Member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் 16
“என் பொண்ணு எவ்வளவு படிக்க ஆசைப்படறாளோ அவ்வளவு படிப்பா, அதுக்கப்பறம் தான் கல்யாணம். இதுக்கு இடையில ஏதாவது குளறுபடி பண்ண நினைச்சீங்கன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன், அப்பறம் இந்த ஜென்மத்துல இவங்களுக்கு இடையில கல்யாணங்கற பேச்சுக்கே இடமில்லை.”
என்று கூறிவிட்டார் கிருஷ்ணமூர்த்தி. அதனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ரங்கநாயகி சற்று அடக்கியே வாசித்தார். எப்படியோ இப்போதைக்கு ரங்கநாயகியால் கண்மணிக்கு எந்த இடைஞ்சலும் இல்லை.
அதனால் அவள் நிம்மதியாக தனது லட்சியத்தை நோக்கி நகரத் தொடங்கினாள். படிப்போடு தேவ்வை பற்றியும் அவனது கம்பெனி பற்றியும் தெரிந்து கொண்டாள். நடந்த விஷயங்களை பற்றி தனது தோழி கவியிடம் மட்டுமே கண்மணி பகிர்ந்து கொண்டிருந்தாள்.
முடிந்த அளவு அவனது கம்பெனி சம்பந்தப்பட்ட விஷயங்களையும், தேவ்வின் நடவடிக்கைகளையும் அவ்வப்போது இன்டர்நெட் மூலம் ஆராய்ந்து அறிந்து கொண்டே இருப்பாள். இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது, மூன்றாவது வருட ஆரம்பத்தில் கவி அவளது கல்லூரியில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட்டாகியிருக்க, உடனே கண்மணியை காண அவளது கல்லூரிக்கே வந்திருந்தாள்.
கல்லூரியில் கண்மணியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அவளை வெளியே வர வைத்தவள், அருகில் இருந்த ஹோட்டலுக்கு அவளை அழைத்துச் சென்றாள்.
“ஹேய் கவி என்ன விஷயம்? என்னை பார்க்க நேரா காலேஜ்க்கே வந்திருக்க?”
“ஏண்டி உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி உன்னை வெளியே கூப்பிட்டு இருக்கேன், அதை பத்தி கேட்காம என்னை பத்தி கேக்கற? என்னே உன் பாசம்.”
“ஆமா காலையில வரும்போதே என் பாட்டி நாலு செட்டு தோசையை சாப்பிட்டுட்டு, நல்லா பெரிய ஏப்பம் வேற விட்டுட்டு, வீட்டுப் பக்கத்துல இருக்க முருகர் கோயிலுக்கு அதோட கூட்டாளி, அதான் உன் பாட்டியோட ஊர் சுத்த கிளம்பியாச்சு.
அதுக்கு இப்போதைக்கு எல்லாம் உடம்புக்கு ஒன்னும் வராது, என்னையெல்லாம் அனுப்பி விட்டுட்டு தான் அது கிளம்பும். சரி சொல்லு என்ன மேட்டர்?
உன்னை டாவடிக்கறதா சொல்லி ஒருத்தன் பின்னாடியே சுத்துவானே, அந்த பையன் எதுவும் பிரச்சனை பண்றானா? இல்ல நீ எவன் வலையிலையாவது சிக்கிகிட்டியா?”
“ஐய்ய நீ இந்த லவ்வுல சிக்கி படறபாட்டை பார்த்த பிறகுமா நான் அங்கிட்டு போவேன். இது வேற, எனக்கு வேலை கிடைச்சிருக்கு, நெக்ஸ்ட் மன்த் சென்னை போகனும். ரிசல்ட் வந்ததும் அப்பாக்கு கூட சொல்லாம உன்னை பார்க்க தான் ஓடி வந்தேன்.”
அவளை இறுக அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கண்மணி,
“ரொம்ப சந்தோஷம் டா, மாமாக்கும் அத்தைக்கும் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. என்ன நீ சென்னைக்கு போயிட்டா இனி நாம போன்ல மட்டும் தான் பேசிக்க முடியும், ஏற்கனவே நீ ஹாஸ்டல் போனதுல இருந்து மாசம் ஒருமுறை நீ ஊருக்கு வரும் போது தான் பார்த்துக்க முடியாது. பரவாயில்லை இங்கே குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டாம, நாலு இடம் போனா தான் நமக்கும் ஏதாவது தெரிஞ்சுக்க முடியும். சரி சரி மேடம் குட் நியூஸை ஸ்வீட்டோட இல்ல நீங்க சொல்லனும்?”
“ நான் இப்ப செலக்ட் ஆகியிருக்கிற கம்பெனி பேர் மட்டும் சொன்னா, நீயே எனக்கு ஸ்வீட் வாங்கி ஊட்டுவ.”
“அப்படியா அப்படி என்ன ஊர்ல இல்லாத பெரிய கம்பெனி…”
பேசிக் கொண்டே வந்தவள் தனது தோழியின் முகத்தில் தோன்றிய குறுநகையை கண்டு,
“தே… தேவ்வோட கம்பெனியா? ஆனா இப்போதைக்கு அது ப்ராஸஸ்ல இருக்கறதா தானே சொன்னாங்க, அவங்க கம்பெனி வெப் பேஜ்ல கூட இதை பத்தி எதுவும் போடலையே.”
“ஆமாம் ஏன்னா இது அவரோட பார்ட்னர் கூட சேர்ந்து ஆரம்பிக்கறாங்க, நியூ லோகோ அண்ட் நேமோட. பட் எடுத்து நடத்தப் போறது உன் ஆளு தான்.”
தேவ்வை பற்றி பேச ஆரம்பித்ததுமே, தனது தோழியின் கண்களில் தோன்றிய காதலை காணும் போது, கவிதாவிற்கு அவளை நினைத்து சற்று வருத்தமாகத் தான் இருந்தது.
இது சாத்தியமா என்று கூட அவள் மனதிற்குள் கேள்வி பிறந்தது. கண்மணியின் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை கூட ஒரு வழியாக சமாளித்து விடலாம். ஆனால் தேவ்…எட்ட முடியாது உயரத்தில் இருப்பவன் எப்படி தன் தோழியின் கை சேர்வான்? முதலில் அவனுக்கு கண்மணியை நியாபகமாவது இருக்குமா?
மனதோடு வாதிட்டுக் கொண்டிருந்த கவிதா, கண்மணி கைகளைப் பிடித்து உலுக்கிய பிறகே நிஜ உலகுக்கு வந்தாள் .
“என்ன மேடம் இப்பவே சென்னைல எங்க எங்க சுத்தலாம்னு கனவு காண ஆரம்பிச்சாச்சா. இங்க பாரு நீ எனக்காகவே ஒரு நாள் கூட லீவு போடாம ஆபீஸ் போய்டணும், அப்புறம் டெய்லி அவருக்கே தெரியாம அவரை போட்டோ இல்லாட்டி வீடியோ எடுத்து, எனக்கு மறக்காம சென்ட் பண்ணனும். இதுக்காக நான் உனக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவேனாம் சரியா.”
“ம்ம்ம், சரிங்க முதலாளியம்மா இன்னும் வேற எதுவும் கட்டளை இருக்குங்களா?”
“போதும் போதும் அதோட உன்னையும் நீ நல்லா பார்த்துக்கனும், ஏதாவது பிரச்சனைனா பயந்து போகாம தைரியமா நின்னு பேஸ் பண்ணனும், அப்படி இல்லாட்டி எனக்கு உடனே கால் பண்ணனும் சரியா.
ப்ச்சு நான் பேசாமா உன் கூடவே இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்திருக்கலாம். உன்னைப் போலவே அவர் கம்பெனியில செலக்ட்டாகி அவரை டெய்லி பார்க்கற வாய்ப்பு கிடைச்சிருக்கும்.”
சத்தமாக சிரித்த கவி அவள் மண்டையில் கொட்டி,
“அட அறிவுக்கொழுந்தே நீ என்னோட இன்ஜினியரிங் சேர்ந்திருந்தா, அப்புறம் எப்படி தேவ் சாரை சந்திச்சிருப்ப? உன் காலேஜ் டூர் மூலமா தானே அவரை பாக்கற வாய்ப்பே உனக்கு கிடைச்சது. அதோட அந்த குண்டுவெடிப்புனால தான் அவரை கல்யாணமும் பண்ணிக்க முடிஞ்சது.”
“ ஆமால்ல, சரிதான் அவர பத்தி யோசிச்சாளே என் மூளை ஃபுல்லா ஸ்ட்ரக்காகி, ஒர்க் ஆகவே மாட்டேங்குது.”
“இருந்தா தானே ஒர்க் பண்றதுக்கு.”
ஒரு வழியாக இருவரும் கேலி கிண்டல்களுடன் வீடு வந்து சேர்ந்தனர். தனது பெற்றோர்களிடம் விஷயத்தை பகிர்ந்து கொண்ட கவிதா, கண்மணியின் பெற்றோர்களிடமும் வேலை பற்றி கூறி அவர்களது ஆசியை பெற்றவள், அடுத்த நாள் ஹாஸ்டலை நோக்கி சென்றாள்.
ஒரு மாதம் கழித்து கவிதா தனது தந்தையுடன் சென்னைக்கு கிளம்ப, அவளை அனுப்பி வைக்க ரயில் நிலையத்திற்கு வந்திருந்த கண்மணியின் கண்களில் அவ்வளவு தவிப்பு. மற்றவர்கள் அனைவரும் அது கவிதாவிற்காக என்று நினைக்க, கவிதாவிற்கு தான் தெரியுமே அவளது தவிப்பு யாருக்காக என்று. ரயில் ஏறும் முன்பு தனது தோழியை அணைத்துக் கொண்டவள் அவள் காதுகளில்,
“ஆபீஸ் போனதும் முதல் வேலையா உன் ஆளை சந்திச்சு ஒரு வீடியோவே எடுத்து அனுப்பறேன். அதோட அவர் என்னென்ன பண்றாரு எப்படி இருக்காருன்னு டெய்லி அப்டேட் பண்ணறேன் போதுமா?”
“போதாது உன் ஆபீஸ்ல ஏதாவது வேக்கன்சி வந்தா மறக்காம எனக்கு சொல்லணும், அதுக்கு என்ன எக்ஸ்ட்ரா கோஸ் படிக்கணுமோ அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன். இன்னும் ரெண்டு மூணு மாசத்துல நானும் உன்னோடவே அங்க வந்து சேரணும், கண்டிப்பா சேருவேன்.”
என்று கண்களை சிமிட்டியபடி கண்மணி கூற, வாய் பிளந்தபடியே ரயிலில் ஏறினாள் கவிதா.