Member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் 18
வேலையில் சேருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று கூறினாள் கண்மணி. அங்கே சென்று பிளாட்டில் செட்டிலாகி வேலைக்கு சேருவதற்கான பணித்தாளை கொடுக்க வேண்டும் என்று கூறியதால், அவளோடு அவள் தந்தையும் உடன் புறப்பட்டார். அவர்களோடு நானும் வந்தே தீருவேன் என்று, ஒற்றைக் காலில் நின்று அடம்பிடித்து, அவர்களோடு ரயிலில் ஏறினார் ரங்கநாயகி.
அவரோடு இப்போது சரிக்கு சமமாக விவாதித்தால், தனக்கு தாமதமாகிவிடுமே என்ற காரணத்தினால், வாயை மூடிக் கொண்டிருந்தாள் கண்மணி.
சென்னையில் கவி வொர்க்கிங் விமன்ஸ் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தாள். இன்று தன் தோழி வருவாள் என்று கூறி ரிசப்ஷனில் தனது அறை சாவியை கொடுத்து விட்டுத் தான் வேலைக்கு சென்றிருந்தாள் கவி.
கொண்டு வந்த லக்கேஜ்களை ரூமில் இறக்கி வைத்து விட்டு,
“இனி நான் பார்த்துக்கறேன் ப்பா, சரி வாங்க நான் உங்களை ஸ்டேஷன்ல விட்டுடறேன்.”
என்று கூறி தனது தந்தையையும் பாட்டியையும் கண்மணி கிளம்பச் சொல்ல,
“ எது கிளம்பவா? அதெப்படி முடியும், எப்படியும் நீ இன்னைக்கு உன் ஆபீஸுக்கு போகனும்னு சொன்னேயில்ல, உன்னோடே வந்து நீ வேலை பார்க்கப் போற இடம் எப்படி இருக்கு, என்னன்னு பாத்துட்டு தான் நான் ஊருக்கு கிளம்புவேன்.”
“எது? அதெல்லாம் ரொம்ப தூரம், ஏற்கனவே கை வலிக்குது கால் வலிக்குதுன்னு சொல்லிட்டு இருப்பீங்க, இதுல ரொம்ப தூரம் ட்ரையின்ல வந்தது வேற சலுப்பா இருக்கும், அதனால போற வழியில சாப்பிட்டுட்டு ஸ்டேஷன் போயிடுவோம். அங்க உங்களை ட்ரையின்ல ஏத்தி விட்டுட்டு நான் ஆபீஸ் போயிக்கறேன்.”
பாட்டி பேத்தி இருவரின் வாக்குவாதத்தில் கடைசியாக பாட்டியின் பேச்சு தான் அங்கு வென்றது. ஒரு வழியாக அவர்களை கூட்டிக் கொண்டு வேலைக்கு சேரும் லெட்டரோடு தேவ்வின் கம்பெனியை வந்தடைந்தாள் கண்மணி.
அவளுக்கு வேலையில் சேர்வதை விட தேவ்வை பார்க்கப் போகும் ஆர்வம் தான் அதிகமாக இருந்தது. எப்போது அவனை காண்போம் என்று ஆவலாக காத்திருந்தாள்.
கம்பெனியின் மெயின் கேட்டை தாண்டி ஒரு அளவுக்கு மேல் கண்மணியின் தந்தையையும் பாட்டியையும் செக்யூரிட்டி உள்ளே விடவில்லை.
கண்மணியை மட்டுமே உள்ளே அனுப்புவேன் என்று செக்யூரிட்டி வாதாடி கொண்டிருக்க, அவருக்கு மேலாக சத்தமாக ரங்கநாயகி சண்டையிட்டுக் கொண்டிருந்தார். தலையில் அடித்துக் கொண்ட கண்மணி கவிக்கு போனில் அழைத்து, தாங்கள் வெளியே நிற்பதை தெரியப்படுத்தினாள். கவி வந்த போது கூட அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டு தான் இருந்தது.
“அப்பா…இதுக்கு தான் வேண்டாமுன்னு அவ்வளவு தூரம் சொன்னேன், பார்த்தீங்களா நான் இன்னும் கம்பெனிக்குள்ளயே போய் வேலையை ஆரம்பிக்கல, அதுக்குள்ள உங்கம்மா என்னை மொத்தமா கம்பெனியில இருந்து மூட்டை கட்டறதுக்கான வேலையில இருங்காட்டாங்க. முதல்ல அவங்களை கூப்பிட்டுட்டு இங்கிருந்து கிளம்புங்கப்பா.”
சத்தம் கேட்டு மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தான் கருப்பு உடை அணிந்த ஆஜானுபாகுவான ஒரு சர்தார்ஜி. அவனது கண்கள் கண்மணியை சுற்றியே வட்டமிட்டது, தனது பாட்டியின் தொல்லை தாங்காமல் அவள் முகத்தில் வெளிப்படுத்திய கோபமான உணர்ச்சிகள் கூட, அவனது இதயத்திற்குள் அம்புகளை விட்டுக் கொண்டிருந்தது. அவளைப் பார்த்தபடியே படியிறங்கி வந்தான் தேவ்வின் முதன்மை பாடிகாட்டான ராம்சிங்.
அவன் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது. தேவ்வின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த அவனது தாத்தா தான், அவனுக்காக ராம்சிங்கை வேலைக்கு அமர்த்தி இருந்தார். பெரும்பாலும் தேவ் தனது பிரத்யேக அறைக்குள் இருக்கும் போது இவனுக்கு அங்கு வேலை இருந்ததில்லை. அறைக்கு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவனது வாடிக்கையானது.
“ம்மா கொஞ்சம் பேசாம இருங்க, வந்த இடத்துல எதுக்கு தேவையில்லாத பிரச்சனை.”
கிருஷ்ணமூர்த்தி தனது தாயாரின் கோபத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருக்க, கவியும் கண்மணியும் தலையில் அடித்துக் கொண்டு ரங்கநாயகியை முறைத்துக் கொண்டு நின்றனர்.
அவர்களை நோக்கி வந்த ராம்சிங் முதலில் செக்யூரிட்டியிடம்,
“எதுக்கு பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க? உங்க சத்தம் தான் மேலவரை கேட்குது.”
“சார் என் மேல எந்த தப்பும் இல்ல, இந்தம்மா தான் நான் சொல்றது எதையுமே புரிஞ்சுக்காம, கம்பெனிக்குள்ள போயே தீருவேன்னு சண்டை கட்டறாங்க.”
“அதுக்கு இப்படி தான் பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குவீங்களா? அம்மா அவருக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.”
என்று கை கூப்பினான் ராம்சிங். அவனது தன்மையான பேச்சும் நடவடிக்கைகளும் கிருஷ்ணமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. அவன் தமிழில் தெளிவாக பேசுவதை கண்ட ரங்கநாயகி மோவாயில் கை வைத்தப்படி,
“அடடே பார்க்கறதுக்கு அப்படியே சேட்டு பையன் மாதிரி இருக்கறயே தம்பி நீ, ஆனா எப்படி இவ்வளவு தெளிவா தமிழ் பேசற?”
என்று ஆச்சரியமாக கேட்டார் ரங்கநாயகி. அதற்கு லேசாக சிரித்தவன்,
“நான் தமிழ்நாட்டுக்கு வந்து செட்டிலாகி ரொம்ப வருஷம் ஆச்சும்மா, இங்க பாதுகாப்பாளரா வேலை பார்க்கறேன், வந்த இடத்துல அந்த மொழியை பழகிக்கிறது நல்லது தானே.”
“ பார்த்தியா மூர்த்தி இந்த பிள்ளை எவ்வளவு தன்மையா பேசுது, இந்தாளும் தான் இருக்கானே.”
“அது அவரோட வேலைம்மா அதனால தான் உங்களை உள்ள விட முடியாதுன்னு சொல்லறாங்க, இங்க வேலை செய்யற ஆட்களை மட்டும் தான் உள்ள விடுவாங்க, அவங்களை பார்க்க வர்றவங்க உட்காரவும், அவங்களோட பேசவும் அதோ அந்த பில்டிங்ல காத்திருக்கலாம். நீங்க யாரையாவது பார்க்கனும்னா சொல்லுங்க நானே போய் அவங்களை கூட்டிட்டு வரேன்.”
“இல்லப்பா எங்க பொண்ணு இப்ப தான் வேலைக்கு சேர்ந்திருக்கு, அவளை இங்க விட்டுட்டு, அவ வேலை பார்க்க போற இடம் எப்படி இருக்குன்னு பார்க்கத் தான் வந்தோம். இனி எனக்கு கவலையில்லை நீ தான் இங்க பாதுகாப்புல இருக்கேன்னா, கண்டிப்பா எங்க பொண்ணு பத்திரமா தான் இருப்பா. இரு அவளை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன், ஏய் கண்மணி அங்க நின்னுகிட்டு என்ன பண்ணற இங்கிட்டு வா.”
ரங்கநாயகியை முறைத்துக் கொண்டே முன்னால் வந்த கண்மணியை நோக்கி கை நீட்டிய ராம்சிங்,
“ஓஹோ இது தான் உங்க மகளாம்மா?”
“எதே?”
என்ற கேள்வியோடு கண்மணி ராமை முறைக்க, அவன் கூறியதை கேட்டு ரங்கநாயகி வெட்கத்தோடே சேலை முந்தானையை முதுகோடு போர்த்திக் கொண்டார்.
கவியும் கிருஷ்ணமூர்த்தியும் கீழே குனிந்தபடி சிரித்துக் கொண்டிருக்க, தன்னை முறைத்துக் கொண்டிருந்தவளை நோக்கி கண்களை சிமிட்டினான் ராம்சிங். அதில் கண்மணியின் கோபம் இன்னும் அதிகமானது.