- Joined
- Aug 31, 2024
- Messages
- 956
- Thread Author
- #1
சொல்லாமல் கொள்ளாமல் தன் முன் அமர்ந்திருக்கும் பெண்ணையும் தாயையும் எச்சில் விழுங்க அதிர்ந்து பார்த்தார் மருத்துவர்.வர்ஷா.
“வரலாமா டாக்டர்?” என கேட்டு அவரின் அதிர்வை அனுரதி உடைக்க,
“வா... வாங்க. வாமா அனு. உட்காருங்க” என்று எதிரில் இருந்த நாற்காலியில் அமரவைத்துத் தானும் யோசனையாய் அமர்ந்தவர், “அதுக்குள்ள ஒரு மாசம் ஆகிருச்சா? அதே பிரச்சனைதான? இந்த மன்த் சரி பண்ணிரலாம்” என்றவருக்கு ஏசியிலும் வியர்க்க ஆரம்பித்தது.
பேச வந்த தாயின் கைபிடித்து, “சரி பண்ணிரலாமா டாக்டர். ஒன் வீக் போனா ஐந்து மாசமாகுது. இந்த மாசமாவது சரியாகுமா? இல்ல டேப்ளட் மாத்தி, வேற தருவீங்களா?” என்றாள் அமைதியாக.
“அ...அது இந்த மன்த் கன்பார்மா சரி பண்ணிடுறேன்மா.”
“எப்படி டாக்டர்? கருவைக் கலைக்கப்போறீங்களா? கரு...இல்லையில்லை ஐந்து மாதக் குழந்தையைக் கலைக்கப்போறீங்களா?” என்றாள் குரலில் எதையும் காட்டாது.
“ஏய்! எ...என்னம்மா பேசுறீங்க?” பதற்றப்பட்டாலும் அதை நொடியில் மறைத்து, “கரு, குழந்தைன்னு என்ன பேச்சிது அனு? நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்கபோல” என்றார்.
“நீங்கதான் குழப்பத்துல ஏதோ பண்ணிட்டீங்கன்னு, நாங்களும் சொல்லலாமே. ஏன் டாக்டர் இப்படி செய்தீங்க?” தன் வயிற்றைக் காண்பித்து, “இதுக்கு என்ன ரீசன் சொல்லப்போறீங்க டாக்டர்? நாலு நாள் கொடுமையில் இருந்து தப்பிச்சு வந்தா, என்னை இந்த நிலையில் வச்சிட்டீங்களே? டிஎன்சி பண்ணினது உண்மையா? உண்மைன்னா, இந்தக் குழந்தை எப்படி? உண்மை இல்லைன்னா இது அ... ச்சே...அந்த சைக்கோவோடதா? அவனோடதுன்னா அப்பவே கலைச்சிருக்கலாமே டாக்டர். ஆனா, அம்மா அவனோடது இல்லைன்னு அடிச்சி சொல்றாங்களே. நான் எதை நம்பட்டும் டாக்டர்? இது தெரிந்ததிலிருந்து ஒரே குழப்பம். என்ன பண்ணுறது தெரியாம உங்களையேப் பார்த்துக் கேட்கலாம்னு வந்துட்டேன்.” பதில் தெரிந்தே வேண்டுமென்று அழுத்தமாக அமர்ந்திருந்தாள் அனுரதி.
“என் பொண்ணு வாழ்க்கை, உங்க கையில் கிடைத்த பூமாலைன்னு நினைச்சீங்களா டாக்டர். இப்படிப் பிய்த்து விளையாண்டுருக்கீங்க? நம்பிதான வர்றோம். ஆனா நீங்க...” என குலுங்கி அழுதவர், “நம்பிக்கைத் துரோகத்தை எவ்வளவு ஈசியா செய்துட்டீங்க. அதனால ஒரு பொண்ணோட வாழ்க்கை போகுதேன்னு ஏன் யோசிக்கலை நீங்க? இப்ப எதுவும் புரியாம...” துக்கத்தை அடக்க முடியாது அழுதவரிடம்,
“அம்மா அழக்கூடாது. நாம எந்தத் தப்பும் செய்யலை. டாக்டர் ரொம்ப நல்லவங்க. என்ன நடந்தது? அதற்கான தீர்வு என்னன்னு அவங்களே சொல்லுவாங்க. இல்லையா டாக்டர்?” என்றவள் குரலில் அவ்வளவு நக்கல்.
“அ...அ...அது...”
“எ...எ...எது டாக்டர்? பாருங்க உங்களுக்கு ரொம்ப வேர்க்குது. தொண்டை வரண்டிருக்கும். தண்ணீர் குடிச்சிட்டுத் தெளிவா சொல்றீங்களா?” என்றாள் நக்கல் குறையாது.
“ஒ...ஒரு ஃபைவ் மினிட்ஸ் இப்ப வந்திருறேன்” என்றார்.
“சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேச ஐந்து நிமிடம் போதுமா டாக்டர்? பரவாயில்லை. அரைமணி நேரமானாலும் முடிச்சிட்டு வாங்க. நாம பேசிக்கலாம்” என்றாள்.
வேகமாக வெளியே சென்றவர் யாருக்கோ அழைத்து, “அனுரதிக்கு உண்மை தெரிந்து வந்து கேள்வி கேட்கிறா. கத்திகித்தி சண்டை போடாம அமைதியா உட்கார்ந்து அரட்டுறா. என் லைஃப்ல தெரியாமல் ஒரு தப்பைப் பண்ணிட்டேன். என்னால முடியலை மேடம். எதாவது பண்ணுங்க. ப்ளீஸ்” என்று கெஞ்சினார். எதிரில் என்ன சொல்லப்பட்டதோ, “சரிங்க மேடம் சொல்லிருறேன். போனை ஸ்பீக்கர்ல போடுறேன்” என்று அறைக்குள் சென்றவர் போனை அணைக்காமல் அருகில் வைத்துவிட்டார்.
“சொல்லுங்க டாக்டர்? எதிர்ல என்ன சொன்னாங்க? ஏதேதோ பேசி பைஃல்ஸையும் வாங்கி கமுக்கமா வச்சிக்கிட்டீங்க. எனக்கும் இப்ப என்ன பண்ணுறது தெரியலை. கோர்ட் கேஸ்னு போயி பழசைத் தோண்டியெடுத்து, என் காயத்தை அதிகப்படுத்திக்கவும் தயாராயில்லை. அதோட இப்படி ஒருத்தி சிகிச்சைக்கு வந்ததுக்காவது, அந்த ரவிசங்கர் கேஸை சொல்லலாம். அது இப்பத் தேவையில்லாதது. ஆனா உங்ககிட்ட...” என வயிற்றைக் காண்பித்து, “இதுக்கான ட்ரீட்மெண்ட் நடந்ததுக்கு நீங்க சொல்றதுதான்...” என நிறுத்தி கைகளைக் கட்டி தோரணையாய் பார்த்திருந்தாள்.
“எனக்கும் என்ன சொல்லுறது தெரியலை அனுரதி. இப்ப நீங்க கிளம்புங்க. நீங்க வீட்டுக்குப் போன அரைமணி நேரத்திற்கெல்லாம், சம்பந்தப்பட்டவங்க உங்களை வந்து பார்ப்பாங்க” என்றார்.
“என்ன டாக்டர்? யாரையாவது வச்சி க்ளோஸ் பண்ணிரலாம்னு பார்க்குறீங்களா?” என்றார் சாரதா.
“நீங்க ரொம்ப கற்பனை பண்ணிக்குறீங்கமா. நடந்தது நடந்துருச்சின்னு ஏதோ காரணம் சொல்ல மனசு வரலை. இதை எப்படி சரி பண்ணுறதுன்னுதான் ஒவ்வொரு நாளும் தவிச்சிட்டிருக்கேன். உங்களுக்கு எப்படியோ, நான் தினந்தினம் குற்றவுணர்ச்சியில் வெந்துக்கிட்டிருக்கேன். அவங்களே உங்ககிட்ட பேசுறேன்னு சொன்ன பிறகுதான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாயிருக்கு” என்றார் மருத்துவர்.வர்ஷா.
“உங்க நிம்மதி உங்களுக்குத் திரும்பிருச்சி. ஆனா, எங்களுக்கு? ப்ச்.. வர்றோம் டாக்டர். இனிமேல் தவறியும் கூட யாருக்கும் இதை செய்திடாதீங்க. வாங்கம்மா போகலாம்” என்று தாயையும் அழைத்துச் சென்றுவிட்டாள் அனுரதி.
வீட்டிற்கு வந்த அரைமணி நேரத்திற்கெல்லாம், டாக்டர் சொன்னாற்போல் தங்கள் முன் நின்றிருந்த ஆண், பெண் இருவரையும் தீர்க்கமாகப் பார்த்திருந்தார்கள் தாயும், மகளும்.
“வணக்கம் நான் அபிராமி. இவர் என் அண்ணன் ஆனந்தன். இன்னொரு வகையில் சம்பந்தி. என் பெரிய பையனோட மாமானார்” என்று கைகுவித்தவரிடம் முகத்திலடித்தாற்போல் பேச தமிழர் பண்பாடு தடுக்க, “உட்காருங்க” என்று எதிரிலிருந்த ஷோஃபாவைக் காண்பித்து, இவர்கள் இருவரும் அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்தார்கள்.
“சொல்லுங்க அபிராமி மேடம். என் பொண்ணுக்கும், உங்களுக்கும், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் நாங்களா தெரிஞ்சிக்கும் வரை, ஏன் இந்த நாடகம்? நாங்க மிடில் க்ளாஸ் ஃபேமிலி. உங்களைப் பார்த்தாலே உங்க வசதி தெரியுது. அப்படி இருக்கிறப்ப ஏன் இப்படி?” என்று தன் மனக் கொந்தளிப்பைக் கொட்டினார் சாரதா.
இந்த இடத்தில் தான் பேசுவதை விட, தாய் பேசுவதுதான் சரி என்பதால், அமைதியாக அமர்ந்திருந்தாள் அனுரதி.
“முதல்ல மன்னிக்கணும். உங்க நிலை புரியுது. எதையும் திட்டம் போட்டுச் செய்யலை. இந்தக் குழந்தை உங்க பெண் வயிற்றில் தவறுதலா வந்ததுதா...” என முடிக்குமுன்,
“தவறுதலா செய்துட்டீங்கன்னு தெரிஞ்சதும் கலைச்சிருக்கலாமே? என் பொண்ணுக்கு ஏன் இந்த தண்டனை? எப்படியும் டாக்டர் மூலமா என் பொண்ணுக்கு நடந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இப்ப இது வெளியில் தெரிஞ்சா அந்த அயோக்கியனோடது என்றுதான சொல்லுவாங்க. எப்படி மறுக்க முடியும்? மறுத்தா என் பொண்ணோட கேரக்டர் அடியாகாதா? இதுக்கு உண்மை தெரிஞ்சதும் கலைச்...”
“ப்ளீஸ் சாரதா. கலைச்சிரலாம்னு இன்னொரு முறை சொல்லாதீங்க. அது எங்க வீட்டு வாரிசு” என்றார்.
“உங்க வீட்டு வாரிசுன்னா, நாங்க தண்டனை அனுபவிக்கணுமா? இன்னும் ஒரு மாசத்துல வயிறு நல்லா தெரிய ஆரம்பிச்சிரும். தப்பான ட்ரீட்மெண்ட்னு தெரிஞ்ச பிறகு, இன்னொரு முறை முயற்சித்திருந்தா குழந்தை வந்திருக்குமே. அதுக்கு ஏன் எங்களை...” என்றவர் குரலில் அத்தனை கோவம், ஆதங்கம்.
ஏனெனில் இனி ஒவ்வொருவரும் கேட்கும் கேள்விகளுக்கும், கேலிகளுக்கும் காரணியாக தன் மகள் இருந்துவிடுவாளே என்ற பயம். ‘இனி ஒரு திருமணம் செய்வாளா?’ என்பதே கேள்விக்குறியாய் இருக்க, இந்தக் குழந்தை மிகுந்த மனவுளைச்சல்தான் அவருக்கு.
தன் மனதிலுள்ளதைத் தாய் கேட்டிருந்ததால், அனுரதியுமே அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று அபிராமியையே பார்த்திருந்தாள்.
ஹ்க்கும் என அடைத்த தொண்டையைச் செருமிய அபிராமி, “அடுத்து பெத்துக்க என் பையன் இருக்கணுமே சாரதா. அ...அவன் இப்ப உயிரோட இல்லை” என்று சொல்ல,
“என்னது?” என தாயும் மகளும் அதிர்ந்தனர்.
“ஆமா சாரதா. என் பையனுக்குக் கல்யாணம் செய்து ஆறு வருடமாகுது. மருமகளுக்கு அடிக்கடி வயிறு வலின்னு சோதனை செய்ததில் கர்ப்பப்பையில் கட்டி இருக்கிறதாகவும், எடுக்கலைன்னா கேன்சரா மாற வாய்ப்பிருக்குன்னு சொல்லி, இரண்டு வருடம் முன்ன எடுத்துட்டு, ப்ளாஸ்டிக் கர்ப்பப்பை வச்சிட்டாங்க. இது அவளுக்குத் தெரியாது. வயிற்றில் நீர்க்கட்டி இருக்கிறதால அதை அகற்றினோம்னு சொல்லியிருக்கோம். ஏன் கர்ப்பமாகலைன்னு அவள் கேட்டுரக்கூடாதுன்னு, கர்ப்பம் தரிக்கக்கூடாதுன்னு டாக்டர் சொன்னதா சொல்லி, கடந்த ஒன்றரை வருடமா குழந்தையைத் தத்தெடுத்துக்கச் சொன்னதுக்கு முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா. என் சின்னப்பையன் கொடுத்த ஐடியாதான் இந்த வாடகைத்தாய்.”
“ஆனா, ப்ளாஸ்டிக் கர்ப்பப்பை வச்சாலும் குழந்தை பெத்துக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்லுறதைக் கேட்டுருக்கேன். நீங்க ஏன் வாடகைத்தாய் வந்தீங்க?” என அனுரதி கேட்க,
“நீ சொல்றது சரிதான்மா. ஆனா, என் மருமகள் உடல்தான் அதுக்கு ஒத்துழைக்கலை. கர்ப்பப்பை எடுத்துட்டா மாதவிலக்கு வராது. அதுவே அவளுக்கு சந்தேகத்தைக் கொடுக்கும். அவள் எதுவும் விபரீத முடிவு எடுத்துரக்கூடாதுன்னு டாக்டர்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணி கேட்டப்பதான், அட்வான்ஸ்டா இருக்கிற செயற்கைக் கர்ப்பப்பை வைக்கலாம். அது உடலை பாதிக்காது. ஆனால், உங்க மருமகள் உடலுக்கு குழந்தை கூடவே கூடாது சொல்லிட்டாங்க. அடுத்துதான் வாடகைத்தாய் போனது.”
“ஓ...” என்று தலையசைத்தாள் அனுரதி.
“முதல்ல யாரோடதோன்னு முடியாது சொன்னவ, புருஷன் பொண்டாட்டி உயிரணு வச்சி கருவை உருவாக்குறதா சொன்னதும் சம்மதிச்சிட்டா. அப்புறம் டாக்டர்கிட்ட பேசி பெண் கிடைச்சி சிகிச்சை ஆரம்பிச்சாச்சி. எல்லாம் முடிந்து ஒருவாரம் இருக்கும் போதுதான் என் பையன் சூஸைட் பண்ணிக்கிட்டான். ஏன்? எதுக்கு? இப்பவரை காரணம் தெரியலை. தெரிஞ்சிருந்தா ஒருவேளை தடுத்திருக்கலாம்” என்றதும் தாயும் மகளும் ஒருவரையொருவர் பார்க்க, என்ன செய்வது சொல்வதென்று அவர்களுக்குமே தெரியவில்லை.
“அந்த அதிர்ச்சியில் மருமகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுருச்சி. இது சேனல்ல எல்லாம் வந்திருந்தது. அந்த நேரம் நீங்க ஹாஸ்பிடல்ல இருந்ததால தெரிய சான்ஸ் இல்லை. மகன், மருமகள் அந்தப் பிரச்சனையில் இங்க நடந்த குழப்பம் தெரியலை. வாடகைத்தாய் ப்ரெக்னென்ட் இல்லைன்னு தெரிய வந்தப்ப, அந்த சூழ்நிலையில் சின்னதா வருத்தம் இருந்தாலும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தலை. அடுத்த கொஞ்ச நாள்ல டாக்டர் ஏதேதோ சொன்னாங்க. அந்த நேரத்துல எதுவும் புரியலைன்னாலும், என் பையனோட வாரிசுக்கு எதுவும் ஆகலைன்றதை உணர்ந்தேன். எப்படின்னு தெளிவா தெரியணும்னா டாக்டரைதான் கேட்கணும். அநேகமா அவங்க இன்னைக்கு வரலாம்.”
“அதுக்கப்புறம் ஆள் மாறி செய்த சிகிச்சை தெரிஞ்சது. நேரே உன்னைப் பார்க்கணும்னு டாக்டர்கிட்ட கேட்டேன். அப்பதான் அவங்க உன்னோட சூழ்நிலையைச் சொன்னாங்க. மனசுக்கு கஷ்டமா இருந்தது. டாக்டர் கலைச்சிரலாம்னு சொன்னாங்க. எப்படி முடியும்? என் பையன் உயிரோட இருந்திருந்தா வேற. இல்லாதப்ப இதுதானே வாரிசு. அதான் அழிக்காமல், கரு நிலைக்க மருந்து கொடுங்க, இல்லைன்னா உங்க மேல கேஸ் போடுவோம்னு டாக்டரை மிரட்டினதும், வேற வழியில்லாம சரின்னு சொல்லிட்டாங்க. உன்கிட்ட சொல்லலாமான்னு கேட்டாங்க. நான்தான் தெரியுறப்ப வரட்டும் மற்றதை நான் பேசிக்குறேன்னு சொல்லிருந்தேன். இதோ தெரிஞ்சதும் நேர்லயே வந்துட்டேன்” என்றவர் குரலில் தவறியும் தவறு செய்த பாதிப்பில்லை.
அதையே சாரதாவும் சொன்னார்.
“நாங்க திட்டமிட்டு எதையும் செய்யலை சாரதா. திட்டமிடக்கூட எங்ககிட்ட நேரம் கிடையாது. அவங்களையே நினைச்சதுல தொழில் பாதிக்கப்பட்டுருச்சி. அப்புறம் அதுக்கான ஓட்டம். நீங்க சொல்லுங்க? இதில் என்ன தப்பிருக்கு?” என கேட்டார்.
தப்பென்று உரைக்க முடியவில்லை தாய், மகள் இருவருக்கும். இருந்தாலும் குழந்தைக்கான வழி வேண்டுமே.
“இப்ப நாங்க என்ன பண்ணட்டும் அபிராமி மேடம்? எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருக்கோம். ஒண்ணும் புரியலை” என்றார் சாரதா.
“அதுக்கு உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்” அபிராமி பட்டென்று சொன்னார்.
“என்னது?” என அனுரதி அதிர்ந்து எழ, அதேயளவு சாரதாவிற்கு அதிர்ச்சி இருந்தாலும், மனதில் சின்ன எதிர்பார்ப்பும் இருந்ததோ!