• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
71
கதைப்போமா 22


நீதிமன்றம் கூடி இருந்தது.

அந்த ஒரு மாதத்தில் அவர்களின் இந்த வழக்கு பேசும் பொருளானது. பெரும்பாலும் அதில் அபிமன்யுவை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். பெண்ணிற்காகத் துணை நின்றனர்.

வாதி பிரதிவாதி என்று இருவரின் வழக்கறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, சிறு சலசலப்புக்கு பின் ப்ரீத்தியின் பெற்றோர்கள் சாட்சி சொல்வதற்காக வந்து நின்றனர். அதை அபிமன்யு சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பார்த்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பிரீத்தியை தவிர மற்ற எல்லோரையும் அவன் மறந்து இருந்தான் எனலாம். அவன் புருவம் இடுங்கியது.

“தான் இவர்களை ஒதுக்கி வைத்ததற்கு. தன் மகனைக் காட்டாமல் இருந்ததற்கு. தன்னை பழிவாங்க நினைக்கிறார்களா?’ என்று மனதிற்குள் எண்ண தொடங்கினான் அபிமன்யு.

“யுவர் ஆனர், அபிமன்யுவோட முன்னாள் மனைவியோட பேரன்ட்ஸ் ஏதோ சொல்ல விரும்புறாங்க” என்று அங்கிருந்த அரசு தரப்பு வக்கீல் கூறினார். அவர்களின் பேச்சை அனைவரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

“அபிமன்யு இது போல தவறுச் செய்தவர் இல்லை. எங்க மகளை அவர் எவ்வளவு விரும்பினாருன்னு எங்களுக்கு நல்லா தெரியும். பெண்ணைக் கொடுக்க நாங்க முடிவெடுக்கும் போதே அவர பத்தி நல்லா விசாரிச்சோம். விசாரிச்ச வரைக்கும் ரொம்ப திருப்தி. நாங்கதான் எங்க மகளுக்கு இருந்த இருதய நோயை மறைச்சு அவருக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்தோம். ஆனா அவள் வாழ்ந்தவரைக்கும் அவரோட நிறைவான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாள். அவள் வாயில் இருந்து ஒரு தவறான வார்த்தை கூட எங்க மாப்பிள்ளையைப் பத்தி வந்ததில்ல. அவர் ரொம்ப நல்லவர். அவர் சார்பா நாங்க விசாரிச்சத வக்கீல் மூலமா உங்ககிட்ட ஏற்கனவே சப்மிட் பண்ணி இருந்தோம். டிவில, சோசியல் மீடியால வர்றதெல்லாம் உண்மை கிடையாது. எங்க மாப்பிள்ளை சொக்கத்தங்கம்” என்று கூறிவிட்டு தங்கள் இடத்திற்கு சென்று நின்று கொண்டார்கள். போகும் அவர்களையே அவன் பார்த்துக் கொண்டிருக்க. அவர்களை நோக்கி நடந்த சென்ற ஆராதியா ப்ரீத்தியின் தாயின் கரத்தைப் பிடித்துக் கண்ணில் ஒத்திக்கொண்டாள். அவரோ, இல்லை என்பது போலத் தலையாட்டிவிட்டு ஆராதியாவை தன்னோடு அணைத்துக் கொண்டார்.

அபிமன்யுவின் கண்களும் கலங்க துடித்தது. கவிச்சந்திரனுக்கு இதமாக இருந்தது.

திடீரென்று ஆராதியா அந்த நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் செல்ல. அபிமன்யுவிற்கு அவள் எங்கே செல்கிறாள் என்று தவிப்பாக இருந்தது. அவன் சிந்தனையைக் கலைக்கும் பொருட்டு வழக்குகளும் வாதங்களும் அவனைப் பிடித்துக் கொள்ள. ஆயாசமாக இருந்தது அபிமன்யுவிற்கு.

சந்திரிகாவின் தோழிகளில் சிலர் அவளுக்காகப் பொய் சாட்சி சொல்ல வந்திருந்தனர். வீட்டிற்கு தெரிந்து வந்தார்களா, இல்லையா என்று தெரியவில்லை. இஷ்டத்திற்கும் அபிமன்யுவை பற்றித் தரம் தாழ்த்தி பேசினார்கள். இவர்களுக்கு எல்லாம் ஆசானாக இருந்திருக்கிறேன் என்று அபிமன்யு வெட்கி போனான். அவன் எந்த மாணவ மாணவிகளையும் தன் சார்பாகப் பேச அழைத்திருக்கவில்லை. தனக்காக அவர்கள் நீதிமன்றத்தில் கால் பதிப்பதை அவன் விரும்பவில்லை. ஆனால் காவல்துறையினர் அவர்கள் பங்கிற்கு கல்லூரியில் நிறைய பேரிடம் விசாரித்து அதைக் கோப்புகளாக மாற்றி இருந்தனர். அது ஏற்கனவே நீதிபதியின் செவிகளைச் சென்று சேர்ந்து விட்டது.

ராதிகாவுடன் அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தாள் ஆராத்யா. அவர்கள் இருவரும் அபிமன்யுவின் வழக்கறிஞரை நெருங்கும்போது தான் அவன் அவர்களைக் கவனித்தான்.

“யுவர் ஆனர், அபிமன்யுவோட இன்னசென்ஸ் ப்புரூவ் பண்றதுக்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைச்சிருக்கு. அதைச் சப்மிட் பண்ண விரும்புகிறேன்” என்று கூறியபடி ஆராத்யாவின் கையில் இருந்த லேப்டாப்பை வாங்கிக் கொண்டு சென்று நீதிபதியின் முன்பு சமர்ப்பித்தார்.

நீதிபதியின் உதவியாளர் லேப்டாப்பை திறந்து அந்த ஸ்கிரீனில் இருப்பதை பார்வையிட்டார். எல்லாவற்றையும் அவள் செட் செய்து தான் உள்ளே கொண்டு வந்திருந்தாள்.

அதை முதலில் பார்வையிட்டவர். பிறகு உதவியாளரின் உதவியுடன் அதை அங்கிருந்த ஸ்பீக்கரில் ஒளிபரப்பு செய்யும்படி திருப்பி வைத்தார்.

அது ஒரு சி.சி.டிவி ஃபுட்டேஜ் தான். ஒரு பக்கமாகத் தெருவையும் கேட்டையும் பார்க்கும் வண்ணம் வடிவமைத்திருந்தது. ‘இது எந்த இடம்?’ என்று அபிமன்யு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய வாகனம் வருவதும் ஓரம் நிறுத்தப்படுவதும். சந்திரிகா வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்று அவன் கார்கதவை தட்டுவதும். அதன் பிறகு அவன் வெளியில் இறங்கி வந்து கத்துவதும் பதிவாகி இருந்தது. அதில் வார்த்தைகள் தெளிவு இல்லாமல் இருக்க. அதற்கு அடுத்து இருந்த வீடியோவும் தொடர்ச்சியாக ஒளிபரப்புப்பட. அது அவர்களின் ஒலியை வெளிப்படுத்தியது. ஆனால் டைமன்ஷன் வேறு இடத்தை நோக்கி இருந்தது. அதில் வேறு யாரோ சிலர் அவர்களை நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. வீட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் இருக்கும் சி.சி.டிவி ஃபுட்டேஜில் ஒன்று அவர்கள் உருவங்களையும். மற்றொன்று அவள்கள் பேசியதையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுடைய குற்றமின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்க. சந்திரிகா பேசிய வார்த்தைகள் அவளுடைய தவறை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.

அவள் தலைகுனிந்து நிற்க. அவளுடைய தந்தை கோபமாக அங்கிருந்து வெளிநடப்பு செய்திருந்தார். அவளுடைய தாய் புடவை முந்தியை வாயில் வைத்தபடி அழுது கொண்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து, அந்தச் சி.சி.டிவியில் இருந்த ஒரு பெண்மணியும் அபிமன்யுவிற்காகச் சாட்சி சொல்ல வந்திருந்தார்.

“கலிகாலம்மா, அந்த மனுஷன் இல்ல இல்லன்னு சொல்லும்போதும். இந்தப் பொண்ணு எப்படி பேசுச்சு தெரியுமா??. நல்லவேளை எனக்கு இதுபோல ஒரு பொண்ணு இல்ல. எனக்கு இந்த விஷயம் முதலிலேயே தெரியாதுமா. தெரிஞ்சிருந்தா நான் அப்பவே கோர்ட்டுக்கு வந்து சொல்லி இருப்பேன். பாவம் அந்தப் புள்ள. ஏதோ போன்ல எல்லாம் வேற இந்தப் புள்ளையோட பேர தப்பா அறிவிச்சுட்டு இருந்தாங்கலாமே??, எங்க வீட்ல என் புள்ள சொன்னான். எனக்கு இந்த விஷயம் தெரியல. அப்புறம் அந்தப் பக்கத்து வீட்டு தம்பி தான் அன்னைக்கு நீங்களும் தானே பார்த்தீங்க சாட்சி சொல்ல வரீங்களான்னு கேட்டாரு??. இதோ இந்தப் பொண்ணு கூடக் கை எடுத்துக் கும்பிட்டுச்சு. பார்த்தத சொல்றதுக்கு என்ன இருக்கு??. இது தான் நான் முதல் முறையா நீதிமன்றத்துக்கு வரேன். ஆனா ஒரு நிரபராதி தப்பான வகையில் சித்தரிக்கப்படக்கூடாதுனு சாட்சி சொல்றதுக்காக வந்துட்டேன். அங்க பேசுனது கேட்கும்போதே தெரிஞ்சுது இந்தப் பொண்ணுதான் விடாது துரத்திகிட்டு இருக்குன்னு. அந்தப் பிள்ளையும் எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. நீ என்னோட ஸ்டூடண்ட் தான்னு எவ்வளவோ சொன்னாரு. இந்தப் பொண்ணு கேட்கவே இல்லை. எனக்கெல்லாம் இதுபோல ஒரு பொண்ணு இருந்ததுனா கழுத்தை திருகிப் போட்டு இருப்பேன்” என்று அவர் தன் பங்கிற்கு சந்திரிகாவை கரித்துக்கொட்ட.

அந்த வீட்டின் உரிமையாளர் தன் பங்கிற்கு தான் பார்த்ததை கேட்டதை நீதிபதியின் முன்னால் நின்று வெளிப்படுத்தினார். தான் அன்று வாசலில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது. சத்தம் கேட்டு எட்டிப் பார்த்ததை தெரிவித்தார்.

“நானும் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் இதை யூடியூப்ல பார்த்தேன். ஆனா எங்க வீட்ல 20 நாளைக்கு மட்டும் தான் சிசிடிவி புட்டேஜ் இருக்கும். அடுத்த 20 நாள் வரும்போது டெலிட்டாயிடும். அதனால அதை ரெக்கவர் பண்ண சொல்லிக் கேட்டு இத வாங்கினேன். யாரை காண்டாக்ட் பண்றதுன்னு தெரியல. காலேஜ் மேனேஜ்மென்ட் கிட்ட அவங்க வீட்டு போன் நம்பர் வாங்கி. அவங்க வீட்டம்மா கிட்ட பேசினேன். பாவம் அவங்களுக்கு பதில் சொல்ல வரல, ஆனா மெசேஜ் மூலமாக என்ன காண்டாக்ட் பண்ணாங்க. அப்பயும், புட்டேஜ்ல குரல் தெளிவு இல்லாமல் இருந்துச்சு. அத நான் பாத்துக்குறேன்னு அவங்க வைஃப் வாங்கிட்டு போனாங்க” என்று கூறினார்.

ராதிகா அந்த இடத்திற்கு வந்து நின்றாள். அபிமன்யுவிற்கு அந்த ஒலியை இப்பொழுது யார் சரி செய்திருப்பார்கள் என்று புரிந்தது. “என்னோட ஹஸ்பண்ட் மியூசிக் அகாடமிலதான் வொர்க் பண்றாரு. அவரோட ஹெல்ப்போட தான் இத சரி பண்ணோம் அதுக்கு தான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்று கூறிவிட்டு அகன்றாள்.

சந்திரிகாவின் குரல் அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவர் தாயையும் சுக்கு நூறாக உடைத்து இருந்தது. பெண் பிள்ளைகள் செய்யும் தவறுக்கு அவர்களின் பெற்றோர்கள் தலைகுனிந்து நின்றனர். அவளுடைய தந்தை எப்பொழுதோ வெளிநடப்பு செய்திருக்க. தாயும் இப்பொழுது அங்கிருந்து அகன்றார்.

அனைவருமே வாயில் கையை வைத்து விட்டனர். நீதிபதி லேப்டாப்பை திருப்பி அந்தப் பென்டிரைவை தன்னுடைய உதவியாளரிடம் பத்திரப்படுத்தச் சொல்லி கூறினார்.

“பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் இப்பொழுதெல்லாம் தவறான முறையில் உபயோகப்படுத்தப்படுகின்றது. அதற்கு இந்த வழக்கும் அதன் ஆதாரங்களும் சாட்சிகள் ஆகிவிட்டது. எந்தப் பெண்ணை ஊமைனு இங்கிருந்த வழக்கறிஞர் சாடினாரோ, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவரைக் கிண்டல் செய்தாரோ, அவள் தான் தன் கணவனின் குற்றமின்மையை நிரூபிக்க உறுதுணையாக இருந்திருக்கிறாள். உடலில் உள்ள குறைபாடு என்பது நம் முன்னேற்றத்தை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தாது. அதேபோல எந்த விதத்திலும் அவர்கள் வாழ்க்கையையும் பாதிக்காது. அதற்கு இந்தத் தம்பதியினர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு”.

“முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட தவறான வழக்கு இது. உன்னதமான ஆசிரியர் துறையில் இருக்கும் ஆசிரியரை அவமானப்படுத்தியதற்காக ஆறு மாத சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். இந்த வழக்கு தவறான அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், சட்டம் எப்போதும் தோற்பதில்லை, நியாயம் எப்பொழுதும் நொடிந்து விடவில்லை, சத்தியமேவ ஜெயதே, ‘வாய்மையே வெல்லும்’ என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சந்திரிகா என்ற இந்தப் பெண்ணை அவள் வயதையும் கருத்தில் கொண்டு ஆறு மாத சிறை தண்டனைக்குப் பதிலாக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து செல்லலாம். ஆனால் இன்னொரு முறை இதுபோலத் தவறான அணுகுமுறை இந்தப் பெண்ணிடம் இருந்தோ அல்லது அவர்கள் குடும்பத்தாரிடமிருந்தோ வருமாயின் கடுமையான தண்டனை வழங்கப்படும். அந்த ஆசிரியருக்கு ஏற்படுத்துன மன உளைச்சலுக்கும், அவர்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவிற்கும் இந்தக் கோர்ட் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. அந்தப் பெண்ணும் அவர்கள் குடும்பத்தாரும் பேராசிரியர் அபிமன்யுவிடம் சிரம் தாழ்ந்து மன்னிப்பைக் கூற வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதாரம் இல்லாமல் தன் போக்கில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த அந்த மூன்று பெண்களுக்கும் தலா ஒரு லட்சம் அபராதமும், அவர்களுடைய சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கட்டளையிடுகிறேன். நியாயத்திற்கு துணையாக இருந்த அபிமன்யுவின் கல்லூரி மேலாண்மைக்கும். இதற்காகத் தொடர்ந்து பாடுபட்ட காவல்துறை, மற்றவர்களுக்கும், சிரமம் பாராமல் தன் வீட்டில் இருக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பித்தவருக்கும், நீதிமன்றம் என்று தயங்காமல் நேர்மையாகச் சாட்சி சொல்ல வந்த அந்தப் பெண்மணிக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அபிமன்யு குற்றமற்றவர் என்று நிரூபித்து விடுதலை செய்யப்படுகிறார். அவர்மீது இருக்கும் எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று அவருடைய உரையாடலை முடித்துக் கொண்டவர்.

“கோர்ட் டிஸ்போஸ்ட்” என்று எழுந்து கொண்டார்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
71
நீதிபதி அப்படி செல்லும் வரை காத்திருந்த ஆராதியா ஓடிச்சென்று தன் கணவனை அங்கேயே கட்டித் கொண்டாள்.



அவள் முகத்தைக் கையில் ஏந்தியவன். “ஐ லவ் யூத்தியா” என்றான்.



விடிய விடியக் கதைத்துக் கொண்டிருந்த அந்த இரவின் நிசப்தத்தில், அவன் கூறிய அந்தக் காதலை விட. இன்று சலசலப்புக்கு மத்தியில் நீதிமன்ற வளாகத்தில் ஆத்மார்த்தமாகக் கூறிய இந்த ‘ஐ லவ் யூ’ அவள் நெஞ்சை நெகிழ வைத்திருந்தது.



பலர் அவர்களைக் கண்டும் காணாமலும் போக. அவர்களின் குடும்பத்தார் அவர்களை நெருங்கினார்கள்.



“வெல்டன் மிசஸ் ஆராதியா. நேத்து நீங்க இத பத்தி கூறியிருந்தீங்க. அவர் சரியான நேரத்தில் மெனக்கிட்டு இதைக் கொண்டுவந்து சப்மிட் பண்ணி இருக்காரு” என்றார் வக்கீல்.



“இது என்னோட முயற்சி மட்டும் இல்ல சார். கூட்டு முயற்சி தான். நாம எங்கெங்கோ தேடணும் ஆனா நியாயம் எப்பயும் தோற்காது என்றதுக்கு இது ஒரு சாட்சி. அவரே தேடி கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுத்தார்.அவருக்குத் தான் முதல் நன்றியைச் சொல்லணும். அதுக்கப்புறம் சாட்சி சொல்ல வந்தவங்க. நீதிமன்றத்தையே இதுவரைக்கும் பார்க்காதவங்க இன்னைக்கு இவருக்காக வந்திருக்காங்க. அதெல்லாம் தான் பெரிய விஷயம்” என்றாள்.



ஆராதியாவின் கையை பற்றிக் கொண்ட அம்பிகா “நான் உன்னை எவ்வளவு மனசு கஷ்டப்படுற படி பேசி இருக்கேன். ஆனா இந்தக் கஷ்ட நேரத்துல என் பையனுக்குத் துணையா இருந்திருக்க அவனை நிரூபிக்கிறதுக்கும் துணையா இருந்திருக்க. என்னதான் அவரைத் தேடி வந்து கொடுத்திருந்தாலும் அங்கங்க அலைஞ்சு திரிஞ்சு உன்னோட நம்பரை எல்லார்கிட்டயும் கொடுத்துட்டு வந்திருக்க. அதனாலதான் அவங்களால உன்னைக் காண்டாக்ட் பண்ண முடிஞ்சுது. இந்த நீதிபதி சொன்னது தான் உண்மை. நம்பிக்கையும் நேர்மையும் இருந்தா போதும். குறை ஒரு பெரிய விஷயம் இல்லை. நான் இதை உணர்ந்துட்டேன். உன்ன பேசுனதுக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன்” கரம் குவித்து மன்னிப்பு யாசித்தார். அவள் கரத்தைப் பிடித்து கீழே இறக்கினாள்.



“நீங்க என் அம்மாவைப் போல. கோவத்துல அம்மா திட்றதெல்லாம் சகஜம்தான். உங்க கை எங்களை ஆசீர்வதிக்குறதுக்கு தான் உயரணும். மத்ததுக்கு இல்ல. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்னு நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க போதும்” என்று டைப் செய்து அதை வாய்ஸ் மெசேஜாக வெளிப்படுத்தி இருந்தாள்.



“மன்னிச்சிடுங்க மாமா நான் கூட உங்கள தப்பா நினைச்சுட்டேன். ஆனா அம்மாவும் ஆராதியாவும் உங்க மேல நம்பிக்கையா இருந்தாங்க. அந்த நம்பிக்கை பொய்க்கல. எனக்குச் சந்தோஷமா இருக்கு” என்றான்.



“உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் இந்தச் சந்தேகம் வந்திருக்கும் கவி. விடுங்க, நான் தப்பு செய்யாததுனால என்ன நிரூபிப்பேன்னு நம்பிக்கையா தான் இருந்தேன். ஆனா என் மனைவி எனக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல. எனக்காக அவளும் அலைஞ்சானு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய சாட்சியைக் கொண்டு வந்து இருக்காள்” என்று நெகிழ்வாக அபிமன்யு கூற. அடுத்து அவனுக்காக மெனக்கெட்டு வந்து சாட்சி சொன்னவர்களைத் தேடி சென்று குடும்பமாக நன்றி கூறினார்கள்.



சந்திரிகா என்ற அந்தப் பெண்ணை அங்குப் பார்க்கவே முடியவில்லை.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top