Member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
கதைப்போமா 5
அவன் அப்படி சென்றதும் அவளுடைய தோழி வேகமாக அங்கே வர. புழுதியை கிளப்பிக் கொண்டு சென்ற அந்த வாகனத்தைக் கண்ணை விட்டு மறையும் வரையிலும் பார்த்திருந்தாள் ஆராத்யா.
“என்னடி இவ்வளவு வேகமா போறாரு?? என்னடி பேசினாரு?” என்றபடி வந்து நின்றாள் ராதிகா.
ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள். ஆனால் அவள் விடாது கேள்வி கேட்க. அவள் செய்கை மொழியால், “அவருக்குத் திருமணத்தில் சம்மதமாம். தன் சம்மதத்தை கேட்கிறார். கேட்டுவிட்டு அலைபேசியில் தொடர்பு கொள்ள சொன்னார். ஆனால் தன்னால் பேச முடியாதே அதையே மறந்து கூறிவிட்டு போகிறார்” என்று செய்து காட்டினாள்.
“அவரு வீடியோ கால் வரச் சொல்லி இருப்பார். நீ கோர்வையா பேசினா தான் அவருக்குப் புரியாது. ஒவ்வொரு வார்த்தையா பேசினா புரியும். ஆரம்பத்துல எனக்கு கூடக் கஷ்டமா இருந்துச்சு. இப்படி தான் எனக்கும் புரிஞ்சது. ஆனா மனுஷன் நல்லவர் தான் போல?. பாக்கவும் ஸ்மார்ட்டா இருக்காரு. நானும் கவனிச்சுக்கிட்டே தான் இருந்தேன். உன்கிட்ட பொறுமையா பேசுற மாதிரி தான் தோணுச்சு. அதனாலதான் அமைதியா ஓரமா நின்னுட்டு இருந்தேன். உன்னோட அழகுக்கேத்த இளவரசன் தான். ஆனா அவங்க வீட்ல சம்மதிப்பாங்களா?” என்று கேட்டாள் ராதிகா.
உதட்டைப் பிதுக்கித் தெரியவில்லை என்றாள்.
“உன் வீட்டில் சம்மதிப்பாங்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
அதற்கும் தெரியவில்லை என்று அவள் தலையாட்டினாள். “சரி பேசிட்டு என்ன ஏதுன்னு சொல்லு. நான் வேற ரொம்ப அதிகமா திட்டிட்டேன் போல” என்று தன்னையே நொந்து கொண்ட படி, அவள் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்றாள். இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தனர்.
என்னதான் அவள் பாட்டிற்கு நடந்து வந்தாலும், பேசிக் கொண்டிருந்தாலும் அவள் சிந்தனை முழுவதும் வந்து பேசிவிட்டு சென்றவனிடம் தான் இருந்தது. உண்மையில் போட்டோவில் முதலில் கவனத்தைக் கவர்ந்தது அவனுடைய மகன் தான். அவ்வளவு அழகு. அதன்பிறகு தான் தந்தையைப் போல அவன் இருக்கிறான் என்று புரிந்தது. தாடி மீசை என்று இருந்தாலும் இப்பொழுது ஆண் அழகனாகத் தான் தெரிந்தான். அதைவிட முக்கியமாகத் தன் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பேசும் நல்லவனாகவும் இருக்கிறான். ஆனால் இவன் தன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் என்று தான் புரியவில்லை. அதுவும் வாத்தியார் வேறு. வாத்தியார்களுக்கும் வக்கீல்களுக்கும் வாய்தானே மூலதனம். அவருடைய மனைவி ஊமை என்று மற்றவர்களிடம் எப்படி கூற முடியும்??. இதெல்லாம் யோசிக்காமல் அவர் செயல்பட்டு விட்டாரோ என்று சிந்தித்து கொண்டு வீட்டிற்கு சென்றாள். தாயிடம் தனியாக அழைத்துக் கூறிவிட்டாள் அவருக்குச் சந்தோஷம் தான். அவருடைய ஒரே தயக்கம் இரண்டாவது திருமணம் என்பது மட்டும் தான்.
மத்தபடி அழகையோ, கம்பீரத்தையோ குடும்பப் பின்னணியையோ அவர் படிப்பையும் வேலையையோ குறை சொல்ல முடியாது. குழந்தை கூட அமைதியாகச் சமத்தாக தான் இருந்தான்.
ஆனால் மகன் என்ன சொல்வானோ??. உண்மையில் மருமகளின் இடிச் சொற்களுக்கு இடையே கிடப்பது தன்னுடைய விதி. ஆனால் தன் மகளாவது நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தார். முன்தினம் இப்படி கடுமையாக பேசிச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை அவருக்குச் சுத்தமாக இல்லை. ஆனால் மகளுடைய சம்மதத்தை கேட்டு அவளை தனியாகச் சந்தித்து பேசி இருக்கிறார் என்றால். உண்மையில் அவர் நல்லவராகத் தானே இருக்க வேண்டும்?. தரகரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு. அந்த மாப்பிள்ளை விசாரித்ததை பற்றிக் கூறியிருந்தார். அவருடைய அனுபவத்திற்கு அவன் செய்த செயல்கள் எல்லாம் நல்ல விதமாகத்தான் தோன்றியது. தன் மகன் கூடத்தான் தங்கள் மீது அன்பை வைத்திருக்கிறான். அதிகமான பாசத்தையும் வைத்திருக்கிறான். ஆனால் மூன்று பேருக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறான். அதுபோலத் தான் முன்தினமும் அவர் தாய் பேசும்போது செய்வதறியாது அந்த மனிதரும் திகைத்து இருந்திருப்பார். பிறகு யோசித்து செயல்பட்டு இருக்கிறார். அதைத் தவறு என்று கூற முடியாது. மகனுக்காகக் காத்திருந்தார்கள் இருவருமே. ஆனால் அண்ணனிடம் இதைப் பற்றிப் பேசுவதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது. ஏற்கனவே இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று சொன்னவன். இப்பொழுது இப்படியெல்லாம் பேசிவிட்ட பிறகு சம்மதிப்பான் என்ற நம்பிக்கை இல்லை.
தாயையே பேசச் சொன்னாள். அவன் வந்ததும் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று விசாலாட்சி அவனிடம் கேட்டார்.
தன்னிடம் தனியாகப் பேசுவதற்கு தான் அவர் அப்படி அழைக்கிறார் என்பதை நொடியில் புரிந்து கொண்ட கவியும் நொடியில் குளித்துவிட்டு வந்து தாயை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றான்.
மகள் பேசிய அனைத்தையும் அவர் கூறிவிட்டு தன் மனதில் இருப்பதையும் அவனிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆணாக அவனுக்கு இப்பொழுது அபிமன்யுவின் சூழ்நிலையும் செயல்பாடுகளும் சிறிது சிறிதாகப் புரிந்தது. தாய் மகனின் நிலையையும் அபிமன்யுவின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தே பேசினார். அதனால் புரிந்தது என்றும் சொல்லலாம். ஆனாலும் குழப்பமாக இருக்க. தாயிடமே என்ன செய்வது என்று கேட்டான்.
“எனக்கு அந்த மாப்பிள்ளை கிட்ட தப்பு இல்லன்னு தோணுது. அவரே வந்து கேட்டிருக்கும்போது கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தோணுது. ஆனா நீ சொல்றது எனக்கு முக்கியம் தான் பா. நீ என்ன நினைக்கிறன்னு சொல்லு” என்றார்.
“ஆராத்யா என்ன சொன்னாள்?” என்று தங்கையின் மனதை தெரிந்து கொள்வதற்காகக் கேட்டான்.
“அவள் அப்பவே பிடிச்சிருக்குன்னு தானே இந்தத் திருமணத்துக்கு வற்புறுத்துனா. இப்போ மாப்பிள்ளையும் நல்ல மாதிரி தான் தெரியுது. அவளோட போட்டோவ கூட அவர் மனைவி போட்டோ கூடச் சேர்த்து வச்சிருக்காராம். அவங்க அம்மா அவளோட குறையைச் சுட்டிக்காட்டி பேசினாங்க தான். ஆனா அவளோட குறையை அவர் குறையா நினைக்கல இல்லையா?. இதுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாம் அந்தக் குறைக்காகவே வரதட்சணை கேட்டாங்க. வீடு எழுதித் தர முடியுமான்னு கேட்டாங்க. இதுக்காகக் கொஞ்சம் அதிகமா நகை போடுங்கன்னு கேட்டாங்க. யாரும் அவளைப் புரிஞ்சுகிட்டு அவளுக்காகக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கல. ஆனா இவர் பேசுனத பாக்கும்போது இவளைப் புரிஞ்சுகிட்டு கல்யாணத்துக்கு கேட்கிற மாதிரி தான் தோணுது. முதல் திருமணம்னு சொல்லி இப்படி நகைக்கும், வீட்டிற்கும், பணத்துக்கும் ஆசைப்படுறவங்களுக்கு கட்டிக் கொடுப்பதை விட. இரண்டாவது திருமணமாக இருந்தாலும் அவள புரிஞ்சிகிட்ட ஒருத்தருக்கு கட்டிக் கொடுக்கிறது நல்லதுன்னு தோணுது. நீயும் மாப்பிள்ளை பத்தி விசாரிச்சு பார்த்தல்ல எந்தத் தப்பான பழக்கமும் இல்லை தானே சொன்னாங்க. காலேஜிலும் எல்லாரும் நல்லபடியாகத் தானே சொன்னாங்க. பெண்கள் கிட்ட கூடத் தூரம் நின்னு பேசுவார்னு சொன்னாயே??. நம்ம பொண்ணோட முடிவுகளுக்கு மரியாதை கொடுத்து முதலில் அவர் நம்ம பொண்ணு கிட்ட பேசி நம்மளோட சம்மதத்தையும் கேட்டு இருக்காரு. அவளை நல்லபடியா பார்த்துப்பாருன்ற நம்பிக்கை இந்த ஒரு நாள்ல எனக்கு வந்துருச்சு. ஆராத்யாவுக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறதா தான் அவளோட செயல்லையும் பேச்சிலையும் தெரியுது. மத்தபடி யோசிச்சு நீ எடுக்கறது தான் முடிவு” என்றார் விசாலாட்சி.
“அப்படின்னா அவளுக்குப் புடிச்சிருக்குன்னு சொல்ல வரீங்க அப்படித்தானமா?” என்று கேட்டான் கவிச்சந்திரன்.
அவர் ஆமாம் என்று தலையாட்டினார்.
“ எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க அம்மா. நான் அவர்கிட்ட தனிப்பட்ட முறையில் பேசிட்டு. நாளைக்கு என் முடிவ சொல்றேன்மா, அவள் கிட்டயும் சொல்லிடுங்க. அவசரப்பட வேண்டாம். பொறுமையா தீர யோசிச்சு முடிவெடுக்கலாம் அம்மா” என்றான்.
"அவர போய்ப் பார்த்து பேசப் போறதா சொல்றியே?? அவரோட வீட்டுக்கோ காலேஜுக்கு போனா சரி வராதே” என்றார் விசாலாட்சி.
“எனக்கும் அந்த இங்கீதம் இருக்கு அம்மா. நேர்ல தனியா போய் அவர மாதிரியே பாத்துட்டு வந்துட்டு பிறகு முடிவு பண்ணிக்கலாம். கண்டிப்பா காலேஜுக்கும் அவரோட வீட்டுக்கும் போகமாட்டேன். நேத்து அவங்க அம்மா பேசுனது எனக்கு இன்னும் கோபம் அடக்கல. திரும்பவும் அங்க கொடுத்துத் தான் ஆகணுமான்னு எண்ணம் தான் இருக்கு. ஆனா நீங்கச் சொல்றதும் சரின்னு தோணுது. ஆராதியாவை கல்யாணம் பண்ணிக்க போறவர் தானே முக்கியம். அவள அவர் புரிஞ்சுகிட்டா அவளுக்குத் துணையா எப்பயும் நிப்பார். அதனால நானும் இறங்கி போய்ப் பேசி பார்க்கிறேன்” என்று கூறிவிட்டான்.