”

என்றபடி அவளை பிடிக்க முற்பட்ட தேவ்வும் தள்ளாடியபடியே தரையில் சரிந்தான்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top