Member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் 17
கவி அனுப்பும் தேவ்வின் புகைபடங்களோடு தான் கண்மணியின் ஒவ்வொரு நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தது. இந்த கம்பெனி தேவ்வின் நேரடி கண்காணிப்பில் இருந்தாலும், அவனுக்காக காத்துக் கொண்டிருக்கும் பரம்பரை தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளால், அவனால் இங்கு அதிக நாட்கள் இருக்க முடிவதில்லை. இருந்தும் மாதம் இருமுறையாவது மறக்காமல் சென்னை ஆபீஸ்க்கு வந்து விடுவான் தேவ்.
மற்ற நாட்களில் அங்கிருந்தபடியே மீட்டிங் மூலமாக இங்கிருக்கும் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் இந்த முறை இரண்டு மாதம் கழித்து சென்னைக்கு வரவில்லை.
தேவ்வுக்கு ஆட்டோகேட் சம்பந்தப்பட்ட தகல்வல்களை அறிவது என்றால் அவ்வளவு விருப்பம், இதை பற்றி ஒரு இன்டர்வியூவில் கூட கூறி இருக்கிறான். சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கம்பெனி கூட, அவனது கனவான ஆட்டோகேட் சம்பந்தப்பட்ட ப்ராஜெக்ட்களை செய்வதற்காக அவன் உருவாக்கியது தான்.
அதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகவும், அதைப் பற்றிய முகநூல் குரூப் ஒன்றில் இணைந்திருந்தான் தேவ். அதற்காக தனது இளமைகால புகைப்படத்தை உபயோகித்து தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல், ஒரு ஐடியை உருவாக்கி அதன் மூலமாக தான், அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
வெகுவான தேடுதலுக்கு பிறகு தான் கண்மணி அவன் ஐடியை முகநூலில் கண்டு பிடித்திருந்தாள். அதில் ஒரு மெம்பராகவும், வேறு ஒரு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறாள். கண்மணி அவனுக்காகவே ஒரு தனியார் இன்ஸ்டிட்யூட்டில் இதற்கான படிப்பில் சேர்ந்து, படிபடியாக அதை கற்றுக் கொண்டாள்.
இரண்டு வருடத்திற்கு மேலாக அவனது பக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அதில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக எந்த பதிவுகளையும் பார்க்க முடியவில்லை.
இதுவரை இது போன்று நடந்ததே இல்லை, என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தாள் கண்மணி. அதோடு மூன்று மாதம் கழித்து தேவ்வின் நண்பனும் பார்ட்னருமான, நவின் தான் கம்பெனி சம்பந்தப்பட்ட ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொண்டதாக கவி கூற, அவள் மனது பதட்டமானது.
கண்மணியின் தவிப்பை உணர்ந்த கவி, கம்பெனி ஹெச்ஆர்ரிடம் பேச்சு கொடுப்பது போல், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரும் தேவ் சார், இந்த முறை வராததோடு மேலும் ஒரு மாதமும் ஆகிவிட்டதே, ஆன்லைன் மீட்டிங்கிற்கு கூட அவருடைய பார்ட்னரை அனுப்பி இருக்கிறாரே, என்ன காரணமாக இருக்கும் என்று கேட்டு வைத்தாள்.
“அதை ஏன் ம்மா கேட்கற, மூனு மாசம் முன்னாடி வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போயிருந்தவரோட கார், ஆக்ஸிடன்ட்ல சிக்கி அவருக்கு பலத்த அடியாம், ஆள் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாரு. ரொம்ப சிரமப்பட்டு இப்ப தான் ரெக்கவராகி இருக்காரு. இப்ப கொஞ்சம் பரவாயில்லைன்னு சொன்னாங்க. எனக்கு தெரிஞ்சு நெக்ஸ்ட் மன்த் அவரே வந்து நிற்பார் பாரேன்.”
கவியின் மூலம் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து கண்மணிக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது அவனை பார்க்க வேண்டும், அடுத்த மாதம் அவன் வருகிறான் என்றால் அதற்கு முன்பாகவே அவனது கம்பெனியில் தான் இணைய வேண்டும் என்று நினைத்தவள், அவனது கம்பெனியில் வேலைக்காக விண்ணப்பித்தவள்.
ஆன்லைன் மூலமாக நடந்த இன்டர்வியூவில் செலக்ட்டாகி இருந்தவளுக்கு, அடுத்த மாதம் இருபதாம் தேதி பணியில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு நகலை, இமெயிலில் இவளுக்கு அனுப்பி இருந்தனர்.
அதற்குள் கவியிடம் இருந்து தேவ் பதினைந்தாம் தேதி இங்கு வருவதாகவும் தகவல் வந்தது. தன் பெற்றோரிடம் எப்படி இதற்கு அனுமதி பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தவள், எப்படியாவது வாங்கியே தீர வேண்டும் என்ற உறுதியோடு தன் தந்தையிடம் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற தனது ஆசையை கூறி, கவியின் கம்பெனியில் தான் வேலை கிடைத்திருப்பதாகவும் கூறினாள். இதை கேட்டு சேலையை உதறிவிட்டு எழுந்த ரங்கநாயகி பிடிபிடியென பிடித்து விட்டார்.
“ எப்பா மூர்த்தி நீ என்ன சொன்ன என்கிட்ட? படிப்பு முடிஞ்ச உடனேயே கல்யாணமுன்னு சொன்னையா இல்லையா? இப்ப உன் மக ஏதோ வேலைக்கு போறேன்னு கிளம்பி நிக்கிறா?
அதுவும் எங்க மெட்ராஸ்க்கு ரயிலேறி போய் வேலை பார்க்க போறாலாம்? ம்ஹூம் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது, நான் முடிவா சொல்லிட்டேன் அடுத்த முகூர்த்தத்திலேயே இவங்களுக்கு கல்யாணம் நடக்கணும்.”
“அப்பா நீங்க எனக்கு படிப்பு முடியிறவரைக்கும் கல்யாணம் இல்லைன்னு வாக்கு கொடுத்திருக்கீங்க. என் படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள வெளி உலகத்த பத்தி நான் எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாமா?
என் படிப்பு சம்பந்தமா அதுக்கான வேலைக்கு நான் போக வேண்டாமா? அப்புறம் எதுக்காக என்னை படிக்க வச்சீங்க? சும்மா பேருக்கு பின்னாடி ரெண்டு எழுத்தை போடறதுக்கா?
இந்த ஊருக்குள்ள உங்கள தான் ரோல் மாடலா எடுத்துகிட்டு, எல்லோரும் பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க. நீங்களே இப்படி வேலைக்கு முட்டுக்கட்டை போட்டா, அவங்களும் அதையே தான பண்ணுவாங்க.
அப்ப எங்களுக்குன்னு ஒரு கனவு இருக்காதா? படிச்ச படிப்புக்கான வேலையை பார்க்க வேண்டாமுன்னு சொன்னா, அப்புறம் எதுக்காக எங்களை படிக்க வைக்கணும்.”
கண்மணியின் பேச்சை கேட்டு தனது மகனின் முகம் மாறுவதை கண்ட ரங்கநாயகி,
“ஏன் நீங்க படிச்ச படிப்புக்கு சென்னையில போய் தான் வேலை பார்க்கணுமா? இங்க எல்லாம் வேலை பார்த்தா ஆகாதா?”
“ஏன் நீங்க தண்ணி குடிக்க ஆத்துக்கு போய் தான் தண்ணீர் கொண்டு வரனுமா, வீட்டுக்கு பின்னால இருக்க கிணத்து தண்ணியை குடிச்சா ஆகாதா? அங்க இருந்து கிடைக்கிறது நல்லா இருக்குமுன்னு தானே அதுவே வேணுமுன்னு சொல்லறீங்க.
அதே போலத் தான் நான் படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல கம்பெனியில் இருந்து வேலை தேடி வந்திருக்கு, இன்னாரோட பொண்ணு இவ்ளோ பெரிய கம்பெனியில வேலை பார்க்க போறா, அதுவும் ரொம்ப ஃபேமஸான கம்பெனின்னு சொன்னா, யாருக்கு பெருமை? அப்பாவுக்கு தானே.
இதுவரைக்கும் அப்பாவ படிக்காதவன்னு சொன்ன அத்தனை பேரும், மூக்கு மேல விரல் வைக்க வேணாமா? நீங்க சொல்லுங்கப்பா நான் சொல்றதுல ஏதாவது தப்பு இருக்கா?”
தனது அன்னையை நோக்கி திரும்பிய கிருஷ்ணமூர்த்தி,
“இங்க பாருங்க ம்மா நான் உங்ககிட்ட சொன்னது எப்பவும் மாறாது, என் புள்ள படிப்பு முடியிற வரைக்கும் கல்யாணத்தை பத்தி பேச்சே எடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேனே ஞாபகம் இருக்கா?
“அது இல்லடா நான் என்ன சொல்ல…”
“நான் இன்னும் பேசி முடிக்கல அவளுக்கு இன்னும் ஆறு மாசம் படிப்பு இருக்கு இல்ல, அதுக்கு முன்னாடி அவளுக்கு இந்த வேலை அமைஞ்சிருக்கு, அதோட அவ சென்னையில அவ பிரண்டு கவியோட தானே போய் தங்கப் போறா, இதுக்கு மேல என்ன பிரச்சனை உங்களுக்கு?”
தனது மகளை நோக்கி திரும்பியவர்,
“நீ போடா தாயி உன் இஷ்டப்படி உனக்கு பிடிச்ச வேலையில சந்தோஷமா சேர்ந்துக்க. ஆனா ஒன்னு ஆறு மாசம் கழிச்சு உனக்கு உங்க மாமாவை கல்யாணம் பண்ண, நிச்சயம் பண்ணியிருக்கு, அது எப்பவும் மனசுல இருக்கட்டும்.”
அவரது கடைசி வார்த்தையில் ஜெர்க்கானவள், அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு தேவ்வை சந்திப்பது ஒன்றே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, தனது பயணத்திற்கான வேலைகளில் இறங்கினாள்.