Member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் 12
நவீனுடைய கம்பெனி கெஸ்ட் ஹவுஸில் உள்ள பெட்ரூமினுல் அமர்ந்திருந்தாள் கண்மணி. அவளுக்கு சற்று தள்ளி தீவிரமாக போனில் பேசிக் கொண்டிருந்தான் தேவ்.
கிராமத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பு ஜெகதீசுக்கும் அவனது அண்ணனுக்கும் பலமுறை நன்றிகளை தெரிவித்துவிட்டு, கங்கம்மாவால் அந்தப் பெண் மீண்டும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவளையும் அவளது பெற்றோரையும் காவலர்கள் உதவியுடன், அவளது சொந்த ஊருக்கே அனுப்பி வைத்தனர்.
பிறகு நவீனோடு தேவ்வும் கண்மணியும் மட்டும் கண்மணியுடைய இருப்பிடத்தை தேடி சென்று கொண்டிருந்தனர். அவள் தற்போது இருக்கும் நிலையில் அப்படியே அங்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதால், வழியில் இருந்த நவீனுடைய கெஸ்ட் ஹவுஸில், அவளது உடையை மாற்றி விட்டு அவள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினான் தேவ். நவீன் அவளுக்கு ஆடை வாங்கி வர வெளியே செல்ல, இவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அதே போல அவள் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த ரிசார்ட்டின் அட்ரசை வாங்கியவன், நேரடியாகவே ரிசார்ட்டுக்கு அழைத்து, அவர்கள் மூலம் கண்மணியின் ஆசிரியரிடம் பேசி இருந்தான்.
கண்மணி தற்போது தங்களுடன் பத்திரமாக இருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அவளோடு ஹோட்டலுக்கு வருவதாகவும் கூறி போனை வைத்தான்.
அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கண்மணியை கண்டவன், புருவத்தை உயர்த்தியபடி புன்னகையோடு அவளை நெருங்கினான்.
“என்ன பட்டர் ஸ்காட்ச் உன் கண்ணுலயே என்னை கைதி செஞ்சிடலாம்னு பாக்குறியா? நான் சிக்க மாட்டேன் ப்பா… சிரிக்க மாட்டியா? ரொம்ப மொக்கை ஜோக்கோ?
சரி எப்படியோ உன்னோட லக்சரர்கிட்ட பேசிட்டேன், ஒருத்தர் உன்னை தேடி தான் வெளியே அலைஞ்சிட்டு இருக்காரு போல, நல்லவேளையா இன்னொருத்தர் அங்க இருக்குறவங்கள பார்த்துக்க ஹோட்டல்லயே இருந்தாரு.
நாளைக்கு காலையில போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு இருந்தாங்களாம், அப்படி பண்ணி இருந்தா விஷயம் உங்க வீடு வரைக்கும் போய் இருக்கும், அப்பறம் பெரிய பிரச்சினையா ஆகியிருக்கும் இல்லையா.
கூடிய சீக்கிரம் உன் பிரண்ட்ஸை பார்க்க போற, இங்க நடந்த எல்லாத்தையும் கனவா நெனச்ச மறந்திரு, என்னை தவிர சரியா…விதி இருந்தா மீண்டும் சந்திக்கலாம்.”
நவீன் அவளிடம் ஒரு கவரை கொடுத்து விட்டு வெளியே செல்ல,
“சரி பட்டர் ஸ்காட்ச் சீக்கிரமா துணியை மாத்திட்டு வா, நாம கிளம்பலாம்.”
என்று வெளியே செல்ல முயன்றவனை தடுத்து நிறுத்தியது அவளது குரல்,
“அவ்வளவுதானா…இங்க நடந்த எல்லாத்தையும் மறக்கணுமா.”
அவன் புருவ முடிச்சோடு திரும்பி அவளைப் பார்க்க,
“இதோ இந்த தாலி, நீங்க வச்ச இந்த குங்குமம் இது எல்லாத்தையுமே மறந்திடணுமா?”
திடுக்கிட்டு போனவனோ,
“ஹேய் இது ஒன்னும் நம்ம முறைப்படி நடக்கல இல்லையா? அந்த ஊர்காரங்களோட பழக்க வழக்கப்படி, அதுவும் அந்த பொண்ணை காப்பாத்துறதுக்காக, நாம செஞ்ச இந்த காரியம், எப்படி கல்யாணமாகும்?”
“எந்த முறைப்படி, எந்த வழக்கப்படி நடந்தா என்ன? இது கல்யாணம் தானே? நான் உங்க மனைவி தானே?”
“பட்டர் ஸ்காட்ச் என்ன உளரிட்டு இருக்க, நான் யாரு என்னன்னு கூட உனக்கு தெரியாது, எந்த நம்பிக்கையில இப்படி எல்லாம் பேசற.
நான் வெச்ச இந்த பொட்டுக்காகவும், கட்டுனா அந்த தாலிக்காகவும் நீ என்னோடவே இருக்கணும்னு அவசியம் இல்ல. இது ஜஸ்ட் ஆக்ஸிடன்ட் ஏதோ எதிர்பாராம நடந்தது அவ்வளவு தான்.”
“நீங்க எதிர்பாராத விதமாக செஞ்சிருந்தாலும், நான் மனப்பூர்வமா தான் இதை ஏத்துக்கிட்டேன்.”
“ ஐயோ பட்டர் ஸ்காட்ச் என்ன பேச்சு இது? லிசன் மே பி நான் உன்னை காப்பாத்துனதால உனக்கு என் மேல சாஃப்ட் கார்னர் கூட வர துவங்கி இருக்கலாம். இது உன் ஏஜ்ஜோட பிராப்ளம்.
நீ சின்ன பொண்ணு இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு சரியா, நீ படிச்சு பெரிய ஆளாகி உன் மனசுக்கு பிடிச்சவங்களையை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். அப்போ உனக்கு என் நினைப்பு கூட இல்லாம போகலாம்.
ஏதோ சந்தர்ப்பத்தால நான் கட்டின தாலி உனக்கு எப்பவுமே வேலியா நிக்காது.
முதல்ல இத எல்லாத்தையும் மறந்துட்டு டிரஸ் மாத்திட்டு வெளியே வா, உனக்காக அங்க உன் பிரண்ட்ஸும் டீச்சர்சும், ஏன் ஊர்ல உன் குடும்பமும் கூட உனக்காக காத்திட்டு இருக்கு.”
அதற்கு மேல் ஏதும் பேச தோன்றாமல் அவன் வெளியே சென்று விட, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வெளிய அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த நவீன்.
“ டேய் அந்தப் பொண்ணு சொல்றதுலையும் ஒரு பாயிண்ட் இருக்குல்ல.”
“ப்ச்சு இப்ப தான் அவளை மலை இறக்கிட்டு வந்திருக்கேன் அடுத்து நீ ஆரம்பிக்காத டா, அவ சின்ன பொண்ணு டா ஏதோ சந்தர்ப்பத்தால இப்படி எல்லாம் நடந்து போச்சு? இப்ப இதை நான் அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டா, எனக்கும் அங்க மணமேடைல இவ கழுத்து தாலி கட்ட வந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?”
இவர்கள் இங்கு விவாதித்துக் கொண்டிருக்க, குளியல் அறையில் ஷவரின் அடியில் நின்றவள் கண்களில் கண்ணீர் பெருகியது. மார்பினில் ஆடிக் கொண்டிருக்கும் மாங்கல்யத்தை கைகளுக்குள் இறுக்கமான பிடித்து கொண்டவள், ஒரு முடிவெடுத்தவளாக உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
காரின் பின்பக்கம் அவள் அமர்ந்து கொள்ள நவீனும் தேவ்வும் முன் சீட்டில் அமர்ந்தனர். வழியெங்கிலும் மௌனம், தேவ் கேட்ட எந்த கேள்விக்கும் அவள் பதில் அளிக்கவில்லை. கார் ரிசார்ட்டின் அருகே வந்ததும்,
“வண்டிய நிறுத்துங்க இங்க இருந்து எனக்கு போக தெரியும்”
“ இவ்வளவு தூரம் வந்துட்டு இங்கயே உன்னை விட்டுட்டு போக முடியுமா? உன் மாஸ்டரை பார்த்து அவர் கைல உன்னை பத்திரமா ஒப்படைச்சிட்டு…”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டி தடுத்தவள், வேறு எங்கோ பார்த்தபடி,
“ஒரு ஆணியும் கழட்ட வேண்டாம், எனக்கு இங்கிருந்து போய்க்க தெரியும். இப்ப வண்டிய நிறுத்தறீங்களா இல்ல கதவை திறந்து வெளியே குதிக்க வா.”
அவள் கதவில் கை வைக்கப் போக, அவசரமாக நவீன் வண்டியை நிறுத்தினான். உடனே வெளியே இறங்கியவளை இடைமறித்த தேவ் அவள் கைகளை பிடித்தபடி,
“லூசா நீ… என்ன பண்ற?”
“என்னை தொட உங்களுக்கு இப்ப எந்த உரிமையும் கிடையாது மிஸ்டர் தேவ். நீங்க தான் சொல்லிட்டீங்க இல்ல, சின்ன பொண்ணுண்ணு. வளர்ந்து வரும் போது எனக்கு ஏத்த ஜோடியை நான் தேர்ந்தெடுத்துக்குறேன். நீங்க சாத்திக்கிட்டு கிளம்புங்க.”
என்று வேகமாக முன்னே சென்றவள் மீண்டும் திரும்பி அவனை நோக்கி வந்தாள்.
அவன் கைகளை பிடித்து அதில் மாங்கல்யத்தை வைத்தவள்,
“இது என்னோட ப்ராப்பர்டி எனக்கு மட்டுமே சொந்தமானது. சரியா மூனு வருஷம் கழிச்சு இதே நாள் நான் உங்களை தேடி வருவேன், அதுவரை இது உங்ககிட்டயே இருக்கட்டும்.
ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வைச்சுக்கங்க, இந்த ஜென்மத்துல எனக்கு நீங்க தான் புருஷன், நீங்க மட்டும் தான். அதே போல உங்களுக்கும் நான் மட்டும் தான் மனைவி. நீங்க எப்பவுமே மிஸ்டர் கண்மணி தான்.
என்னை பொருத்தவரைக்கும் அது எப்பவுமே மாறாது. உங்களுக்கு இப்ப என் வயசு தானே பிரச்சனை, நல்லா படிச்சு உங்களுக்கு ஏத்த மாதிரி, உங்களை தேடி நானே வரேன். அப்போ உங்களால என்னை ஒதுக்க முடியாது.
இந்த தாலி உங்களுக்கு ஒரு பொண்டாட்டி இருக்காங்கறதை எப்பவும் நியாபகபடுத்தும். அதை மனசுல வச்சுட்டு இனி மத்த பொண்ணுங்களை பாருங்க, மூனு வருஷம் கழிச்சு சந்திப்போம் வரட்டுமா புருஷா.”
கைகளில் தாலியை பிடித்தபடி வாய் பிளந்து நின்றிருந்த மிஸ்டர் கண்மணியின் கண்ணத்தில் தட்டி விட்டு, திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருந்தாள் தேவ்வின் பட்டர் ஸ்காட்ச்.