New member
- Joined
- Feb 15, 2025
- Messages
- 5
- Thread Author
- #1
"காதல் சுகமானது"
சென்னை ரயில் நிலையம்.
அந்த காலை வேளையிலேயே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சென்னை ரயில்வே நிலையம்.
ஹிந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் இன்னும் என்ன பாஷை என்று தெரியாத மொழிகளில் பேசியபடி மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ரயில்களின் ஒலியும், ரயில் கொம்பு (ஹாரன்) ஒலியும், அங்கே ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சத்தமும், நடந்தபடி பேசிக் கொண்டிருந்த மக்களின் சத்தமும் எதுவுமே நித்யாவின் காதில் விழவில்லை.
அவளுடைய எண்ணம் மொத்தமுமே தன் காதலன் கிருஷ்ணன் மேல் இருந்தது. இன்னும் இரண்டு நாளில் அவனுடன் திருமணம் பின்னர் அவனுடன் கொடுக்க போகும் முத்தங்கள் என்று எதை எதையோ யோசித்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அங்கே அவளை கடந்து போகிறவர்கள் யாரைக் கேட்டாலும் அவளை பார்த்தவுடனே கூறிவிடுவார்கள், அவள் காதல் வயப்பட்டு இருக்கிறாள் என்று. அவளுடைய சிரிப்பு காதலில் மூழ்கிய பெண்ணின் வெட்கம் கலந்த சிரிப்பு என்று.
தன் காதலனை நினைத்து, அவனுடன் பேசியவை, சிரித்தவை என அனைத்தையும் நினைத்துப் பார்த்து கொண்டிருந்தாள் நித்யா.
அப்போது ஒரு கை அவள் தோளைத் தொட்டது. தன்னுடைய யோசனை கலைந்தவளாய் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
அங்கே அவளுடைய தோழி புவனா நின்று கொண்டிருந்தாள்.
"புவி, எப்படி இருக்க டி? எவ்வளவு நாளாச்சு உன்னை நேரா பார்த்து " என்று சந்தோஷமாக சிரித்தபடி அவளை கட்டி கொண்டாள் நித்தியா.
"நித்யா, வா போகலாம் " என்று ஒரு சிறிய புன்னகையை மட்டும் சிந்தி நித்யாவை அழைத்துச் சென்றாள் புவனா.
' என்னாச்சு இவளுக்கு நான் வந்தது சந்தோஷம் இல்லையா? இரண்டு நாளா எப்ப வர எப்ப வரன்னு இவ தானே கேட்டுகிட்டு இருந்தா? இப்போ நேரா பார்த்ததும் சரியா பேசல, சிரிக்க கூட இல்ல. எப்படி இருக்கிறாய் என்று கூட கேட்கல ' என்று நினைத்துக் கொண்டாள் நித்யா.
புவனா தங்கிக் கொண்டிருக்கும் 'பணி பெண்கள் தங்கும்' விடுதிக்கு சென்ற பிறகு,
நித்யாவை காலைக் கடன்களை முடித்து விட்டு வரச் சொன்னாள் புவனா.
நித்யா குளித்துவிட்டு வந்த பிறகு, தான் ஏற்கனவே செய்து வைத்திருந்த இட்லி மற்றும் சாம்பாரை தட்டில் வைத்து எடுத்து வந்தாள் புவனா.
" இல்ல புவி, இப்ப எனக்கு பசிக்கல. நீ சாப்பிடு"
" எனக்கும் தான் எடுத்து வந்திருக்கேன். நீ முதல்ல சாப்பிடு அப்புறம் மத்தத பேசிக்கலாம் "
" உண்மையிலேயே எனக்கு பசிக்கல டி "
" சாப்பிட்டு முடி, நாம வெளியே போய் பேசலாம் "
" ஏன் என்னாச்சு? என்ன பேசனும்? அப்படியே இருந்தாலும் இங்கேயே பேசினால் என்ன? "
" இங்க ஸ்டே பண்ற ஒருத்தவங்க நைட் ஷிப்ட் முடிச்சுட்டு இப்போ வந்துடுவாங்க. சாப்பிட்டு விட்டு உடனே தூங்குவாங்க அதனால நம்ம இங்க பேச முடியாது"
" ஓகே புவி, எங்க போய் பேசலாம்? "
" அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன் நீ முதல்ல சாப்பிடு "
அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் புவனா கொடுத்த இட்டிலிகளை சாப்பிட்டு முடித்தாள் நித்தியா. புவனாவும் சாப்பிட்டாள்.
' நம்ம கிருஷ்ணன் பாம்பேல இருந்து வர வரைக்கும் ரெண்டு நாள் தானே தங்குவதற்கு இடம் கேட்டோம். அது கூட முடியாதுன்னு சொல்ல போறாளா? வெளிய கூட்டிட்டு போய் என்ன பேச போறா?' என்று நினைத்துக் கொண்டாள் நித்தியா.
சாப்பிட்ட உடன் தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து நித்யாவை அமர வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய வணிக வளாகத்திற்கு (ஷாப்பிங் மாலுக்கு) அழைத்துச் சென்றாள் புவனா.
அங்கே மூன்றாவது மாடிக்கு மின் தூக்கி படிக்கட்டில் (எஸ்கலேட்டரில்) ஏறிச் சென்று ஒரு பெரிய உணவு விடுதிகள் பிரிவின் (ஃபுட் கோர்டின்) ஓரமாக இருந்த மேசை மற்றும் இரண்டு நார்காலிகள் இருந்தது. நித்யாவை அழைத்துக் கொண்டு அங்கே சென்று அமர்ந்தாள் புவனா.
" இப்போ சொல்லு நித்யா "
" என்ன சொல்ல சொல்ற? "
" நீ எப்ப திரும்ப ஊருக்கு போக போற? "
"நினைச்சேன் புவி, நான் வந்தது உனக்கு பிடிக்கலை தானே? அதனால தானே இப்படி கேட்குற? "
" லூசு மாதிரி பேசாத நித்யா. நான் எப்போதாவது அப்படி நினைத்து இருக்கேனா? "
" பின்ன ஏன் இன்னைக்கு என்னை பார்த்த உடனே உனக்கு சந்தோஷமே இல்ல? "
" அதுக்கு காரணம் இருக்கு நான் அதை அப்புறமா சொல்றேன். நீ ஏன் ஊருக்கு போக மாட்டேன்னு சொல்ற? "
"நான்தான் உன்கிட்ட வீட்டில் இருந்து கிளம்பும்போதே சொல்லிட்டேனே. திரும்ப ஊருக்கு போற ஐடியா இல்லைன்னு. திரும்ப போனேன்னு வச்சுக்கோ என்னோட தாய் மாமா பையன் அரவிந்தை எனக்கு கட்டி வச்சிருவாங்க. என்னால கிருஷ்ணன மறந்துட்டு வேற யார் கூடவும் குடும்பம் நடத்த முடியாது "
" கிருஷ்ணன் என்ன சொன்னான்?, சாரி என்ன சொன்னாரு? "
" பரவாயில்ல டி, அவன் இவன் கூட சொல்லு ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அவருக்கு நம்ம வயசு தான் இருக்கும்" என்று வெட்கம் கலந்த சிரிப்புடன் கூறினாள் நித்யா.
"சரி, நீ சொல்லு "
" கிருஷ்ணன் முக்கியமான வேலையா பாம்பே போயிருக்காரு. இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவாரு. அதுக்கப்புறம் நாங்க கோவில்ல போய் கல்யாணம் பண்ணிப்போம். சட்டப்படி கல்யாணம் பண்றதுக்கு நிறைய விதி முறைகள் இருக்காம் அதனால அதுக்கு ஒரு மாசம் ஆகும். அதுக்கு தேவையான எல்லா சான்றுகளையும் எடுத்து கொண்டு வரச் சொன்னாரு. எல்லாம் ரெடியா எடுத்து வந்திட்டேன். இந்த ரெண்டு நாள் மட்டும் உன் கூட தங்குவதற்கு எனக்கு அனுமதி கொடு டி. பிளீஸ்"
" டேவிட்டை சாரி சாரி, கிருஷ்ணனை உனக்கு எப்படி தெரியும்? "
" என்ன டேவிட்டா? அது யாரு? "
" இல்ல தெரியாம சொல்லிட்டேன், நீ சொல்லு"
"நாங்க instagram ல தான் பிரெண்ட்ஸ் ஆனோம். அதுக்கப்புறம் ரெகுலரா அவர் பெண்கள் பத்தி போடும் ரீல்ஸ் எல்லாம் பார்த்துட்டு நான் அவர் கூட சாட் பண்ணுவேன். அவர் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வச்சிருக்காரு தெரியுமா? அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அதுக்கப்புறம் நம்பர் எக்ஸ்சேஞ்ச் பண்ணி பேச ஆரம்பிச்சோம். வீடியோ கால்ல கூட பேசுவோம். அப்புறம் எங்களுக்குள்ள காதல் வந்துடுச்சு"
என்று வெட்கத்துடன் பேசினாள் நித்தியா.
" எப்பவாவது உன்னோட முழு புகைப்படத்தை வீடியோ காலில் காட்டச் சொல்லிக் கேட்டு இருக்கானா? "
" ஆமாம் ஏன் கேட்குற? "
" சொல்றேன்"
" ஃபோன்ல ஏதாவது ஆபாசமாக பேசுவானா? "
" சீ சீ, நீ ஏதோ தப்பா நினைச்சுகிட்டு பேசுற.
கிருஷ்ணா அப்படியெல்லாம் இல்ல. ரொம்ப ரொம்ப நல்லவர். அவங்க அம்மாகிட்ட பேசி இருக்கேன். அவங்க தங்கச்சி கிட்ட பேசி இருக்கேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல "
விரக்தியாக சிரித்தாள் புவனா.
" என்னடி ஏன் இப்படி சிரிக்கிற"
" காரணத்தை அப்புறமா சொல்றேன்.
சரி இப்ப வீட்ல என்ன சொல்லிட்டு இங்க வந்திருக்க? "
" சென்னையில் ஒரு வேலைக்கு இன்டர்வியூக்கு போறேன்னு. அதுவும் நீ சென்னையில இருக்கவே தான் தைரியமா அனுப்பிச்சாங்க. இல்லனா அனுப்பி இருக்க மாட்டாங்க."
"நீ வருவது கிருஷ்ணாவுக்கு தெரியுமா?"
"இல்ல இரண்டு நாள் கழிச்சு பாம்பே வில் இருந்து வந்திடுவேன். அப்போது வா என்று தான் சொன்னாரு. நான் தான் கல்யாணம் என்று முடிவான பிறகு எதுக்கு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வரணும். இப்பவே போகலாம். உன் கூடவும் இருக்கலாம். கல்யாணத்துக்கு தேவையான சில பொருட்களை உன்னோடு சேர்ந்து வாங்கலாம் என்று நினைச்சேன்"
" என்னடி இது கையில? " என்றாள் புவனா.

Last edited: