Member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் 15
ஹாஸ்பிடலுக்கு சென்ற பிறகு கூட ரங்கநாயகிக்கு தனது டிராமா பற்றி நினைவுக்கு வரவில்லை. சேகரை பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவனது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதால் மாவுக்கட்டு போடப்பட்டிருப்பதாக கூற,
“ஐயோ என்னய்யா சொல்லறீங்க, அவனுக்கு நாளைக்கு கல்யாணமாச்சே? அதுக்கு எதுவும் பிரச்சினை இருக்காதே? கால்ல தானே கட்டு கைக்கு எதுவும் இல்லல்ல?”
“ஏம்மா அவரோட காலை ஊனவே முடியாதுங்கறேன், கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்கீங்க, கட்டிலோட வேணும்னா மணவரையில படுக்க வச்சுக்கறீங்களா? ஏன்னா அவரால சக்கர நாற்காலியில கூட உட்கார முடியாது, கையில ட்ரிப்ஸ் இறங்கிட்டு இருக்கு.”
“ஆத்தி என்னய்யா இப்படி சொல்லறீங்க, எவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினேன், இதுக்காக நான்…”
பேசிக்கொண்டே சென்ற ரங்கநாயகியின் கைகளைப் பற்றிய கவியின் பாட்டி கிருஷ்ணமூர்த்தியை கண் காட்டினார். அப்போது தான் ரங்கநாயகிக்கு நினைவு வந்தது, தனது மகனின் கோபப் பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்தார்.
“சொல்றதை புரிஞ்சுக்கங்கம்மா அவருக்கு புட் பாயிஷன் ஆகியிருக்கு போல, அதுக்கும் ட்ரிப்ஸ் மூலமா ட்ரீட்மென்ட் நடந்திட்டு இருக்கு, இதுல அவரால மணமேடையில உட்கார்றது நடக்காத காரியம்.”
“அவசியம் இல்லை டாக்டர் நாளைக்கு கல்யாணம் நடக்காது, நீங்க வேண்டிய ட்ரீட்மென்ட்டை பண்ணுங்க.”
“யப்பா மூர்த்தி… அது…”
அவரது பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொண்டார் ரங்கநாயகி. பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து தனது மனைவிக்கு அழைத்தவர்.
“வாசுகி இந்த கல்யாணம் நடக்காது வீட்ல நடக்கற கல்யாண வேலைகளை எல்லாம் நிறுத்தச் சொல்லு, மீதியை நான் வீட்டுக்கு வந்து சொல்லறேன்.”
“ யப்பா மூர்த்தி என்ன வார்த்தை சொல்லிட்ட, எனக்கு படபடப்பா வருது, ஐயோ நெஞ்சு வலிக்குதே...”
ரங்கநாயகி தனது டிராமாவை ஆரம்பிக்க, கவியின் பாட்டியை நோக்கி திரும்பிய கிருஷ்ணமூர்த்தி,
“ ஐசியூல சேர்த்திடுங்க அவங்க வயித்துல பிறந்த பாவத்துக்கு காசை கட்டிட்டு கிளம்பறேன். இவங்க பேரனுக்காக எம்புள்ளையோட படிப்பை தடுத்து நிறுத்தி, அவளுக்கு இந்த அவசர கல்யாணத்தை பண்ணி வைக்க பார்த்திருக்காங்க.
இதை எந்த காலத்துளையும் என்னால மன்னிக்க முடியாது. எம்புள்ள பாவம் இவங்க நடிப்பை பார்த்து நான் ஏமாந்தேன். ஆனா…ஆனா…கண்மணி, என் அப்பாக்காக இதை கூட செய்ய மாட்டனான்னு சொல்லி, என்கிட்ட ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாம எனக்காக…எனக்காக மட்டுமே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா.
அப்படிபட்ட புள்ளையை இப்படி கல்யாணங்கற பேர்ல குழியில பிடிச்சு தள்ள பார்த்தேனே… உங்க தோழிகிட்ட சொல்லிடுங்க இனி எனக்கு அவங்களோட பேச்சுவார்த்தையே கிடையாது.”
என்று கூறிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் வேகமாக ஹாஸ்பிடல் காரிடாரில் இருந்து வெளியேறி விட்டார். பாவம் ரங்கநாயகிக்கு தற்போது நிஜமான நெஞ்சு வலி கூட வந்தாலும் வரக்கூடும். அவரது மகனின் நம்பிக்கையை உடைத்து பெரிய தவறை செய்து விட்டார்.
ரிசப்ஷனில் சேகரின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை கட்டியவர், வரவேற்பரையில் நின்றிருந்த சேகரின் நண்பர்களை முறைக்க, அவர்கள் உடனே அங்கிருந்து நழுவி சேகரின் அறை நோக்கிச் சென்றனர்.
பெருமூச்சோடு காரை நோக்கிச் சென்றவர் கார் கதவை திறக்கும் நேரத்தில், அவர் கால்களில் வந்து விழுந்தாள் வனிதா. பதறிப் போனவர்,
“ஐயோ என்னம்மா பண்ற? ஆமா நீ நம்ம தோட்டத்துல வேலை பார்க்கற மாரிமுத்து மக தானே? நம்ம கண்மணி கூட தானே ஸ்கூல் படிச்ச, நீ எங்கம்மா இங்க? வீட்டுல யாருக்கும் உடம்புக்கு சுகமில்லையா?”
“ ஐயா என்னை காப்பாத்துங்க, என் அப்பா அம்மா எனக்கு அவசரமா கல்யாணம் பண்ணி வைக்க பாக்கறாங்க, நான் இப்ப தான் காலேஜ் முத வருஷம் படிக்கிறேன், எனக்கு இன்னும் நிறைய படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு ஆசை .
என் அப்பா அம்மாவை உட்கார வைச்சு நல்லபடியா பாத்துக்கணும்ங்கறது என்னோட கனவு. ஆனா…என் பாட்டி உன் முதலாளியே அவரோட பொண்ணுக்கு படிக்கும் போதே கல்யாணம் பண்ணி வைக்கறாரு, உன் புள்ளை மட்டும் படிச்சு என்ன பண்ண போறன்னு சொல்லி, சொந்தத்துல மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் பண்ணிட்டாங்க. எப்படியாவது அதை நிறுத்தி என்னை நீங்க தான் காப்பாத்தனுங்கய்யா.”
கிருஷ்ணமூர்த்திக்கு மனதில் சுளீர் என்று வலித்தது, அவரும் அந்த தப்பைத் தானே தனது மகளுக்கு செய்ய இருந்தார்.
“பயப்படாம போம்மா உன்னோட கல்யாணம் நடக்காது, ஏன் இந்த ஊர்ல இனி படிப்பு தடைபடுவது போல யாருக்கும் கல்யாணம் நடக்காது, இனி அது என் பொறுப்பு.
அதோட இனி உன் படிப்பு செலவை நான் பார்த்துக்கறேன், உனக்கு எதுவரை படிக்கனுமோ படி தாயி, அதுக்கு இனி எந்த இடையூறும் வராது.”
என்று சொன்னவர் போகும் வழியில் மாரியப்பனிடம் அவரது மகள் படிப்பு செலவை தானே ஏற்று கொள்வதாகவும், அதோடு பிள்ளை படிப்பு முடியும்வரை கல்யாண பேச்சே எடுக்கக் கூடாது என்றும் கூறிவிட்டு சென்றார்.
ஒன்றுமே புரியாமல் தலையை தலையை ஆட்டிவிட்டு, தூரத்தில் சென்று கொண்டிருக்கும் தனது முதலாளியை பார்த்து தலையை சொரிந்தபடியே நின்றார் மாரியப்பன்.
வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மனது பொறுக்காமல், தனக்கு அருகே வந்தமர்ந்த கண்மணியின் கைகளை பிடித்தபடி, நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல், அருகில் நின்ற தனது மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார்.
“ஏம்பா இந்த பாட்டிக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையா? இந்த வயசுல நான் கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்டப்படணும்னு நினைக்கிறாங்களே. அவங்களை பொறுத்த வரைக்கும் அவங்க பேரனுக்கு கல்யாணம் ஆனா போதும், கல்யாணத்துக்கு அப்பறம் இந்த சின்ன வயசுல நான் என்ன பாடுபடுவேன்னு அவங்க யோசிக்கவே இல்ல.”
“ஆமாங்க உங்க அம்மாக்கு அவங்க மகள் வயித்துல பிறந்த பிள்ளை மட்டும் தான் பேரக்குழந்தை, நம்ம பொண்ணு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.”
“என்னடி நான் இல்லாதப்போ என் பிள்ளைகிட்ட என்னை பத்தி வத்தி வைக்கிறியா?”
இவர்களது சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டே தனது தோழியுடன் உள்ளே நுழைந்த ரங்கநாயகி இப்படி கூற, கிருஷ்ணமூர்த்தி அங்கு இருக்க பிடிக்காமல் வெளியே செல்லப் போனார். அவரை கை நீட்டி தடுத்த அவரது அன்னை,
“ராசா எனக்கு என் ரெண்டு பேரப்பிள்ளைகளும் முக்கியம் தான். ஆனா சேகரை கொஞ்சம் அதிகமாவே பிடிக்கும், ஏன்னா அவன் தாயில்லாத பிள்ளை, தகப்பன் இருந்தும் இல்லாதது போலத்தான். அந்த பய தான் உன் தங்கச்சி போன பிறகு ஊர் ஊரா திரியிறானே.”
தனது தங்கையை பற்றி பேசியவுடன் கிருஷ்ணமூர்த்தியின் முகம் கனிந்தது, அதை கண்டு உள்ளுக்குள் ரங்கநாயகி மகிழ, கண்மணிக்கோ திக்கென்றது.
“ இப்படி நடிச்சு அவசர கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணற அளவுக்கு அப்படி என்ன அவசியம் வந்துச்சு ?”
“ இருக்கு ராசா, ஊருக்குள்ள இருக்க அவன் சோக்காளிகளுக்கெல்லாம் கல்யாணமாகி குழந்தையே இருக்கு, ஆனா இவனுக்கு இன்னும் அது நடக்கவே இல்லை. அவன் வெளியிடத்துல நல்லது கெட்டதுக்கு போகும் போது, ஊர்காரங்க இதை சொல்லிச் சொல்லியே பிள்ளை மனசை நோகடிக்கராங்க ப்பா.
கடைசியா போன கல்யாணத்துல நானே என் காதுபட இதையெல்லாம் கேட்டேன். பாவம் ப்பா அவன் மனசொடிஞ்சு போயிட்டான். அதனால தான் நான் இப்படி நடிச்சு கல்யாணத்தை உடனே நடத்த முடிவு பண்ணினேன். என் பொண்ணு இருந்திருந்தா, இந்நேரம் அவனை இப்படி ஊரார் பேச்சை கேட்கறபடி மொட்டைப்பயலா இருக்க விட்டிருப்பாளா? இப்ப சொல்லுப்பா நான் செஞ்சது குத்தமா?”
“நீங்க அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சது குத்தமில்ல ஆத்தா, ஆனா படிக்கிறப் பிள்ளையோட படிப்பு பாதிக்கப்படறது போல, இப்பவே அவனுக்கு ஜோடி சேர்க்க நினைச்சது தான் பெரிய தப்பு.”
கிருஷ்ணமூர்த்தியின் இந்த பதிலில் ரங்கநாயகி அதிர்ந்து போய் நிற்க கண்மணி புன்னகை பூத்தாள்.
“உனக்கென்ன ஆத்தா சேகருக்கு உடனே கல்யாணம் பண்ணணும் அவ்வளவு தானே. அவன் உடம்பு குணமாகட்டும், அடுத்த முகூர்த்தத்துல நானே நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்.”
“என்னப்பா இப்படி சொல்லற? நம்ம வீட்லயே பொண்ணை வச்சுக்கிட்டு வெளியே தேடினா சேகரை பத்தி ஊருக்குள்ள என்ன நினைப்பாங்க?”
“இல்ல ஆத்தா ஊர்காரங்களுக்காக என் புள்ள வாழ்க்கையை பாழாக்க முடியாது. கண்டிப்பா கண்மணியோட படிப்பு முடியிறவரை அவ கல்யாணத்தை பத்தி இந்த வீட்ல யாரும் பேசக் கூடாது.”
“ சரிப்பா நீயே சொல்லிட்ட அப்பறம் ஊர்காரனுங்க பேசறதை பத்தி நாம ஏன் கவலைப்படனும். நீ கண்மணி படிப்பு முடிஞ்சே சேகருக்கும் அவளுக்கும் கல்யாண ஏற்பாட்டை பண்ணு.”
என்ற வார்த்தை வெடிகுண்டை வீசி கண்மணியை கதிகலங்க வைத்தார் ரங்கநாயகி.