Member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் 19
“யோவ் உனக்கு என்ன கண்ணு கோளாறா? கண்ணு தெரியாதவனை எல்லாம் காவலுக்கு போட்டா, கம்பெனி திவால் ஆக வேண்டியது தான். இந்த கிழவி எனக்கு அம்மாவா? விட்டா அக்கான்னு கூட சொல்லுவ.”
“கண்டிப்பா சொல்லி இருப்பேங்க, இவங்க காதோரத்துல அந்த நரைமுடி மட்டும் இல்லைன்னா. அவங்களை கம்பேர் பண்ணும் போது நீங்க கொஞ்சம் சுமார் தான்.”
வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக் கிளம்பிய கண்மணியின் கைகளை பற்றி, தன் பக்கமாக இழுத்த கவி அவளை அமைதி படுத்த முயல,
“அவ அப்படித் தான் தம்பி பொறாமை பிடிச்சவ, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, இனி நீ தான் இவளை நல்லபடியா பார்த்துக்கனும் சரியா? அதோட…”
சற்று குரலை தணித்தவர்,
“இந்த கழுதை ஏதாவது தப்பு பண்ணிணாலோ, இல்ல எங்கேயாவது சுத்திட்டு லூட்டி அடிச்சாலோ உடனே எனக்கு போன் பண்ணணும் சரியா? ஏன்னா இன்னும் கொஞ்ச நாள்ல இவளுக்கும் என் பேரனுக்கும் கல்யாணம். இவளை எல்லாம் நம்ப முடியாது, ஏற்கனவே இரண்டு தடவை ஏற்பாடு பண்ணிண கல்யாணத்தை, திட்டம் போட்டு நிறுத்திட்டா, உன்னைய நம்பி தான் ப்பா நான் இவளை இங்க அனுப்பி வைக்கறேன்.”
“கவலைப்படாதீங்க என் கண்ணு உங்க பேத்தியை விட்டு எங்கயுமே நகராது, அவ்வளவு பத்திரமா பார்த்துக்கறேன் நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க.”
ரங்கநாயகி அவன் பெயரை தெரிந்து கொண்டு, அவன் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டார். அதோடு தன்னுடைய போன் நம்பரையும் அவனுக்கு கொடுத்துவிட்டு, தனது மகன் கிருஷ்ணமூர்த்தியோடு அங்கிருந்து சந்தோஷமாக கிளம்பினார்.
கிருஷ்ணமூர்த்தியும் தனது மகளுக்கு பலமுறை பத்திரம் கூறிவிட்டு, கவியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.
அவர்களை அனுப்பிவிட்டு கவியோடு கம்பெனியின் உள்ளே நுழைந்த கண்மணியோ, தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராம்சிங்கை முறைத்துக் கொண்டே சென்றாள். ஹச்சு டாக் போல அவள் பின்னால் சென்று கொண்டிருந்தவனுக்கு அலைபேசி அழைப்பு வர அவளை கடந்து வேகமாக மேலே சென்றான். கண்களை விட்டு மறையும் போது கூட அவளை ஒரு முறை திரும்பி பார்க்கவும் அவன் மறக்கவில்லை.
“யார் கவி இந்த வாட்டர் பால்ஸ்ஸு? இவன் என்னை பாக்கற பார்வையே சரியில்ல. அப்படியே அவன் கண்ணை நோண்டனும் போல இருக்குடி.”
“சாந்தி பேபி சாந்தி இவனை பகைச்சுக்கிட்டா அப்பறம் உன்னால உன் ஆளை பார்க்கவே முடியாது, ஏன்னா தேவ் சாரோட மெயின் பாடிகாட்டே இவந்தான். சோ அமைதி அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி.”
“அப்போ இவன் எந்நேரமும் தேவ் கூட தான் இருப்பானா?”
“இவன் மட்டும் இல்ல தேவ் சார் கூட இந்த தடவை மினிங்கற பேர்ல ஒரு மேனா மினுக்கியும் வந்திருக்கா, அவ தேவ் சார்கிட்ட அஞ்சலி பாப்பா மாதிரி நடந்துக்குவா, ஆனா மத்தவங்க கிட்ட சொர்ணாக்கா ரேஜ்ஜுக்கு சவுண்டு விட்டுகிட்டு இருக்கா.
இதுக்கும் அந்த பக்கிக்கு இங்க என்ன சாப்ட்வேர்ல வேலை நடக்குதுன்னு கூட தெரியாது. இந்த பாடிகாட்டாவது ஆபீஸ் டைம்ல அவர விட்டு தள்ளி இருக்கான், ஆனா அந்த சொர்ணாக்கா அவரை விட்டு ஒரு நிமிஷம் கூட நகர மாட்டா.”
அதற்குள் கவியின் போனுக்கு அவளது அலுவலக நண்பர்களிடம் இருந்து அழைப்பு வர,
“சரி நீ போ கவி இனி நான் பார்த்துக்கறேன். லெட்டர் கொடுத்துட்டு தேவ்வை பார்க்க முடியுதான்னு பார்க்கறேன்.”
மேனேஜரை சந்திக்க மாடி ஏறியவள் தனது பணி நிமிர்த்த ஆணையை வழங்கி, அவர் கூறிய அறிவுரைகளை கேட்டுவிட்டு இரண்டு நாள் கழித்து சந்திப்போம், என்ற முகமனோடு வெளியே வந்தாள்.
மேனேஜர் அறைக்கு அடுத்து இருந்த அறைக் கதவில், மிஸ்டர் தேவராஜன் என்று தொங்கிக் கொண்டிருந்த பெயர் பலகையை கண்டு, கண்மணியின் கண்கள் மின்னியது.
சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவள், உற்சாகமாக கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள். அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியை கண்டு, அவளது கண்கள் சிரிப்பை விடுத்து அதிர்ச்சியில் உறைந்தது.
அறைகுறை ஆடையோடு ஒருத்தி தேவ்வின் மடியில் புரண்டு கொண்டிருக்க, அவள் இதழ்களில் மூழ்கி இருந்தவனது கைகள், அந்த பெண்ணின் உடலில் அத்துமீறிக் கொண்டிருந்தது.
திடீரென்று திறந்து கொண்ட கதவை கண்டு அந்த பெண்,
“நான்சென்ஸ், டூ யூ ஹேவ் எனி சென்ஸ்? உள்ள வர்றதுக்கு முன்னாடி கதவை தட்டிட்டு வரணும்னுங்கற மேனர்ஸ் கூடவா உனக்கு தெரியாது? திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையிறது போல நேரா வந்து நிக்கற? கெட் அவுட்.”
“பேப்பி…சில்… எதுக்கு இத்தனை கோபம்? ஹேய் பேபி டால் எனக்காக தான் வந்தியா? யூ ஆர் லுக்கிங் சோ க்யூட், மேடிகிட்ட ஹோட்டலுக்கு தானே அனுப்ப சொல்லி இருந்தேன், பரவாயில்லை வந்தது வந்திட்ட ம்ம் கிட்ட வா.”
என்று கண்களில் போதையோடு தேவ் கண்மணியை நோக்கி கை நீட்ட,
“டார்லிங் நான் இருக்கும் போது உங்களுக்கு எதுக்கு இன்னொரு பொண்ணு? உங்களை எப்படி கவனிக்கனும்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.”
என்று அங்கு ஒருத்தி அதிர்ந்து போய் நிற்பதை கூட கவனிக்காமல், அவனோடு மேலும் இழைந்து கொண்டே சென்ற அந்த பெண், உடைகளை களைந்து அடுத்த நிலைக்கு அவனை இழுக்க, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியேறினாள் கண்மணி.
வெளியே வந்தவளது உடம்பு தானாக நடுங்கிக் கொண்டிருந்தது. நடக்க கூட முடியாமல் அவளது கால்கள் வலுவிழந்திருக்க, சோர்ந்து போனவளாக அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தாள் கண்மணி.
போன் பேசியபடியே அங்கு வந்த ராம்சிங் அவள் வெளியே வந்த நிலை கண்டு, வேகமாக அவள் அருகில் ஓடி வந்தான்.
“ இந்த ரூமுக்குள்ள எதுக்காக போன? நீ பார்க்க வேண்டிய மேனேஜரோட ரூம் பக்கத்துல இருக்கு, உள்ள…உள்ள உனக்கு எதுவும் தப்பா நடக்கலையே?”
நிமிர்ந்து அவனை தீர்க்கமாக பார்த்தவள், இல்லை என்று தலையசைத்தாள். ஊப் என்று அடக்கி வைத்திருந்த தனது டென்ஷனை காற்றில் ஊதி கரைத்தவனோ,
“ நீ முடிஞ்ச வரை தேவ் சார் கண்ணுல படாதே, அவரை தனியா சந்திக்கறதை அவாய்ட் பண்ணு. நான் கணித்த வரைக்கும் அவரோட கேரக்டர் அவ்வளவா சரியில்ல.”
கண்மணி அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“பணம் கொடுக்கற முதலாளியை தப்பா சொல்லக் கூடாது தான், இருந்தாலும் என்னால முடியலையே…வீட்டு சூழ்நிலை காரணமா வேலையவும் விட முடியல.
நான் இங்க வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகுது, தேவ்வுக்கு அடிக்கடி ஏதோ ஒரு வகையில ஆபத்து வந்துகிட்டே இருக்குங்கறதால தான், அவரோட தாத்தா என்னை இங்க அவரோட பாதுகாப்புக்காக அனுப்பி வச்சாரு. நானும் இந்த ஒரு மாசமா பார்க்கறேன், கண்ணுல படற பொண்ணுங்களை எல்லாம் அந்த ராட்சசன் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிடறான்.
சில பெண்கள் அவன் முகத்துல அறைச்சிட்டு போயிடுவாங்க, ஆனா அவங்களுக்கும் ஏதாவது பிரச்சனையை கொடுத்து அவனை தேடி வர வைக்க நினைப்பான். என்னால முடிஞ்ச வர அந்த பொண்ணுங்களை அவன்கிட்ட இருந்து காப்பாத்திட்டு இருக்கேன்.
அதுக்காக தான் சொல்லறேன் மேக்சிமம் அவர் இங்க வர்றது ரெண்டு நாளோ மூணு நாளோ தான், அந்த டைம்ல அவர் கண்ணுல, தெரியாம கூட பட்டிடாத. முடிஞ்சா இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு, வேற எங்காவது நல்ல கம்பெனியா பார்த்து ஜாயின் பண்ணிக்கப் பாரு.”
கண்மணிக்கு தலைசுற்றியது, தான் கனவு கண்டு கொண்டிருப்பதாக யாரேனும் கூறி தன்னை எழுப்ப மாட்டார்களா என்று கூட அவளுக்கு தோன்றிக் கொண்டிருந்தது. எதுவுமே பேசாமல் எழுந்தவள் கீழே இறங்கி வந்து வெளியே இருக்கும் பெஞ்சில் அமர்ந்தாள். சுற்றி இருந்த இயற்கையான காற்றால் கூட, அவள் மனதிற்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை குளிர்விக்க முடியவில்லை.