Member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 36
- Thread Author
- #1
அத்தியாயம் 23
தனது அறையில் கத்திக் கொண்டிருந்த தேவ்வுடைய சத்தம் அந்த முதல் தளம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல? அந்த நவீன் வந்தான்னா, எல்லாமே கெட்டுப் போயிடுமே?”
தனக்கு எதிரே நின்று கொண்டிருந்த ஹெச் ஆர்ரைத் தான், சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தான் தேவ்.
“சார் அது…அவர் வர்ற தகவலே எனக்கு நேத்து நைட்டு தான் கிடைச்சது. இன்னைக்கு காலையில பிளைட்டுக்கு தான் வரப் போறார். ஆனா நீங்க எதுவும் கவலைப்படாதீங்க, ஏர்போர்ட்ல இருந்து வர்ற வழியிலேயே, அவரை தீர்த்துக் கட்டறதுக்கு ஆளுங்களை ஏற்பாடு பண்ணியாச்சு. அந்த தகவலை சொல்லிட்டு போலாம்னு தான் நான் வந்தேன்.”
“அப்படியா? அப்போ அவன் ஆபீஸ்க்கு வந்து சேர மாட்டான் அப்படித் தானே?”
“கண்டிப்பா வர மாட்டார் சார்.”
இவர்கள் பேசுவதை அங்கு ஒட்டி வைத்திருந்த, சிறிய வகை மைக் மூலமாக கேட்டுக் கொண்டிருந்த ராம் சிங், உடனே அவசரமாக பாத்ரூமிற்குச் சென்றான். தனது மொபைலில் இருந்த சிம்மை கழட்டிவிட்டு, பத்திரமாக பாக்கெட்டுக்குள் வைத்திருந்த புது சிம் கார்டை போனில் போட்டு, யாருக்கோ அழைத்தான்.
அங்கே லைன் கிடைக்காமல் போக,
“போனை எடுடா…”
என்று பற்களை கடித்த படி பேசினான்.
அவசர அவசரமாக தனது மொபைலில் இருந்து மெசேஜ் அனுப்பியவன், மீண்டும் ஒரு முறை அழைத்துப் பார்த்தான். இந்தமுறையும் எடுக்காமல் போகவே, தனது மொபைலில் இருந்து இன்னொரு நம்பருக்கு அழைத்தவன், சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு, சிம்மை கழட்டி மாற்றினான்.
பிறகு முகத்தில் கலவரத்தோடு தேவ்வின் அறைக்கு வெளியே வந்து அமர்ந்து கொண்டான்.
அவன் அங்கு வந்து அமர்ந்த போதுதான், ஹெச் ஆர் வெளியே வந்து தனது அறை நோக்கிச் சென்றார். மீண்டும் உள்ளே தேவ்வுக்கும் மினிக்கும் களியாட்டம் தொடங்கியது.
அரை மணி நேரம் செல்வதற்குள்ளாகவே ராமின் உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டி விட்டது. சிறிது நேரம் கழித்து கம்பெனிக்குள், கால் டாக்ஸியில் வந்திறங்கிக் கொண்டிருந்த நவீனை கண்டதும் தான், அவன் முகத்தில் கலவரம் நீங்கி புன்னகை மலர்ந்தது.
நவீனை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் எழுந்து நின்று, வணக்கம் கூறியபடியே அவனுக்கு மரியாதை செலுத்த, அனைவரிடமும் தலையசைப்போடு கூடிய சிறிய புன்னகையை சிந்தியபடி மேலே வந்தவன், வெளியே நின்று கொண்டிருந்த ராம் சிங்கையும் கண்டு கொள்ளாமல், தேவ்வின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். பாவம் அவன் காணக் கூடாத காட்சி தான் அது, அதுவும் கல்யாணம் ஆகாத கன்னிப் பையன் அல்லவா, சட்டென்று திரும்பி நின்று கொண்டான்.
வழக்கம் போல மினி அன்று கண்மணியிடம் கூறிய அதே வார்த்தையை பேசத் தொடங்கிட, ஒரே குரலில் ஓங்கி,
“ஷட் அப் அண்ட் கெட் அவுட் ஆப் மை ஆஃபீஸ்.”
என்று உரத்த குரலில் கத்தி இருந்தான் நவீன். அந்த குரலில் தேவ் உட்பட மினியும் நடுங்கி விட்டாள். சட்டென்று தனது ஆடைகளை போட்டுக் கொண்டு அவள் வெளியேறி விட, தேவ்வை நோக்கி வந்தவன்,
“தேவ் வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? வொர்கிங் பிளேஸ்ல இப்படித்தான் நடந்துக்குவியா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஜஸ்ட் இப்ப தான்…பேசிட்டு இருந்தோம்…”
“நீ பேசுனதைத் தான் நான் பார்த்தேனே, சரி அது உன்னோட பர்ஸ்னல் பார்ட், அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. தென் நம்மளோட கம்பெனியோட ஷேர்ஸ்ஷை விக்கப் போறதா மார்கெட்ல ஒரு டாக் போயிட்டு இருக்கே? அது உண்மையா?”
“என்ன?…நீ என்ன சொல்ற நவீன்? பார்ட்னரான உன்கிட்ட கேட்காம நான் எப்படி அதெல்லாம் விக்க முடியும்? அது பொய், நமக்கு வேண்டாத யாரோ கிளப்பிவிட்ட ரூமர் அவ்வளவு தான்.”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன், நம்ம கம்பெனியை முடிச்சுகட்ட நிறைய பேர் நம்மள சுத்தியே இருக்காங்க போல இருக்கு, அதனாலதான் இன்னைக்கு என்னை தீர்த்துக் கட்டணும்னு பிளான் பண்ணி இருக்காங்க. பட் எப்படியோ என் உயிருக்கு வந்த ஆபத்து, என்னோட வந்த போலீஸ் நண்பன் மூலமா விலகி போயிடுச்சு.”
அதற்குள் ஹெச் ஆர் அந்த அறைக்கு ஓடி வந்திருந்தார். கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவரோ,
“குட் மார்னிங் நவீன் சார், உங்களுக்கு… உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே?”
“ஏன் சார்? எனக்கு எதுவும் பிரச்சனை வந்திருக்கணும்னு எதிர்பார்த்தீங்களா?”
“ஐயோ…இல்ல சார், எப்பவும் நீங்க யூஸ் பண்ற டாக்ஸில வராம வேற டாக்ஸில வந்து இறங்கி இருக்கீங்களே, அதுதான் கேட்டேன்.”
“என்ன பண்றது என் உயிருக்கு நிறைய பேர் குறி வச்சிருப்பாங்க போல, எப்படியோ என் கூட வந்த என் போலிஸ் ப்ரெண்ட் அவனுங்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிருக்கான். எப்படியும் முட்டிக்கு முட்டி தட்டி யார் செஞ்சாங்க? எதுக்காக என்னை கொல்ல வந்தாங்கன்னு சொல்ல வச்சிடுவான். அவன் தான் இந்த டாக்ஸில என்னை ஏத்தி அனுப்பி விட்டான்.”
“அப்போ அவங்களையெல்லாம் போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்களா ? ந…நல்லது சார், ரொம்ப நல்லது.”
“நவீன் ரொம்ப கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்திருக்க அதனால இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ, என் பாடிகாட் ராம் சிங்கையும் உன் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கிறேன். நான் தங்கி இருக்க ஹோட்டல்ல என்னோடவே தங்கிக்கிறயா இல்ல…”
என்று இழுத்துக் கொண்டே அவன் பேச,
“என்னடா தேவ் மறந்துட்டியா? நாம இங்க வரும் போதெல்லாம், இங்கிருக்க என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல தானே தங்குவோம். ஆனா நீ ஏன் இந்த தடவை அங்க தாங்காம ஹோட்டல்ல தங்கி இருக்க?”
“இல்ல நிறைய பிசினஸ் ஆட்களை நைட் டைம்ல மீட் பண்ண வேண்டி இருக்கு, அதோட அன் டைம்ல அங்க தூரமா போகணும்னு தான், இங்க பக்கத்துல இருக்க ஹோட்டல்ல ஸ்டே பண்ணிட்டேன். சரி நீ போய் ரெஸ்ட் எடு, நாளைக்கு கம்பெனி வேலை எல்லாம் பாத்துக்கலாம்.”
“எப்படியும் ரெஸ்ட் தான் எடுக்க போறேன், நம்ம கம்பெனியோட இந்த மன்தோட பிராஃபிட், அண்ட் டேட்டாஸ் பத்தின பைல் எல்லாத்தையும் எடுத்து வை, இன்னைக்கு அதெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கேன்.”
பதறிப் போன ஹெச் ஆர்,
“சார் உங்களுக்கு எதுக்கு சிரமம், நீங்க முன்னாடி போங்க. நான் நம்ம கம்பெனி ஸ்டாப்கிட்ட பைல்ஸ்ஸை கொடுத்து விடுறேன்.”
“ஆமா நவீன் நீ போய் கொஞ்ச நேரமாச்சும் ரெஸ்ட் எடு, நான் உனக்கு துணையா ராம்சிங்கை அனுப்பி வைக்கிறேன், வேணும்னா என் காரை கூட எடுத்துக்க.”
“வேண்டாம் நான் வந்த டாக்ஸி கீழ தான் வெயிட்டிங்ல இருக்கு.”
“அப்ப சரி ஹெச் ஆர் சார் ராமை கூப்பிடுங்க.”
ராம் உள்ளே வர,
“ராம் நீ கொஞ்ச நாள் நவீனுக்கு பாடிகாட்டா இரு, அவனோட உயிருக்கு ஆபத்து இருக்கு.”
“பட் சார் உங்க தாத்தா…”
“அவர்கிட்ட நான் பேசிக்கறேன் நீ கிளம்பு.”
என்று அனுப்பி வைத்தான் தேவ். நவீன் ஹெச் ஆர்ரை ஒரு முறை தீர்க்கமாக பார்த்துவிட்டு, வெளியே சென்றான்.
நவீனை கண்டவுடன் கண்மணிக்கு அவ்வளவு மகிழ்ச்சி, தானாக அவனிடம் சென்று பேசினால், தன் மீது யாருக்காவது சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அமைதி காத்தாள்.
ஆனால் எப்படியாவது அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு இன்றே செல்ல வேண்டும் என்று, அவள் துடித்துக் கொண்டிருந்த போது தான், ஹெச் ஆர் வந்து அவள் டீமில் இருக்கும் ஒரு சீனியரிடம் சில பைல்களை கொடுத்து, இந்த அட்ரஸிற்கு சென்று இதை நவீனிடம் சேர்த்து விடுமாறு கூறிவிட்டுச் சென்றார். உடனே அந்த பெண்ணோ,
“ஐயோ இன்னைக்கு என் புருஷனோட அம்மா வீட்டுக்கு வர்றாங்க, இன்னைக்கு மட்டும் நான் லேட்டா போனேன்னா, அந்தம்மா நான் வேணும்னே செஞ்சது போல ஜாடை பேசியே கொல்லுமே.”
என்று புலம்பிக் கொண்டிருக்க, அதற்காகவே காத்திருந்த கண்மணி,
“அக்கா நான் அந்த பக்கமா தான் ஹாஸ்டலுக்கு போகனும், உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னா நானே இதை அவர்கிட்ட கொடுத்திடறேன்.”
என்று கூறி அந்த பைல்களையும் நவீனின் அட்ரஸையும் வாங்கிக் கொண்ட கண்மணி, வேகமாக அங்கிருந்து சென்றாள்.
இவ்வளவு நேரமும் அவள் செயல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மினி,
“இவ எதுக்காக நவீனைப் பார்க்க இவ்வளவு ஆர்வமா கிளம்பறா? ஏதோ சரி இல்லையே? இங்க வந்ததிலிருந்தே இவளை கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன், இவகிட்ட ஏதோ தப்பு இருக்கு. எதுக்கும் தேவ்கிட்ட இவளைப் பத்தி சொல்லி வைப்போம்.”
என்றபடி நவீன் இங்கிருந்து கிளம்பி விட்ட தைரியத்தில் மீண்டும் தேவ்வின் அறையை நோக்கிச் சென்றாள்.