• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 26, 2024
Messages
40
அத்தியாயம் 13

திடீரென்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்மணியின் காலேஜ் டூர் ப்ளான் கேன்சலானது. டிவியில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரியை சூழ, உடனடியாக டூர் ப்ளானை அத்தோடு நிறுத்திக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாணவர்கள் அனைவரும் ட்ரிப் கிளம்பும் போது இருந்த மனநிலைக்கு மாறாக, டூர் கேன்சல் ஆன சோகத்தில் அமைதியாக வந்து கொண்டிருக்க, கண்மணியோ ஏதேதோ சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தாள்.

நினையாதே என்று எவ்வளவு கெஞ்சினாலும், அவள் மனம் அதை மிஞ்சிக் கொண்டு தேவ்வையே சுற்றி சுற்றி வந்தது.

அந்த நேரத்தில் தான் கண்மணியின் ஆசிரியர் அவளது தந்தை பேசுவதாக தனது போனை அவளிடம் கொடுத்தார்.

தனது சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் தனது போனின் நியாபகம் வந்தது.

ஆசிரியரின் போனிலேயே தன் பெற்றோர்களுக்கு தனது நலத்தை உறுதி செய்தவள், தற்போது தாங்கள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் விஷயத்தை மட்டும் கூறினாள்.

நாளை காலை தானே நேரடியாக காலேஜ்க்கு வந்து அவளை அழைத்துச் செல்வதாக கூறி சந்தோஷமாக போனை வைத்தார் கண்மணியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி.

ஆசிரியர் அவளை புருவ முடிச்சோடு பார்க்க,

“நான் கூட்டத்துல தொலைஞ்சு போனதை கண்டிப்பா வீட்ல சொல்ல மாட்டேன் சார். அது தான் நான் எந்த பிரச்சனையும் இல்லாம திரும்ப வந்துட்டனே, அதோட இதை வெளியே சொன்னா என்னோட பேரன்ட்ஸ் மட்டும் இல்ல, எல்லா பேரன்ட்ஸும் இனி தன் பிள்ளைகளை டூர்க்கு போக அலௌவ் பண்ண மாட்டாங்க. அதோட காலேஜ் நிர்வாகம் மூலமா உங்களுக்கு பிரச்சினை வரவும் எனக்கு விருப்பம் இல்ல.”

அதை கேட்டு கண்களில் நன்றி பெருக்கோடு அவர் அங்கிருந்து சென்றார். மற்ற மாணவர்களும் அவளை நோக்கி அதே பார்வையை வீசினர்.

எப்படியோ ஆசிரியர் முதற்கொண்டு மாணவர்கள் வாயையும் சேர்த்து, தனது சாமர்த்தியத்தால் கட்டி விட்டாள் கண்மணி.

இல்லையா பின்ன, இங்கு நடந்த விஷயம் மட்டும் இவள் வீட்டிற்கு தெரிந்து விட்டால், ரங்கநாயகி கிருஷ்ணமூர்த்தியிடம் அதை பற்றியே பேசி விஷயத்தை ஊதி பெரியதாக்கி, மீண்டும் கல்யாண பேச்சு வார்த்தையை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அதே வாரத்திலேயே திருமணத்தையும் செய்து முடித்து விடுவார்.

அதை மனதில் வைத்துக் கொண்டு தான், இவர் மூலமாக மட்டுமல்ல, தன்னோடு வந்த யார் மூலமாகவும் இந்த விஷயம் வெளியே போகக் கூடாது என்று, இப்படி ஒரு வார்த்தையை விட்டிருந்தாள். ஆனால் பாவம் அவள் அறியவில்லை, வீட்டில் அவளுக்கு எதிராக அவளது அப்பத்தா ஏற்கனவே தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டார் என்று.

தனது கைப்பையின் அடியில் இருந்து போனை தேடி எடுத்தவள், அதில் உள்ள அவளது தோழி கவிதாவின் பல தவறிய அழைப்புகளை கண்டு, உடனே அவளுக்கு அழைத்தவள் இரண்டு ரிங் போன பிறகே நேரத்தை கவனித்தாள்.

உடனே ஃபோனை கட் செய்தவள் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கைப்பையில் போடும்போது, கவியிடம் இருந்து அழைப்பு வந்தது. புருவ முடிச்சோடு அதை எடுத்தவள் ஹலோ என்று கூறுவதற்கு முன்பாகவே, கவிதா அங்கு பட பட பட்டாசாக பொரிந்து தள்ளி விட்டாள்.

“கண்மணி எப்படி டா இருக்க? நீ சேப் தானே? எருமை மாடு எவ்வளவு தடவை கால் பண்றது, ஒரு தடவை எடுத்து நான் சேப்பா தான் இருக்கேன்னு சொன்னா என்ன? இத்தனை தடவை கூப்பிட்டு இருக்கேனே, ஏதோ முக்கியமான மேட்டர்ன்னு உனக்கு தோனாதா?முதல்ல இப்ப நீ எங்க இருக்க? நீ இருக்குற இடத்துல எதுவும் பிரச்சனை இல்லையே? எரும இத்தனை தடவை கேட்கறேன் அமைதியாவே இருந்தா என்ன நினைக்கிறது, எதுக்காவது ஆன்ஸர் பண்ணி தொலை டி பக்கு பக்குன்னு இருக்கு எனக்கு.”

“இரு இரு முதல்ல என்னை ஆன்சர் பண்ண விட்டா தானே நான் பேச முடியும். நான் ரொம்ப சேஃப்பா இருக்கேன் அதோட இப்ப நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் போதுமா, ஆமா அப்படி என்ன முக்கியமான விஷயம்? இத்தனை தடவை கூப்பிட்டிருக்க. லீவு முடிஞ்சு காலேஜ் ஹாஸ்டல்க்கு கிளம்பிட்டையா என்ன? ”

“ இல்ல இல்ல நான் ஊர்ல தான் இருக்கேன். உங்க அப்பத்தா மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பிச்சிருச்சுடி.”

“என்ன சொல்ற கவி?”

“ஆமா நீ போன அடுத்த நிமிஷமே எங்க வீட்டு கிழவி கதறிகிட்டு உங்க வீட்டுக்கு போச்சு. என்னன்னு பார்த்தா, உங்க அப்பத்தா பாத்ரூமுல வழிக்கி விழுந்து ரொம்ப சீரியஸா இருக்கிறதா சொன்னாங்க.

நான் கூட உண்மைதானோன்னு பதறிப் போய் ஓடினேன். அப்புறம் தான் எங்க பாட்டியும் உன் பாட்டியும் குசு குசுன்னு பேசிட்டு இருக்கிறதை வெளிய இருந்து கேட்டேன். இது எல்லாமே உன்னோட கல்யாணத்துக்கான ஏற்பாடு தானாம். சாகறதுக்குள்ள பேரன் பேத்தி கல்யாணத்தை பார்க்கணும்னு சென்டிமென்ட்டா உங்க அப்பாகிட்ட டிராமா போட்டிருக்குது உங்க பாட்டி.

அதை உண்மைன்னு நம்பி உங்க அப்பாவும் அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு. நாளைக்கு காலையில உனக்கும் உங்க மாமாவுக்கும் கல்யாணம். அதை சொல்றதுக்காக தான் கூப்பிட்டேன். அதுக்கப்புறம் தான் மதியத்துக்கு மேல இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பத்தி தெரிய வந்துச்சு. எனக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு தெரியுமா?

அப்ப இருந்து கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை உன் போனுக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன். இப்ப நீ சேப்பா இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான், எனக்கு நிம்மதியா இருக்கு. சரி அந்த பிரச்சனையிலிருந்து தப்பிச்சிட்ட இங்க உனக்காகவே பெரிய பிரச்சனை காத்துகிட்டு இருக்கே, இதை என்ன பண்றது?”

“இந்தக் கிழவி அடங்கவே அடங்காது, இதுக்கு ஒரு பூசையை போட்டு முடிச்சு விடனும். எங்க அப்பா இனி அதுகிட்டயே போகாத மாதிரியும், அது பேசறதை கேட்காத மாதிரியும் பண்ணிடலாம். நீ நான் சொல்ற வேலைய மட்டும் பண்ணு.”

என்று சில விஷயங்களை விரிவாக கவியின் கூறியவள்,

“இன்னைக்கு நான் வரேன்ங்கறது தெரிஞ்சா அந்த கிழவி இன்னும் ஏதாவது பிளான் போட்டுக்கிட்டு இருக்கும்.நீ அவங்களை கவனிச்சிகிட்டே இரு, நான் வந்து பேசிக்கிறேன்.

எல்லாம் இந்த மாமாவால வந்தது, அவர் வேற யாரையாவது கட்டிக்கிட்டு இருந்தா, இந்த கிழவி என்னை டார்கெட் பண்ணுமா?

இனி என் கூட கல்யாணம் அப்படிங்கற வார்த்தையை கேட்டாளே என் மாமா பயப்படனும், அந்த மாதிரி ஒரு வேலையை பார்த்து வைக்கறேனா இல்லையா பாரு.”
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top